Sunday, June 21, 2009

Mono printing - Part IIசாப்பாடு மடிக்கும் அலுமினிய ஃபாயிலை ஒரு அட்டையில் மடித்துக்கொண்டோம். மேலும் தட்டில் இன்சுலேஷன் டேப்பினால் கட்டமாக ஒட்டிக் கொடுத்தேன். அலுமினியம் ஃபாயில் சரியாக வரவில்லை - வண்ணங்கள் தீட்ட பப்புவிற்கு பிடிக்கவில்லை. தட்டு அவளுக்கு மிகவும் ஈசி.வழக்கமாக வண்ணம் தீட்டுவதும் போல இருந்தது அவளுக்கு! மேலும் பேப்பரால் அழுத்தி எடுப்பதும் எளிதாகவும் இருந்த்து, உதவி தேவைப்படவில்லை!

அடுத்தாக, பிரஷால் வட்டமாக வரைந்திருந்தாள். ஒரு ear bud கொடுத்தேன் அதில் வரைவதற்கு! மாங்காய் போல, பிறகு ஏதோதோ உருவங்களை bud-ஆல் வரைந்து பேப்பரை அழுத்தி பிரிண்ட் எடுத்தாள்!

எந்த வண்ணம் கலந்தால் எந்த வண்ணம் கிடைக்கும் என்று அறிய வைக்க ஓரளவிற்கு இம்முறையை பயன்படுத்தலாம். இப்போதைக்கு பப்புவிற்கு கருப்பு எப்படி வருமென்று தெரியும்(எல்லா வண்ணங்களையும் ஒன்றாகக் குழைத்தால்!) ;-) !
பப்பு கார்னர் :

”நீட்டு பொடி வாங்கித் தர சொல்லுச்சு, வர்ஷினி” - பப்பு.

”என்னது?”

“நீட்டு பொடி உங்கம்மாவை வாங்கித் தர சொல்லு, உங்கம்மாக்கிட்டே சொல்லி வாங்கி போட்டுக்கோன்னு வர்ஷினி சொல்லுச்சு! - பப்பு

நீட்டு பொடியா? எப்படி இருக்கும்?

அவள் காட்டிய ஆக்‌ஷன்படி - நெத்திச்சூடி!

இவ்வளவு சீக்கிரம் இது ஆரம்பிக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை!


Note to perimma :

பெரிம்மா, என் ப்ரெண்ட்ஸ் சொன்னாங்கன்னு ஒரு தடவை ஃபேஷன் ஒட்டியாணம் கேட்டேன் இல்ல, நான் அப்போ செவன்த்தானே?!!ஹ்ம்ம்..அப்புறம், இந்ததடவை வரும்போது வாங்கிட்டு வந்துடுங்க நெத்திச்சூடி, ஓக்கே!

22 comments:

மணிநரேன் said...

//இவ்வளவு சீக்கிரம் இது ஆரம்பிக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை! //

ஹா ஹா ஹா...;)

//நான் அப்போ செவன்த்தானே?//

இந்த காலத்து குழந்தைகள் ரொம்ப வேகமாதான் இருக்காங்க....

G3 said...

//அவள் காட்டிய ஆக்‌ஷன்படி - நெத்திச்சூடி!

இவ்வளவு சீக்கிரம் இது ஆரம்பிக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை!
//

Pappu Says : "Naan valargiraenae Mummy" :))))

//Note to perimma :

பெரிம்மா, என் ப்ரெண்ட்ஸ் சொன்னாங்கன்னு ஒரு தடவை ஃபேஷன் ஒட்டியாணம் கேட்டேன் இல்ல, நான் அப்போ செவன்த்தானே?!!ஹ்ம்ம்..அப்புறம், இந்ததடவை வரும்போது வாங்கிட்டு வந்துடுங்க நெத்திச்சூடி, ஓக்கே!//

Pappumma says : "Naan valaravilla periyamma" ;)))))

மயில் said...

appu Says : "Naan valargiraenae Mummy" :)

athu!!! ippave readya irunga..innum ennallam irkku..

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

பப்பு விரைவாகவும், நன்றாகவும் கற்றுக் கொள்ள நல்ல முறையில் வழிநடத்தப்படுவது புரிகிறது.
இருவருக்கும் பாராட்டுக்கள்.

தாரணி பிரியா said...

ஆஹா எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க. நீங்க குழந்தைகளுக்கான ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கலாம் முல்லை :)

rapp said...

//இவ்வளவு சீக்கிரம் இது ஆரம்பிக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை!
//
ஹி ஹி ஹி, இதெல்லாம் ஒண்ணுமேயில்ல:):):) எங்களோட சின்ன வயசு போட்டோவெல்லாம் பாத்தா.............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........
லம்பாடிங்கன்னு சொல்வாங்கல்ல, அவங்க கெட்டாங்க என்கிட்டே.

rapp said...

//அடுத்தாக, பிரஷால் வட்டமாக வரைந்திருந்தாள். ஒரு ear bud கொடுத்தேன் அதில் வரைவதற்கு! மாங்காய் போல, பிறகு ஏதோதோ உருவங்களை bud-ஆல் வரைந்து பேப்பரை அழுத்தி பிரிண்ட் எடுத்தாள்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்............... இதென்ன இப்டி வேலைவாங்குது, படிக்கவே டயர்டாகிடுச்சி:):):)

மாதவராஜ் said...

டி.வியில் மூழ்கியும், தனியாக விளையாடிக்கொண்டும் இருக்கிற குழந்தகளின் பெற்றோர்களுக்கு நீங்கள் அவசியமான பாடங்களை எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

சென்ஷி said...

மாதவராஜ் சொன்னதை வழி மொழிகிறேன். உங்க பதிவையும் அனுபவங்களையும் நிறைய்ய பேருக்கு கொண்டு போய் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுங்கள். எல்லோருக்கும் பயனளிக்கும்.

அமுதா said...

/*நீட்டு பொடி ?? */
:-)) ஆரம்பிச்சுட்டாங்களா ??

பைத்தியக்காரன் said...

மெல்லியதான நகைச்சுவையுடன் நீங்கள் எடுக்கும் பாடங்களுக்கு பப்பு மட்டுமல்ல, நானும் மாணவன்தான் :-) அதற்காக நெத்திச்சூடி கேட்பதாக அர்த்தமில்லை :-(

தோழமையுடன்
பைத்தியக்காரன்

குடுகுடுப்பை said...

மாடர்ன் ஆர்ட் மாதிரி இருக்கு.

ஆகாய நதி said...

//
இவ்வளவு சீக்கிரம் இது ஆரம்பிக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை!

//

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பப்புவின் கலர் கை வண்ணம் அழகு

//இவ்வளவு சீக்கிரம் இது ஆரம்பிக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை! //

நானும் நினைத்திருக்கவில்லை நீங்களா ஒட்டியாணம் கேட்டீர்கள் என்று :)-

பி.கு.: அமித்து வளையலும், மணியும் கேட்டு அதகளம் :)-

ஆயில்யன் said...

//பெரிம்மா, என் ப்ரெண்ட்ஸ் சொன்னாங்கன்னு ஒரு தடவை ஃபேஷன் ஒட்டியாணம் கேட்டேன் இல்ல, நான் அப்போ செவன்த்தானே?///


பெரிம்மா:- ஆமாம் அதுக்கென்ன இப்ப....?? (கொஞ்சம் கடுப்போடு...!)

ஆயில்யன் said...

//ஹ்ம்ம்..அப்புறம், இந்ததடவை வரும்போது வாங்கிட்டு வந்துடுங்க நெத்திச்சூடி,//


பெரிம்மா:-
ஆம்பூர் பிரியாணி எடுத்துட்டு வரவே எனக்கு இடம் பத்தாது இதுல்ல இது வேறயா ம்ம் பாக்குறேன்!

ஆயில்யன் said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...

பப்புவின் கலர் கை வண்ணம் அழகு

//இவ்வளவு சீக்கிரம் இது ஆரம்பிக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை! //

நானும் நினைத்திருக்கவில்லை நீங்களா ஒட்டியாணம் கேட்டீர்கள் என்று :)-//


டூ அ.அ.அக்கா

ஐ வாண்ட் நோ வாட் இஸ் திஸ் ஒட்டியாணம்

சோறு வடிக்கிற யாணமா???

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...


ஐ வாண்ட் நோ வாட் இஸ் திஸ் ஒட்டியாணம்

சோறு வடிக்கிற யாணமா???

திங்கறதுலயே இருங்க பாஸு:)

தீஷு said...

Mono printing நல்லா வந்திருக்கு முல்லை. பெயிண்டிங் முடித்தவுடன் அவுங்க முகத்தில தெரிகிற திருப்தி கொள்ளை அழகு.

//அவள் காட்டிய ஆக்‌ஷன்படி - நெத்திச்சூடி//

போச்சுடா..

Deepa said...

நீட்டு பொடி! :-)))

நசரேயன் said...

ஆத்திசூடி தெரியும் அது என்ன நெத்திச்சூடி! ?

சுரேகா.. said...

பப்பு வாழ்க!
நீட்டு பொடி.. வாங்கிட்டா போச்சு!
::))))