Tuesday, June 23, 2009

இ ஃபார்...

...இடுப்பு!! இ ஃபார் இந்தநாள் இனியநாள் என்று எழுத நினைத்திருந்தேன். Golda அக்கா எனக்கு இ ஃபார் இடுப்பு எனற தலைப்பை பரிந்துரைத்திருந்தார்கள். நன்றி அக்கா! இடுப்பு பத்தி நான் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. அதான் சினிமாவே அதன் உபயோகங்களையெல்லாம் கோனார் நோட்ஸ் போட்டு சொல்லிக் கொடுத்து விடுகிறதே!! சினிமாவில் இடுப்பை வெளிப்படுத்த எந்த அளவிற்கு ஹீரோயின்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ, அதற்கு நேர்மாறான வீட்டில் பெண்கள் இடுப்புத் தெரியுமாறு உடை உடுத்துவது தடை செய்யப்பட்ட விஷயம்! (பின்ன என்னங்க, ஐந்து வயசுலே ஜோதிகா ட்ரெஸ்-ன்னு பாவாடைக்கும் பிளவுஸ்-க்கும் இடையிலே கேப் விட்டு போட்டு அழகு பார்ப்பார்கள், அதையே
வளர்ந்தப்புறம் அவங்க போட்டா திட்டுறது..எப்படி ஜீன்ஸ் இடுப்புத் தெரியறமாதிரி போட்டுக்கிட்டு போறாங்கன்னு!!)

அதை விடுங்க, நான் சொல்ல வந்ததைவிட்டு எங்கேயோ போகிறேன்! எங்க பள்ளிக்கூடம், இருபாலருக்குமானது. அதுவுமில்லாமல் எங்கள் ஊர் ஒரு சிற்றூர்.. எட்டாவது ஒன்பதாவதுதான் படித்துக்கொண்டிருப்போம். நமது வகுப்பிலிருக்கும் ஒரு சில பெண்களிடம் மட்டும் தனியாக ஆசிரியர் பேசுவார். அடுத்தடுத்த வாரங்களில் அந்தக் குறிப்பிட்ட பெண்
தாவணியில் வருவார். உடனே எங்களுக்குத் தெரிந்து விடும்...சரி, நம்மிடம் பேசினாலே டேஞ்சர் என்று! பலருக்கும் தாவணி பிடிக்கும், ஆனால் அணிகின்ற பெண்களுக்கு நிச்சயமாகப் பிடிக்காது! அவ்வளவு ஏன், நிறைய ஆண்கள், பெண்கள் தாவணி போட்டுக்கிட்டிருந்தா பிடிக்கும் என்றுச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், தாவணி அணிந்தவர்களுக்கேத் தெரியும் அதிலுள்ள சங்கடங்கள்! அதுவும் 13/14 வயது சிறுமிகளை தாவணியில் கட்டிப்போட்டால்...!! பொதுவாக பதினொன்றாம் வகுப்பிலிருந்து எங்கள் பள்ளியில் தாவணி அணிய வேண்டுமென்பது சட்டமாக இருந்தது!நானும் என் தோழிகளும் மிகுந்த மன அவஸ்தைக்குள்ளகினோம். சொல்லில் புரிய வைக்க முடியுமாவெனத் தெரியவில்லை. ஜாலியாக சல்வாரும் மிடியும் அணிந்துக் கொண்டு வந்த இடத்திற்கு, அடுத்த ஒரு மாதத்திலிருந்து தாவணியில் வரவேண்டுமென்பது ஒரு மாதிரி இனங்காண முடியாத தயக்க உணர்வாக இருந்தது! பள்ளி நிர்வாகம் இதை உணர்ந்ததாவென்பது சந்தேகமே!

அன்று காலை பள்ளிக்குக் கிளம்ப வேண்டும். கட்டவும் தெரியாது, தெரியாதென்பதைவிட பிடிக்காதென்பதே பொருத்தமாக இருக்கும். இயலாமையும் ஆற்றாமையும் சேர்ந்து வர அழுகை எட்டிபார்த்தது. பெரிம்மாதான் எனக்குக் கட்டி விட்டார்கள். அதுவும் தாவணி கட்டும்போது, பாவாடையில் ஒரு V ஷேப் வரவேண்டும். ஆனால் பெரிம்மா கட்டிவிட்டதோ அந்தக்காலத்து ஸ்டைல்!! அதுவேறு பிடிக்கவில்லை. இடுப்புத் தெரிவதுபோன்ற ஃபீலிங்! பிடிக்கவேயில்லை. நானாகவே ஏதோ V வருவதுபோல சுற்றிக் கொண்டு, பதினோரு ஊக்குகளை அங்கங்கே இழுத்துபிடித்து போட்டுக்கொண்டு ஒருவழியாக வகுப்பிற்குப் போய் சேர்ந்தேன்! அங்கே ஷபீனா, ரேணுகா, அனு, கவிதா, ஹேமா என்று எல்லோரும் அதே மாதிரி வந்திருந்தார்கள். எல்லோர் கண்களும் (அழுது) சிவந்திருந்தன அல்லது வீங்கியிருந்தன. அவர்கள் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடிந்தது! பின்னர் ஒருமாதத்தில் பழகிவிட்டது..எங்களுக்குள் தனிப்பட்ட கிண்டல்கள் தவிர!

ஆனால் தாவணிபோட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டுவது மிகப் பெரிய அபாயம். அதுவும் காலையில் ஒரு ட்யூஷன், மாலையில் ஒரு ட்யூஷன் என்று செல்லவேண்டிய செட் நாங்கள்! நாங்கள் பனிரெண்டாம் வகுப்பு வரும்போது அந்தச் சட்டத்தை எடுத்துவிட்டார்கள், பள்ளிநிர்வாகத்தினர். பாவாடை, சைக்கிளில் மாட்டி எங்கள் பள்ளியைச் சார்ந்த ஒரு பெண் ரோடில் விழுந்து பின்னால் வந்த வண்டி அவள் மீதேறி விபத்துக்குள்ளானதேக் காரணம்! தாவணி அணிந்தப் பெண்கள் சிரிப்பது சினிமாவிலும் நாடகங்களிலும்தான்! பள்ளிச் செல்லும் பெண்களுக்கு அது மற்றுமொரு அசௌகரியமே!!

ஆனந்த விகடனின்(லேட்டஸ்ட் இஷ்யூ) கடைசி பக்கங்களில் வழக்கறிஞர் அருள்மொழி மிக அருமையாக சொல்லியிருந்தார் - இன்று பெண்கள் உடுக்கும் எல்லா உடைகளுமே ஆண்களால் வடிவமைக்கப்பட்டவையே! பெண்களை நுகர்வு பண்டமாக பார்க்கும் போக்கிலிருந்து ஆண் குழந்தைகளை இன்றைய பெற்றோர்கள் மீட்க வேண்டுமென்று!! அவரவர் உடை அவரவர் உரிமை!

34 comments:

rapp said...

சூப்பர் பதிவு முல்லை:):):) எனக்குத் தெரிஞ்சு பல பொறியியல் கல்லூரிகளில்(நான் படித்த கல்லூரி உட்பட) தாவணி அணியத் தடை உண்டு. இது மிக மிக அசௌகரியமான உடைன்னு பலப் பேர் எரிச்சல் படக் கேட்டதுண்டு. ஆனா, வழக்கம்போலவே அதை சொன்னாக் கூட திட்டு விழும்னு முணுமுணுப்போட போய்டுவாங்க. சரியா அதை சொல்லிருக்கீங்க.

rapp said...

//அவ்வளவு ஏன், நிறைய ஆண்கள், பெண்கள் தாவணி போட்டுக்கிட்டிருந்தா பிடிக்கும் என்றுச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், தாவணி அணிந்தவர்களுக்கேத் தெரியும் அதிலுள்ள சங்கடங்கள்!//

ரொம்ப உண்மையான விஷயம்.

//அதுவும் 13/14 வயது சிறுமிகளை தாவணியில் கட்டிப்போட்டால்//

எங்க சொந்தக்கார பொண்ணு ஒருத்தங்க இதுக்காக வீட்லருந்து பாட்டி வீட்டுக்கு ஓடிப் போய்ட்டாங்க, கடுப்பாகி. ஸ்கூல் மாத்துன பின்னதான் வருவேன்னு சொல்லி வந்தாங்க.

rapp said...

//நானாகவே ஏதோ V வருவதுபோல சுற்றிக் கொண்டு//

same blood:(:(:(

//தாவணி அணிந்தப் பெண்கள் சிரிப்பது சினிமாவிலும் நாடகங்களிலும்தான்! பள்ளிச் செல்லும் பெண்களுக்கு அது மற்றுமொரு அசௌகரியமே!!//

சூப்பர் சூப்பர். ரொம்ப ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க.

//இன்று பெண்கள் உடுக்கும் எல்லா உடைகளுமே ஆண்களால் வடிவமைக்கப்பட்டவையே! பெண்களை நுகர்வு பண்டமாக பார்க்கும் போக்கிலிருந்து ஆண் குழந்தைகளை இன்றைய பெற்றோர்கள் மீட்க வேண்டுமென்று!! அவரவர் உடை அவரவர் உரிமை!//

அருமையான உண்மையான சூப்பர் பாயின்ட். முதலில் பெண்மையின் மென்மைய வெளிப்படுத்துற உடைகள், அது இதுன்னு இவங்களா முன்முடிவோட இருந்துக்கிட்டு டார்ச்சர் பண்ணக் கூடாது.

ஆயில்யன் said...

மீ த 1

ஆயில்யன் said...

//பாவாடை, சைக்கிளில் மாட்டி எங்கள் பள்ளியைச் சார்ந்த ஒரு பெண் ரோடில் விழுந்து பின்னால் வந்த வண்டி அவள் மீதேறி விபத்துக்குள்ளானதேக் காரணம்!//

:((((

rapp said...

முதல்ல எதிர் பாலினர் உடையை வடிவமைக்கிறேன் பேர்விழின்னு பயங்கர இம்சையான உடைகளா வடிவமைச்சிட்டு, அப்புறம் அதுக்கு ஜம்பம் வேற, குத்துவிளக்கு டிரெஸ், குலவிளக்கு டிரெஸ், அப்டி இப்டின்னு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........
எனக்கு மட்டும் இந்த வடிவமைப்பாளர்கள் யார்னு தெரிஞ்சா, அண்ணாசாலைல கத்திரி வெயில்ல, நல்லா மத்தியான நேரத்துல, உல்லன் கோட் சூட்ல டிராபிக் கான்ஸ்டபுளா(நிழற்குடை இல்லாம) நிக்க விட்டிருவேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............
கரண்ட் கட சமயத்தில் எல்லாம், பல அலுவலகங்களில் பெண்கள் படுற பாட்டை பாத்து இப்டி விதவிதமா நெறைய கடுப்பானதுதான் மிச்சம்.

தீஷு said...

தாவணி எனக்கு ரொம்ப பிடிக்கும் முல்லை. எங்க பள்ளியில் ஸ்கெட்டும், சுடிதாரும் தான் சீருடை. கல்லூரியிலும் அனுமதி கிடையாது. அதனால் ஆசையாக வீட்டில் இருக்கும் சமயம் கட்டிக்கொள்வேன்.

கைப்புள்ள said...

//எனக்கு மட்டும் இந்த வடிவமைப்பாளர்கள் யார்னு தெரிஞ்சா, அண்ணாசாலைல கத்திரி வெயில்ல, நல்லா மத்தியான நேரத்துல, உல்லன் கோட் சூட்ல டிராபிக் கான்ஸ்டபுளா(நிழற்குடை இல்லாம) நிக்க விட்டிருவேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............
கரண்ட் கட சமயத்தில் எல்லாம், பல அலுவலகங்களில் பெண்கள் படுற பாட்டை பாத்து இப்டி விதவிதமா நெறைய கடுப்பானதுதான் மிச்சம்.//

யம்மாடியோவ்,
கமெண்ட்லியே என்னா ஒரு வன்முறை. வடிவமைச்சவர் மட்டும் அக்கா கையிலே கெடச்சா என்னாகும்? நெனச்சி பாக்கவே குலை நடுங்குதே?

rapp said...

பெண்கள் உடை விஷயங்களில் சம்பந்தப்பட்ட பெண், முதலில் அது தனக்கு வசதியான, பாதுகாப்பான உடையா என முடிவுசெய்யவேண்டும்.(குறிப்பிட்ட வயதுவரை மட்டும்)அம்மா அப்பாவோட அதிகாரமோ ஆலோசனையோ முடிஞ்சிட்டாலே, பல இம்சைகள் வராது. மூணாவது வீட்டுக்காரங்க முப்பதாவது வீட்டுக்காரங்க எல்லாம் அதிகாரம் எடுத்துக்கிட்டா, வசதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படாது, பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படாது, மாற்றங்களுக்கும் வழிவிடாது, திருத்தங்களுக்கும் வழிவிடாது, ஒட்டுமொத்தத்தில் சோதனையாகத் தான் இருக்கும்.

வித்யா said...

ஆனந்த விகடனில் நானும் படித்தேன். நல்ல பதிவு முல்லை. ஐ ஆம் லக்கி. ஒரு மணி நேரம் மட்டுமே தாவணி கட்டிருக்கேன்.

\\பதினோரு ஊக்குகளை அங்கங்கே இழுத்துபிடித்து போட்டுக்கொண்டு\\

இப்போ புடவை கட்டனும்னா அப்படிதான் இருக்கு:)

குடுகுடுப்பை said...

தாய்மார்களே, மீண்டும் இங்கே ஹரிணியோடு வருகிறேன். எனக்கு தங்கச்சி அக்காவெல்லாம் இல்லை, அதுனால நான் யாரையும் கட்டுப்படுத்தல, ஆனா பாப்பாவுக்கு எடுக்கிற அனைத்து உடைகளும் என்னுடைய தேர்வே இப்போது இதுக்கு எதுனா சொல்லிராதீங்க மேடம்ஸ்.

மத்தபடி பெண்கள் பற்றிய பதிவினால நான் எஸ்கேப்.

மாதேவி said...

பாவாடை தாவணியால் இவ்வளவு சிரமங்கள் என அறியும்போது கவலை வருகிறது.

விக்னேஷ்வரி said...

சினிமாவே அதன் உபயோகங்களையெல்லாம் கோனார் நோட்ஸ் போட்டு சொல்லிக் கொடுத்து விடுகிறதே!! //

அடடே, கோனார் நோட்ஸ் இன்னும் ஞாபகம் இருக்கா...

பொதுவாக பதினொன்றாம் வகுப்பிலிருந்து எங்கள் பள்ளியில் தாவணி அணிய வேண்டுமென்பது சட்டமாக இருந்தது! //

எங்கள் பள்ளியிலும் தான் முல்லை. ஆனால் எனக்கு அது அப்போது ரொம்பப் பிடித்திருந்தது.

ஜாலியாக சல்வாரும் மிடியும் அணிந்துக் கொண்டு வந்த இடத்திற்கு, அடுத்த ஒரு மாதத்திலிருந்து தாவணியில் வரவேண்டுமென்பது ஒரு மாதிரி இனங்காண முடியாத தயக்க உணர்வாக இருந்தது! பள்ளி நிர்வாகம் இதை உணர்ந்ததாவென்பது சந்தேகமே! //

இப்போ உணர்ந்துட்டாங்க முல்லை. எனக்குத் தெரிந்து இப்போது அரசுப் பள்ளிகளில் கூட தாவணி கிடையாது.

நானாகவே ஏதோ V வருவதுபோல சுற்றிக் கொண்டு, பதினோரு ஊக்குகளை அங்கங்கே இழுத்துபிடித்து போட்டுக்கொண்டு ஒருவழியாக வகுப்பிற்குப் போய் சேர்ந்தேன்! ///

ஹாஹாஹா.......

பாவாடை, சைக்கிளில் மாட்டி எங்கள் பள்ளியைச் சார்ந்த ஒரு பெண் ரோடில் விழுந்து பின்னால் வந்த வண்டி அவள் மீதேறி விபத்துக்குள்ளானதேக் காரணம்! //

ஐயோ, இவ்வளவு விபரீதமானதா தாவணி அணிவது...

இன்று பெண்கள் உடுக்கும் எல்லா உடைகளுமே ஆண்களால் வடிவமைக்கப்பட்டவையே //

இது என்னால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விஷயம். பல பெண் உடை வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பில் வந்த ஆடைகள் அதிகம்.

அவரவர் உடை அவரவர் உரிமை! //

இப்படியெல்லாம் சரியா பேசினா பெண்ணியம்னு சொல்லிடப் போறாங்க முல்லை. :)

மயில் said...

புக்கை விட தாவணிதான் ரொம்ப நேரம் எடுக்கும்..
நல்ல இருக்குபா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இ ஃபார் இடுப்பு

தலைப்பே அசத்தல்

நல்ல வேளையா நாம ஒல்லி பிச்சானாவே இருந்ததால +2 வரைக்கும் வொய்ட் சர்ட் + க்ரீன் ஸ்கர்ட் தான். ஆனா நீங்க சொன்னா மாதிரி கொஞ்ச பேரை கேம்ஸ் டீச்சர் தனியா கூப்பிட்டாங்கன்னா, அவங்க உஜாலாவுக்கு மாறுவது போல பாவாடை தாவணிக்கு மாறிடுவாங்க.

ஆனா முதன் முதலா ஒரு தடவை பாவாடை தாவணி (மொத்தம் மூன்று முறை) கட்ட நேரும்போது எனக்கும் அந்த 11 பின்கள் கதை நேர்ந்தது.

கட்டிவிடும்போது லதா அக்கா சொன்னது, இப்படிதாண்டி இத இழுத்துவெச்சி சுத்திக்கணும், இல்லனா ”கலைக்கண்ணோட” பார்ப்பானுங்க ந்னு சொன்னது பளிச்சுன்னு ஞாபகம் வந்தது இந்தப் பதிவை படிக்கும்போது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
மீ த 1

ஆயில்ஸ் நீங்க அவுட், யூ த நாலு.

புதுகைத் தென்றல் said...

ஐந்து வயசுலே ஜோதிகா ட்ரெஸ்-ன்னு பாவாடைக்கும் பிளவுஸ்-க்கும் இடையிலே கேப் விட்டு போட்டு அழகு பார்ப்பார்கள், அதையே
வளர்ந்தப்புறம் அவங்க போட்டா திட்டுறது..எப்படி ஜீன்ஸ் இடுப்புத் தெரியறமாதிரி போட்டுக்கிட்டு போறாங்கன்னு!!


ஆமாங்க.

புதுகைத் தென்றல் said...

தாவணிப்பத்தி சொல்லியிருக்கிறது எல்லாம் என் மன்சுலேர்ந்து வந்த மாதிரி இருக்கு. பட்ட கஷ்டங்கள் அம்புட்டு. நான் படிச்சு பள்ளீயில பொண்ணுங்க அதே கலர் யூனிபார்மை சுடிதாரா போட்டுகிட்டு போறாங்க!!!

துபாய் ராஜா said...

எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு வந்தவுடனே கண்டிப்பாக தாவணி அணிய வேண்டும்.எப்படியோ கஷ்டப்பட்டு சுற்றிக்கொண்டு வரும் பெண்களை பார்க்க பரிதாபமாக இருக்கும்.தற்போது எல்லா பள்ளிகளிலுமே சுரிதார் அணியும் பழக்கம் கொண்டு வ்ந்துவிட்டார்கள் என நினைக்கிறேன்.

அமுதா said...

/*அவரவர் உடை அவரவர் உரிமை!*/
டபுள் ஸ்ட்ராங்கா இதை நான் ஆமோதிக்கிறேன்.
எனக்கு வெகு நாட்களாக உறுத்தும் விஷயம் பெண்கள் என்ன உடை அணிகிறார்கள் என்று விமர்சிக்க சில பெண்கள் உட்பட ஒரு கூட்டம் கடமையாக இருப்பது ஏன்?

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//"இ ஃபார்..."// இந்த பதிவு நல்லாருக்கு :O))

//இப்படிதாண்டி இத இழுத்துவெச்சி சுத்திக்கணும், இல்லனா ”கலைக்கண்ணோட” //

ஆண்களோட 6 pack ஐ நாங்க ரசிக்கிற மாதிரி (of course கலைக்கண்ணோடதான்) ஆடைகள் அவங்களுக்கு இல்லையே.. ஏன்???

அமிர்தவர்ஷினி அம்மா said...

அமுதா said...
/*அவரவர் உடை அவரவர் உரிமை!*/
டபுள் ஸ்ட்ராங்கா இதை நான் ஆமோதிக்கிறேன்.
எனக்கு வெகு நாட்களாக உறுத்தும் விஷயம் பெண்கள் என்ன உடை அணிகிறார்கள் என்று விமர்சிக்க சில பெண்கள் உட்பட ஒரு கூட்டம் கடமையாக இருப்பது ஏன்?

எனக்கும் இதே கேள்வி உண்டு, இரண்டு நாட்களுக்கு முன் இரு பெண்கள் பஸ்ஸில் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன்

அதாகப்பட்டது
// ஒருத்தி ட்ரஸ் பண்றதுலயே தெரிஞ்சுடுங்க்கா, அவ எப்டி பட்டவன்னு.... //

என்னத்த சொல்ல. பெண்களே பெண்களுக்கு எதிரிகளாய்.

மாதவராஜ் said...

அருமையான பதிவு. உங்களிடம் இயல்பாக இருக்கிற நகைச்சுவை உணர்வு, இந்தப் பதிவிலும் மேலோங்கி இருக்கிறது. அந்த வேதனையும், கோபமும் இன்னும் அழுத்தமாக வெளிப்பட்டு இருக்கலாமோ என தோன்றியது.

ஆகாய நதி said...

அய்யோ கொடுமைங்க... உங்களுக்காவது 11ம் வகுப்பு முதல் எங்கள் பள்ளியில் 9ம் வகுப்பு முதலே :((((

எனக்கு தாவணி பிடிக்கும் என்றாலும் கட்டத் தெரியாது :( புடவை கூட கட்டுவேன் தாவணி சற்று சிரமம்..

முதல் முறை தலைப்பை மாற்றி வலது தோளில் பின் பண்ணி ஹி ஹி ஹி அம்மா பார்த்து ஒரே நக்கல் என்னை :)))))

அதிலும் அதை உடுத்திக் கொண்டு சைக்கிள் ஓட்டுவது மிகவும் சிரமம்...
பாவாடை பறக்காம தாவணி பறக்காம நாமும் பறக்காம பின்ன குச்சிக்கு தாவணி சுத்திவிட்டா???

//
ஆனால் தாவணிபோட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டுவது மிகப் பெரிய அபாயம். அதுவும் காலையில் ஒரு ட்யூஷன், மாலையில் ஒரு ட்யூஷன் என்று செல்லவேண்டிய செட் நாங்கள்! //

சேம் பிளட்...

அதிலும் 12வது படிக்கும் போது ஒரு முறை என் தாவணி சைக்கிளில் சிக்கி சுற்றி கடவுளே நல்ல வேளை மானம் போகாம தப்பித்தேன்.... கால் வாசி தாவணியை சைக்கிள் டயரில் விட்டுவிட்டு மீதியைக் கிழித்து என்னிடம் வைத்துக் கொண்டதால் காயமின்றி அசிங்கப்படவும் இல்லாமல் தப்பித்தேன்....

ஒரு முறை கால்பந்தாட்டத்தில் வேறு தாவணியால் கீழே விழுந்தேன் :(

அதிலும் நான் வெளியே பல போட்டிகளுக்கும் செல்வேன்... பலர் சுடிதார் யூனிஃபார்மில் இருக்க நான் மற்றும் சிலர் இப்படி பாவாடை தாவணியில்... :(

அப்புறம் இந்த பாய்ஸ் மற்றும் ரோட்டோர ரோமியோக்கள் லுக் வேறு எரிச்சலா இருக்கும் :( அதுனாலயே முகத்தை கோவமா அசிங்கமா முறைச்சி வைச்சி வைச்சி... அப்பதான் நம்மள பார்க்கமாட்டாங்கனு தான் இப்படி ஐடியா :)


ஆனாலும் தாவணி எனக்கு பிடித்த உடை... விசேஷங்களுக்கு அணிய மட்டும்... :))))

ஆகாய நதி said...

என்னைப் பொறுத்தவரை புடவை தாவணி பார்க்க வேண்டுமானால் அழகா இருக்கலாம் ஆனால் பாதுகாப்பானது சுடிதார் தான்...

ஜீன்ஸ் மற்றும் ஷர்ட் டாப்ஸில் கூட சில அசவுகரியங்களை கண்டிருக்கிறேன்.

குர்தா நல்லது...

ஆகாய நதி said...

//
எனக்கு வெகு நாட்களாக உறுத்தும் விஷயம் பெண்கள் என்ன உடை அணிகிறார்கள் என்று விமர்சிக்க சில பெண்கள் உட்பட ஒரு கூட்டம் கடமையாக இருப்பது ஏன்?
//


// ஒருத்தி ட்ரஸ் பண்றதுலயே தெரிஞ்சுடுங்க்கா, அவ எப்டி பட்டவன்னு.... //

:((((

//
பதினோரு ஊக்குகளை அங்கங்கே இழுத்துபிடித்து போட்டுக்கொண்டு
//

ஹி ஹி ஹி! பொ.பி.க்கு முன் 3ஊக்கு பொ.பி.க்கு பின் 5ஊக்கு :)

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

// சினிமாவே அதன் உபயோகங்களையெல்லாம் கோனார் நோட்ஸ் போட்டு சொல்லிக் கொடுத்து விடுகிறதே!! //

He he he...

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

//சினிமாவே அதன் உபயோகங்களையெல்லாம் கோனார் நோட்ஸ் போட்டு சொல்லிக் கொடுத்து விடுகிறதே!! //

he he he :)

Vidhoosh said...

:(... நாங்கள் +1 & +2 இரண்டு வருடமும் தாவணிதான்.

ராமலக்ஷ்மி said...

புதுகைத் தென்றல் said...

//நான் படிச்சு பள்ளீயில பொண்ணுங்க அதே கலர் யூனிபார்மை சுடிதாரா போட்டுகிட்டு போறாங்க!!//

நான் படிச்ச ஸ்கூலிலும்தான்..ஹும்ம்..

Gold said...

பின்ன என்னங்க, ஐந்து வயசுலே ஜோதிகா ட்ரெஸ்-ன்னு பாவாடைக்கும் பிளவுஸ்-க்கும் இடையிலே கேப் விட்டு போட்டு அழகு பார்ப்பார்கள், அதையே
வளர்ந்தப்புறம் அவங்க போட்டா திட்டுறது..எப்படி ஜீன்ஸ் இடுப்புத் தெரியறமாதிரி போட்டுக்கிட்டு போறாங்கன்னு!! Well said.. Nothing wrong in being conservative.

அன்புடன் அருணா said...

சூப்பரா பதிஞ்சுருக்கீங்க!!!!பூங்கொத்து!

Deepa said...

அற்புதமான பதிவு!

முதல் நாள் தாவணி அணிந்து சென்ற பதின் வயதுப் பெண்களின் மன உணர்வுகளை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். கொடுமை தான்.
எங்கள் பள்ளியில் தாவணி இல்லை. அதனால் தப்பித்தேன்.

கடைசி பத்தியில் சொல்லியுள்ள கருத்து மிகவும் முக்கியமானது.

" உழவன் " " Uzhavan " said...

//என்னைப் பொறுத்தவரை புடவை தாவணி பார்க்க வேண்டுமானால் அழகா இருக்கலாம் ஆனால் பாதுகாப்பானது சுடிதார் தான்...//
வழிமொழிகிறேன்.. ஆனால் என்னதான் புடவை கட்ட அசெளகரியங்கள் இருந்தாலும், விசேஷ நாட்களில் சேலை அணிவதையே பெண்கள் விரும்புகிறார்கள் என்றே எண்ணுகிறேன்.