Monday, June 29, 2009

பாப்கார்ன் வித் குட்டீஸ் : சென்னை பதிவர் சந்திப்பு!

”பாப்பாக்கு காது எங்கே குத்துனீங்க?”

“காதுலதான்!!”

போன்ற உலகத்தரம் வாய்ந்த காமெடி கடிகளும்,

”பேசு குட்டிம்மா, என் மானத்தை வாங்காதே”

”பேசாம இருக்கறதைவிட பேசினா தாங்க நமக்கு டேமேஜ்”

போன்ற கவனத்தைக் கவரும் அனுபவச்சிதறல்களையும்....நேற்று கிண்டி சிறார் பூங்கா கண்டது - நீண்டநாட்களாக பேச்சில் மட்டுமே இருந்த “பதிவர் சந்திப்பு வித் கிட்ஸ்” நேற்று சாத்தியப்பட்டது!!அமித்து அம்மா
அமித்துவுடனும், வித்யா ஜூனியருடனும், தீபா நேஹாவுடனும், அமுதா நந்தினி மற்றும் யாழினியுடனும், நான் பப்புவுடனும்!
(பதிவுலகத்தின் பிரபல குட்டீஸ்! )

அமித்து அம்மாவும் அமித்தும் மேட்சிங்-கான உடையில் வந்திறங்கினர். நாங்கள் வாயிலில் காத்திருக்க, மேடம் குறுக்கு வழியில் புகுந்து அசத்தினார். அமித்து ஒரு சமத்து குழந்தை. அமித்து அம்மாதான் ”கோங்கு” கேட்ட அமித்துவை ஒரு குரங்கு டஸ்ட்பின் காட்டி ஏமாற்ற முயற்சி செய்துக்கொண்டிருந்தார்.

வித்யா மட்டுமே சொன்ன நேரத்தை கடைப்பிடித்தார்..கடமை கண்ணியம்..காட்பாடி! ஜுனியர் செம ஆட்டம்! விட்டால் பார்க்கை ஒரு ரவுண்ட் வந்திருப்பார். வித்யாவின் கெஞ்சல்+மிரட்டலுக்கு செவிசாய்த்து அடக்கிவாசித்தார். ஃபோட்டோ எடுக்கலாமென்று சொன்னதும் மிக அழகாக வந்து புன்னகை புரிந்தார்.! பப்புவிடமிருந்து பையை வாங்கிவிட முயற்சி செய்துக் கொண்டிருந்தார் :-)


நேஹா யார்பேசினாலும் “மம்மா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
“பௌபௌ” என்று “ம்மா” என்றும் மிருகங்களைப் பார்ததுச் சொல்லிக்கொண்டிருந்தார். தீபாவின் மிரட்டலில் தூக்கத்தைத் தியாகம் செய்து வந்திருந்தார்.

நந்தினி, யாழினியுடன் வந்திருந்தார் அமுதா. நந்தினி எல்லா குட்டீஸுக்கும் ப்ரெண்ட் ஆகிவிட்டாள். எல்லா குட்டீஸையும் பார்த்த அமுதா, ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் போல...”சரி, இந்த தட்டிலாவது சாப்பிட்டு உடம்பு தேறுதான்னு பார்ப்போம்னு” எல்லா குழந்தைகளுக்கும் ஒரு தட்டை பரிசளித்தார்! நன்றி அமுதா, அடுத்த தடவை ரிசல்ட் பாருங்க...;-)) (இங்கே தெனாலிராமன் பூனை வளர்த்த கதை உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!)

பப்பு பார்க்கை சுற்றிவர துடித்துக் கொண்டிருந்தாள். வரும்போதே கவிதா ஆண்ட்டி வந்துட்டாங்களா என்று கேட்டாள்! வழக்கமாக செல்லும் பாதையில் போகாமல் நேராக மரத்தடிக்கு வந்தது அவளுக்கு பிடிக்கவில்லைபோல....”அங்கெல்லாம் போய் பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். கவிதா ஆன்ட்டியையும் g3 ஆன்ட்டியையும் எங்கே காணோம் என்றுத் தேடிக்கொண்டிருந்தாள், நெடுநேரம்! :-( முகிலின் வேலையை நான் செய்ய வேண்டியதாயிற்று..சறுக்குமரத்திற்கு அழைத்து செல்வது, சீசாவில் உட்காரவைத்து ஆட்டுவது...அவ்வ்வ்!! கையை பிடித்து நடக்கச் சொன்னதற்கு, “எனக்கு யாரையுமே பிடிக்காது” என்று சொல்லிவிட்டு தனியாக நடக்க ஆரம்பித்தாள்! (இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக இருந்தும், நாங்கள் பேசிக்கொள்ளத்தான் நேரம் கிடைக்கவில்லை. நம்புவீங்கதானே!)

On the whole, we had fun!புது ஆன்ட்டிகள், தங்கள் பெயர்களையும் தங்களைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல நடந்துக்கொண்டது குட்டீஸ்-க்கு வியப்பளித்திருக்கக்கூடும்!

35 comments:

சென்ஷி said...

:-)

குடுகுடுப்பை said...

நல்ல முயற்சி, புதிய நண்பர்கள் குழந்தைகளுக்கும்.

குட்டீஸ் எல்லாம் அழகு. குட்டி குட்டிப்பாப்பாதான் அமித்துவா?

ஆ.ஞானசேகரன் said...

குட்டீஸ்களுக்கு வாழ்த்துகள்

நாணல் said...

:))

ஆயில்யன் said...

ம்ம் அழகா குட்டீஸ் மீட் போட்டு அசத்திட்டீங்க

என்னாலதான் குட்டீஸ் கூட வெளையாடமுடியாம போச்சு

குட்டிபையன் வித் சோகத்துடன்....

ஆயில்யன் said...

/கவிதா ஆன்ட்டியையும் g3 ஆன்ட்டியையும் எங்கே காணோம் என்றுத் தேடிக்கொண்டிருந்தாள், நெடுநேரம்! :-( ///


பேரவை வைத்து நடத்திக்கொண்டிருக்கும் குட்டி பசங்கள் பத்தி கேக்கலயே :(((

நட்புடன் ஜமால் said...

புது ஆன்ட்டிகள், தங்கள் பெயர்களையும் தங்களைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல நடந்துக்கொண்டது குட்டீஸ்-க்கு வியப்பளித்திருக்கக்கூடும்!\\

உண்மை தாம் ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))மேடம் குறுக்கு வழியில் புகுந்து அசத்தினார். //

ஆச்சி, இப்படி என் இமேஜ ட்டோட்டல் டேமேஜ் பண்ணி வெச்சிட்டீங்களே

உங்களுக்கு என் கையால புளி சாதம் செஞ்சு தருவதுதான் சரியான தண்டனை :))-

மயில் said...

உங்க எல்லார் கூடவும் டூ. எங்களை ஏன் ஆட்டத்தில் சேத்துக்கலை?? அஆவ்வ்வ்வ்வ்வ்

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

nice to hear :)

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

//போன்ற உலகத்தரம் வாய்ந்த காமெடி கடிகளும்,//

கலக்குறிங்க.. :))

Deepa said...

அருமையாப் பதிவு பண்ணிட்டீங்க!
படங்களும் அழகு!

நேரம் தான் போதவில்லை என்று தோன்றியது. ஆனா அதை நான் நிச்சயம் சொல்லக் கூடாது. :-)


//புது ஆன்ட்டிகள், தங்கள் பெயர்களையும் தங்களைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல நடந்துக்கொண்டது குட்டீஸ்-க்கு வியப்பளித்திருக்கக்கூடும்!//

ஆமால்ல? :-)

தீஷு said...

நல்ல முயற்சிப்பா.. குட்டீஸ் எல்லாம் சேர்ந்து விளையாண்டாங்களா?

அன்புடன் அருணா said...

அடப் பாவிகளா???இப்படி கமுக்கமாப் போயிட்டு வந்துட்டீங்களே??ஒரு அழைப்பிதழ் போஸ்ட்டர் ஒண்ணும் கிடையாதா???
//பாப்கார்ன் வித் குட்டீஸ் : //
இப்படித் தலைப்பு வச்சுட்டு எப்போ பாப்கார்ன் சாப்பிட்டீங்கன்னு சொல்லவேயில்லையே???!!
கலக்குங்க!

மங்களூர் சிவா said...

குட்டீஸோட நீங்க எல்லாரும் போயிருக்கப்ப 'G3' ஆண்ட்டிக்கு அங்க என்ன வேலை???

ஹா ஹா
:))))

அமுதா said...

அருமையான படங்கள். அருமையான நேரத்திற்கு அம்மாக்கள் + குட்டீஸ்க்கு நன்றி
/*புது ஆன்ட்டிகள், தங்கள் பெயர்களையும் தங்களைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல நடந்துக்கொண்டது குட்டீஸ்-க்கு வியப்பளித்திருக்கக்கூடும்!*/
நந்தினியின் கேள்வி : "எப்படி நீங்க எல்லாரையும் கண்டுபிடிச்சீங்க?"

கவிதா | Kavitha said...

First Mistake ..- இந்த குட்டிகளோட என்னை ஏன் கூட்டிட்டு போகலை..?!! :((((

second Mistake - பப்புவையும் என்னையும் இப்படி ரொம்ப நாள்/மாசம்/வருஷம் பிரிச்சி வைத்து வேடிக்கை பார்ப்பது.. !! :(

/கவிதா ஆன்ட்டியையும் g3 ஆன்ட்டியையும் எங்கே காணோம் என்றுத் தேடிக்கொண்டிருந்தாள், நெடுநேரம்! :-( //

ம்ம் நேத்திக்கு தான் காயூக்கிட்ட நானும் சொல்லிக்கிட்டு இருந்தேன்.. ஐ டூ மிஸ் பப்பு டீ மச்சூஊஊஊஊஊ!!

:((

G3 said...

//கவிதா ஆன்ட்டியையும் g3 ஆன்ட்டியையும் எங்கே காணோம் என்றுத் தேடிக்கொண்டிருந்தாள், நெடுநேரம்! :-(//


Avvvvvv.. pappu, amma dhaanda engala koopidaama sadhi senjitaainga :(

வித்யா said...

அழகா பதிவு பண்ணிருக்கீங்க முல்லை. குழந்தைகள் ரொம்ப சந்தோஷமாய் உண்ர்ந்தார்கள்.

G3 said...

//மங்களூர் சிவா said...

குட்டீஸோட நீங்க எல்லாரும் போயிருக்கப்ப 'G3' ஆண்ட்டிக்கு அங்க என்ன வேலை???

ஹா ஹா
:))))//

Siva.. edhum prachanaina naama pesi theethuppom.. no public damage plz :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரசனையான பதிவர் சந்திப்பு. குழந்தைகளுக்கும், இந்த ஐடியாவை உருவாக்கியவர்களுக்கும் வாழ்த்துகள்..

புதுகைத் தென்றல் said...

ஆச்சி இது நியாயமா??

நான் வந்த போது இந்த பதிவர் சந்திப்பு நடத்தாம நான் இங்கிட்டு வந்த்தக்கப்புறம் நடத்திருக்கீங்க. ஆட்டோ வரும்... :)))


பிள்ளைகள் பேசிகளிக்க ஏற்பாடு செஞ்சு அதை பதிவா போட்டதுக்கு தாங்க்ஸ்

செந்தழல் ரவி said...

இன்னும் கொஞ்சம் அழகா போட்டோ புடிச்சு போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

வரவனையான் said...

வாழ்த்துக்கள் ! நல்ல முயற்சி

ஆகாய நதி said...

ரொம்ப மகிழ்ச்சி... :)

என்னால் வர இயலாததற்கு மன்னிக்கவும் :( நிறைய மிஸ் பண்ணிட்டோம் போல...

குட்டீஸ் படங்கள் சூப்பர்!
எல்லா அம்மாக்களும் சுத்திப்போடுங்க குட்டீஸ்கு... :)

ஜீவன் said...

நல்ல சந்திப்பு! இன்னும் சில போட்டோக்கள் போட்டு இருக்கலாம்!!

மாதவராஜ் said...

ரசித்தேன்....

சந்தனமுல்லை said...

நன்றி சென்ஷி!

நன்றி குடுகுடுப்பை..முதல் படத்தில் கீழே நிற்கும் குட்டிபாப்பா (கருப்பு ட்ரெஸ்) தான் அமித்து!

நன்றி ஆ.ஞானசேகரன், நாணல்!

நன்றி ஆயில்ஸ், அவ்வ்..நோ சோகம்..அடுத்த தடவை நீங்களும் கலந்துக்கோங்க..

நன்றி ஜமால்!

நன்றி அமித்து அம்மா..அவ்வ்..இந்த தண்டனை உங்களுக்கே அதிகமா தெரியலை!!

நன்றி மயில்..ஆகா..மேடம்..நீங்க இல்லாமலா...நாங்க ரெடி..எப்போ சென்னை வர்றீங்கன்னு சொல்லுங்க!!

நன்றி தமிழன் கறுப்பி!

நன்றி தீபா..ஹிஹி...it happens!

நன்றி தீஷூ, ஹ்ம்..ஓரளவுக்கு! ஆனா குட்டீஸ்தானே..இன்னொரு தடவை மீட் பண்ணா கொஞ்சம் familiarize ஆவாங்கன்னு நினைக்கறேன்!

சந்தனமுல்லை said...

நன்றி அருணா.. இந்தஹ் சந்திப்பு கடைசி வரைக்கும் முடிவாகவேயில்ல..ஏன்னா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ப்ளான்..சனிக்கிழமை சாயங்காலம் தான் முடிவாச்சு..அதான்! அப்புறம் பாப்கார்ன் கடைசிலேதான்..கிளம்பும்போது! :-)


நன்றி சிவா, ராஜலட்சுமி பக்கிரிசாமி, அமுதா!


நன்றி கவிதா, அவ்வ்வ்வ்..ஊருக்கு ஓடிபோய்ட்டு இப்போ ஃபிலீங்ஸா..! நன்றி g3 - :(

நன்றி வித்யா..ஆமாப்பா, பப்பு இப்போ எல்லோர் பெயரையும் கேட்டுக்கிட்டு இருக்கா! :-)

நன்றி ஆதி, புதுகை!

நன்றி ரவி, அவங்க இந்தளவு ஃபோட்டோ எடுக்கவிட்டதே பெரிய விஷயம்!!

நன்றி வரவனையான்!

நன்றி ஆகாயநதி, நீங்க சென்னை வந்துட்டு சொல்லுங்க..பொழிலை கூட விளையாடலாம்!

நன்றி ஜீவன்,மாதவராஜ்!

ராஜா | KVR said...

கவிதாவையும் G3யையும் குட்டீஸ் லிஸ்ட்ல சேர்க்கணும்ன்னு பப்புக்கு கரெக்ட்டா தெரிஞ்சிருக்கு :-).

பதிவர் சந்திப்பு முன்னாடியே தெரியாமப் போய்டுச்சு, தெரிஞ்சிருந்தா நிலாவையும் அவங்க அம்மாவையும் ஆஜர் ஆகச் சொல்லி இருப்பேன்.

துபாய் ராஜா said...

பாப்கார்ன் சந்திப்புகள் தொடரட்டும்.

பதிவுலகம் பாப்பாக்களின் உறவுகளோடும் விரியட்டும்.

மங்களூர் சிவா said...

ஜி3 அக்கா இதுவும் தப்பா சரி ஜி3 sorry.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உலகத்தர கடிகளும் , பிரபலகுட்டீஸ்களுமா சந்திப்பு நல்லா களை கட்டியது மகிழ்ச்சி..

நீங்க பேசிக்க நேரமில்லைங்கறத நான் நல்லாவே நம்பறேன்.. ஏன்னா நானும் ஒரு குட்டிப்பையனோட அம்மாவாச்சே :))

ராமலக்ஷ்மி said...

படங்களுக்கு நன்றி முல்லை.

//புது ஆன்ட்டிகள், தங்கள் பெயர்களையும் தங்களைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல நடந்துக்கொண்டது குட்டீஸ்-க்கு வியப்பளித்திருக்கக்கூடும்!//

இருக்கும் இருக்கும்:)!

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

// நீங்க பேசிக்க நேரமில்லைங்கறத நான் நல்லாவே நம்பறேன்.. ஏன்னா நானும் ஒரு குட்டிப்பையனோட அம்மாவாச்சே :))//

ஆமாமாம்:))!