Tuesday, June 16, 2009

ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும்!

முதலாம் வகுப்பு. மிஸ்ஸுக்கு என்னிடம் தனிபிரியம். ஹேமா. என்னுடைய தோழி. அழகழகான குண்டு குண்டு கையெழுத்து. புத்தகத்தின் அட்டையில் ஒட்டப்பட்டிடுக்கும் லேபிள்கள் எல்லாம் கிழிக்கப் பட்டிருக்காது.அழகாக அடுக்கப் பட்ட பை. அவள் வந்தபின் மிஸ்ஸிடம் அவளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு அல்லது பிரியம் இடம் மாறியது!

ஆறாம் வகுப்பு. முதல் நாள். வகுப்பு லீடராக என்னைத் தேர்ந்தெடுத்தார் டீச்சர். முதல் மாதாந்திர தேர்வு முடிந்து விடைத்தாட்கள் கொடுக்கப்பட்டன. ஞானசௌந்தரி. எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண்!ஏதோ ஒரு பாடத்தில் 98 எடுத்தப்பின்னும் 100 எடுக்கவில்லையே என அழுதாள் ஞானசௌந்தரி. அன்றுமுதல் வகுப்பில், ஞானசௌந்தரிக்கு புரிந்தபின் தான் போர்டில் எழுதியிருந்தது அழிக்கப் பட்டது. ஞானசௌந்தரி எழுந்து வாசித்தபின் தான் வரலாற்று ஆசிரியர் அதை விளக்க ஆரம்பித்தார்!

ஹேமாவும், ஞானசௌந்தரிகளும் என்னை வாழ்க்கை முழுதும் துரத்திக் கொண்டே இருந்தார்கள். பெயர்கள் தான் மாறியதே தவிர +1இலும் கல்லூரியிலுங்கூட ஹேமாக்களும், ஞானசௌந்தரிகளும் என்னை பின் தொடர்ந்துக் கொண்டே இருந்தார்கள்! நண்பர்களாக இருந்தாலும் நெருங்கி பழக முடியாதவர்களாக இருந்தார்கள்! உங்கள் வாழ்விலும் ஹேமாவும் ஞானசௌந்தரிகளும் இருந்திருக்கிறார்களா?!( நீங்கதான் ஹேமா இல்லன்னா ஞானசௌந்தரின்னா இந்தப் பதிவு உங்களுக்கில்லை! :-))

முதல் ரேங்க் அல்லது டாப்பர் என்று பெயரெடுத்த இந்த ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும் தேர்வுக்கு வரவில்லையெனில் "ஆகா, இந்த வாட்டி நாமதான் ஃப்ர்ஸ்ட்" என்று நினைத்துக் கொள்பவரா நீங்கள்?! நினைத்துக்கொண்டது மட்டுமில்லாமல் வீட்டில் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்பவரா!! அப்படியாயின் இந்த இடுகை உங்களையும் என்னையும் பற்றிதான்! நாமதான் நல்ல மார்க் வாங்குவோம்னு எல்லோரும் நினைச்சுக்கிட்டு இருக்கும்போது அப்படியே சொதப்புவோமே! பள்ளி/கல்லூரிகளில் நம்மை யாரும் என்னோட ஃபேவரிட்-ன்னு சொல்ல மாட்டாங்க டீச்சர் உட்பட, ஆனா எல்லோருக்கும் நம்மைத் தெரியுமே - அவ்வளவு பிரபலம்! கேக்கற கேள்விக்கு தெரியும்னு கையைத் தூக்கிட்டு இருந்தாலும் டாப்பரை எழுப்பி சொல்ல வைக்கும்போது உள்ளே மனசு அடிச்சுக்குமே! இல்ல தெரிஞ்சாலும் எப்படி சொல்றதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போது சரியா இந்த "டாப்பர்" எழுந்து சொல்லுவாங்களே!! நம்மை பத்தி யாருமே நினைத்துக் கூட பார்க்காதபோது ஏதாவது ஒரு பாடத்திலே முதல் மதிப்பெண் வாங்குவோமே! கண்டிப்பா 90-95-ல்லாம் வாங்க மாட்டோம், ஆனா ஒற்றைப்படையில் வாங்கமாட்டோமே!

சரி..இங்கேதான் இப்படி, 'இனிமே அடுத்த வகுப்பு போகும்போதாவது இப்படி இருக்கக் கூடாது'ன்னு முடிவு கட்டி, அடுத்த வருஷம் முதல் மாதாந்திர தேர்வோட அந்த அவதாரத்தையும் நம்மால் காப்பாற்ற முடியாதே! ஒரே பள்ளி படிச்சாலும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் மட்டும் சீஸனுக்கு சீஸன் மாறுவாங்களே, ஆனால் எதிரிகள் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாதே!! (எல்லாருக்கும் எப்போவும் நல்ல புள்ளையாவே இருக்க முடியாதுல்ல!)

சரி, இதுலதான் இப்படியென்றால், கல்யாணமென்று வந்தால் நாம்தானே ஹீரோயின். அங்கேயும் ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும் என்னைத் துரத்தினார்கள்! “அய்யோ பாவம், யாரு அந்த அப்பாவி” யென்றும், ”உன் கிட்டே மாட்டிக்கிட்டு என்ன பாடுபடபோறாங்களோ” யென்றும் என்னைத் துளைத்தெடுத்தெடுத்திருப்பார்கள்! மேலுன் தொடர்ந்தது ஹேமாக்களின் ஞானசௌந்தரிகளின் பிரச்சினை. தொலைபேசினால் போதும், ”நான் எல்லா கிச்சன் வேலையும் ஃபாஸ்ட்டா முடிச்சுடுவேனே, பிரச்சினையே இல்ல” என்றும் “மார்னிங் டைம்லே எனக்கு டென்ஷனே இல்லைப்பா” என்று இங்கேயும் நம்மை துவைப்பார்கள்! அது மட்டுமா, தன் வேலையைத் தானே செய்துக் கொண்டு, படுத்தாத, சமத்துக் குழந்தைகள் கூட ஹேமாக்களுக்கும் ஞானசௌந்தரிகளுக்குமே வாய்க்கிறது!

இப்போது கூட நீங்கள், "முகிலும் பப்புவும் பாவம்தான் போல, பொண்ணா இது"-ன்னு நினைத்துக் கொண்டு படித்தீர்கள்தானே! (நீங்க என்னைச் சந்திக்காமலே என்னைப் பத்தி ஒரு டேமேஜை உருவாக்கியிருக்கேன் பார்த்தீங்களா!!) இந்த உலகம் ஹேமாக்களுக்காகவும், ஞானசௌந்தரிகளுக்காகவும் மட்டும் இல்ல..சந்தனமுல்லைகளுக்காகவும்தான் என்று எனக்குச் சொல்ல முடியவில்லையென்றால் கூட, ”நீ இதுலே ஹேமாவா இருந்திருக்கணும்”, ”அதுல ஞானசௌந்தரியாக இருந்திருக்கணும்”னு சொல்லாம இருந்தீர்களென்றாலே போதும்! ஏனெனில் சந்தனமுல்லைகள் சந்தனமுல்லைகளாக இருப்பதனால்தான், ஹேமாக்கள் ஹேமாக்களாகவும் ஞானசௌந்தரிகள் ஞான்சௌந்தரிகளாகவும் இருக்க முடிகிறது, இல்லையா! ;-)

62 comments:

rapp said...

//அவள் வந்தபின் மிஸ்ஸிடம் அவளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு அல்லது பிரியம் இடம் மாறியது!
//

//ஞானசௌந்தரி எழுந்து வாசித்தபின் தான் வரலாற்று ஆசிரியர் அதை விளக்க ஆரம்பித்தார்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............மந்திரிச்சி விட்ட கோழியாட்டமே சுத்திட்டு, கடசீல எதுக்காச்சும் நம்மள பாராட்டியே ஆகனுங்கர பரிதாப நிலைக்கு தள்ளப்படுறப்போ திடீர் உப்புமா மாதிரி திடீர் நடுநிலைவாதியா மாறி டார்ச்சர் கொடுப்பாங்களே அவுங்கதானே:):):)

rapp said...

//
முதல் ரேங்க் அல்லது டாப்பர் என்று பெயரெடுத்த இந்த ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும் தேர்வுக்கு வரவில்லையெனில் "ஆகா, இந்த வாட்டி நாமதான் ஃப்ர்ஸ்ட்" என்று நினைத்துக் கொள்பவரா நீங்கள்?!//

ஆமாம்பா ஆமாம்னு கத்தனும்போல இருக்கு, பட் தேர்வுங்கரத்துக்கு பதில் ஸ்கூல் எலெக்ஷன்னு வெச்சா எனக்குப் பொருத்தமா இருக்கும்:):):) ஹி ஹி படிப்புங்கர கெட்ட விஷயத்தை பத்தி மட்டுமே ஏன் பேசிக்கிட்டு:):):)

rapp said...

//ஒரே பள்ளி படிச்சாலும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் மட்டும் சீஸனுக்கு சீஸன் மாறுவாங்களே, ஆனால் எதிரிகள் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாதே!!//

same blood

//கேக்கற கேள்விக்கு தெரியும்னு கையைத் தூக்கிட்டு இருந்தாலும் டாப்பரை எழுப்பி சொல்ல வைக்கும்போது உள்ளே மனசு அடிச்சுக்குமே! இல்ல தெரிஞ்சாலும் எப்படி சொல்றதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போது சரியா இந்த "டாப்பர்" எழுந்து சொல்லுவாங்களே!//

நான் கூட நாலஞ்சு தரம் இப்டி கைய தூக்கிட்டு ஏமாத்தமடைஞ்சி, சரி இனி வழக்கம்போல கவனிக்கவேனாம்னு நிம்மதியாகி செவனேன்னு ஒக்காந்திருந்தா, அப்பவும் எப்டியோ டெக்னிக்கலா கண்டுப்பிடிச்சி, டார்ச்சர கொடுக்குறத்துக்குன்னே அப்போமட்டும் கேள்வி கேக்குறது.

rapp said...

//அது மட்டுமா, தன் வேலையைத் தானே செய்துக் கொண்டு, படுத்தாத, சமத்துக் குழந்தைகள் கூட ஹேமாக்களுக்கும் ஞானசௌந்தரிகளுக்குமே வாய்க்கிறது!//

அது மட்டுமில்ல, இவங்க மாமியார் மட்டும் பண்டரி பாய் மாதிரி சாதுவா இருப்பாங்க, இவங்க மாமியார் ஆனாலும் மெட்டி ஒலி பொண்ணுங்க கணக்கா மருமகள்கள் இருப்பாங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல?

குடுகுடுப்பை said...

நான் பத்தாப்பு வரைக்கும் first rank, அதுக்கப்புறம் கடைசி ரேங்க. கல்யாணத்துக்கு அப்புரம் அல்லக்கை ஆயிட்டேன்.

Dhanasakthi said...

என்னப்பா பிரசின்னை - நு கேட்க தோணினாலும், நம்ம பண்ற சமையல் மட்டும் பல நாள் சொதப்பி சில பேர் கிட்ட முழி பிதுங்கி நிக்கிறபோது, ஒஹ், உங்களுக்கு ஏற்பட்ட அதே பீலிங்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

//கேக்கற கேள்விக்கு தெரியும்னு கையைத் தூக்கிட்டு இருந்தாலும் டாப்பரை எழுப்பி சொல்ல வைக்கும்போது உள்ளே மனசு அடிச்சுக்குமே! இல்ல தெரிஞ்சாலும் எப்படி சொல்றதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போது சரியா இந்த "டாப்பர்" எழுந்து சொல்லுவாங்களே!//

இந்த கொடுமைக்காகத்தான் நாமெல்லாம் எழுந்துக்கறதே இல்ல.
மனசுக்குள்ளவே சொல்லிக்கிட்டு நாமளே நமக்கு கைத்தட்டல் வெச்சுக்கறது. என்னத்த சொல்ல!!!
காயங்கள் நிறைய.

அமிர்தவர்ஷினி அம்மா said...

(நீங்க என்னைச் சந்திக்காமலே என்னைப் பத்தி ஒரு டேமேஜை உருவாக்கியிருக்கேன் பார்த்தீங்களா!!)

ஏன் ஏன் ஏன் இப்படி????????

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஏனெனில் சந்தனமுல்லைகள் சந்தனமுல்லைகளாக இருப்பதனால்தான், ஹேமாக்கள் ஹேமாக்களாகவும் ஞானசௌந்தரிகள் ஞான்சௌந்தரிகளாகவும் இருக்க முடிகிறது, இல்லையா! ;-)

சொல்லப்போனால் ஹேமாக்களுக்கும், ஞானசௌந்தரிக்கும், உள்ளுக்குள் சந்தனமுல்லையாக இருக்கவேண்டிய ஆசைதான் துளைத்தெடுத்திருக்கும். ஆனால் அவர்கள் அதுநாள் கட்டி காத்து (!) வந்த இமேஜ் (சமூகம் தோற்றுவித்த) டேமேஜ் ஆகிறக்கூடாதேன்னு அப்படி இருந்திருப்பாங்களா இருக்கும். விட்டுத்தள்ளுங்க.

aachi always special for us.

நட்புடன் ஜமால் said...

நமக்கு அப்படியெல்லாம் வருத்தம் வந்ததே இல்லீங்க.

படிப்பில் நான் தான் எப்போதும் முதல்
என்ன கொஞ்சம் கடைசியிலேர்ந்து பார்க்கனும்.


படிப்பல்லாத விடயங்களில், நான் ஆப்ஸண்ட் ஆனால் பலர் சந்தோஷம் அடைவார்கள்.

ஆயில்யன் said...

//ஆகா, இந்த வாட்டி நாமதான் ஃப்ர்ஸ்ட்" என்று நினைத்துக் கொள்பவரா நீங்கள்?! நினைத்துக்கொண்டது மட்டுமில்லாமல் வீட்டில் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்பவரா!! அப்படியாயின் இந்த இடுகை உங்களையும் என்னையும் பற்றிதான்!///

ஸேம்ம்ம்ம்ம்ம் ப்ளட் :)

ஆயில்யன் said...

//இப்போது கூட நீங்கள், "முகிலும் பப்புவும் பாவம்தான் போல, பொண்ணா இது"-ன்னு நினைத்துக் கொண்டு படித்தீர்கள்தானே! /


எஸ்!

எஸ்!!

ஆயில்யன் said...

//(நீங்க என்னைச் சந்திக்காமலே என்னைப் பத்தி ஒரு டேமேஜை உருவாக்கியிருக்கேன் பார்த்தீங்களா!!)//

ஆமாம் பாஸ்! உண்மைதான்!

ஆயில்யன் said...

//சந்தனமுல்லைகளாக இருப்பதனால்தான், ஹேமாக்கள் ஹேமாக்களாகவும் ஞானசௌந்தரிகள் ஞான்சௌந்தரிகளாகவும் இருக்க முடிகிறது, இல்லையா! ;-)//

ஆமாம் !

(ஆட்டோவுக்கு பின்னாடியே எழுதலாம் போல!)

பை தி பை ஏன் பாஸ் ஞானசெளந்தரிகள்
ஞான் செளந்தரிகளாக மாறிடறாங்க?????

ஆயில்யன் said...

பிரியாணி சாப்பிடுவதில் சந்தனமுல்லைகள் சந்தனமுல்லைகளாகவே இருப்பதால்,ஹேமாக்களும்,ஞானசெளந்தரிகளும் கொஞ்சம் கடுப்பாவதும் கூட உண்மைதான்!

:)))

சின்னக்கவுண்டர் said...

//ஏதோ ஒரு பாடத்தில் 98 எடுத்தப்பின்னும் 100 எடுக்கவில்லையே என அழுதாள் ஞானசௌந்தரி//

இது மாதிரி சில மாணவர் / மாணவிகள் அப்பப்போ ரவுசு விட்டு கடுப்ப கிளப்புவாங்க, நம்ம 40 மார்க் டச் பண்ண 2 மார்க் இல்லாம ஒரு ஒரு ஆசிரியர் பின்னாடி மார்க் பிச்சை எடுத்தது, அதுக்கு அப்புறம் ஏதோ போன போகுதுனு 2 மார்க் ஆசிரியர் போட்டு 40 மார்க் ஆனத்துக்கு அப்புறம் ஒரு சந்தோசம் வரும் பாருங்க அப்பப்பா செம திரில். பள்ளி பருவ நாட்களை நினைத்து பார்க்க சந்தர்ப்பம் கொடுத்த "சந்தன முல்லை" அவர்களுக்கு நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
//சந்தனமுல்லைகளாக இருப்பதனால்தான், ஹேமாக்கள் ஹேமாக்களாகவும் ஞானசௌந்தரிகள் ஞான்சௌந்தரிகளாகவும் இருக்க முடிகிறது, இல்லையா! ;-)//

ஆமாம் !

(ஆட்டோவுக்கு பின்னாடியே எழுதலாம் போல!)

பை தி பை ஏன் பாஸ் ஞானசெளந்தரிகள்
ஞான் செளந்தரிகளாக மாறிடறாங்க?????

ரொம்ப சிம்ப்பிள் தியரி பாஸ் இது.
நீங்க உங்க ஃப்ரொபைல் போட்டோல ஆயில்யா வோட போட்டோ வெச்சிக்கிட்டு, பதிவுல ஆயில்யானந்தா ரேஞ்ச்சுல இருக்குற மாதிரிதான்.
:)-

அமிர்தவர்ஷினி அம்மா said...

நட்புடன் ஜமால் said...
நமக்கு அப்படியெல்லாம் வருத்தம் வந்ததே இல்லீங்க.

படிப்பில் நான் தான் எப்போதும் முதல்
என்ன கொஞ்சம் கடைசியிலேர்ந்து பார்க்கனும்.


படிப்பல்லாத விடயங்களில், நான் ஆப்ஸண்ட் ஆனால் பலர் சந்தோஷம் அடைவார்கள்.


அவ்ளோ டெர்ரரா சகோ நீங்க, சொல்லவேயில்ல.

கைப்புள்ள said...

//”நீ இதுலே ஹேமாவா இருந்திருக்கணும்”, ”அதுல ஞானசௌந்தரியாக இருந்திருக்கணும்”னு சொல்லாம இருந்தீர்களென்றாலே போதும்! ..//

இது தான் நீங்க சொல்ல வர்ற கருத்து. ஆனா என்னை மாதிரி மரமண்டைகளுக்கு முதல் சில பத்திகளைப் படிச்சிட்டுப் பாத்தா நீங்க ஹேமாவுக்கு ஞானசவுந்தரிக்கும் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்துருக்கீங்களோன்னு தோனலாம்.
:)

rapp said...

//
ரொம்ப சிம்ப்பிள் தியரி பாஸ் இது.
நீங்க உங்க ஃப்ரொபைல் போட்டோல ஆயில்யா வோட போட்டோ வெச்சிக்கிட்டு, பதிவுல ஆயில்யானந்தா ரேஞ்ச்சுல இருக்குற மாதிரிதான்.
:)-//

கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)

ஆயில்யன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
//சந்தனமுல்லைகளாக இருப்பதனால்தான், ஹேமாக்கள் ஹேமாக்களாகவும் ஞானசௌந்தரிகள் ஞான்சௌந்தரிகளாகவும் இருக்க முடிகிறது, இல்லையா! ;-)//

ஆமாம் !

(ஆட்டோவுக்கு பின்னாடியே எழுதலாம் போல!)

பை தி பை ஏன் பாஸ் ஞானசெளந்தரிகள்
ஞான் செளந்தரிகளாக மாறிடறாங்க?????

ரொம்ப சிம்ப்பிள் தியரி பாஸ் இது.
நீங்க உங்க ஃப்ரொபைல் போட்டோல ஆயில்யா வோட போட்டோ வெச்சிக்கிட்டு, பதிவுல ஆயில்யானந்தா ரேஞ்ச்சுல இருக்குற மாதிரிதான்.
:)-///


நான் சொல்றதை சொல்லிட்டேன்! செய்யுறதையும் சொல்லிட்டேன்!

புடிச்சா...

புடிச்சுக்கோங்க!

பட் எனக்கு புடிச்சிருக்கு!!!!!இப்படித்தான் சொல்லணும்ன்னு ஆசை! பட் இதெல்லாம் ஒரு வாலிப வயசு வெளையாட்டு பாஸ் கண்டுக்காதீங்கோஓஓஓஓஓ! :))))))

ஆயில்யன் said...

//rapp said...

//
ரொம்ப சிம்ப்பிள் தியரி பாஸ் இது.
நீங்க உங்க ஃப்ரொபைல் போட்டோல ஆயில்யா வோட போட்டோ வெச்சிக்கிட்டு, பதிவுல ஆயில்யானந்தா ரேஞ்ச்சுல இருக்குற மாதிரிதான்.
:)-//

கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)///


:((

பைத்தியக்காரன் said...

ஆச்சி,

'நான், நானா இருக்கேன். என்னை அப்படியே ஏத்துகிட்டு என்கிட்ட நட்பு பாராட்டுங்க.

நான் செய்யறதெல்லாம் சரினு சொல்லமாட்டேன். அதேநேரத்துல செய்யறதெல்லாம் தப்புன்னும் ஒப்புக் கொள்ள மாட்டேன்...' என்பதான தொனி உங்கள் பதிவுகளில் அதிகம் தெரிகிறது. இந்தப்பதிவிலும்...

இப்படி நினைப்பவர்கள்தான் மற்றவர்களையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களாகவே ஏற்றுக் கொள்வார்கள்.

இந்த மனநிலை நட்புக்கான மனநிலை. அதனால்தான் உங்களால் சகலருடனும் நட்பு பாராட்ட முடிகிறது.

வாழ்த்துகள்

தோழமையுடன்
பைத்தியக்காரன்

rapp said...

//:((//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்போ எதுக்கு பீலிங்க்ஸ்:):):)

மாதவராஜ் said...

முக்கியமான பதிவு. நீங்களும் சில சந்தனமுல்லைகளுக்கு ஹேமாவாகவோ, ஞானசௌந்தரிகளாகவோ இருந்திருப்பீர்கள் தானே!

விக்னேஷ்வரி said...

ரொம்ப வேதனைப் பட்டு எழுதிருக்கீங்க போலவே.... ;)

அமுதா said...

*அது மட்டுமா, தன் வேலையைத் தானே செய்துக் கொண்டு, படுத்தாத, சமத்துக் குழந்தைகள் கூட ஹேமாக்களுக்கும் ஞானசௌந்தரிகளுக்குமே வாய்க்கிறது!
*/
:-)

/*இந்த உலகம் ஹேமாக்களுக்காகவும், ஞானசௌந்தரிகளுக்காகவும் மட்டும் இல்ல..சந்தனமுல்லைகளுக்காகவும்தான் என்று எனக்குச் சொல்ல முடியவில்லையென்றால் கூட, ”நீ இதுலே ஹேமாவா இருந்திருக்கணும்”, ”அதுல ஞானசௌந்தரியாக இருந்திருக்கணும்”னு சொல்லாம இருந்தீர்களென்றாலே போதும்! */
நல்ல கருத்து முல்லை

மங்களூர் சிவா said...

/
தன் வேலையைத் தானே செய்துக் கொண்டு, படுத்தாத, சமத்துக் குழந்தைகள் கூட ஹேமாக்களுக்கும் ஞானசௌந்தரிகளுக்குமே வாய்க்கிறது!
/

கண்டனங்கள்

பப்பு ரசிகர் பேரவை
மங்களூர்

மங்களூர் சிவா said...

அட்டகாசமா எழுதியிருக்கீங்க.

வித்யா said...

:)
கலக்குங்க.

மங்களூர் சிவா said...

என்னைய எல்லாம் யாரும் துரத்தினதில்லை துரத்தினதா நினைச்சதுகூட இல்லை இது வரைக்கும். என்னையல்லாம் துரத்தனும்னா அவன் 10 ராங்க் பின்னாடி ஓடி வரணும்

:))))))

rapp said...

//”நீ இதுலே ஹேமாவா இருந்திருக்கணும்”, ”அதுல ஞானசௌந்தரியாக இருந்திருக்கணும்”னு சொல்லாம இருந்தீர்களென்றாலே போதும்! //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இப்டில்லாம் டார்ச்சர கெளப்புறது முக்காவாசி, இந்த அல்லக்கை/லொடுக்கு சுந்தரிகளாத்தான் இருக்கும். ஹேமா, ஞானசௌந்தரி இம்சைகள விட, இப்டியாப்பட்ட பொன்மொழிகள தூவுற அல்லக்கை/லொடுக்கு சுந்தரிங்க இம்சைதான் டூ மச்:):):)

மங்களூர் சிவா said...

//இப்போது கூட நீங்கள், "முகிலும் பப்புவும் பாவம்தான் போல, பொண்ணா இது"-ன்னு நினைத்துக் கொண்டு படித்தீர்கள்தானே! /

எஸ்ஸு

நல்லா மைண்ட் ரீட் பண்றீங்களே
:))))

நிஜமா நல்லவன் said...

:))

நிஜமா நல்லவன் said...

//
ரொம்ப சிம்ப்பிள் தியரி பாஸ் இது.
நீங்க உங்க ஃப்ரொபைல் போட்டோல ஆயில்யா வோட போட்டோ வெச்சிக்கிட்டு, பதிவுல ஆயில்யானந்தா ரேஞ்ச்சுல இருக்குற மாதிரிதான்.
:)-//

கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)

நிஜமா நல்லவன் said...

// rapp said...

//:((//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்போ எதுக்கு பீலிங்க்ஸ்:):):)//


தங்கச்சியக்கா....இந்த பீலிங் உங்க கமெண்ட் படிச்சிட்டு ஆயில்யா நினைப்பு அண்ணனுக்கு வந்ததால...:)

நிஜமா நல்லவன் said...

/ மங்களூர் சிவா said...

அட்டகாசமா எழுதியிருக்கீங்க./


தல சொன்னதை தட்டாம வழிமொழிகிறேன்!

நிஜமா நல்லவன் said...

//மங்களூர் சிவா said...

/
தன் வேலையைத் தானே செய்துக் கொண்டு, படுத்தாத, சமத்துக் குழந்தைகள் கூட ஹேமாக்களுக்கும் ஞானசௌந்தரிகளுக்குமே வாய்க்கிறது!
/

கண்டனங்கள்//


ரிப்பீட்டேய்...

நிஜமா நல்லவன் said...

சொல்ல வந்த விஷயத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க பாஸ்!

ராமலக்ஷ்மி said...

அருமை அருமை, அத்தனை பேர் மனதையும் படித்த மாதிரி எழுதியிருக்கீங்க. மொத்தத்தில நாம நாமாவே இருப்பதில் சந்தோஷப் பட்டுக்குவோம்.

//சந்தனமுல்லைகள் சந்தனமுல்லைகளாக இருப்பதனால்தான், ஹேமாக்கள் ஹேமாக்களாகவும் ஞானசௌந்தரிகள் ஞான்சௌந்தரிகளாகவும் இருக்க முடிகிறது, இல்லையா!//

ஆமாம், இருந்துட்டுப் போகட்டும், விட்டிருவோம்:)!

தீஷு said...

//சமத்துக் குழந்தைகள் கூட ஹேமாக்களுக்கும் ஞானசௌந்தரிகளுக்குமே வாய்க்கிறது//

:-)).... எல்லாத்துக்கும் தலை ஆட்டுற கணவர் கூட அவுங்களுக்குத் தான் கிடைக்கும்..

அன்புடன் அருணா said...

சும்மா சந்தனமுல்லையாவே இருந்து கலக்குங்க!!!! நாங்க பார்த்துக்கறோம்..ஹேமாவையும் ஞானசௌந்தரிகளையும்!!!!!

நசரேயன் said...

//நீங்கதான் ஹேமா இல்லன்னா ஞானசௌந்தரின்னா இந்தப் பதிவு உங்களுக்கில்லை!//

நான் நசரேயன் எனக்கு இந்த பதிவு உண்டானு தெரியலையே

நசரேயன் said...

//முதல் ரேங்க் அல்லது டாப்பர் என்று பெயரெடுத்த இந்த ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும் தேர்வுக்கு வரவில்லையெனில் "ஆகா, இந்த வாட்டி நாமதான் ஃப்ர்ஸ்ட்" என்று நினைத்துக் கொள்பவரா நீங்கள்?!//

யாருமே தேர்வுக்கு வரலைனாலும் நான் பாஸ் ஆகமாட்டேன்

நசரேயன் said...

//நம்மை பத்தி யாருமே நினைத்துக் கூட பார்க்காதபோது ஏதாவது ஒரு பாடத்திலே முதல் மதிப்பெண் வாங்குவோமே! கண்டிப்பா 90-95-ல்லாம் வாங்க மாட்டோம், ஆனா ஒற்றைப்படையில் வாங்கமாட்டோமே!//

அந்த அளவுக்கு நான் படிக்கலை ஆச்சி

நசரேயன் said...

//எல்லாருக்கும் எப்போவும் நல்ல புள்ளையாவே இருக்க முடியாதுல்ல!//

உண்மை

நசரேயன் said...

//“அய்யோ பாவம், யாரு அந்த அப்பாவி” யென்றும், ”உன் கிட்டே மாட்டிக்கிட்டு என்ன பாடுபடபோறாங்களோ” //

ஆமா.. ஆமா

நசரேயன் said...

//இப்போது கூட நீங்கள், "முகிலும் பப்புவும் பாவம்தான் போல, பொண்ணா இது"-ன்னு நினைத்துக் கொண்டு படித்தீர்கள்தானே! //

முகிலோட அசரீரி பேசுற மாதிரியே இருக்கு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

"நீ இதுலே ஹேமாவா இருந்திருக்கணும்”, ”அதுல ஞானசௌந்தரியாக இருந்திருக்கணும்”னு சொல்லாம இருந்தீர்களென்றாலே போதும்! "
மிக முக்கியமான குழந்தை வளர்ப்புக் கருத்தை மனதில் படும்படி சொல்லியிருக்கிறீர்கள்.

ஆகாய நதி said...

//
ஏனெனில் சந்தனமுல்லைகள் சந்தனமுல்லைகளாக இருப்பதனால்தான், ஹேமாக்கள் ஹேமாக்களாகவும் ஞானசௌந்தரிகள் ஞான்சௌந்தரிகளாகவும் இருக்க முடிகிறது, இல்லையா! ;-)

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... தெளிவா சொல்லீட்டீங்க...

ஆகாய நதி said...

//
?!( நீங்கதான் ஹேமா இல்லன்னா ஞானசௌந்தரின்னா இந்தப் பதிவு உங்களுக்கில்லை! :-))
//

அப்படித்தானு நினைக்கிறேன்... :)

நீங்க சொல்ல மறந்த ஒரு விஷயத்துல மட்டும் நான் ஞானசௌந்தரி இல்லீங்க...

ஆகாய நதி said...

//
//கேக்கற கேள்விக்கு தெரியும்னு கையைத் தூக்கிட்டு இருந்தாலும் டாப்பரை எழுப்பி சொல்ல வைக்கும்போது உள்ளே மனசு அடிச்சுக்குமே! இல்ல தெரிஞ்சாலும் எப்படி சொல்றதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போது சரியா இந்த "டாப்பர்" எழுந்து சொல்லுவாங்களே!//
//

கணக்கு வகுப்புகளில் மட்டும் எனக்கு ஒரு ஞானசௌந்தரி பேரு இராஜசட்சுமி... இப்படி தான் நடக்கும் எனக்கும் :(

ஆகாய நதி said...

//
'நான், நானா இருக்கேன். என்னை அப்படியே ஏத்துகிட்டு என்கிட்ட நட்பு பாராட்டுங்க.

நான் செய்யறதெல்லாம் சரினு சொல்லமாட்டேன். அதேநேரத்துல செய்யறதெல்லாம் தப்புன்னும் ஒப்புக் கொள்ள மாட்டேன்...' என்பதான தொனி உங்கள் பதிவுகளில் அதிகம் தெரிகிறது. இந்தப்பதிவிலும்...

இப்படி நினைப்பவர்கள்தான் மற்றவர்களையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களாகவே ஏற்றுக் கொள்வார்கள்.
//

நானும் இதை சொல்லிக்கிறேன்... :)

//
நீங்களும் சில சந்தனமுல்லைகளுக்கு ஹேமாவாகவோ, ஞானசௌந்தரிகளாகவோ இருந்திருப்பீர்கள் தானே!
//

good point! I like it! :)
இக்கரைக்கு அக்கரை பச்சைனு மனச தேத்திக்கோங்க முல்லை... :)

ஆகாய நதி said...

//
:-)).... எல்லாத்துக்கும் தலை ஆட்டுற கணவர் கூட அவுங்களுக்குத் தான் கிடைக்கும்..
//

அப்போ நீங்க ஹேமாவா தீஷூ!
:))) சும்மா கேட்டேன்...

மணிநரேன் said...

மனதில் புதைந்துபோன விடயங்களை மிக அழகாக பதித்துள்ளீர்கள். அதிலும், கடைசி இரண்டு பத்திகள் தனித்து நிற்கின்றன.

//சரி, இதுலதான்.....வாய்க்கிறது!//

இதுக்கெல்லாம் கவலைபடலாமா?? நம்மை கலாய்பதற்காகவே அவர்கள் அப்படி சொல்வார்கள்.அதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி.

//இந்த உலகம்....இருக்க முடிகிறது, இல்லையா! //

மிகவும் சரி. ஒப்பீட்டு பார்க்காமல் இருந்தாலே அனைவரும் அவரவர் விரும்பிய துறைகளில் பல முன்னேற்றங்களை பெறுவார்கள்.

கெக்கே பிக்குணி said...

ஹேமா & ஞானசௌந்தரி (என்ன பேருங்க:-) ஒரே உருவுல வந்திருக்கேன். பதிவை முழுசாப் படிச்சேன், பரவாயில்லியா? :-)

//சமத்துக் குழந்தைகள் கூட ஹேமாக்களுக்கும் ஞானசௌந்தரிகளுக்குமே வாய்க்கிறது// It is all perception. உண்மை வேறு. எல்லாவற்றிலும் முந்தியிருக்க வேண்டும் என்ற எண்ணம் வரம் அல்ல, வியாதி. சொந்த அனுபவம் (almost) தெளிந்ததால் எழுதுகிறேன்.

இல்லன்னா இவ்வளவு தெளிவா கெக்க பிக்கன்னு எழுத முடியுமா என்னால? :-)

Deepa said...

முல்லை!

சின்னச் சின்ன ஆனா ரொம்பவே பாதிக்கற விஷய்ங்களைக் கூர்மையா பார்த்து எழுதறீங்க.

இந்தப் பதிவு நிச்சய்மா எனக்கும் தான். நாமெல்லாம் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு விட்டுக் கொடுத்ததால் தான் ஹே.. வும் ஞா..வும் கொடி கட்டிப் பறந்திருக்காங்க.. ஆமாம்!


:-) பள்ளி நாட்களில் என்னைப் பாதித்த ஹேமாக்களையும் ஞானசௌந்தரிகலையும் விட இப்போது நான் சந்திக்கும் ஹே.. ஞா.. தான் ரொம்பவே கடுப்பேத்தறாங்க.


There are always people out there who are ready to make you feel incompetent, but if only you let them do it. Clearly ignore them.

lakshmanan said...

good
u have to add with this negative things like unhealthy competetion of our educational system.

This system, never id the potential corner of the children.

This is the basic things of our problem

பட்டாம்பூச்சி said...

நீங்க எழுதி இருக்கற விதம் நல்லா இருக்குங்க.
ஆனா நாம ஒவ்வொருத்தரும் யாரோ ஒருத்தருக்காவது ஹேமாவாகவும் ஞானசௌந்தரி ஆகவும் நிச்சயம் இருப்போம் இல்லையா? :)

கானா பிரபா said...

ஆயில்யன் said...

//ஆகா, இந்த வாட்டி நாமதான் ஃப்ர்ஸ்ட்" என்று நினைத்துக் கொள்பவரா நீங்கள்?! நினைத்துக்கொண்டது மட்டுமில்லாமல் வீட்டில் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்பவரா!! அப்படியாயின் இந்த இடுகை உங்களையும் என்னையும் பற்றிதான்!///

ஸேம்ம்ம்ம்ம்ம் ப்ளட் :)


டபுள் ரிப்பீஇட்ட்டேஏஏஏஎ

ஆகாய நதி said...

அய்யோ முல்லை சொன்னா நம்பமாட்டீங்க... இன்னைக்கு கிட்டத்தட்ட 8வருடங்களுக்கு பிறகு கடைசியாக நான் 10ம் வகுப்பில் சந்தித்த அந்த "இராசலட்சுமி"யை கண்காட்சியில் பார்த்தேன்....

//
கணக்கு வகுப்புகளில் மட்டும் எனக்கு ஒரு ஞானசௌந்தரி பேரு இராஜசட்சுமி... இப்படி தான் நடக்கும் எனக்கும் :(
//

நேற்று இரவுதானே இந்தப் பொண்ணை பற்றி முல்லைக்கு கமெண்ட்லாம் போட்டோம் இன்னைக்கு இப்படி கண்ணு முன்னாடி நிக்குதேனு எனக்கு செம ஆச்சரியம்..
!!!!!!!!!!!!!!!!

எப்படி இப்படிலாம்?!!!

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

////சந்தனமுல்லைகளாக இருப்பதனால்தான், ஹேமாக்கள் ஹேமாக்களாகவும் ஞானசௌந்தரிகள் ஞான்சௌந்தரிகளாகவும் இருக்க முடிகிறது, இல்லையா! ;-)//

ஆமாம் !

(ஆட்டோவுக்கு பின்னாடியே எழுதலாம் போல!)//

he he he