Thursday, October 07, 2010

kya family err....drama hai!

"குழந்தைங்களுக்கு குர்‍குர்ரே வாங்கி கொடுக்கலாமா, சொல்லு ஆச்சி ?" - சாயங்காலம் வீட்டிற்குள் நுழைந்ததும் பப்பு கேள்வி. ஏதோ நடந்துருக்கு, மேடத்தாலே மறைக்க முடியலை‍ன்னு மட்டும் புரிஞ்சது.

"யாருக்குமே வாங்கிக்கொடுக்க கூடாது, ஏன் பப்பு"

"ஆச்சி, குர்‍ குர்ரேல்லாம் குழந்தைங்க சாப்பிடலாமாப்பா? சாப்பிடக் கூடாதுதானே! நான் வேணா வேணான்னு சொன்னேன், சமைக்கிற ஆயாதான் சாப்பிடு, அதுலே சக்தி இருக்குதுன்னு சொல்லி வாங்கி வாங்கி கொடுக்கறாங்க".

ஓ, சரி, வாங்கி வைச்சுடு, உனக்கு சாப்பிடணும்னா சாப்பிடு....ஆயாகிட்டேநான் சொல்றேன், பப்புவுக்கு வேணான்னா குடுக்காதீங்கன்னு. குர் குர்ரேல்லாம் சாப்டா வயிறு வலிக்கும். (பப்புதான் அவங்ககிட்டே கேட்டிருப்பான்னு தெரியும்...;‍-) )

ரொம்ப நல்லபிள்ளையாக பாதி சாப்பிட்டு புத்தகங்களுக்கு நடுவில் ஒளித்து வைத்திருந்த பாக்கெட்டை எடுத்து வந்து கொடுத்துவிட்டு "டஸ்ட் பின்-லே போட்டுடு, வேணாம்" என்றாள். ( நல்ல மனம் Vs கெட்ட மனம்? mabbe, LoL)

எனக்கே பரிதாபமாக இருந்தது.

பாக்கெட் ஸ்நாக்ஸ் பெரும்பாலும் வாங்குவதில்லை.. உறவினர்கள் யாரேனும் வாங்கித் தந்தால் மட்டுமே - அதுவும் எப்போதாவதுதான். ஆனால், பள்ளியில் ஸ்நாக்ஸிற்கு மற்ற குட்டீஸ் எடுத்து வருவதைப் பார்த்து பப்புவுக்கு அவ்வப்போது ஆசை தலை தூக்குவதுண்டு. பெரும்பாலும் பிஸ்கெட்கள், ஹனிலூப்ஸ், முறுக்கு, தட்டை,வடை வகையறாதான் பப்புவின் ஸ்நாக்ஸ்.

பப்பு தூங்கியபின், சமைக்கிற ஆயா சொன்னார் :

"அதுதாம்மா கடைக்கு கூட்டிட்டு போன்னு போய்ட்டு இதை கேட்டுச்சு. வாங்கி தந்ததும் வரும்போது , "ஆச்சிக்கிட்டே சொன்னீங்க அவ்ளோதான். நீங்கதான் வாங்கித்தந்தீங்கன்னு சொல்லிடுவேன்"ன்னு சொல்லுதும்மா.

"குர் குர்ரே வேணும்னா என்கிட்டே சொல்லு. நாம போய் வாங்கலாம். அடுத்த தடவை டாக்டர்கிட்டே போகும்போது மறக்காம குர் குர்ரே சாப்பிடலாமான்னு கேக்கணும், பப்பு. ஞாபகபடுத்தறியா ப்ளீஸ்" என்று சொல்லி வைத்திருக்கிறேன்.

எப்படி வொர்க் அவுட் ஆகிறதென்று பார்க்க வேண்டும்.

ஆமா, உங்க வீட்டுலேல்லாம் எப்படி சமாளிக்கறீங்க?

An update:

பப்புவுக்கு நேற்றிலிருந்து ஹோம் வொர்க் ஆரம்பித்துவிட்டது. முதல் பக்கத்தில் கர்சிவ் ஹேண்ட்ரைட்டிங் - c. இனிமே நானும் பப்பு ஹோம் ஒர்க் பத்தி அலுத்துக்கலாம். ;‍-) ஆனா பப்புவு ரொம்ப excited.

12 comments:

ஆயில்யன் said...

//
ஆமா, உங்க வீட்டுலேல்லாம் எப்படி சமாளிக்கறீங்க?//

ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு என் வீட்ல ஒன்லி சோறுதான் குர்குரேல்லாம் சாப்பிடப்பிடாதாம் ! :)

Deepa said...

/சமைக்கிற ஆயாதான் சாப்பிடு, அதுலே சக்தி இருக்குதுன்னு சொல்லி வாங்கி வாங்கி கொடுக்கறாங்க".
//

//"ஆச்சிக்கிட்டே சொன்னீங்க அவ்ளோதான். நீங்கதான் வாங்கித்தந்தீங்கன்னு சொல்லிடுவேன்"ன்னு சொல்லுதும்மா.//

ஆத்தாடி! இப்படி ஒரு டெரரா பப்பு?
LOL!!!! :)))

santhanakrishnan said...

குர்க்ரேக்கு நோ.
மாதம் ஒரு முறை மாகி.

விஜி said...

குர்குரே வாங்கித்தருவதில்லை, முதலில் எல்லாம் லேய்ஸ் பிடித்தது ரெண்டு பேருக்கும், இப்ப ரொம்ப மாறிட்டாங்க, ப்ரெட், பட்டர் சர்க்கரை ( காம்பினேசன் நல்லாத்தான் இருக்கு), வெள்ளரி, பிஸ்கெட், வாழைப்பழம் சர்க்கரை தூவி :)) இங்க நீல்கிர்ஸில் நல்ல ஸ்னாக்ஸ் கிடைக்குது, குட்டிஸ்க்காக தனியா சின்னதா ஹெல்தியாவும்..

அன்புடன் அருணா said...

Lays and kur kurE only for picnics and maggy only on sundays!

ஜெயந்தி said...

மூளை நெறைய உள்ள குழந்தைகள்தான் அழகா பொய் சொல்லுமாம்.

கானா பிரபா said...

"ஆச்சிக்கிட்டே சொன்னீங்க அவ்ளோதான். நீங்கதான் வாங்கித்தந்தீங்கன்னு சொல்லிடுவேன்"ன்னு சொல்லுதும்மா.
//

குட், இப்பதான் பப்பு நம்ம சங்கத்தோட கொள்கைகளை புரிஞ்சு நடக்க ஆரம்பிக்குது

பாட்டி பேரவை
சிட்னி

Deepa said...

நேஹா மஞ்ச், பெர்க் வாரம் ஒரு முறையாவது சாப்பிட்டு விடுவாள்.
இந்த ஜெம்ஸ், கேன்டி மேன், ஹால்ஸ் இரண்டு நாட்களுக்கொரு முறையாவது தவிர்க்கவே முடிவதில்லை.

குர்குரே, லேஸ் எல்லாம் கண்ணுல காட்டுனதே இல்ல. :) வீட்டில் பொரிக்கும் வத்தல், அப்பளமென்றால் ரவுண்டு கட்டுவாள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிழைக்கத்தெரிஞ்சுக்கறாங்க பிள்ளைங்க..

அம்பிகா said...

/சமைக்கிற ஆயாதான் சாப்பிடு, அதுலே சக்தி இருக்குதுன்னு சொல்லி வாங்கி வாங்கி கொடுக்கறாங்க".
//

//"ஆச்சிக்கிட்டே சொன்னீங்க அவ்ளோதான். நீங்கதான் வாங்கித்தந்தீங்கன்னு சொல்லிடுவேன்"ன்னு சொல்லுதும்மா.//
பப்பு...!!!!

அமைதிச்சாரல் said...

எங்க வீட்டுல மேடத்துக்கு,முன்பெல்லாம் வாரம் ஒருமுறையாவது சாப்பிடணும்.சொல்லிப்பார்த்தும் கேக்கலைன்னதும், நானும் போட்டிபோட ஆரம்பிச்சேன், பலன்,.. இப்ப மேடம் அதெல்லாம் சுத்தமா விட்டுட்டாங்க. ஒன்லி சாலட் :-)))))))

மாதேவி said...

ஆயாதான் ரொம்ப மோசம் பப்பு :))