Thursday, June 04, 2009

32 கேள்விகள் - தொடர்பதிவு!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

வீட்டில் வைச்சதால்! வீட்டில் எல்லோருக்கும் தமிழ்பெயர்தான்.
கண்டிப்பா பிடிக்கும், இந்தப் பெயரின் தனித்தன்மைக்காக! நான் இதுவரை படித்த/வேலை செய்த இடங்களில் எனது பெயர் கொண்ட இன்னொருவரை பார்க்க வில்லை! இதில் எனக்குப் பெருமை கலந்த மகிழ்ச்சியும் கூட! :-)

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சேனல்களில் காட்டியதைக் கண்டு துக்கம் தொண்டையை அடைக்க கண்கலங்கினேன்.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்! ஆனா சமயங்களில் எனக்கே புரியாது. அதனால பிடிக்காம போய்டுமா என்ன?!

4. பிடித்த மதிய உணவு என்ன?

மதிய உணவு என்றில்லை..எப்போதுமே பிரியாணிதான்! ஒன்லி ஆம்பூர் பிரியாணி ஃப்ரம் ஆம்பூர்!!!

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?


ஹ்ம்...யோசிக்க வேண்டிய விஷயம்!

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

பாத்ரூமில்தான் குளிக்கப் பிடிக்கும்!

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம் : எனது தன்னம்பிக்கை, தைரியம்!

பிடிக்காத விஷயம் : அநாவசிய செண்டிமெண்ட் மதிப்புகள், மிகவும் எளிதில் உணர்ச்சிவசப்படுதல் - தேவையில்லாத காரணங்களுக்கு! (அது தேவையில்லாததுன்னு
விளைவுகளை பார்த்துத்தானேத் தெரியும்!!)

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விஷயம் : எந்த சண்டையையும் ஒரு நாளைக்கு மேலே வளர விடாதது!

பிடிக்காத விஷயம் : எப்போதும் நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறது!

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

பெரிம்மாதான்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ஆகாயநீல டீ-ஷர்ட், பிஜ் கலர் காஷுவல்

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

"ரெக்ரஷன் ஓடுச்சா? 4 பிளாட்பார்மிலே லெவன்-சீரிஸ்ல ப்ராப்ளம் இல்ல!" - பக்கத்து க்யூபிலிருந்து!

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

என்னால் "எனக்கு பிடித்த வர்ணம் இது"வென்று ஒரு தீர்மானத்திற்கு வர இயலாது!

14. பிடித்த மணம்?

பப்பு தலையிலிருந்து வரும் ஒரு (வேர்வை கலந்த/பார்பிக்யூ) மணம்!

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

g3 - g3 பத்தித் தனியா சொல்லனுமா என்ன?! இவங்களோட நட்பு பாராட்டும்தன்மையைப் (friendliness) பார்த்து அசந்து போயிருக்கேன்! உங்களுக்கு நெருக்கமான ஒரு தோழியை
இவங்களுக்குள்ளே பார்க்கலாம்!

கவிதா - எதைச் சொல்றது, எதை விடறது!! :-))

ராப் - ராப்-இன் அதிரடி ஸ்டைல்! எதையும் கலக்கலான நடையில் எழுதுவாங்க!புயல் மாதிரி வந்தாங்க, இப்போ அப்போப்போ எட்டிப் பார்க்கறாங்க! இந்த கேள்விக்கெல்லாம் ராப் எப்படி அவங்க பாணியில் பதில் சொல்றாங்கன்னு பார்க்கத்தான்!

ஆயில்யன் - சின்னபாண்டி!!

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

விக்னேஷ்வரி - கிராமத்து இல்லைகளும், நகரத்து தொல்லைகளும்

17. பிடித்த விளையாட்டு?

இறகுபந்து, சதுரங்கம்!

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம்.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

women exploitation இல்லாத எந்த படமானாலும்!

20. கடைசியாகப் பார்த்த படம்?

சுப்ரமணியபுரம்

21. பிடித்த பருவ காலம் எது?

மார்ச்-ஏப்ரலில் நம்ம ஊரில் என்ன பருவமோ அது!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

Power of Positive mom

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

படங்கள் எதுவும் வைத்துக் கொள்வதில்லை!

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : பள்ளி/கல்லூரி மேடைகளில் பரிசுக்காக என் பெயரை அழைக்கும் அறிவிப்பு சத்தம்!

பிடிக்காத சத்தம் : எவர்சில்வர் சாமான்களை தரையில் இழுக்கும் சத்தம் பிடிக்காது! ஆம்புலன்ஸ் சத்தம் - இது எனனி தாண்டிசெல்லும்போது ஒரு அமானுஷ்யமான பயம் அல்லது சொல்லமுடியாத பயங்கலந்த உணர்வு! (ஆம்புலன்ஸுக்கு அவசியம் இல்லாத உலகு!!)

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

மவுன்ட் அபு!

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ..எவ்ளோ நேரம் வேணாலும் தூங்குவேன்! :-)

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

எதுஎதற்காகவோ எதுஎதையோ காம்ப்ரமைஸ் செய்துக் கொண்டுதான் வாழவேண்டும் என்கிற
உண்மையை! அல்லது, கல்யாணம் பண்ணிக்கிட்டா பொறுப்பு வந்துடனும்னு நினைக்கறதை!


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சுயநலம்!

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஹவாய், ஆஸ்திரேலியா (இப்போ வேணாம்ப்பா!!)!

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

சில சமயங்களில் நான் தைரியசாலின்னு நினைப்பேன். சிலசமயங்களில் நிறைய கற்பனை செஞ்சு பயந்தாங்கொள்ளியா இருப்பேன். பலசமயங்களில் இவை இரண்டுக்கும் நடுவில் குழப்பத்துடன் இருப்பேன்!! இப்படி இல்லாம, வீட்டுலே சொல்ற மாதிரி "பொறுப்போட" இருக்கலாமோன்னு !!

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

நானே கார் ஓட்டிச்செல்ல!

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

Stop bugging me stop bothering me
Stop bugging me stop forcing me
Stop fighting me stop yelling me
Stop telling me stop seeing me
It's my life!

இது டாக்டர்.ஆல்பனோட பாட்டு வரிகள்! ஏனோ இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்!
வாழ்வு பற்றி ஒரு வரி-ல சொல்லத் தெரிஞ்சா, இந்நேரம் ஹைக்கூ-ல்லாம் எழுதியிருக்கமாட்டேனா!! :-)

post-edited: g3 ஏற்கெனவே இடுகையிட்டதால், நசரேயனை அழைக்க விரும்புகிறேன்! அவரது நகைச்சுவை பதிவுகள் பிடிக்கும்!

84 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்!~

ஆயில்யன் said...

//நான் இதுவரை படித்த/வேலை செய்த இடங்களில் எனது பெயர் கொண்ட இன்னொருவரை பார்க்க வில்லை! இதில் எனக்குப் பெருமை கலந்த மகிழ்ச்சியும் கூட! :-)/

ஹைய்ய் ஸேம் ஸேம்!


பட் என் பேர்ல ஒரு பிகர் கேரளாவுல சுத்திக்கிட்டிருக்காம் அம்புட்டுதான் :)))

ஆயில்யன் said...

//கடைசியாக அழுதது எப்பொழுது?

பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சேனல்களில் காட்டியதைக் கண்டு துக்கம் தொண்டையை அடைக்க கண்கலங்கினேன்.//


அதிக பதட்டம் நிறைந்த நிமிடங்களாய் எனக்குள் நிரம்பியிருந்தது :((

G3 said...

//பிடிக்காத விஷயம் : எப்போதும் நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறது!//

Idhu oru kuthamaayya?? Idha poi pudikkalaingareenga?? avvvvvv

G3 said...

//11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ஆகாயநீல டீ-ஷர்ட், பிஜ் கலர் காஷுவல்

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

"ரெக்ரஷன் ஓடுச்சா? 4 பிளாட்பார்மிலே லெவன்-சீரிஸ்ல ப்ராப்ளம் இல்ல!" - பக்கத்து க்யூபிலிருந்து!
//

Thursday casualsa!!!! Friday kooda casuals allow pannadha mokkai aapisil velai seybavalin vayiththerichal :((((((

G3 said...

//g3 - g3 பத்தித் தனியா சொல்லனுமா என்ன?! இவங்களோட நட்பு பாராட்டும்தன்மையைப் (friendliness) பார்த்து அசந்து போயிருக்கேன்! உங்களுக்கு நெருக்கமான ஒரு தோழியை
இவங்களுக்குள்ளே பார்க்கலாம்!//

avvvvvvvv.. Thanyanaanen :)))

Aana paarunga.. indha pathiva naan erkanave ezhudhitten ;)

Neenga inga poi padichikkonga

http://pravagam.blogspot.com/2009/03/blog-post_21.html

G3 said...

//கவிதா - எதைச் சொல்றது, எதை விடறது!! :-))//

Thaniya oru pathivu pottu sollidunga ;)

G3 said...

//ஆயில்யன் - சின்னபாண்டி!!///

haiiiiiiiiiiii... namma boss.. sikkitaara.. sikkitaara...

Kaithatti aarparikum G3 :D

G3 said...

//இறகுபந்து//

English translation please ;)

G3 said...

//பிடித்த பருவ காலம் எது?

மார்ச்-ஏப்ரலில் நம்ம ஊரில் என்ன பருவமோ அது!//

Exam season dhaanae adhu ;) Neraya exam ezhudhuveengalo ;)

G3 said...

//ஓ..எவ்ளோ நேரம் வேணாலும் தூங்குவேன்! :-)//

Same pinchchu :)))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

பிடித்த சத்தம் : பள்ளி/கல்லூரி மேடைகளில் பரிசுக்காக என் பெயரை அழைக்கும் அறிவிப்பு சத்தம்!

ரைட்டே!!!

ஆச்சிக்கு பர்ஸ்ட் ப்ரைஸ் கொடுக்க ஆயில்ஸ் அண்ணனை மேடைக்கு அழைக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

மவுன்ட் அபு!//

அருமையான ரம்யமான இடம் !

அமிர்தவர்ஷினி அம்மா said...

பி.கு: பரிசை ஆயில்ஸ் அண்ணனே கத்தாரிலிருந்து வாங்கிவருமாறு வருமாறு................

G3 said...

//வீட்டுலே சொல்ற மாதிரி "பொறுப்போட" இருக்கலாமோன்னு !!//

ivlo poruppa aasa padara ungalukku innuma poruppu varalainu nenaikareenga ???

G3 said...

//வாழ்வு பற்றி ஒரு வரி-ல சொல்லத் தெரிஞ்சா, இந்நேரம் ஹைக்கூ-ல்லாம் எழுதியிருக்கமாட்டேனா!! :-//

:))))))))))))))))))

ஆயில்யன் said...

//உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்! ஆனா சமயங்களில் எனக்கே புரியாது.///

அது என்ன பாஸ் சமயங்களில்...?

ஒரு வேளை பிளாக்குல எழுதுறதையெல்லாம் உங்க கையெழுத்துன்னு நினைச்சு புல்லரிச்சு போயிருக்கும்போதா...??? :))))))

ஆயில்யன் said...

//பிடித்த மதிய உணவு என்ன?

மதிய உணவு என்றில்லை..எப்போதுமே பிரியாணிதான்! ஒன்லி ஆம்பூர் பிரியாணி ஃப்ரம் ஆம்பூர்!!!
//

ஆம்பூர் ஆச்சின்னா ஆம்பூர் ஆச்சித்தான் பேஷ் பேஷ்..!

ஆயில்யன் said...

//ஹ்ம்...யோசிக்க வேண்டிய விஷயம்!///

எனக்கு கொஸ்டீனே செம டெரரா யோசிக்கவைக்கிது :(

ஆயில்யன் said...

//கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

பாத்ரூமில்தான் குளிக்கப் பிடிக்கும்!//

எங்கயா இருந்தா என்ன? ஏதோ குளிக்கபிடிச்சா சரி !:))

ஆயில்யன் said...

//முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்.//

பாஸ் கலைஞர் மாதிரி நீங்க!
கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு மத்தவங்க கண்ணை வைச்சு கண்டுபுடிப்பீங்க !

ஆயில்யன் said...

//தேவையில்லாத காரணங்களுக்கு! (அது தேவையில்லாததுன்னு
விளைவுகளை பார்த்துத்தானேத் தெரியும்!!)//

நோட்டட்! (பக்கத்தில ஒரு பேப்பர்ல எழுதி வைச்சுக்கிட்டேன்!)

ஆயில்யன் said...

//g3 - g3 பத்தித் தனியா சொல்லனுமா என்ன?! இவங்களோட நட்பு பாராட்டும்தன்மையைப் (friendliness) பார்த்து அசந்து போயிருக்கேன்! உங்களுக்கு நெருக்கமான ஒரு தோழியை
இவங்களுக்குள்ளே பார்க்கலாம்!//

ஆமாம் பாஸ் ஆமாம் சிஸ்டரை பத்தி ஒரு பத்தியே எழுதலாம் !

:)))

ஆயில்யன் said...

//கவிதா - எதைச் சொல்றது, எதை விடறது!! :-)) ///

அவுங்க உங்களுக்கு எழுதுன கவிதையை சொல்லுங்க பாஸ்! :))

ஆயில்யன் said...

//ராப் - ராப்-இன் அதிரடி ஸ்டைல்! //


இது உண்மைதான் பாஸ் ஒரு நாள் பாருங்க நம்ம வாலியை பத்தி பேசுனாங்க பாருங்க ச்சே சான்ஸே இல்ல பாஸ் செம டெர்ரர் பாஸ் :)

ஆயில்யன் said...

//ஆயில்யன் - சின்னபாண்டி!! //

இது யாரு? ரெண்டு பேரு?

ஆயில்யன் said...

//24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : பள்ளி/கல்லூரி மேடைகளில் பரிசுக்காக என் பெயரை அழைக்கும் அறிவிப்பு சத்தம்! ///

ஊய்ய்ய்ய்ய் ஊய்ய்ய்ய்ய் (பிகிலு சத்தம் பாஸ்)

ஆயில்யன் said...

//உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ..எவ்ளோ நேரம் வேணாலும் தூங்குவேன்! :-)//

வாவ்! சான்ஸே இல்ல பாஸ் !

ஒரு சின்ன நிகழ்ச்சி

பப்பு :- ஆச்சி எந்திரி ஆச்சி எந்திரி மணி 9 ஆச்சு ஆபிஸ்ல போய் தூங்கு ஆச்சி!

ஆச்சி:- நீ ஸ்கூலுக்கு போ பப்பு நான் தூங்கணும் !

பப்பு:- ஆச்சி எனக்கு அம்மாவா இருந்திக்கிட்டு நீ பண்ற காரியம் இருக்கே ஹய்யோ ஹய்யோ! (வெறுப்போடு பப்பு ஸ்கூலுக்கு கோயிங்க் ஆச்சி தூக்கம் கண்ட்னியூ செய்ய ஆபிஸ் கோயிங்க்)

ஆயில்யன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
பி.கு: பரிசை ஆயில்ஸ் அண்ணனே கத்தாரிலிருந்து வாங்கிவருமாறு வருமாறு................
//


ம்ம் இருக்கட்டும் !

மணிநரேன் said...

9...ரொம்ப நல்ல/பெரிய விடயமுங்க உங்க சரிபாதியோட குணம்.
அப்படியே இருக்க வாழ்த்துக்கள்.

வித்யா said...

26 பதில் டிட்டோ:)

விக்னேஷ்வரி said...

முல்லை ரொம்ப நல்லா சுருக்கமா இருக்கு எல்லா பதில்களும்.

அன்புடன் அருணா said...

//நான் இதுவரை படித்த/வேலை செய்த இடங்களில் எனது பெயர் கொண்ட இன்னொருவரை பார்க்க வில்லை!//
நான் கூடக் கேள்விப் பட்டதில்லீங்க!

சென்ஷி said...

//5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?//

அடக்கடவுளே!!! :-))))))

மாய்ஞ்சு மாய்ஞ்சு எல்லோரும் தப்பான கேள்விக்கு சரியான பதிலை எழுதிட்டாங்கன்னு விட்டுட்டுப் போகாம இதை சரியா கண்டுபிடிச்சு சபையேத்திட்டீங்களே!

rapp said...

//உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

வீட்டில் வைச்சதால்! வீட்டில் எல்லோருக்கும் தமிழ்பெயர்தான்.
கண்டிப்பா பிடிக்கும், இந்தப் பெயரின் தனித்தன்மைக்காக! நான் இதுவரை படித்த/வேலை செய்த இடங்களில் எனது பெயர் கொண்ட இன்னொருவரை பார்க்க வில்லை! இதில் எனக்குப் பெருமை கலந்த மகிழ்ச்சியும் கூட! :-)//

நானும் உங்க பேர் பார்த்து பயங்கரமா ஈர்க்கப் பட்டேன்.
ஆனா, இப்டி பீத்திக்கறீங்க, பாருங்க, அப்போதான் பத்திக்கிட்டு வருது. இப்டி அல்டிக்காதீங்க, சொல்லிட்டேன்:):):)

rapp said...

//பிடிக்கும்! ஆனா சமயங்களில் எனக்கே புரியாது. அதனால பிடிக்காம போய்டுமா என்ன?!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முல்லை, நாடி ஜோஸ்ய ஓலைச்சுவடி எழுதுனவங்களாட்டம் இப்டி சொல்றீங்களே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

rapp said...

//மதிய உணவு என்றில்லை..எப்போதுமே பிரியாணிதான்! ஒன்லி ஆம்பூர் பிரியாணி ஃப்ரம் ஆம்பூர்!!//

தெய்வமே, தெய்வமே, தேடினேன் என் தோழியை, தேடினேன் என் தோழியை:):):)

ஒரு பிரியாணி வெறியரோட மனசு இன்னொரு பிரியாணி வெறியருக்குத்தான் தெரியும்.

குஸ்காவா, மட்டனா, சிக்கனா? தயிர் பச்சடியா, கத்தரிக்கா கொத்சுவா, குருமாவா? ஒன்றில்லாமல் மற்றொன்று சுவையாகுமா, ஆம்பூர் பிரியாணியின் சுவைக்கு ஈடேதம்மா?

இதைப் படிக்கறச்சே, என் கண்ல ஆனந்தக் கண்ணீர் வழியிது முல்லை!!!

rapp said...

//
பாத்ரூமில்தான் குளிக்கப் பிடிக்கும்!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முந்தின கேள்வியோட விடையினால் கோபம் தணிந்து, இப்பொழுது கவுஜயால் சபிக்காமல் வெளியேறுகிறேன்:):):) (அங்கங்க சம்பந்தமில்லாம ஸ்மைலி போடனும்னு பெரியவங்க சொன்னாங்க, அதால அது பாட்டுக்கு இருக்கட்டும்)

rapp said...

//முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்.//

அதெப்படி, அவரு திரும்பி நின்னுக்கிட்டிருந்தா?ஹி ஹி ஹி :):):)

rapp said...

//பிடிக்காத விஷயம் : அநாவசிய செண்டிமெண்ட் மதிப்புகள், மிகவும் எளிதில் உணர்ச்சிவசப்படுதல் - தேவையில்லாத காரணங்களுக்கு! //

நான் எப்டியும் உங்க பதிவுகளை மிஸ் பண்றதில்லைன்னு தெரிஞ்சிக்கிட்டு, நைசா உங்கள சொல்றாப்டி, என்னைய சொல்றீங்களா:):):)

//(அது தேவையில்லாததுன்னு
விளைவுகளை பார்த்துத்தானேத் தெரியும்!!)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........பப்பு நீ முடிவெட்டிக்கிட்ட அந்த கத்திரிக்கோலை இப்டி கொடுத்திடும்மா, இப்டி ஏதோ ஒன்னு அன்னைக்கு உன்கிட்ட சொல்லப்போய் தான நீ அன்னைக்கு கத்திரிக்கோலை எடுத்த:):):)

rapp said...

//
பெரிம்மாதான்//

அன்னைக்கு தான் பார்த்தோமே எல்லாரும், ஆர்வியோட மண்டைய ரெண்டு பேரும் சேர்ந்து காய வெச்சீங்களேப்பா:):):) சான்சே இல்லை, மறக்கவே மாட்டோம். அதோட பாலச்சந்தரை அவங்க டப்புன்னு கலாய்ச்சத்தையும்
மறக்க மாட்டோம்:):):)

rapp said...

//ஆகாயநீல டீ-ஷர்ட், பிஜ் கலர் காஷுவல்//

முல்லை, ட்ரூலி பாரினாமாம்:):):) எப்புடி?:):):)

தீஷு said...

அருமையான சுருக்கமான பதில்கள் முல்லை.

//20. கடைசியாகப் பார்த்த படம்?

சுப்ரமணியபுரம்
//

இந்தப் படத்தை முழுசா பார்க்க முடியல முல்லை. பிளைட்டுல பார்த்தேன். எப்ப என்ன ஆகுமே பயந்திட்டு ஆஃப் பண்ணிட்டேன்.

rapp said...

நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?//

கேள்வி கஷ்டமா இருக்கு, மனச உறுத்துது, உண்மையச் சொல்ல முடியலைன்னுதான யாரோ ஒரு புண்ணியாத்மா மாத்திருக்காங்க, அதையும் போய் துப்பறிஞ்சு இப்டி எங்கள நாங்களே கேவலப்படுத்திக்க வெக்கனுமா:):):) என்ன ஒரு வில்லத்தனம்:):):)

rapp said...

//பிடித்த மணம்?

பப்பு தலையிலிருந்து வரும் ஒரு (வேர்வை கலந்த/பார்பிக்யூ) மணம்! //

கவிதயாவா பேசறீங்க, இருங்க இருங்க, எல்லாரும்
பப்புக்கு சொல்லிடறோம், இனிமே தலைக்கு குளிக்காதம்மா, முல்லைக்கு வேர்வை கலந்த தீஞ்ச வாசனைதான் புடிக்குமாம்னு:):):)

Thamizhmaangani said...

//முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்.//

யக்கோவ், மாமாவ முதல் தடவ பாத்தபோதுகூட, இப்படி தான் செஞ்சீங்களா?

சரி சரி... நான் என்ன கேட்டேன்னு இம்புட்டு வெட்கப்படுறீங்க!:)

rapp said...

//இந்த கேள்விக்கெல்லாம் ராப் எப்படி அவங்க பாணியில் பதில் சொல்றாங்கன்னு பார்க்கத்தான்! //

ரெண்டாவது கேள்விய என் பதிவுக்கப்புறம் கேட்டிருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும். நான் பேசாம, கவுஜயாவே பதில்களை போட்டுடலாமான்னு யோசிக்கிறேன்:):):)

rapp said...

//சதுரங்கம்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், இந்த ஸ்கூல்ல செஸ் ஆடி, மத்த சாதா பசங்கள ஓட்ற குருப்பா நீங்க?

rapp said...

//எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

women exploitation இல்லாத எந்த படமானாலும்!//

super, super, super:):):)

//பிடித்த பருவ காலம் எது?

மார்ச்-ஏப்ரலில் நம்ம ஊரில் என்ன பருவமோ அது!
//

அந்த கொளுத்து கொளுத்துது. ஏன், எங்கள மாதிரி ஆட்கள், 'தெளிவா' சுத்துவோம்னு சந்தோஷமா:):):)

rapp said...

//. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

Power of Positive mom//

//
பிடித்த சத்தம் : பள்ளி/கல்லூரி மேடைகளில் பரிசுக்காக என் பெயரை அழைக்கும் அறிவிப்பு சத்தம்! //

அதைப் படிச்சிட்டு நாங்கெல்லாம் இதுக்கான விடையா, பப்புவோட குரல்னு சொல்வீங்கன்னு ஆசையா இருந்தா, kirrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

rapp said...

//உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

எதுஎதற்காகவோ எதுஎதையோ காம்ப்ரமைஸ் செய்துக் கொண்டுதான் வாழவேண்டும் என்கிற
உண்மையை!//

இன்னைக்கு மத்தியானம் பிரியாணி இல்லைங்கறத இவ்ளோ சீரியஸா எடுத்துக்கிட்டு வருத்தப்படாதீங்க முல்லை:):):)

rapp said...

//உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விஷயம் : எந்த சண்டையையும் ஒரு நாளைக்கு மேலே வளர விடாதது!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இங்கு ஒரு உண்மை மறைக்கப்பட்டுள்ளது, என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிடித்த விஷயம்: பிரியாணியில் பங்குக் கேட்டு சண்டை போடாமல் இருப்பது:):):)

எப்புடி:):):)

rapp said...

//பிடிக்காத சத்தம் : எவர்சில்வர் சாமான்களை தரையில் இழுக்கும் சத்தம் பிடிக்காது//

என்னை பேச வேணாம்னா, கம்னு இருந்திட்டு போறேன். எதுக்கு எவர்சில்வர் சாமான்னு சொல்றீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:):):)

rapp said...

//எப்படி இருக்கணும்னு ஆசை?

சில சமயங்களில் நான் தைரியசாலின்னு நினைப்பேன். சிலசமயங்களில் நிறைய கற்பனை செஞ்சு பயந்தாங்கொள்ளியா இருப்பேன். பலசமயங்களில் இவை இரண்டுக்கும் நடுவில் குழப்பத்துடன் இருப்பேன்!! இப்படி இல்லாம, வீட்டுலே சொல்ற மாதிரி "பொறுப்போட" இருக்கலாமோன்னு//

பப்பு, கத்திரிக்கோலை கொடுப்பா:):):)

rapp said...

//கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

நானே கார் ஓட்டிச்செல்ல!//

நீங்கள் என் பிரியாணி மேட் என்றிருந்தேனே, இப்படி சொல்லிட்டீங்களே:(:(:( கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

rapp said...

////ராப் - ராப்-இன் அதிரடி ஸ்டைல்! //


இது உண்மைதான் பாஸ் ஒரு நாள் பாருங்க நம்ம வாலியை பத்தி பேசுனாங்க பாருங்க ச்சே சான்ஸே இல்ல பாஸ் செம டெர்ரர் பாஸ் :)//

சின்னப்பாண்டின்னே, அன்னைக்கு நான் வாலியைப் பாராட்டினேன், அவரும் ராஜாவும் எப்டி வைரமுத்துவை ஓட்னாங்கன்னு சொன்னேன். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அப்புறம் கவுஜ பாடிருவேன்:):):)

நட்புடன் ஜமால் said...

\\14. பிடித்த மணம்?

பப்பு தலையிலிருந்து வரும் ஒரு (வேர்வை கலந்த/பார்பிக்யூ) மணம்! \\


வாழ்த்துகள் சகோதரி


இங்கனம்:பப்பு பேரவை-சிங்கை கிளை

நசரேயன் said...

//பிடித்த விஷயம் : எந்த சண்டையையும் ஒரு நாளைக்கு மேலே வளர விடாதது!//

ஏன் அடி தாங்க முடியாம நிறுத்திடுவாரோ?

ராமலக்ஷ்மி said...

1.
அழகான தமிழ் பெயர் என ஏற்கனவே நான் சிலாகித்ததுதான், வேறெங்கும் அருணா சொன்னது போல நானும் கேள்விப்பட்டதில்லை!

எல்லா பதில்களையும் ரசித்தேன். 32க்கு 100 மார்க்:)!

நசரேயன் said...

//பிடிக்காத விஷயம் : அநாவசிய செண்டிமெண்ட் மதிப்புகள், மிகவும் எளிதில் உணர்ச்சிவசப்படுதல் - தேவையில்லாத காரணங்களுக்கு! (அது தேவையில்லாததுன்னு
விளைவுகளை பார்த்துத்தானேத் தெரியும்!!)//

தத்துவம் 3001, அடுத்த தேர்தல் அறிக்கையிலே பயன் படுத்தலாம்

நசரேயன் said...

//என்னால் "எனக்கு பிடித்த வர்ணம் இது"வென்று ஒரு தீர்மானத்திற்கு வர இயலாது!//

வர்ணம் ஆயிரம்

நசரேயன் said...

//ராப் - ராப்-இன் அதிரடி ஸ்டைல்! எதையும் கலக்கலான நடையில் எழுதுவாங்க!புயல் மாதிரி வந்தாங்க, இப்போ அப்போப்போ எட்டிப் பார்க்கறாங்க! இந்த கேள்விக்கெல்லாம் ராப் எப்படி அவங்க பாணியில் பதில் சொல்றாங்கன்னு பார்க்கத்தான்!//

ஆமா ராப் இல்லாம பதிவு உலகம் களை இழந்து போச்சி

நசரேயன் said...

//19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

women exploitation இல்லாத எந்த படமானாலும்!//

தெலுங்கு படம் பாருங்க

நசரேயன் said...

//பிடித்த சத்தம் : பள்ளி/கல்லூரி மேடைகளில் பரிசுக்காக என் பெயரை அழைக்கும் அறிவிப்பு சத்தம்! //

பேச்சி போட்டிக்கா ஆச்சி

நசரேயன் said...

//பிடிக்காத சத்தம் : எவர்சில்வர் சாமான்களை தரையில் இழுக்கும் சத்தம் பிடிக்காது! //

முகில் பாத்திரங்களை மெதுவா எடுங்க இனிமேல

நசரேயன் said...

//
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ..எவ்ளோ நேரம் வேணாலும் தூங்குவேன்! :-)//

ரெம்ப நல்லவங்க நீங்க

நசரேயன் said...

//நசரேயனை அழைக்க விரும்புகிறேன்! அவரது நகைச்சுவை பதிவுகள் பிடிக்கும்!//

எவன் அவன் நகைச்சுவையா எழுதுறது !!!

ஆகாய நதி said...

//
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

வீட்டில் வைச்சதால்! வீட்டில் எல்லோருக்கும் தமிழ்பெயர்தான்.
கண்டிப்பா பிடிக்கும், இந்தப் பெயரின் தனித்தன்மைக்காக! நான் இதுவரை படித்த/வேலை செய்த இடங்களில் எனது பெயர் கொண்ட இன்னொருவரை பார்க்க வில்லை! இதில் எனக்குப் பெருமை கலந்த மகிழ்ச்சியும் கூட! :-)
//

அழகான பெயர் தான் :)

முல்லை என்று எனக்கு ஒரு வகுப்புத் தோழி இருந்தாங்க... முழு பெயரே முல்லை தான் :)

//
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

//

அப்படியா????

//
பிடிக்காத விஷயம் : எப்போதும் நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறது!
//

ஏங்க இப்படி?

//
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

Power of Positive mom
//

எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன்...

//
எதுஎதற்காகவோ எதுஎதையோ காம்ப்ரமைஸ் செய்துக் கொண்டுதான் வாழவேண்டும் என்கிற
உண்மையை!
//

உண்மைதாங்க...

சூப்பர் பதில்கள் :)

Deepa said...

வழக்கம் போல் அதிரடி!

மிக ரசித்தவை:

//வாழ்வு பற்றி ஒரு வரி-ல சொல்லத் தெரிஞ்சா, இந்நேரம் ஹைக்கூ-ல்லாம் எழுதியிருக்கமாட்டேனா!! :-)//

//ஓ..எவ்ளோ நேரம் வேணாலும் தூங்குவேன்! :-)//

மாதவராஜ் said...

ரசித்தேன்.

கோபிநாத் said...

சூப்பர் ;)

குடுகுடுப்பை said...

நல்லா இருந்தது, நசரேயன் பதிவு போட்டா , அடி வாங்குறத பாக்க நியூ ஜெர்சி போகனும்.

Divyapriya said...

//பிடிக்காத விஷயம் : எப்போதும் நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறது!//

இது பிடிக்காதா??? என்ன கொடுமை இது ? :)

ஆகாய நதி said...

ராப் அவர்களின் பின்னூட்டங்கள் செம கலக்கல் :)))))

இய‌ற்கை said...

இது எனனி தாண்டிசெல்லும்போது ஒரு அமானுஷ்யமான பயம் அல்லது சொல்லமுடியாத பயங்கலந்த உணர்வு!//

same blood:-(

நாதாரி said...

இது நல்ல மெத்தேட்

சின்ன அம்மிணி said...

//ஹவாய், ஆஸ்திரேலியா (இப்போ வேணாம்ப்பா!!)!//

நியூஸி போங்க. எந்த பயமும் இல்லை. அதுக்காக ஆஸ்திரேலியா ஒண்ணும் ரொம்ப பயப்படவேண்டியதில்லை. இந்தியா மாதிரித்தான் ஆஸ்திரேலியாவும். நான் இருக்கேன் வாங்க.

தமிழன்-கறுப்பி... said...

\\
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

என்னால் "எனக்கு பிடித்த வர்ணம் இது"வென்று ஒரு தீர்மானத்திற்கு வர இயலாது!
\\

நெருக்கமான பதில்..!

தமிழன்-கறுப்பி... said...

பதில்கள் இயல்பாயிருக்கிறது...

தமிழன்-கறுப்பி... said...

இப்படியொரு கும்மி இங்கயா, நம்மளுக்கு சொல்லியிருந்தா நாமளும் ஆட்டத்துல சேந்திருப்பம்ல

:))

தமிழன்-கறுப்பி... said...

ஆச்சி பப்புவை கேட்டேன்னு சொல்லுங்க, மறுபடி நேரம் கிடைக்கிறப்ப வாறேன்...

வண்ணத்துபூச்சியார் said...

அருமை

அமுதா said...

/*உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ..எவ்ளோ நேரம் வேணாலும் தூங்குவேன்! :-)
*/
:-))

மங்களூர் சிவா said...

நீங்க தனித்திறமைன்னு குறிப்பிட்டது பெரும்பாலானோரின் பொதுத்திறமைதான் என்பது என் கருத்து
:)))

பதில்கள் அருமை.