Saturday, October 16, 2010

பப்பு டைம்ஸ்


கடந்த ஆறுமாதங்களாக ஆங்கில எழுத்துகளை எழுத ஆரம்பித்திருப்பது தெரியும். பள்ளியில் தமிழ்/இந்தி என்றதில் தமிழை தேர்ந்தெடுத்தோடு சரி. ஆன்ட்டியை கடந்த டெர்மில் சந்தித்தபோது தமிழ் விரைவில் ஆரம்பித்து விடுவோம் என்று சொல்லியிருந்தார். பழைய டைரிகளின் புதிய ஓனர் பப்பு எழுதிக்கொண்டே, 'ஔ, ஔஔ' எப்படி எழுதணும் ஆயா என்றாள். எட்டிப் பார்த்தால், மேடத்தின் கைவண்ணம்! ஆங்கில எழுத்துகளை கற்றுக் கொள்வதை விட தமிழ் கற்றுக்கொள்வதைப் பற்றித்தான் மிகுந்த கவலையாக இருந்தது. உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள்....ஆனால், ஆங்கில எழுத்துகளை கற்றுக்கொண்டதைவிட வேகமாக அ,ஆ கற்றுக்கொண்டது போல தோன்றியது. க ங ச....எப்போது எனது அடுத்த கவலை ஆரம்பம்..;‍-)

தங்கேஸ்வரி ஆன்ட்டிக்கு நன்றிகள்!
மூன்றெழுத்து ஆங்கில் வார்த்தைகளை எழுதுகிறாள். ஒலிக்கும் சத்தங்களைக் கொண்டு வார்த்தைகளை காயின் செய்வதுதான் பெரும்பாலும். மேலும், எழுதி எழுதி cat,mat,rat etc - மனதில் பதிந்து போயிருக்கிறது போல‌. வழக்கமாக அதை எல்லாம் முதலில் எழுதியபின், புதிதாக எழுத வார்த்தைகளை யோசிப்பாள். அதில், புதிதாக கண்டுபிடித்த வார்த்தைகள் சில.

ziro - zero
cit - kite
jue - zoo
jac -?
ist - ? (east or something, I forgot)
boji -bujji
எழுதும்போது தவறு வந்துவிட்டால் அதை அழிக்கவேண்டாம், அடித்துவிட்டு சரியாக எழுத வேண்டும், வீட்டிலும் எழுதும்போது அதேபோல பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆன்ட்டி சொல்லியிருந்தார். தவறை திருத்திக்கொள்ள உதவுமாம். ஹோம் ஒர்க் நோட்டிலும் இதையே எழுதி அனுப்பியிருந்தார். பப்பு,எழுதியது அழகாக வரவில்லை அல்லது தவறான உச்சரிப்பு என்று எண்ணினால் அழிப்பாள்."அழிக்கவேணாம் பப்பு, அடிச்சுடு, பக்கத்துலே எழுது" என்றேன் அவள் அழிக்க முற்பட்டபோது?

அவள் செய்ததுதான் ஹைலைட்.

ரப்பரை கீழே வைத்துவிட்டு, தவறாக எழுதியிருந்ததின் மேல் கையால் ஒரு அடி!!! (மெகா வாட் பல்பு!)

ஸ்ட்ரைக் அவுட், பப்பு என்றதும், சமாதானமாகாமல், அதனை அடித்துவிட்டு பக்கத்தில் திருத்தி எழுதினாள். அடுத்தநாள், மறக்காமல் ஆன்ட்டியிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டுதான் ஓய்ந்தாள்.

இன்னும் என்னவெல்லாம் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் வருமோ?


கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது கர்சர் காணாமல் போய்விடும். கர்சரை திரும்பக் கொண்டு வர வைக்கும் கீ பெயர் "இஸ்க்".

Esc கீதான் அது!

14 comments:

ராமலக்ஷ்மி said...

மெகா வாட் பல்ப் நல்ல பிரகாசம்:))!

நட்புடன் ஜமால் said...

இஸ்கு டாப்பு

பல்பு நிறைய சேக்குறீங்க நெம்ப ஈஸியா

அமைதிச்சாரல் said...

மெகாவாட் பல்பு???? சரி, விடுங்க.. இதெல்லாம் நமக்கு புதுசா என்ன :-))))))))))

Vathiyar Paiyan said...

jac -- jug???????


Innum en paiyan alaparai irrukku....

லெமூரியன்... said...

:) :) :) so cute.

Deepa said...

OMG! I so so luvvvv this post!
//

//ரப்பரை கீழே வைத்துவிட்டு, தவறாக எழுதியிருந்ததின் மேல் கையால் ஒரு அடி!!! (மெகா வாட் பல்பு!)//
:)))
நாம் நினைத்தும் பார்க்காத சின்னச் சின்ன அதிசயங்கள் செய்வதில் குழந்தைகளுக்கு ஈடே இல்லை.

பப்புவின் எழுத்துக்கள் அனைத்தும் முத்துக்கள். அன்பு முத்தங்கள்டா பப்புக்குட்டி!

தீஷு said...

//ரப்பரை கீழே வைத்துவிட்டு, தவறாக எழுதியிருந்ததின் மேல் கையால் ஒரு அடி!!! (மெகா வாட் பல்பு!)
//

பல்பு வாங்கிறது எல்லாம் நமக்கு புதுசா என்ன முல்லை!!

இஸ்க் கீ மாட்டரும் சூப்பர்..

பப்பு அழகா எழுதியிருக்கா முல்லை!!

நாணல் said...

//(மெகா வாட் பல்பு!)// :)
பப்பு டைம்ஸ்கு ரொம்ப நாள் கழிச்சு வரேன்.. பப்பு cute :)

சிங்கக்குட்டி said...

(~~) ...:-)

மாதேவி said...

வெரி குட்.

ஜெயந்தி said...

ஒரு நாளைக்கு எத்தனை பல்பு வாங்குவீங்க?

அன்புடன் அருணா said...

(மெகா வாட் பல்பு!)
சூப்பரா எரியுதே!!!!!!! toooooooooo good pappu!

இரா.சிவக்குமரன் said...

ஹெர்பாலயாஸ் ராடி சேஃப் நிறுவனத்தின் திண்டிவனம்- விநியோகஸ்தருக்கு விற்பனை/சந்தைப் படுத்துதல் துறையில் ஆட்கள் தேவை.

http://www.herbalayasradisafe.com/


தகுதி:

ஏதேனும் ஒரு பட்ட படிப்பு.
இரு சக்கர வாகனம்(செல்லத்தக்க ஓட்டுனர் உரிமத்துடன்).
மொபைல் அல்லது கணிணி உதிரிப் பொருள்கள் சார்ந்த விற்பனை முன் அனுபவம்.

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்திருத்தல் நலம்.

கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை.

விற்பனைத் துறையில் விருப்பமுள்ள பெண்களுக்கு முன்னுரிமை.


சம்பளம் தகுதியைப் பொறுத்து.(குறைந்தது ஐந்தாயிரத்திலிருந்து...... )


விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 31க்குள் தங்களது முழுவிவரக்குறிப்பினை shivanss@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மெயில் அனுப்பும் போது subject:ல் Resume-Radisafe என்று மறக்காமல் குறிப்பிடவும்.

விஜய்கோபால்சாமி said...

முதல் படத்துல பாப்பா ஒரு தெலுங்கு எழுத்தையும் சேத்து எழுதிருக்கு... பாப்பாவுக்கு தெலுங்கும் தெரியுமா... புறங்கையில அடிச்சு சொல்லிக்குடுக்க ஆளில்லாததால இன்னும் தெலுங்கு எழுதக் கத்துக்காம இருக்கேன்... முடிஞ்சா பப்புவ எனக்கு வாத்தியாரா அனுப்பி வைங்களேன் :)