Wednesday, June 24, 2009

இரு சம்பவங்கள் மற்றும் நான்!

"ஷேப்பர்ஸ்(வடிவங்களை உருவாக்கும் ஒரு விளையாட்டு பொருள்) எங்கே பப்பு?" - நான்.

"கரப்பான் பூச்சி தூக்கிக்கிட்டு போய்டுச்சு" - பப்பு

கரப்பான் பூச்சியா?!! - நான்!

"ஆமா ஆச்சி, அது தூக்கிக்கிட்டு போய் அதோட வீட்டுலே வைச்சுகிச்சு" - பப்பு.

(ஓ, அப்போ அது எங்கேன்னு பப்புக்கு தெரிஞ்சுருக்கு போல, அதைதான் கரப்பான் பூச்சி வீடுன்னு சொல்ல வர்றாங்களோ மேடம்?!)

அதோட வீட்டுலேயா..கரப்பான் பூச்சியோட வீடு உனக்கு தெரியுமா?!- நான்.

”தெரியுமே ஆச்சி, அது இழுத்துக்கிட்டு போய் எனக்கு வேணும்னு வச்சிக்கிச்சு” - பப்பு

(அப்போ அதை எங்கேயோ போட்டுட்டு அது இருக்கிற இடத்தைத் தான் கரப்பான் பூச்சி வீடுன்னு சொல்ல வர்றாளோ?!..இருக்கும்..இருக்கும்...எப்படியோ கிடைச்சா சரி!)

”எனக்கு காட்டு, நான் எடுத்துத் தரேன்” - நான்

அவள் என்னைக் கூட்டிக்கொண்டுச் சென்ற இடம், எங்கள் சமையலறையின் பின்வழியில் இருக்கும் சாமான் கழுவும் நீர் செல்லும் பாதை!


நான் 'ஞே' வாகிக் கொண்டிருந்தேன்!

ஏனோ ஒரு ஃப்ளாஷ்பேக் நினைவுக்கு வந்துத் தொலைத்தது.

ஃப்ளாஷ்பேக்:

வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தோம் அப்போது. ஹாஸ்டல் அணுகுண்டைக் கூட சாப்பிட்டு விடலாம், ஆனால் கன்பவுடரை கண்டிப்பாக வாயில் வைக்க முடியாது! (அனுகுண்டுன்னா என்னனு எல்லோருமே கண்டுபிடிச்சுடுவீங்க, கன்பவுடரை கண்டுபிடிங்க :-)) அதனால் எங்களை காப்பாற்றுவது பழங்கள்தான். ஹாஸ்டலுக்கு எதிரில் இருக்கும் பழக்காரரிடம்தான் பிசினஸ். முந்தையதினம் வாங்கிய சாத்துக்குடி பழங்கள் சரியில்லையென்று திருப்பி எடுத்துச் சென்றேன். இது நல்லாயில்லையென்று சொல்லி அவரிடம் கொடுத்து விட்டேன். அவரும் வாங்கி வைத்துக் கொண்டார். பிறகு வந்தவர்களிடம் பிசினசை கவனிக்க தொடங்னினார். கொஞ்ச நேரம் (5 நிமிடங்கள்?!) நின்றுக் கொண்டிருந்தேன். அவர் என்னை கவனித்த மாதிரியேத் தெரியவில்லை. பின்னர் திரும்பி வந்துவிட்டேன். அறையில் வந்து இதைச் சொன்னதும் ஷீபா அக்கா கேட்டார்கள், ”நீ ஏன் நின்னுக்கிட்டிருந்தே?, யாராவது இங்கே அப்படி மாத்திக் கொடுப்பாங்களா?” - என்று சிரித்துக்கொண்டே சொன்னார்!

நான் அங்கே 'ஞே'-வாகிக் கொண்டிருந்தேன்,ஆம்பூரிலேல்லாம் மாத்திக் கொடுப்பாங்கதானே என்று நினைத்தபடி!!பப்புவும் பழக்காரரும் மாறி மாறி தெரிந்தார்கள் என் கண்முன்!! (ஒரு பொண்ணு இன்னொசன்டா இருந்தா எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா!!) நாந்தான் இப்படியா இல்ல மக்கள்ஸ்தான் இப்படியான்னே தெரியலை! ;-)

30 comments:

ஆயில்யன் said...

ங கேள்விப்பட்டிருக்கேன் இது //ஞே// கொஞ்சம் வித்தியாசமால்ல இருக்கு :)

ஆகாய நதி said...

:)))

G3 said...

//பப்புவும் பழக்காரரும் மாறி மாறி தெரிந்தார்கள் என் கண்முன்!! (ஒரு பொண்ணு இன்னொசன்டா இருந்தா எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா!!)//

ROTFL :))))

G3 said...

//அனுகுண்டுன்னா என்னனு எல்லோருமே கண்டுபிடிச்சுடுவீங்க, கன்பவுடரை கண்டுபிடிங்க :-)//

enakku rendumae ennanu theriyalai :(

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....................நீங்க அப்பாவில்லாம் இல்ல, பப்பு சொன்னதை நம்பாம அவள நக்கல் பண்ண இன்னொரு போஸ்ட் கெடச்சிடுச்சின்னு இறுமாப்போட இருந்ததுக்குக் கெடைச்ச பல்பு. இப்போதான் பப்பு சீனியர் பேட்ச் ஆச்சே நீங்க எம்புட்டு மரியாதையா நம்பிருக்கணும்:):):)

rapp said...

முல்லை, ஆம்பூர் பழக்காரர் கிட்ட இருந்து பழங்கள நீங்களா எடுத்திட்டு வந்தீங்களா?:):):) இல்லை அவரா கொடுத்து விட்டாரா?:):):)

rapp said...

அணுகுண்டு இட்லி.
கன்பவுடர் உப்புமா இல்லைன்னா சாதம்.

வித்யா said...

நீங்களா? சரிதான்:)

நட்புடன் ஜமால் said...

கண்பவுடர் - உப்புமா தானே !


"ஆமா ஆச்சி, அது தூக்கிக்கிட்டு போய் அதோட வீட்டுலே வைச்சுகிச்சு" - பப்பு.\\

:)

அமுதா said...

/*(ஒரு பொண்ணு இன்னொசன்டா இருந்தா எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா!!) */
நீங்க யாரைச் சொல்றீங்க? பப்புனா ஓகே

துபாய் ராஜா said...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

நீங்க சின்னப்பிள்ளையா இருக்கும்போது எவ்வளவு பல்பு கொடுத்திருப்பீங்க .... :-))

விக்னேஷ்வரி said...

நான் அங்கே 'ஞே'-வாகிக் கொண்டிருந்தேன்,ஆம்பூரிலேல்லாம் மாத்திக் கொடுப்பாங்கதானே என்று நினைத்தபடி!! ///

ஹாஹாஹா.... நீங்க ரொம்ப நல்லவங்க முல்லை. உங்கள நினச்சா பாவமா இருக்கு.

☼ வெயிலான் said...

உங்க வீட்டை கரப்பான் பூச்சிக்கு வாடகைக்கு விட்டிருக்கீங்களா ஆச்சி :)

தீஷு said...

//ஒரு பொண்ணு இன்னொசன்டா இருந்தா எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா//

எந்தப் பொண்ணு?

ராமலக்ஷ்மி said...

//ஒரு பொண்ணு இன்னொசன்டா இருந்தா எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா!!//

இப்படி ஒரே போடா போட்டா எப்படி:))?

இப்படிச் சொல்லவா?

ம்ம்ம்ம். பாவம்தான் நீங்க..

இப்படியா:)?

மங்களூர் சிவா said...

அணுகுண்டுனா இட்லி
கன்பவுடரா????
:(

கரப்பான்பூச்சி வீட்டுல இருந்து ஷேப்பர்ஸ் மீட்டு குடுத்தீங்களா இல்லையா அதை கடைசிவரைக்கும் சொல்லவே இல்லை???

:))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

/*(ஒரு பொண்ணு இன்னொசன்டா இருந்தா எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா!!) */

அப்படியா, யாருங்க அந்தப் பொண்ணு,
பப்புவத்தானே சொல்றீங்க!

பட் பப்புவின் பேச்சு ஸ்வீட்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

G3 said...
//அனுகுண்டுன்னா என்னனு எல்லோருமே கண்டுபிடிச்சுடுவீங்க, கன்பவுடரை கண்டுபிடிங்க :-)//

enakku rendumae ennanu theriyalai :(

அப்ப நீங்க ஆச்சி வீட்டுக்கு ஒருநாள் போங்க, தெரிஞ்சிப்பீங்க :)-

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
ங கேள்விப்பட்டிருக்கேன் இது //ஞே// கொஞ்சம் வித்தியாசமால்ல இருக்கு :)

என்ன பாஸ், ஆச்சி சாப்பாட்டு விஷயத்தை பத்தி நடுவுல போட்டு இருக்காங்க, கண்டுக்காம போயிருக்கீங்க.

Deepa said...

கரப்பான் பூச்சி மேட்டர்:பப்பு உங்களை நல்லா கலாய்க்கறா!
:-)))சாத்துக்குடி மேட்டர் பற்றி:

வேறு ஆளில்லாத போது நீங்கள் கேட்டிருந்தால் ஒருவேளை அவர் மாற்றிக் கொடுத்திருப்பார். நீங்கள் செய்தது ஒரு நெகட்டிவ் மார்க்கெட்டிங் அல்லவா?
இது எப்போதோ யாரிடமோ நான் கற்றுக் கொண்டது.

சின்ன அம்மிணி said...

பப்புவை என்னைக்காச்சும் உன் சாமானை காக்கா தூக்கிட்டு போயிடுச்சு, கரப்பான் பூச்சி தூக்கிட்டு போயிடுச்சுன்னு ஏமாத்தினீங்களா, அதான் பழிவாங்கிட்டா

பப்பு பேரவை
ஆஸ்திரேலியா

கைப்புள்ள said...

//(ஒரு பொண்ணு இன்னொசன்டா இருந்தா எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா!!)//

கரப்பான் பூச்சி ஷேப்பர்ஸைத் தூக்கிட்டு போனது கூட நம்பற மாதிரி தான் இருக்கு, மேலே சொன்னது தான் கொஞ்சம் கூட நம்பற மாதிரி இல்லை.
:)

ச.முத்துவேல் said...

முதல் சம்பவம்- நானெல்லாம் இதை எழுதியிருந்தன்னா கவிதைன்னு LABEL போட்டுப்பேன். அவ்ளோ சமத்து.

நசரேயன் said...

//ஒரு பொண்ணு இன்னொசன்டா இருந்தா எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா!!//

அப்படியா.. அதிர்ச்சியுடன் .. நம்பிட்டேன்

குடுகுடுப்பை said...

இட்லி, இட்லி பொடி??

நிலாவும் அம்மாவும் said...

innocent - அப்படின்னா?

அன்புடன் அருணா said...

ஏய்ய்ய்ய்ய்ய்...எனக்குத் தெரியுமே இட்லி தோசைக்கு வைத்துக் கொள்கிற மிளகாய் பொடிதானே!!!!சூப்பர்!

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

கன்பவுடர் - உப்புமா

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

கன்பவுடர் - உப்புமா

/*(ஒரு பொண்ணு இன்னொசன்டா இருந்தா எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா!!) */

:( :(

//ஆயில்யன் said...
ங கேள்விப்பட்டிருக்கேன் இது //ஞே// கொஞ்சம் வித்தியாசமால்ல இருக்கு :)

என்ன பாஸ், ஆச்சி சாப்பாட்டு விஷயத்தை பத்தி நடுவுல போட்டு இருக்காங்க, கண்டுக்காம போயிருக்கீங்க.//

he he he...

மாதவராஜ் said...

பதிவை ரசித்தேன்

//ஒரு பொண்ணு இன்னொசன்டா இருந்தா எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா!!//

மிகவும் ரசித்தேன்