Saturday, June 13, 2009

டிராகுலாவும் சிஸ்டரும்!

எதற்கென்றே தெரியாமல் சிரித்துக் கொண்டிருப்பது...வயிறு வலிக்க வலிக்க- வயிற்றைப் பிடித்துக் கொண்டு, பார்ப்பவர்கள், “நல்லாத்தானே இருந்தாங்க, என்னாச்சு இவங்களுக்கு” என்று கேட்குமளவிற்கு!விஷயம் பெரிதாக ஒன்றும் இருக்காது,! உண்மையில் ஒன்றுமே இருக்காது! ஆனால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றிக் கொள்ளும்! கட்டுப்படுத்த இயலாமல் பொங்கிக் கொண்டிருக்கும் சிரிப்பலைகள் - ஏதோ அதுதான் அந்த சமயத்தில், ஏன் உலகத்திலேயே மிகவும் funny-ஆக இருப்பதுபோல!! கல்லூரிகளில் அடிக்கடி நடக்கும் இது!

ஒரு புதிய கணினிக்கூடம் (Lab) ஒன்றை எங்கள் பல்கலை. நிறுவி இருந்தது. ஒன்றிரண்டு வேலைக்களே மீதி இருந்த நிலையில் எங்கள் உபயோகத்துக்கு திறந்து விடப்பட்டு இருந்தது. நாங்களும் இத்துப் போன DOS, FOX PRO-விலிருந்து ஆரக்கிள், புது ஆபரேடிங் சிஸ்டம், வழக்கம்போல சாலிடேர் என்று படம் காட்டிக்கொண்டிருந்தோம்! இரண்டுநாட்கள் கழித்து LAN-ல் ஏதோ பிரச்சினை. மெயிண்டெனன்ஸ் இஞ்சினியரும் வந்து எல்லா கணினிகளையும் அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தார். நாங்களும் அவர் செய்வதை நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். (கத்துக்குற ஆர்வம்ப்பா!) அவருக்கு ஒன்றும் பிடிபடவில்லை போல. ஒரு கணினியில் எதையோ வெகு நேரமாகத் தேடிக் கொண்டிருந்தார். ஸ்டார்ட்-லேர்ந்து ப்ரோக்ராம்ஸ், அதைவிட்டா எக்ஸ்ப்ளோரர் என்று!

கல்பனா, தமிழ்செல்வி, சுபத்திரா மற்றும் நான்! எங்களுக்கு சொல்லவே வேண்டாம், சும்மாவே சிரித்துக் கொண்டிருப்போம் - ஆள் யாராவது மாட்டினால் சொல்லனுமா என்ன!
அதுவும், நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற டென்ஷனோடு கூட பரபரப்பாக இருந்தவரைப் பார்த்ததும் லேசாக சிரித்துக் கொண்டோம்! பக்கத்திலேயே லேப்-இன்சார்ஜ்!
சற்று நேரத்தில் “ஹப்பாடா, கிடைச்சுடுச்சி” என்றார் மகிழ்ச்சியோடு. என்ன பிரச்சினையென்றதற்கு, “யாரோ Network neighborhood"ஐ "connection to the pakkathu computer"னு மாத்தி வைச்சுருக்காங்க, தேடறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு” என்றதும் வந்த சிரிப்பை அடக்க மாட்டாமல் வெளியே ஓடினோம் நாங்கள்! நெடுநேரமாகியது எங்களுக்கு சிரிப்பை அடக்க! யாரோ ஒரு ஜூனியர் குட்டிப்பிசாசின் வேலை அது! எவ்வளவு அழகாக மொழி பெயர்த்து பெயரை மாற்றியிருக்கிறாள்!! கிச்சுகிச்சு மூட்டுவதைப் போல, connection to the pakkathu computer என்ற பதம் நீண்ட நாட்களுக்கு எங்களிடையே வழக்கத்தில் இருந்தது!

எங்கள் விடுதியில் ஆறு பேர் ஒரு அறைக்கு. ஸ்டீல் கட்டில்கள் போடப்பட்ட நீளமான அறை.இரவு 10 மணிக்குமேல் எந்த சத்தமும் வரக்கூடாது.(அப்படி வந்தா சிஸ்டர் வந்து சத்தம் போடுவாங்க!):-) வெள்ளிக்கிழமை இரவுகளில் தூங்க வெகுநேரம் பிடிக்கும். ஊர்க்கதை, திருடன் கதை, நாட்டுநடப்பு, பேய்க்கதை எல்லாம் பேசிட்டு தூங்க வேண்டாமா!! அன்று ஆறு கட்டில்களையும் அருகருகே போட்டுக்கொண்டு படுத்ததும் கதை சொல்லும் பணி ஆரம்பித்தது. டிராகுலா கதை. குஷி வந்த ஸோபி, போர்வையை மேலே சுற்றியபடி முக்காடிட்டுக் கொண்டு டிராகுலாவாக மாறி கட்டில்கள் தாண்டித்தாண்டி வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தாள். நாங்களும் ஆ, ஊ என்று அலறிக் கொண்டு அட்டகாசம்!

திடீரென எங்கள் அறை கதவு திறக்கப்படும் சத்தம். ஸோபியைத் தவிர நாங்களெல்லோரும்
போர்வையை முகத்தில் மூடி கப்சிப்! சிஸ்டர் கதவைத் திறந்துக் கொண்டு நின்றிருந்தார்!
போர்வையோடு ஸோபி மிகப் பரிதாபமாக சிரிப்பை அடக்கமுடியாமல் நின்றுக் கொண்டிருந்தாள்! நாங்கள் ஓட்டையின் வழியே பார்த்துக் கொண்டிருந்தோம். ”you are all grown-ups” அது இதுவென்று வழக்கம் போல திட்டிவிட்டு சென்றுவிட்டார் சிஸ்டர். போர்வைக்குள்ளேயே சிரிப்பை அடக்கமாட்டாமல் இருந்த எல்லோடும் சேர்ந்துக் கொண்டாள் ஸோபியும்! கல்லூரியில் நெடுநாட்களுக்கு, ஏன் அதற்குப்பின்னான எங்கள் கடிதத் தொடர்பிலும்கூட இடம் இருந்தது டிராகுலாவும் சிஸ்டரும்! ”ஸோபி, நீ எப்படி நின்னுக்கிட்டிருந்தே” என்று சொல்வதே போதுமானதாக இருந்தது நீண்ட நாட்களுக்கு, வயிறு வலிக்க எங்களை சிரிக்கவைக்க!

என்ன ரொம்ப மொக்கையா இருக்கேன்னு கேக்கக் கூடாது! இப்படி மொக்கை நினைவுகளும், நிகழ்வுகளும் சேர்ந்ததுதான் வாழ்க்கை! :-)

29 comments:

நட்புடன் ஜமால் said...

கடைசி வரில

வாழ்க்கை பற்றி இம்பூட்டு அருமையா சொல்லியிருக்கிய

கலையரசன் said...

''உங்ககிட்ட ஓப்பனிங்லாம்
நல்லாத்தான் இருக்கு.. ஆனா, ஃபினிஷிங் சரியில்லையேப்பா!''

"summa thamasuku"

தமிழ் பிரியன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எங்க சசி தங்கச்சியை இபப்டியா சொல்வீங்க.. ஆச்சியை பப்பு பேரவை சார்பில் கண்டிக்கிறோம்.. ;-)))

தமிழ் பிரியன் said...

என் பின்னூட்டத்தை வெளியிடாத ஆச்சியை பப்புவிடம் சொல்லி மிரட்டப் போகின்றோம்... ;-)

ஆகாய நதி said...

:) நல்லா நினைச்சு நினைச்சு சிரித்தேன்... சூப்பர் முல்லை!

மங்களூர் சிவா said...

/
மொக்கை நினைவுகளும், நிகழ்வுகளும் சேர்ந்ததுதான் வாழ்க்கை! :-)
/

அடடா என்னே ஒரு சிந்தனை!
:)))

கனெஷன் டு பக்கத்து கம்ப்யூட்டர்
:)))))))

Divyapriya said...

செம சிரிப்பு தான் :D நல்லா இருந்துச்சு...

நாணல் said...

//connection to the pakkathu computer//

highlight இது தான்... :))

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... நாட்ல கடைக்குப் பேரை தமிழ்ல போடச்சொல்லில்லாம் அமக்களம் பண்றாங்க, இங்க ஒருத்தங்க அவங்களா தமிழார்வத்தோட எப்படில்லாம் வேலயக்காமிச்சிருக்காங்க, அதை மெச்சாம, நக்கலா பண்றீங்க.

Deepa said...

:-)) ஆஹா! திரும்பபும் கொசுவத்தி சுத்த் வெச்சுட்டீங்களே!

அழகிய நினைவுகள், அலுக்காத நினைவுகள் அந்தப் பட்டாம்பூச்சி காலம் தான். காரணம் இல்லாமல் சிரிப்பு...ஹீம்!
இப்போல்லாம் காரணம் இல்லாம அழுகாச்சி தான் வருது!

கணினி லேப் மேட்டர் சூப்பர். எனக்கு கல்லு மண்ணு லேப் தான் தெரியும்!

பேய்க்கதை ஒண்ணு ஃபர்ஸ்ட் இயர்ல எங்க ஹாஸ்டல்லயும் சுத்திச்சு.

(ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இந்த ரூம்ல ஒரு பொண்ணு தற்கொலை... type)
அதுக்குப் பயங்கரமா பய்ந்து ரூமை விட்டு ஓடினது நான் தான்.

G3 said...

//connection to the pakkathu computer//

Sema superu :))))))

Kalakkal ninaivugal :)))))

சின்ன அம்மிணி said...

ம் இந்த மாதிரி ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு எப்படி சிரிச்சிருப்போம் அந்த ஹாஸ்டல் காலத்தில. எதிர் ரூம்காரிகளோட ராத்திரி நேரம் பாட்டுக்குப்பாட்டு பாடி வார்டன் கிட்ட திட்டு வாங்கினது ஞாபகத்துக்கு வர வைச்சிட்டீங்க முல்லை

அமிர்தவர்ஷினி அம்மா said...

பதிவ படிச்சவுடன் சிரிப்பும் உடன் சில ஞாபகங்களும்

:)-

கடைசி வரி டச்சிங்க்

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகிய நினைவுகள், அலுக்காத நினைவுகள் அந்தப் பட்டாம்பூச்சி காலம் தான். காரணம் இல்லாமல் சிரிப்பு...ஹீம்!
இப்போல்லாம் காரணம் இல்லாம அழுகாச்சி தான் வருது!

தீபா சொன்னதை நானும் மறுக்கா சொல்லிக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

:))!

//என்ன ரொம்ப மொக்கையா இருக்கேன்னு கேக்கக் கூடாது!//

மாட்டோம்!

// இப்படி மொக்கை நினைவுகளும், நிகழ்வுகளும் சேர்ந்ததுதான் வாழ்க்கை! :-)//

கரெக்ட். அப்பப்போ தேவைப்படும் பூஸ்டும்:)!

குடுகுடுப்பை said...

நான் கம்பியூட்டர் எல்லாம் கண்ணால பாத்ததே இல்லை,எனக்கு தெரிஞ்சதெல்லாம் கனெக்சன் டு பக்கத்து கள்ளுக்கடைதான். கல்லூரி சாலையோடு வரேன்.

Anonymous said...

mullai akka,
when sis enters,she starts saying"endha ethu u girls......"
really sweet memories to cherish.

வித்யா said...

அந்த மொழிப்பெயர்ப்பு மேட்டரு டாப்பு:)

நிஜமா நல்லவன் said...

:)))))))))))

தமிழன்-கறுப்பி... said...

:))

விக்னேஷ்வரி said...

ஐயோ முல்லை, உங்களை மாதிரியே நானும் அடக்க முடியாமல் சிரிச்சிட்டே இருக்கேன். நல்லா இருந்தது உங்க கல்லூரி மற்றும் விடுதி வாழ்க்கை. அதுவும் "Connection to adutha computer" டாப்பு.

தமிழன்-கறுப்பி... said...

சாதாரணமாகத்தெரிந்தாலும் பசுமையாய் இருக்கிற நினைவுகள்..!

அமுதா said...

:-))))

நசரேயன் said...

//connection to the pakkathu computer//

இது ரெம்ப புதுசு

நசரேயன் said...

//போர்வையை மேலே சுற்றியபடி முக்காடிட்டுக் கொண்டு டிராகுலாவாக மாறி கட்டில்கள் தாண்டித்தாண்டி வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தாள். நாங்களும் ஆ, ஊ என்று அலறிக் கொண்டு அட்டகாசம்!//

இப்பவும் பயமுறுத்துறீங்களா முகிலை

நசரேயன் said...

//என்ன ரொம்ப மொக்கையா இருக்கேன்னு கேக்கக் கூடாது! இப்படி மொக்கை நினைவுகளும், நிகழ்வுகளும் சேர்ந்ததுதான் வாழ்க்கை! :-)//

இப்படி நிறைய மொக்கைகள் வரவேண்டும் என்பதே மொக்கை பதிவர்கள் சங்கம் வேண்டுகிறது ஆச்சியை

மாதவராஜ் said...

மொக்கையாக இல்லை. எல்லோருக்குமான அனுபவங்களே இவை. சுவராஸ்யமாய் சொல்லியிருக்கிறீர்கள்.

தீஷு said...

//என்ன ரொம்ப மொக்கையா இருக்கேன்னு கேக்கக் கூடாது! இப்படி மொக்கை நினைவுகளும், நிகழ்வுகளும் சேர்ந்ததுதான் வாழ்க்கை! //

என்ன தத்துவம்!! என்ன தத்துவம்!!!

ஹாஸ்டல் வாழ்க்கை இனிமையானது. சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும். முக்கியமா சாப்பாடு நல்லாயில்லைனாலும் நம்ம சமைக்க வேண்டாம்.

ஆகாய நதி said...

//
ஹாஸ்டல் வாழ்க்கை இனிமையானது. சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும். முக்கியமா சாப்பாடு நல்லாயில்லைனாலும் நம்ம சமைக்க வேண்டாம்.
//

ஆமாங்க அதை மிஸ் பண்ணி ஃபீல் பண்ணுவேன் பல சமயம்...