Tuesday, June 09, 2009

பாசாங்குகள் - சங்கடங்கள்!

பாசாங்கு குறித்து விஜய் டீவியில் வந்த சில கிளிப்பிங்ஸ் பார்க்க நேரிட்டது இணையத்தில். பாசாங்கு/நாடகத்தன்மைகள் இல்லாமல் வாழ முடிவதில்லையென்பது உண்மைதான். ஆனால் எவ்வளவு விகிதம் என்பதில்தான் இருக்கிறது சுவாரசியம்! அதைவிட சுவாரசியம், இந்த பாசாங்குகளை வைத்துத்தான் பெரும்பாலான நேரங்களில் நாம் கணிக்கப்படுகிறோம்/ஜ்ட்ஜ் செய்யப்படுகிறோம்! பதின்மத்தில் ஆரம்பத்தில் - ஒரு ரணகளமே நடக்கும் வீட்டில்! யாராவது தூரத்து உறவினர்கள் வீட்டிற்கு வந்திருப்பார்கள். ட்யூஷன் முடித்தோ அல்லது விளையாடிவிட்டோ வீட்டுக்குள் வருவோம். வந்திருப்பவர்களைப் பார்த்து புன்னகை புரிந்து, நல்லாருக்கீங்களா என்று கேட்டுவிட்டு காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டதை போல நழுவுவதற்கு துடித்துக் கொண்டிருப்போம்.இல்லன்னா, அடுத்தக் கேள்வி, ”நல்லா படிக்கிறியாம்மா? (என்ன ரேங்க்?!)”ன்னு வருமே! இதற்கு யாரால்தான் இல்லைன்னோ/உண்மையான ரேங்கையோ சொல்லிவிட முடியும்?!

ஒரு சிலர், ”வாங்க”ன்னுக்கூட கூப்பிடலைன்னு பிறரிடம் போய் பழிசொல்லிவிடுவார்களாம், மரியாதைத் தெரியாத பொண்ணு என்று! (”வாங்க”ன்னு சொல்லிட்டா மட்டும் நல்ல பேர் கிடைச்சுடுமா என்ன?!)இதில் எத்தனை பாசாங்குகள்! பிறரிடம் சொல்லிவிடக்கூடாதென்பது ஒரு பக்கம்! இன்னொன்று, நான் வீட்டிற்குள் வருவதற்கு முன் அவர்கள் வந்திருப்பார்கள். ஆனால், அப்போதுதான் வீட்டிற்குள் நுழையும் நான், அவர்களை, “வாங்க” என்று சொல்லவேண்டும்! அந்த லாஜிக் ரொம்ப நாள்வரை எனக்குப் புரிந்தது இல்லை.ஏற்கெனவே வந்துவிட்டவர்களை எப்படி ”வாங்க”ன்னு சொல்ல முடியும்!! லாஜிக்படி, அவங்கதானே என்னை வாவென்று அழைக்க வேண்டும்! ஒருவேளை நான் இருக்கும்போது அவர்கள் வந்து, நான் கதவை திறந்தால் வாங்கன்னு சொல்லலாம்! வீட்டில், 'வாங்கன்னு சொல்லிட்டுபோயேன், இதுல என்ன குறைஞ்சுபோய்டறே' என்று சொன்னால், “இப்ப நான் வாங்கன்னு சொல்லலைன்னா அவங்க வராம போய்டுவாங்களா” னெல்லாம்னு எங்க ஆயாவின் மொழியில் ‘விதண்டாவாதம்' பண்ணியிருக்கேன்! (I was so raw that time - அப்புறம் நல்ல பொண்ணாயிட்டேன் - கல்யாணத்துக்கு அப்புறம் நல்லாவே தேறிட்டேன்!)

பாசாங்குகள் மிக அதிகமாக பரிமாறிக்கொள்ளப்படும்/ தெரிந்தே ஏற்றுக்கொள்ளப்படும் இடம்/அமைப்பு திருமணங்கள்! அது எதிலிருந்து ஆரம்பிக்கும் என்றால் பெண் பார்த்தல். இதில் 90% பாசாங்குகளே - நாடகமே! பையன்கள் பக்கத்திலிருந்த சங்கடங்களை நானறியேன்! (யாருக்காவது பையனைப் பார்க்கிற அனுபவம் வாய்ச்சிருக்கானு தெரியலை!)ஆனால் பெண்ணாக அனுபவப்பட்டிருக்கிறேன்!என் தோழிகளில் ஒரு சிலரால் இதை இயல்பா ஏற்றுக்கொள்ள முடிந்தது..ஒரு சிலரால் முடியவில்லை,ஆரம்பத்தில்! ஃபோட்டோ பிடிக்கறதுலே இருந்து ஆரம்பிக்கும் பாருங்க! சினிமாலேதான் பையனோட அம்மாக்கள் மாடர்னா ஃப்ரீ ஹேர் ஸ்டைலோட இருக்கற பொண்ணுங்க புகைப்படத்தை காட்டுவாங்க! நிஜத்துல அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல!!

எவ்ளோ குட்டி முடியாக இருந்தாலும் பின்னலிட்டு பூ வைச்சிருக்கணும்!(முடியை விரித்து விடக் கூடாது! - free hair means you are REBELLIOUS!!) கண்டிப்பாக புடவை! அடுத்து நகைகள். கல் நகைகள்தான் போட்டுக்கணும்னு சில அம்மாக்கள் அடம் பிடிப்பாங்க! இதுக்குமேலே மேக்கப் - அது டாப் அப் மாதிரி!(இது என்னோட அனுபவம். இப்போ பரவாயில்லை,என் தோழிகள் வீட்டுலே பட்டுலேர்ந்து டிசைனர் புடவைகளுக்கு மாறியிருக்காங்க!)இந்தமாதிரி ஒப்பனையோட வீட்டுலே இருக்கறவங்களை சீரியலில்தான் பார்க்கலாம்! நமக்கு பிடிக்குதோ இல்லையோ,ஆனா எவ்வளவு பாசாங்கு!! நோக்கம்னு பார்த்தா, நாம presentable-ஆ இருக்கணும்! அதுக்கு சாதாரணமா எப்படி இருப்போமோ இல்லன்ன நாம் வெளிலே போகும்போது எப்படி நம்மை அழகுபடுத்திப்போமோ அதோட விடலாம் இல்லையா! ஹம்..கேக்க மாட்டாங்களே!

புகைப்படத்துக்கே இப்படின்னா, பொண்ணு பார்க்கிற நாடகம் எபப்டி இருக்கும்னு நினைச்சு பாருங்க!(எவ்வளவு எம்ப்ராஸிங்-ஆ இருக்கும்!உங்கள் ஒவ்வொரு அசைவுகளும் உங்களுக்கேத் தெரியாமல் கண்காணிக்கப் படும் - உங்கள் கேரக்டரும்தான்! ) அதை ஏன் ஒரு பொது இடத்தில், ஒரு ரெஸ்டாரண்டில் அல்லது பார்க்கில் இரு குடும்பங்கள் சாதாரணமாக சந்தித்துக் கொள்வது போல் வைத்துக் கொள்ளக் கூடாது?! என் 'முதல் பெண் பார்த்தல்' அனுபவம் - ஆபிஸ் வரவேற்பறையில் நடந்தது!வியர்ட்? என்னால புடவை கட்டிக்கிட்டு, காப்பி-ல்லாம் எடுத்துட்டு வந்து கொடுத்து நடிக்க முடியாதுன்னு சொன்னதால, பையனின் அம்மா-அப்பா மட்டும் என்னை வந்து ஆபிஸிலே சந்திச்சாங்க! ஒரு கால்மணிநேரம் பேசிட்டு போனாங்க! இது எதுவும் என்னை வித்தியாசமா, இல்ல கான்ஷியசா நினைக்க வைக்கலை! ஏதோ நம்ம வீட்டுக்குத் தெரிஞ்சவங்க என்னை வந்து பார்த்துட்டு போன மாதிரி இருந்தது! அவ்வளவுதான்! எந்த அபத்தக்கேள்விகளும் இல்லை! (அவங்களுக்கு எப்படி இருந்ததுன்னுதான் தெரியலை!பொண்ணை 'இயல்பா சாதாரணமா பார்க்க” பையன் வீட்டினரும் மாறணுமில்லையா!!)

அடுத்ததடவை, எங்க மாமா வீட்டிலே...சொல்ல வேணுமா! எல்லா சொந்தங்களும்! ஆனாலும் நான் அடம்பிடிச்சு சல்வார் கமீஸ் & ஃப்ரீ ஹேர்! அப்படியும் பூ வைக்க ரொம்ப முயற்சி பண்ணி வெற்றியும் அடைஞ்சுட்டாங்க எங்கம்மா! காபில்லாம் எங்க அத்தைதான் கொடுத்தாங்க! ஆனால், இந்தமுறை ரிஜக்ட் பண்ணது நானு! why should boys have all the fun?! இப்படி ரெண்டு தடவை நான் பொண்ணு பார்க்கற நாடகத்தில் நடிச்சிருக்கேன்! அதுக்கப்புறம் முகில்தான்னு முடிவு செஞ்சபிறகு், ‘ஒரிஜினல் பொண்ணு அறிமுகக் காட்சி'ல நடிச்சிருக்கேன்!! இந்தமுறை பக்காவா புடவை கட்டி, நகைபோட்டு காபி கொடுத்துட்டு அறைக்குள்ளே போய் உட்கார்ந்து...ன்னு! ஆனா, வித்தியாசமா தோணலை - பழகிடுச்சா இல்ல 'அவ்ளோதான் இனிமே இப்படி யார்முன்னாலயும் போய் நிக்கவேண்டியதில்லை' எனும் நிம்மதியினாலான்னு தெரிய்லை!!

கடைசியா என்ன சொல்ல வர்றேன்னா, பொண்ணு பார்க்கிறேன்னு பொண்ணை எம்ப்ராஸ் பண்ணாம, ஒரு ரெஸ்டாரண்டிலேயோ பொது இடங்களிலோ சந்திச்சா தேவையில்லாத நெருடலை தவிர்க்கலாம்!! செலவை ரெண்டு குடும்பமும் பகிர்ந்துக்கலாம்-பொண்ணு வீட்டுலே சமையல் வேலையும் மிச்சம்!!

58 comments:

rapp said...

//பதின்மத்தில் ஆரம்பத்தில் - ஒரு ரணகளமே நடக்கும் வீட்டில்! யாராவது தூரத்து உறவினர்கள் வீட்டிற்கு வந்திருப்பார்கள். ட்யூஷன் முடித்தோ அல்லது விளையாடிவிட்டோ வீட்டுக்குள் வருவோம். வந்திருப்பவர்களைப் பார்த்து புன்னகை புரிந்து, நல்லாருக்கீங்களா என்று கேட்டுவிட்டு காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டதை போல நழுவுவதற்கு துடித்துக் கொண்டிருப்போம்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........................சேம் பிளட். எங்க வீட்டில் இதோட விடமாட்டாங்க, வாங்கன்னு எப்டி கூப்டோம்னு அப்புறம் வேற உக்காந்து ஆராய்ச்சிப் பண்ணுவாங்க. அதாவது, எந்த மாடுலேஷன்னெல்லாம் எங்கப்பா டார்ச்சர் பண்ணுவார். எனக்கு இப்போவரை, யார் வந்தாலும் முதல்ல ஒரு இனம்புரியா, டென்ஷன் வந்திடும், அது எப்டியோ, அது என்னன்னு சொல்லி வரவேற்க அப்டின்னு

rapp said...

//அடுத்தக் கேள்வி, ”நல்லா படிக்கிறியாம்மா? (என்ன ரேங்க்?!)”ன்னு வருமே! இதற்கு யாரால்தான் இல்லைன்னோ/உண்மையான ரேங்கையோ சொல்லிவிட முடியும்//
நான் எப்பவுமே இதுல கவலைப்பட்டுக்க மாட்டேன்பா, பர்ஸ்ட் rank வாங்கிருந்தாக் கூட வந்திருக்கவங்கக் கிட்ட மூணாவது ரேங்க்னோ, நாலாவது ரேங்க்னோ எப்பவும் கீறல் உழுந்த ரெக்கார்டாட்டம் ரிப்பீட்டுறது. வந்தவங்களுக்கு, வீட்ல கொடுக்குற இனிப்பைவிட இதுதான் அதீத சந்தோஷத்தை கொடுக்கும். ஏன்னா, உக்காந்து வாய் கோணிக்கிறளவுக்கு அட்வைஸ் பண்லாம், தன்னைப் பத்தி பீலா உடலாம். அதால, நான் எப்பவுமே அவங்களுக்கு இந்த மனசாந்தியை கொடுப்பேன்:):):) சில சமயம் எங்கப்பாவே என் கிளாஸ் மேட் வீட்ல, அதுவும் மினி ராமானுஜமா இருக்கிறவங்கக் கிட்டப்போய் இப்டி தாளிக்கும் போதுதான் காமடி டிராஜடியாகிடும்:):):)

rapp said...

//ஒரு சிலர், ”வாங்க”ன்னுக்கூட கூப்பிடலைன்னு பிறரிடம் போய் பழிசொல்லிவிடுவார்களாம், மரியாதைத் தெரியாத பொண்ணு என்று!//


அதுக்குத்தான் நான் அப்டி வர்றவங்களை வாங்கன்னு கூப்பிட்டு, அப்புறம் என் கையால காப்பி போட்டுக் கொடுக்குறது.

தீஷு said...

//கடைசியா என்ன சொல்ல வர்றேன்னா, பொண்ணு பார்க்கிறேன்னு பொண்ணை எம்ப்ராஸ் பண்ணாம, ஒரு ரெஸ்டாரண்டிலேயோ பொது இடங்களிலோ சந்திச்சா தேவையில்லாத நெருடலை தவிர்க்கலாம்!!//

இப்ப நிறைய பேர் இந்த மாதிரி பண்ணுறாங்க முல்லை. கோயில் நல்ல சாய்ஸ். மங்களகரமாகவும் இருக்கும் :-). எனக்கு இந்த மாதிரி கொடுமைகள் நடக்கவில்லை. நான் நடக்க விடவில்லை :-)))

ஆயில்யன் said...

//இதற்கு யாரால்தான் இல்லைன்னோ/உண்மையான ரேங்கையோ சொல்லிவிட முடியும்?!//

நெவர்!


என்னால இது வரைக்கும் சொல்ல இயலாத ஒரு விசயம் :(

ஆமாம் பாஸ் அவுங்க ஏன் பர்ஸ்ட் ரேங்க் மட்டும் கேக்குறாங்க?

உனக்கு என்ன சாப்பிட பிடிக்கும் ?
எந்த நடிகை/நடிகர் ரொம்ப பிடிக்கும்ன்னு கேக்கலாம்ல ?

கோவி.கண்ணன் said...

//கடைசியா என்ன சொல்ல வர்றேன்னா, பொண்ணு பார்க்கிறேன்னு பொண்ணை எம்ப்ராஸ் பண்ணாம, ஒரு ரெஸ்டாரண்டிலேயோ பொது இடங்களிலோ சந்திச்சா தேவையில்லாத நெருடலை தவிர்க்கலாம்!! செலவை ரெண்டு குடும்பமும் பகிர்ந்துக்கலாம்-பொண்ணு வீட்டுலே சமையல் வேலையும் மிச்சம்!!
//

நல்ல யோசனை ! ஆனால் இருவருக்கும் பிடித்து இருந்தால் கல்யாணம் வரைக்கும் அதே ஓட்டலில் கண்டினியு பண்ணுங்க, கல்யாணம் ஆன பிறகும் சமைப்பது சகிக்கவில்லை என்றாலும் அங்கேயே தொடர வசதியாக இருக்கும் என்று சொல்லிவிடலாம்.

:)

ஆயில்யன் said...

//ஒரு சிலர், ”வாங்க”ன்னுக்கூட கூப்பிடலைன்னு பிறரிடம் போய் பழிசொல்லிவிடுவார்களாம், மரியாதைத் தெரியாத பொண்ணு என்று!///


ப்ச் இப்பிடியெல்லாமா உங்களை பத்தி புரளி சொல்லியிருக்காங்க ஸோ சேட் :(

:)))))))

ஆயில்யன் said...

/ஏற்கெனவே வந்துவிட்டவர்களை எப்படி ”வாங்க”ன்னு சொல்ல முடியும்!! லாஜிக்படி,///


அதான் வந்துட்டீங்களே அப்புறம் என்ன இன்னொரு வாட்டி வாங்க?

வேணும்ன்னா திரும்ப வாசல்ல போய் நில்லுங்க “வாங்க” கூப்பிடறேன்னு அட்டாக் பண்ணலயா பாஸ் நீங்க...????

ஆயில்யன் said...

//சினிமாலேதான் பையனோட அம்மாக்கள் மாடர்னா ஃப்ரீ ஹேர் ஸ்டைலோட இருக்கற பொண்ணுங்க புகைப்படத்தை காட்டுவாங்க! நிஜத்துல அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல!!//

ஆமாம் பாஸ் :((

ஆயில்யன் said...

//பொண்ணு பார்க்கிறேன்னு பொண்ணை எம்ப்ராஸ் பண்ணாம, ஒரு ரெஸ்டாரண்டிலேயோ பொது இடங்களிலோ சந்திச்சா தேவையில்லாத நெருடலை தவிர்க்கலாம்!!///

ஆமாம் பாஸ் இதுதான் இப்ப பெரும்பாலானவங்க அக்செப்ட் பண்ணிக்கிட்ட மாதிரியான நடைமுறையா மாறிடுச்சு ஸோ டோண்ட் ஓர்ரி :)

நட்புடன் ஜமால் said...

சற்றே

இல்லை இல்லை

ரொம்ப கடினமான நிலை தான் அது.

நிறைய மாற்றம் வரனும் சகோதரி.

வரும் என்ற நம்பிக்கை இருக்கு


(ஆனா! எப்போ ... )

J said...

மெசேஜ்+கொசுவர்த்தி நல்லா சொல்லி இருக்கிங்க முல்லை

rapp said...

பெண்பார்த்தல் பத்தி நீங்க எழுதிருக்கறது ரொம்பப் பிடிச்சிருக்குங்க. பொதுவா அரேஞ்ச்டு மேரேஜ் பண்ற பெண்கள், இப்போல்லாம், வந்த முதல் மாப்பிள்ளயயே கட்டிக்கிட்டதா பேசுவாங்க. பல சமயம், எனக்குத் தெரிஞ்சவங்களும் இதுல டூப் விடுவாங்க. எனக்குக் காரணமே புரிஞ்சதில்லை. ஏன், அம்மா அப்பா எல்லாரும் ஈடுபடற ஒரு சடங்கை இப்டி கேவலமான ஒண்ணுன்னு நெனச்சு, இப்டி மறைக்கிராங்கன்னு. நிராகரிப்புன்னு எடுத்துக்கறாங்களோன்னு நெனச்சுப்பேன். ஆனா, இது ரெண்டு பேருக்குமே எவ்ளோ சங்கடத்தை தருது, இதை நிஜத்தில் பிராக்டீஸ் பண்ற விதத்தில்னு புரியிது. அதுவும் யாருக்குத்தான், இப்டி பண்ண பிடிக்கும்? ரொம்ப கண்டிப்பா வேறு விதத்தில் செய்றது சரியான விஷயம். இப்போ நீங்க சொல்லிருக்க மாதிரியே தான் நெறைய பேர் செய்றாங்க, சங்கடங்களை தவிர்க்க.

//அதுக்கு சாதாரணமா எப்படி இருப்போமோ இல்லன்ன நாம் வெளிலே போகும்போது எப்படி நம்மை அழகுபடுத்திப்போமோ அதோட விடலாம் இல்லையா!//

ரொம்ப சரி.

//உங்கள் ஒவ்வொரு அசைவுகளும் உங்களுக்கேத் தெரியாமல் கண்காணிக்கப் படும் - உங்கள் கேரக்டரும்தான்! //

வெரி வெரி ட்ரூ.

//வித்தியாசமா தோணலை - பழகிடுச்சா இல்ல 'அவ்ளோதான் இனிமே இப்படி யார்முன்னாலயும் போய் நிக்கவேண்டியதில்லை' எனும் நிம்மதியினாலான்னு தெரிய்லை//

சூப்பரா சொல்லிருக்கீங்க.

//பொண்ணு பார்க்கிறேன்னு பொண்ணை எம்ப்ராஸ் பண்ணாம, ஒரு ரெஸ்டாரண்டிலேயோ பொது இடங்களிலோ சந்திச்சா தேவையில்லாத நெருடலை தவிர்க்கலாம்!//

கரெக்ட்தான், ஆனா, இதுவும் அபீஷியலா ஆகிடுச்சின்னா, அதுக்குப் போறப்பவும் இப்டி போ, அப்டி சாப்டுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............

//செலவை ரெண்டு குடும்பமும் பகிர்ந்துக்கலாம்//

இதுவும் நல்லாருக்கு. இந்த காரணத்துக்காகவே, ஜாலியா பொழுதுபோக்குக்காக பொண்ணு பாக்குற ஆட்கள் கம்மியாக நெறைய வாய்ப்பிருக்கு.

எனக்குத்த் தெரிஞ்சு என் நட்பு வட்டத்தில், கிறிஸ்டியன் பிரெண்ட்ஸ் வீட்டில், பெண்பாக்குறதை & பையன் பாக்குறதை சர்ச்ல வெச்சு செய்றாங்க. அதாவது, பொண்ணையும் பையனையும் சம்பந்தப்பட்டவர்கள் மூணாவது மனுஷனாட்டம் வந்து பாக்குறது. அதனால பல சங்கடங்கள் கம்மியாகுதுன்னு சொல்லி கேட்டிருக்கேன்.

super post

வித்யா said...

சான்ஸே இல்ல முல்லை. பழைய ஞாபகங்களை கிளப்பிட்டீங்க. நானும் இந்த மாதிரி எல்லாம் அடம்பிடிச்சுருக்கேன்.
\\இப்ப நான் வாங்கன்னு சொல்லலைன்னா அவங்க வராம போய்டுவாங்களா”\\
நானும் கேட்டிருக்கேன்.

லவ்லி போஸ்ட்:)

G3 said...

//லாஜிக்படி, அவங்கதானே என்னை வாவென்று அழைக்க வேண்டும்! //

Idhu kooda nalla irukkae ;)))))

G3 said...

//மாடர்னா ஃப்ரீ ஹேர் ஸ்டைலோட இருக்கற பொண்ணுங்க புகைப்படத்தை காட்டுவாங்க! நிஜத்துல அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல!!//

avvvvvv.. utkaarndha posela irundhaa koooda othukka maataangalaam.. ninna maadiri dhaan photo venumaam.. avvvvvvvv :((((((

G3 said...

//பொண்ணை 'இயல்பா சாதாரணமா பார்க்க” பையன் வீட்டினரும் மாறணுமில்லையா!!//

Atcharam pisagaama repeatae :)))

G3 said...

//இந்தமுறை ரிஜக்ட் பண்ணது நானு! why should boys have all the fun?! //


LOL :)))))))))))))))))

G3 said...

Indha posta ellam ammakkal padicha nalla irukkum :D

Deepa said...

சூப்பர்! ரொம்ப ரசித்தேன்.


//இந்தமுறை பக்காவா புடவை கட்டி, நகைபோட்டு காபி கொடுத்துட்டு அறைக்குள்ளே போய் உட்கார்ந்து...ன்னு! //

அப்படிப்போடு! இப்டி தான் ஏமாத்தினியாம்மா முகிலை? பாவம்!
:-)) jus kidding


//அப்போதுதான் வீட்டிற்குள் நுழையும் நான், அவர்களை, “வாங்க” என்று சொல்லவேண்டும்!//

இது எனக்கும் புரியாமல் தான் இருந்தது. ஆனால் என் அக்காக் காரி ஒருத்தி (அம்முக்குட்டி சாரிடா!) ஏற்கெனவே குலவிளக்குப் பட்டம் வாங்கி இருந்ததால் என்னிடம் அதிகம் எதிர்பார்க்கவில்லை வீட்டினர். நானாகவே “நல்லாதானே இருக்கு” என்று அவளைப் பின்பற்றிச் சில வழக்கங்கள் பழகிக் கொண்டேன்!

//ஒரு ரெஸ்டாரண்டிலேயோ பொது இடங்களிலோ சந்திச்சா தேவையில்லாத நெருடலை தவிர்க்கலாம்!! செலவை ரெண்டு குடும்பமும் பகிர்ந்துக்கலாம்-பொண்ணு வீட்டுலே சமையல் வேலையும் மிச்சம்!!//
நல்ல யோசனை.

RAD MADHAV said...

புரட்சி கரமான ஒரு கருத்தை நகைச்சுவையாக சொல்லியுள்ளீர்கள். அருமை. அருமை, வாழ்த்துக்கள்.

jackiesekar said...

ட்யூஷன் முடித்தோ அல்லது விளையாடிவிட்டோ வீட்டுக்குள் வருவோம். வந்திருப்பவர்களைப் பார்த்து புன்னகை புரிந்து, நல்லாருக்கீங்களா என்று கேட்டுவிட்டு காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டதை போல நழுவுவதற்கு துடித்துக் கொண்டிருப்போம்.இல்லன்னா, அடுத்தக் கேள்வி, ”நல்லா படிக்கிறியாம்மா? (என்ன ரேங்க்?!)”ன்னு வருமே! இதற்கு யாரால்தான் இல்லைன்னோ/உண்மையான ரேங்கையோ சொல்லிவிட முடியும்?!///ஒய் பிளட்...சேம் பிளட்

ராஜா | KVR said...

//பாசாங்குகள் மிக அதிகமாக பரிமாறிக்கொள்ளப்படும்/ தெரிந்தே ஏற்றுக்கொள்ளப்படும் இடம்/அமைப்பு திருமணங்கள்! அது எதிலிருந்து ஆரம்பிக்கும் என்றால் பெண் பார்த்தல்//

எங்க வீட்டுல என் மூணு அக்கா தங்கைகளுக்கும் பொண்ணு பார்க்கிற சங்கடம் முழு அளவிலே வராம பார்த்துக்கிட்டோம். கிராமத்திலே இருந்ததால ரெஸ்டாரண்ட்ல சந்திக்கலாம்ன்னு சொல்றதெல்லாம் ஆகிற காரியம் இல்லைங்கிறதால, பொண்ணு பார்க்க வர்றதையே ஒரு சம்பிரதாயத்துக்கு மட்டுமேங்கிற மாதிரி ஆக்கிட்டோம். யார் பொண்ணு கேட்டு விசாரிச்சாலும் ஜாதகம் கண்டிப்பா கிடையாது, ரெண்டு பக்கத்திலும் பொண்ணு & பையனை வெளிலேயே எங்கேயாவது பார்த்து ரெண்டு பக்கமும் பிடிச்சிருந்து கண்டிப்பா இவங்களை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கன்னு முடிவாகிட்டா ஒரு சம்பிரதாயத்துக்குப் பொண்ணு பார்க்க வரச் சொல்வது மட்டுமே. அதுவும் மற்ற சொந்தங்கள் பார்க்கணும்ன்னு சொல்றதால.

ஆனால், என் தோழிகளில் ஒரு சிலர் இந்தச் சங்கடங்களை நிறையவே அனுபவிச்சிருக்காங்க. எல்லாம் சரியா இருந்தாலே ரெண்டு மூணு முறை வேஷம் கட்ட வேண்டி இருக்கும், ஜாதகத்திலே தோஷம் அது இதுன்னு இருந்துட்டா கேக்கவே வேண்டாம் :-(.

என் மாமனார் வீட்டிலே முதல் பையனுக்கு ரெண்டு மூணு இடத்திலே பொண்ணுப் பார்க்கப் போனாங்க. அதுக்கே ஏன் இப்படி பண்றாங்க, எல்லாம் விசாரிச்சுட்டு பார்க்கிற பொண்ணையே முடிச்சிடக் கூடாதான்னு கோமதி கிட்டே கேட்டுக்கிட்டு இருப்பேன். இப்போ ரெண்டாவது பையனுக்கு பொண்ணு பார்க்கிறப்போ என் மாமனார் ரொம்பவே முன்னேறிட்டார். சமீபத்திலே ஒரு பொண்ணு பற்றிய விவரம் வர, அதில் பொண்ணு என் மச்சான் வேலைப் பார்க்கும் கம்பெனியின் வேறொரு ஊர் கிளையில் வேலைப் பார்க்க “அவனையே போய் அவங்க ஆஃபீஸ்ல பார்த்துப் பேசிட சொல்லிருக்கேன், ரெண்டு பேருக்கும் ஓகேன்னா மேற்கொண்டு பேசலாம்”ன்னு சொல்லிருக்கார். அதிகம் படிக்காதவர் தான், ஆனா முற்போக்கா சிந்திக்க ஆரம்பிச்சிருக்கார். அவரை போலவே மற்ற பையனை பெற்றவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக மாறினால் இந்தச் சங்கடத்தை முழுமையா இல்லாம ஆக்கிடலாம்.

//பொண்ணு வீட்டுலே சமையல் வேலையும் மிச்சம்!//

இந்தச் சமையலை விட மாட்டிங்க போல :-)

ராஜா | KVR said...

//avvvvvv.. utkaarndha posela irundhaa koooda othukka maataangalaam.. ninna maadiri dhaan photo venumaam.. avvvvvvvv :((((((//

பசங்களுக்கும் இந்த மாதிரி கொடுமையெல்லாம் இருக்கு காயத்ரி. இந்தத் தொல்லையெல்லாம் இல்லாம இருக்கணும்ன்னா காதல் கல்யாணம் தான் பெஸ்ட் :-)

ஸ்ரீதேவி ரேன்ஜ்ல பொண்ணு வேணும்ன்னு ஆசைப்படாம (அதுக்கெல்லாம் நாம கமலஹாசன் ரேன்ஜ்ல இருக்கணும், பாண்டியராஜன் ரேன்ஜ்ல இருந்துகிட்டு அந்த ஆசையெல்லாம் இருக்கக்கூடாது) நமக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்தோமா, பிடிச்சிருந்தா லவ்வப் பண்ணோமா, கல்யாணத்த முடிச்சோமான்னு போய்கிட்டே இருக்கணும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாசாங்கு/நாடகத்தன்மைகள் இல்லாமல் வாழ முடிவதில்லையென்பது உண்மைதான். ஆனால் எவ்வளவு விகிதம் என்பதில்தான் இருக்கிறது சுவாரசியம்! அதைவிட சுவாரசியம், இந்த பாசாங்குகளை வைத்துத்தான் பெரும்பாலான நேரங்களில் நாம் கணிக்கப்படுகிறோம்/ஜ்ட்ஜ் செய்யப்படுகிறோம்!

ஹைய்யோ அந்தக் கொடுமைதான் பெரிய கொடுமை.

வந்திருப்பவர்களைப் பார்த்து புன்னகை புரிந்து, நல்லாருக்கீங்களா என்று கேட்டுவிட்டு //

இதுல எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம், பொதுவா எங்க சொந்தக்காரங்களிலேயே தெரியாதவஙக் யாராவது வந்தா ரொம்ப பெரிசா அலட்டிக்கமாட்டேன், ஆனா அதுலயே எனக்கு பிடிச்சவஙக் யாராச்சும் வந்துட்டாங்கன்னா, எங்க அம்மாவ துளைச்சி எடுத்துடுவேன்,
அம்மா, சாப்ட்டாங்களாம்மா அவுங்க,
வடை செஞ்சியாம்மா, செய்லியா, அப்ப சாயந்திரம் செய்வியா, என்ன வடைம்மா.

இப்படி ஒரு தடவை நேரங்கெட்ட நேரத்தில் (மாசக்கடைசி) எங்கம்மாவின் உயிரை வாங்கியதால், அவர்கள் வீட்டு வாசலை விட்டு வெளியேறியதுதான் தாமதம், எங்கம்மா என் முதுகுல கட்டுன டின்னை யப்பா, இன்னிக்கு நெனச்சாலும் வலிக்குது.... :)-

அமிர்தவர்ஷினி அம்மா said...

(”வாங்க”ன்னு சொல்லிட்டா மட்டும் நல்ல பேர் கிடைச்சுடுமா என்ன?

அதானே, இப்ப என் அக்கா பையன் அடிக்கடி கேட்கும் கேள்வி இது.
அவன் வீட்டிலிருக்கும் போது என் கணவரோ இல்லை என் அக்கா பெண்ணின் கணவரோ வந்தால், இவனை அதிகபட்ச மரியாதையை அவனுக்கு தரச்சொல்வார்கள், அதாவது அவன் பார்த்துக்கொண்டிருக்கும் சேனல் கூட மாற்றியாக வேண்டும்..

பய, செம்ம டென்ஷனாகிடுவான் அந்த சமயத்துல......

ஆயில்யன் said...

//ஸ்ரீதேவி ரேன்ஜ்ல பொண்ணு வேணும்ன்னு ஆசைப்படாம (அதுக்கெல்லாம் நாம கமலஹாசன் ரேன்ஜ்ல இருக்கணும், பாண்டியராஜன் ரேன்ஜ்ல இருந்துகிட்டு அந்த ஆசையெல்லாம் இருக்கக்கூடாது) நமக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்தோமா, பிடிச்சிருந்தா லவ்வப் பண்ணோமா, கல்யாணத்த முடிச்சோமான்னு போய்கிட்டே இருக்கணும்.///


ம்ம் கேவிஆர் காலத்துல ஸ்ரீதேவிக்கு ஆசைப்பட்டிருக்காரு போல ரைட்டு :))))

அந்த ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணனும் பாஸ் ஏன்னா அதான் வாலிப வயசு :)))))))

ஆயில்யன் said...

//இப்படி ஒரு தடவை நேரங்கெட்ட நேரத்தில் (மாசக்கடைசி) எங்கம்மாவின் உயிரை வாங்கியதால், அவர்கள் வீட்டு வாசலை விட்டு வெளியேறியதுதான் தாமதம், எங்கம்மா என் முதுகுல கட்டுன டின்னை யப்பா, இன்னிக்கு நெனச்சாலும் வலிக்குது.... :)-///

ஹைய்ய்ய்ய்ய்ய்!

இன்னிக்குதான் முழுசா வாய் விட்டு சிரிச்சு ரொம்ப சந்தோஷப்பட்டேன் ஹாஹாஹாஹாஹாஹா :)))))))

ஆயில்யன் said...

//அம்மா, சாப்ட்டாங்களாம்மா அவுங்க,
வடை செஞ்சியாம்மா, செய்லியா, அப்ப சாயந்திரம் செய்வியா, என்ன வடைம்மா.///

ஏன் உங்க வீட்ல வடை மெல்ல கொல்லும் விஷமா பாஸ்??! :)))))))

Divyapriya said...

//இந்தமுறை ரிஜக்ட் பண்ணது நானு! why should boys have all the fun?! //

LOL :D super...

ellaar veetlaiyum same torture thaanaa? :((

Deepa said...

அமித்து அம்மா:


//அம்மா, சாப்ட்டாங்களாம்மா அவுங்க,
வடை செஞ்சியாம்மா, செய்லியா, அப்ப சாயந்திரம் செய்வியா, என்ன வடைம்மா.
இப்படி ஒரு தடவை நேரங்கெட்ட நேரத்தில் (மாசக்கடைசி) எங்கம்மாவின் உயிரை வாங்கியதால், அவர்கள் வீட்டு வாசலை விட்டு வெளியேறியதுதான் தாமதம், எங்கம்மா என் முதுகுல கட்டுன டின்னை யப்பா, இன்னிக்கு நெனச்சாலும் வலிக்குது.... :)-
//

:-))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

எவ்ளோ குட்டி முடியாக இருந்தாலும் பின்னலிட்டு பூ வைச்சிருக்கணும்!(முடியை விரித்து விடக் கூடாது! - free hair means you are REBELLIOUS!!) //

ம், பாவம் இது மாதிரி ஒரு அனுபவம் என் ப்ரெண்ட் ஒருத்தவங்களுக்கு இருக்கு. பொதுவா அவங்க இயல்பா இருந்தாலே அழகா இருக்கா மாதிரி இருக்கும். ஆனா அவங்கள பொண்ணு பாக்க வரேன்னு சொல்லும்போது அவங்களோட அம்மாவும், சித்தியும் சேர்ந்து, நல்ல முடிய எண்ணெய் தடவி வழிச்சு வாரி, தலை நெறைய பூவை வெச்சு, இப்படியெல்லாம் செஞ்சு கண்ணாடியில் பார்த்தா என்னையே எனக்குப் புடிக்காதுப்பா, அப்புறம் எப்படி வர்றவங்களுக்கு புடிக்கும்னு அடிக்கடி கேப்பாங்க.

அவங்களோட சாய்ஸ் - இயல்பா இருக்கறதுதான், ஆனா அவங்களோட பெற்றோர்களோடது அலங்காரம், முடிவு இன்னும் அந்தப் பொண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. இன்னும் மாப்பிள்ளை தேடல்........ கண்டினியூ.....

:(

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆனா, வித்தியாசமா தோணலை - பழகிடுச்சா இல்ல

என்ன கொடும சார் இதெல்லாம்?

Poornima Saravana kumar said...

முல்லை உண்மையி்லேயே அருமையான பதிவுங்க:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

was so raw that time - அப்புறம் நல்ல பொண்ணாயிட்டேன் - கல்யாணத்துக்கு அப்புறம் நல்லாவே தேறிட்டேன்!)

தேறித்தானே ஆகணும், தேறலனாலும் தேற வெச்சுடுவாங்களேஎ நம்ம மக்கள்ஸ்

அமிர்தவர்ஷினி அம்மா said...

புடவை கட்டி, நகைபோட்டு காபி கொடுத்துட்டு அறைக்குள்ளே போய் உட்கார்ந்து...ன்னு

எனக்கு இதுல நிறைய அனுபவம்,:(

ஆனா நான் ஆரம்பத்துலயே சொல்லிடுவேன், இந்தக் காப்பி கீப்பியெல்லாம் கொடுக்க மாட்டேன், வேணும்னா வந்து நிப்பேன், அவ்ளோதான்.

ஆனா, சதீஷ் வீட்டார் எங்க வீட்டுக்கு வர அன்னைக்கு மட்டும் நான் செய்த அலம்பல் இருக்கே, ரொம்ப ஓவர்னு எனக்கே தெரியும், என்ன செய்றது, காதல் கண்ணை மட்டுமில்ல, புத்தியும் சேர்த்து மறைச்சு வெச்சுடுதுல்ல. :)-

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
//அம்மா, சாப்ட்டாங்களாம்மா அவுங்க,
வடை செஞ்சியாம்மா, செய்லியா, அப்ப சாயந்திரம் செய்வியா, என்ன வடைம்மா.///

ஏன் உங்க வீட்ல வடை மெல்ல கொல்லும் விஷமா பாஸ்??! :)))))))

ஆமாம் பாஸ்
ஆர்டர் கொடுங்க பாஸ், உங்களுக்கு வேண்டப்பட்டவங்க யாருக்காச்சும் வேணுமா பாஸ்.

ராஜ நடராஜன் said...

பொண்ணு பார்க்கும் சம்பிரதாயத்தில் ஒரு பெண்ணின் பக்கமிருந்து வரும் நியாயம் புரிகிறது.விகடன் மாதிரி ஜன ஊடகத்துக்கு யாராவது சிபாரிசு செய்யுங்கப்பா!

Poornima Saravana kumar said...

ஒரு சிலர், ”வாங்க”ன்னுக்கூட கூப்பிடலைன்னு பிறரிடம் போய் பழிசொல்லிவிடுவார்களாம், மரியாதைத் தெரியாத பொண்ணு என்று!//

இதை நான் கல்யாணம் ஆன பிறகு தான் தெரிஞ்சுகிட்டேன் (அது ஒரு பெரிய்ய்ய்ய கதை) :)

ராமலக்ஷ்மி said...

உங்கள் கருத்துக்கள் சரி. நல்ல பதிவு முல்லை.

ஆயில்யன் said...

//ஆனா, சதீஷ் வீட்டார் எங்க வீட்டுக்கு வர அன்னைக்கு மட்டும் நான் செய்த அலம்பல் இருக்கே, ரொம்ப ஓவர்னு எனக்கே தெரியும், என்ன செய்றது, காதல் கண்ணை மட்டுமில்ல, புத்தியும் சேர்த்து மறைச்சு வெச்சுடுதுல்ல. :)-//

பாஸ் என்னதான் இருந்தாலும் நீங்க அத்தானை இப்படி பப்ளிக்கா திட்டப்பிடாது ?! :(

ஆயில்யன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
//அம்மா, சாப்ட்டாங்களாம்மா அவுங்க,
வடை செஞ்சியாம்மா, செய்லியா, அப்ப சாயந்திரம் செய்வியா, என்ன வடைம்மா.///

ஏன் உங்க வீட்ல வடை மெல்ல கொல்லும் விஷமா பாஸ்??! :)))))))

ஆமாம் பாஸ்
ஆர்டர் கொடுங்க பாஸ், உங்களுக்கு வேண்டப்பட்டவங்க யாருக்காச்சும் வேணுமா பாஸ்.//

உங்களை இங்க கொண்டாந்து விட்டு இப்படி உண்மையெல்லாத்தையும் சொல்ல வைக்கிற ஆம்பூர் ஆச்சிக்கு நாலு வடை பார்சலேய்ய்ய்ய்ய்ய்ய் :))

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
/ஏற்கெனவே வந்துவிட்டவர்களை எப்படி ”வாங்க”ன்னு சொல்ல முடியும்!! லாஜிக்படி,///


அதான் வந்துட்டீங்களே அப்புறம் என்ன இன்னொரு வாட்டி வாங்க?

வேணும்ன்னா திரும்ப வாசல்ல போய் நில்லுங்க “வாங்க” கூப்பிடறேன்னு அட்டாக் பண்ணலயா பாஸ் நீங்க...????

ROTFL

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
//அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
//அம்மா, சாப்ட்டாங்களாம்மா அவுங்க,
வடை செஞ்சியாம்மா, செய்லியா, அப்ப சாயந்திரம் செய்வியா, என்ன வடைம்மா.///

ஏன் உங்க வீட்ல வடை மெல்ல கொல்லும் விஷமா பாஸ்??! :)))))))

ஆமாம் பாஸ்
ஆர்டர் கொடுங்க பாஸ், உங்களுக்கு வேண்டப்பட்டவங்க யாருக்காச்சும் வேணுமா பாஸ்.//

உங்களை இங்க கொண்டாந்து விட்டு இப்படி உண்மையெல்லாத்தையும் சொல்ல வைக்கிற ஆம்பூர் ஆச்சிக்கு நாலு வடை பார்சலேய்ய்ய்ய்ய்ய்ய் :))


இந்த கும்மி வேலையெல்லாம் நல்லா செய்ங்க, கேள்வி கேட்டா மட்டும் பதிலெழுதாதீங்க, இதுக்கே உங்களுக்கு ஒரு டசன் வடை தனியா பார்சல் பண்ணனும்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
//ஆனா, சதீஷ் வீட்டார் எங்க வீட்டுக்கு வர அன்னைக்கு மட்டும் நான் செய்த அலம்பல் இருக்கே, ரொம்ப ஓவர்னு எனக்கே தெரியும், என்ன செய்றது, காதல் கண்ணை மட்டுமில்ல, புத்தியும் சேர்த்து மறைச்சு வெச்சுடுதுல்ல. :)-//

பாஸ் என்னதான் இருந்தாலும் நீங்க அத்தானை இப்படி பப்ளிக்கா திட்டப்பிடாது ?! :(

பாஸ் இப்படியெல்லாம் சொன்னீங்க, அந்த வடைப் பார்சலை நீங்க பொண்ணு பார்க்கற வீட்டுக்கு திருப்பிவிட்டுருவேன், ஜாக்கிரதை :)-

விக்னேஷ்வரி said...

பொண்ணு பார்க்கிறேன்னு பொண்ணை எம்ப்ராஸ் பண்ணாம, ஒரு ரெஸ்டாரண்டிலேயோ பொது இடங்களிலோ சந்திச்சா தேவையில்லாத நெருடலை தவிர்க்கலாம்!! செலவை ரெண்டு குடும்பமும் பகிர்ந்துக்கலாம்-பொண்ணு வீட்டுலே சமையல் வேலையும் மிச்சம் //

முல்லை நாம இந்தியால இருக்கோம். அதவும் தமிழ்நாட்டுல. இப்படி எல்லாம் நீங்க ரூல்ஸ் பேசினா பப்பு கல்யாணம் பாவம். ;)

நாதாரி said...

வாழ்த்துக்கள் முல்லை

குடும்பம் என்ற ஆங்கிலச்சொல்லான family என்பது லத்தின் மொழியைலிருந்து இறக்குமதியானது லத்தின் மொழியில் இதற்கு வீட்டுக்கு அடிமை என்று பொருள்

ஆக தன் அடிமையை தேர்தெடுக்க இன்னொரு அடிமை நியாமற்ற வழியை தேர்ந்தெடுக்காவிட்டால் அவன் கூடுதலான அடிமைச்சுமைக்கு ஆளாக நேரிடலாம்தானே

நிறுவனமயமாக்கப்பட்ட ஒருவிடயத்தை சடங்குகள்தான் காப்பற்றுகிறது அந்த சடங்குகளை நீங்கள் மீறும்போது உங்கள்மேல் குத்துவதற்க்கு நிறைய முத்திரைக்கட்டகளையும் செய்து வைத்திருக்கிறது

பப்புவின் காலத்தில் இந்த கண்றாவிகள் வடிவம் மாறியிருக்கும்

நசரேயன் said...

//ஏற்கெனவே வந்துவிட்டவர்களை எப்படி ”வாங்க”ன்னு சொல்ல முடியும்!!//

எப்ப வந்தீங்க ?
எப்படி வந்தீங்க ?

ரெண்டிலே ஒன்னு !!

நசரேயன் said...

நல்லா இருக்கு, ஆனா இப்படியெல்லாம் சம்பவம் நடக்கலைன்னா எனக்கு கல்யாணம் கனவாவே இருந்து இருக்கும்

மாதவராஜ் said...

உங்கள் அனுபவம் சந்தோஷமாகவும், நகைச்சுவையாகவும் இருந்தது.

படித்தவராக, பட்டணத்தில் இருக்கும் உங்களுக்கே இந்த தர்ம சங்கடங்கள் என்றால், இன்றும் சடங்குகளும், சம்பிரதாயங்களும் கொண்ட கிராமங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்!
உங்களுக்கு இவைகளிலிருந்து மீறணும் என்பது இயல்பாக இருந்திருக்கு.
அதுகூடத் தோன்றால், சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பவர்களை என்னவென்பீர்கள்?

மணிநரேன் said...

பல நல்ல விடயங்களை பற்றி எழுதியுள்ளீர்கள் முல்லை.

//அப்போதுதான் வீட்டிற்குள் நுழையும் நான், அவர்களை, “வாங்க” என்று சொல்லவேண்டும்! அந்த லாஜிக் ரொம்ப நாள்வரை எனக்குப் புரிந்தது இல்லை.//

இதனை ஒரு மாறுபட்ட பார்வையில் பாருங்களேன். உறவினர்கள் நமது வீட்டிற்குதானே வந்துள்ளனர். பிள்ளைகளை அவ்வாறு வரவேற்க சொல்லும்போது அவர்களுக்கும் அது தம் வீடு என்ற உணர்வும், தமக்கும் வீட்டில் ஒரு முக்கியதுவம் உள்ளது என்ற எண்ணத்தையும் ஆழமாக ஏற்படுத்தும் என்று நம்புகின்றேன். அதோடு இதனை லாஜிக்படி பார்க்காமல் நமக்கு முன்னரே அவர்கள் வந்திருந்தாலும், அவர்கள் நமது வீட்டிற்கு வந்துள்ளதால் வரவேற்பது தவறில்லை என்றே நினைக்கிறேன்.நமது வீடு என்ற ஒரு பற்றுதல் அதிகரிக்கும் அல்லவா? வரவேற்கும் போது ஒரு மகிழ்ச்சி அலை சிறு நிமிடங்களுக்காவது அந்த இடத்தில் வந்துசெல்லும். வந்தவர்களுக்கும் தாங்கள் அந்த இடத்தில் வேண்டாதவர்கள் அல்ல என்ற ஒரு மகிழ்ச்சியும் கொள்வார்கள்.

//அது எதிலிருந்து ஆரம்பிக்கும் என்றால் பெண் பார்த்தல். இதில் 90% பாசாங்குகளே - நாடகமே! //

இது உண்மைதான். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல புகைப்படம் கேட்டால்கூட ஏதோ பாஸ்போர்ட்-க்கு எடுப்பது போல மிகவும் பார்மலாக ஸ்டுடியோ-வில் எடுத்துதான் தருகிறார்கள். இயல்பா இருப்பது போல கேட்டாலும் வீட்டு பெரியவர்கள் கொடுக்க மிகவும் யோசிக்கின்றனர்.

//நோக்கம்னு பார்த்தா, நாம presentable-ஆ இருக்கணும்!//

அதுக்கு பெற்றோர்களும் கொஞ்சம் மாறவேண்டும்.ஏனெனில் எவருக்குமே ஒப்பனையில் உண்மை கொஞ்சம் மறைந்துபோகும்.

//இதுக்குமேலே மேக்கப் - அது டாப் அப் மாதிரி!//

நீங்கள் குறிப்பிட்டதில் ஒரு சிறு சேர்க்கை...
பெண் பார்க்கும் போது மட்டுமின்றி திருமண வரவேற்பிலும் மேக்கப் போடுகிறேன் பேர்வழி என்று அந்த பெண்ணின் உண்மை முகத்தினையே மறைத்துவிடுகின்றனர்.:(

//எவ்வளவு எம்ப்ராஸிங்-ஆ இருக்கும்!//

பெண்ணிற்கு இருக்கும் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஆண்களுக்கும் அதில் சிறது எம்ப்ராஸ்ங்-ஆதான் இருக்கும்.அந்த நாடகத்தில் நடிப்பது அவ்வளவு எளிது இல்லைங்கோ....

ஆகாய நதி said...

//
சினிமாலேதான் பையனோட அம்மாக்கள் மாடர்னா ஃப்ரீ ஹேர் ஸ்டைலோட இருக்கற பொண்ணுங்க புகைப்படத்தை காட்டுவாங்க! நிஜத்துல அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல!!

//

நான் விரிச்சுவிட்ட முடி படம் தான் குடுத்தேன்... என் முடிக்காகவே ஓகே பண்ணிட்டாங்க :)

//
!(முடியை விரித்து விடக் கூடாது! - free hair means you are REBELLIOUS!!) கண்டிப்பாக புடவை!
//

இதெல்லாம் கல்யாணம் ஆனா வர சிக்கல்கள் தான் :( இரண்டுமே எனக்கு பிடிக்கும் என்றாலும் அசவுகரியமான விஷயங்கள்!

//
அதை ஏன் ஒரு பொது இடத்தில், ஒரு ரெஸ்டாரண்டில் அல்லது பார்க்கில் இரு குடும்பங்கள் சாதாரணமாக சந்தித்துக் கொள்வது போல் வைத்துக் கொள்ளக் கூடாது?!
//

ஆமாங்க... வீட்டில்னா ரொம்ப டென்ஷன் பயம் வெக்கம் ஒரு மாதிரி தான் இருந்துச்சு எனக்கு... அதுனால நான் பாட்டுக்கு என்ன பேசுறதுனு தெரியாம பேந்த பேந்த முழிச்சு என்னவோ நிறைய உளறிக்கிட்டு இருந்தேன்... பாவம் அவங்க... நானும் தான்... பொண்னு மாப்பிள்ளை மன நிலைமையை எங்கே இந்த பழமைவாதி பெற்றோர்கள் புரிந்துக்குறாங்க...

நல்ல வேளை எனக்கும் சரி என் கணவருக்கும் சரி ஒரே ஒரு முறைதான் இந்த அனுபவம் அதுவே வெற்றி! :)

ஆகாய நதி said...

//
“இப்ப நான் வாங்கன்னு சொல்லலைன்னா அவங்க வராம போய்டுவாங்களா” னெல்லாம்னு எங்க
//

ஹி ஹி ஹி! உங்க பாஷைல சேம் பிளட் முல்லை... ஆனா காலேஜ் படிக்கிறப்போலாம் மாறிட்டேன்... யாரு வந்தாலும் விழுந்து விழுந்து கவனிப்பேன்... :)

இது நல்ல பழக்கம் தான் நம் தமிழகத்திற்கே உரிய சிறப்பான பழக்கம்னு நினைக்கிறேன்... விரோதியே விருந்தினர் ஆனாலும் நல்ல உபசரிப்பு அவசியம்னு இப்போ என் கருத்து! :)

உங்க பதிவு அப்படியே நம்ம பலரோட மனச படம் புடிச்சு குட்டை உடைச்சுருச்சே... அவ்வ்வ்வ்....

ஆகாய நதி said...

எங்க அத்தையும் என் கணவரும் என் மனநிலையை புரிந்து பின் ஒரு நாள் சூப்பரா ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தாங்க... அது கூட நல்ல ஐடியா!

ஒரு உறவினர் வீட்டுல எல்லாரும் ஒன்று கூடி சிரித்து பேசினா பொண்ணும் மாப்பிள்ளையும் நல்லா பேசிட்டு போறாங்க... :))

நீங்க சொல்வது போல நம் பிள்ளைகளுக்காவது இந்த சடங்குகளை அவங்களுக்கு சங்கடம் இல்லாத வகைல புதுமையா நிகழ்த்தனும்!

அமுதா said...

/*ஏற்கெனவே வந்துவிட்டவர்களை எப்படி ”வாங்க”ன்னு சொல்ல முடியும்!! */
:-))

/*பொண்ணு பார்க்கிறேன்னு பொண்ணை எம்ப்ராஸ் பண்ணாம, ஒரு ரெஸ்டாரண்டிலேயோ பொது இடங்களிலோ சந்திச்சா தேவையில்லாத நெருடலை தவிர்க்கலாம்!! */
இப்பல்லாம் நகர்ப்புறங்களில் நிறைய பேர் பெண் பார்க்கும் படலத்தை ஹோட்டல்/அலுவலகம்/கோயில் என்று செய்யறாங்க, என்றாலும் மிகக் கம்மி தான். இன்னும் பெண் பார்க்கும் படலங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

மங்களூர் சிவா said...

/
I was so raw that time - அப்புறம் நல்ல பொண்ணாயிட்டேன் - கல்யாணத்துக்கு அப்புறம் நல்லாவே தேறிட்டேன்!
/

:)))))))))
nice

மங்களூர் சிவா said...

//கடைசியா என்ன சொல்ல வர்றேன்னா, பொண்ணு பார்க்கிறேன்னு பொண்ணை எம்ப்ராஸ் பண்ணாம, ஒரு ரெஸ்டாரண்டிலேயோ பொது இடங்களிலோ சந்திச்சா தேவையில்லாத நெருடலை தவிர்க்கலாம்!!//

வெப் காம்ல பாக்கிறத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க!?!?

நான் அப்படித்தான் பாத்தேன்.

:)))))))))

மங்களூர் சிவா said...

மத்தபடி பொண்ணு பார்க்கிறத பத்தி நீங்க எழுதியிருக்கிறது எல்லாம் மிக அருமை.