Wednesday, October 06, 2010

ஆண்டுவிழா அனுபவங்கள் - தொடர்பதிவு

ஆண்டுவிழா அனுபவங்கள் பற்றி தீபா அழைத்திருந்த தொடர்இடுகை. இன்னைக்கு ஏதாவது ஒரு போஸ்ட் போடணுமே என்று எண்ணியபோது இது நினைவுக்கு வந்தது. ஸ்டார்ட் மீசிக்.....

ஒரே ஒரு முறை வெல்கம் டான்ஸில் சேர்ந்து பயிற்சி எல்லாம் பெற்றுக்கொண்டு ஜூட் விட்டு ஊருக்குப் போனதோடு எனது கலைச்சேவைக்கு ஒரு shift+del. ஐந்தாம் வகுப்பு வரை விளையாட்டு விழாவில் மட்டுமே - லெமன் & ஸ்பூன், சாக்கு ரேஸ், ரன்னிங் ரேஸ்....

ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கூடம். ஆண்டுவிழா பற்றி அறிவிப்பு வந்ததும், கலையார்வம் மிக்க டான்ஸ் புலிகளான ராதாவும், சந்தியாவும் கலா மாஸ்டர் அவதாரம் எடுத்தனர். தகுதியெல்லாம் அதிகமில்லை ஜெண்டில்வுமன் - ஸ்கூல் விட்டதும் காம்ப்ளான் குடித்துவிட்டு பரதநாட்டியம் க்ளாஸுக்கு போயிருந்திருக்க வேண்டும். அவ்வளவுதான். பாரதியார் பாட்டு - கண்ணன் பற்றி வர்ணனை வரும் என்று நினைக்கிறேன்.

எனக்கும் இந்த நுண்கலைக்களுக்கும் - ஆடல், பாடல், வரைதல் போன்ற பொறுமை மிகவும் தேவைப்படும் மென்கலைகளுக்கு எவரெஸ்டுக்கும் ஏலகிரிக்குமான பொருத்தம்.(எவ்ளோ நாளைக்குத்தான் மலைக்கும் மடுவுக்கும்னே சொல்றது?!)வீட்டிலோ ’டான்ஸ்/பாட்டுன்னு இண்ட்ரெஸ்ட் வந்துடுச்சுன்னா படிப்புலே கவனம் போயிடும்’ (ஏற்கெனவே டன் கணக்கிலே இருக்கிறமாதிரி) என்று ஒரு மித். ’படிக்கிற பிள்ளையாக லட்சணமா இரு’ -க்கு அடங்கி ஊக்கமுடைமையை (?), எப்படி கேட்டாலும் - நடுவில் இருக்கும் வார்த்தையை சொன்னால்கூட அந்த குறளை ஒப்பிக்கிறமாதிரி சொம்படித்திருந்தேன். ரவி செம டஃப் ஃபைட் கொடுத்தாலும் முதலாவதாக வந்துவிட்டேன்.

அப்புறமென்ன....ஆண்டுவிழாவில் பரிசு வாங்க போகும் ஆர்வக்குட்டியாகிட்டேன்.பெரிம்மாகிட்டே சொல்லி புது நெய்ல்பாலிஷ் எல்லாம் போட்டு கையிலே மருதாணி வைச்சு...பின்னே சும்மாவா...பரிசு வாங்கப்போற கைகளாச்சே! ஆண்டுவிழா அன்னைக்கு பெரிம்மா ஊரில் இல்லை. பெரிம்மா, அவங்க இல்லாம போகவேணாம்னு சொல்லியிருந்தாங்க. சொன்ன பேச்சு கேக்காம, நானும் சங்கீதாவும் போனோம். பரிசு வாங்கப்போறவங்களை எல்லாம் வரிசையா ஒரு பெஞ்ச்லே உட்கார சொல்லி, பில்டப்லாம் ‘எந்திரன் பிரமோ’ மாதிரி இருந்துச்சு. ஆனா, லேட்டாகிடுச்சுன்னு 10வது, +1,+2 பசங்களுக்கு மட்டும் கொடுத்துட்டு கல்ச்சுரல்ஸ் ஆரம்பிச்சுட்டாங்க. எடிசன் ஏண்டா பல்பை கண்டுபிடிச்சார்ன்னு இருந்துச்சு!

அப்புறம் ஏழாவதுலே கட்டுரை போட்டி. ஏதோ ஒரு சமூக தலைப்பு. ஞாபகம் இல்லை. புனித பாண்டியன் அண்ணா எடுத்துட்டு வந்திருந்த ஒரு புக் வீட்டுலே இருந்துச்சு. அதுலே லட்டு மாதிரி அம்பேத்கர் பத்தி ஒரு கட்டுரை. அப்படியே பத்தி மாறாம அதே சேம் சொம்பு.அப்படியே பிக்கப் ஆகி பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மனப்பாடப் போட்டின்னா, “கட்டதுர, எட்றா வண்டிய’ லெவலுக்கு வந்துட்டேன். (சொல்ல மறந்த கதை : பாட்டு போட்டிக்கு பேரைக் கொடுத்துட்டு லீவு போட்டது!) அப்புறம், வேணாம் வேணாம்னு சொன்னாலும் இலக்கிய மன்ற துணைச் செயலாளர், இலக்கிய மன்ற செயலாளர் பதவியிலே என்னை உட்கார வைத்து மக்கள் அழகு பார்த்தாங்க. என்ன வேலைன்னா, ஆண்டுவிழாவிலே ஒரு அறிக்கையை வாசிக்கணும். சிம்பிள்.

கல்லூரிலே, ஆண்டுவிழான்னா மேடைக்கு கீழேயோ இல்லேயோ கூட்டத்துலே கடைசியிலோ கும்பல் சேர்ந்துக்கிட்டு சவுண்ட் விடணும். மெல்லிசைன்னு பாடறவங்களை ஓட ஓட விரட்டணும்... என்னன்னா, மாட்டிக்காம கலாட்டா பண்ணனும்...( இண்டர்னல்ஸ்ன்னு ஒரு செக் பாயிண்ட் இருக்கே!)

பள்ளிக்கூடம், கல்லூரிக்கெல்லாம் அப்புறம், ஒரே மாதிரியாகிட்ட வாழ்க்கைக்கு நடுலே வர்ற ஒரே பாலைவனச் சோலை அலுவலக ஆண்டுவிழா. இந்த வருஷம் ராம்ப் வாக். ரொம்ப வேலையெல்லாம் இல்லை. பயிற்சியும் தேவை இல்லை. சும்மா நடந்து வந்தா போதும். அது அழகி போட்டியில்லை. ஸ்கூல்லே நடக்கிற ஃபேன்சி பரேட் மாதிரிதான். அதுவும் ஆள் பற்றாக்குறை வேற.

ஒரு கான்செப்டை அடிப்படையா வைச்சு 4 பெண்கள், 5 ஆண்கள் சேர்ந்து பண்ணினோம். இயற்கையின் படைப்புகளையும், எங்க கம்பெனியின் ட்ரேட்மார்க் கலரையும் இணைச்சு உருவான தீம்.

darkness - கருப்பு வண்ண உடை (boy)
light - வெள்ளை வண்ண உடை (boy)
earth - பழுப்பு வண்ண உடை (girl)
sky - ஆகாய நீலம் (girl)
sun - சிவப்பு (boy)
moon - க்ரீம் (girl)
water - நீலம் (boy)
man - சூட் (ofcourse, boy)
tree - பச்சைக்குப் பதில், எங்கள் கம்பெனியின் ட்ரேட்மார்க் கலர்தான் புதிய பச்சை. (girl)


ஆதியில், நான் வானமாக இருப்பதாகத்தான் ப்ளான். பங்கேற்ற இன்னொரு நண்பர்க்கு ஷராரா விருப்பமாக இருந்தது.மேலும், எனக்கும் அதில் பெரிய விருப்பமெல்லாம் இல்லை. சோ, விட்டுக்கொடுத்துவிட்டேன். சூரியனா இருக்கேன், ஏன் சூரியனோட ஒளியை வாங்கிட்டு ஒளி தர்றது பெண்ணா இருக்கணும்னு கொஞ்சம் கொளுத்திபோட்டேன். ஆனா, சூரியனா இருந்த பையன்கிட்டே சிவப்பு கலர் ஏற்கெனவே ஷெர்வானி இருந்ததாலே (பட்ஜெட்..பட்ஜெட்!) சூரியன் எஸ்கேப். சரி, ஜெண்டர் எதுவும் இல்லாத, மரமா இருக்கேன்னு முடிவாச்சு. இப்போ சதி செஞ்சது டெய்லர். நிலாவின் உடை மற்றும் மரத்திற்கான உடையை அளவுகள் மாத்தி தைச்சுட்டார்.
சோ, நான் இப்போ மூன்!

இது என்னோட நினைவுக்காக :

முதல் சீக்வென்ஸ் : மேலிருந்த வரிசையிலே ஒவ்வொருவராக
இரண்டாம் சீக்வென்ஸ் : darkness & moon, earth & sky, water & tree..etc
மூன்றாம் சீக்வென்ஸ் : earth- moon-sun, water-man-tree... etc

இசை : அதான், ஆதி காலத்துலேர்ந்து போட்டு வைச்சிருக்காங்களே...எனிக்மா (yes, same old ’mea culpa’!) அதோடு, ஃபேஷன் படத்தின் இசையும் கலந்து ஒரு fusion.

இதைத் தொடர நான் அழைப்பது

1. ஜெயந்தி
2. நான் ஆதவன்
3. தியானா
4. வல்லியம்மா

14 comments:

நசரேயன் said...

// பாட்டு போட்டிக்கு பேரைக் கொடுத்துட்டு லீவு போட்டது//

நீங்க மட்டும் பாடி இருந்தா அவங்களே உங்களுக்கு லீவ் கொடுத்து இருப்பாங்க

ஜெயந்தி said...

என் அனுபவங்கள் உங்க அனுபவம் மாதிரியெல்லாம் இருக்காது. இருந்தாலும் எழுதறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி முல்லை. என் ஆண்டு விழாக்களா:)
ஐய்யோ பாவம் நீங்கள்ளாம்.!!!! சரி எழுதிடலாம். :)

ஆயில்யன் said...

//லெமன் & ஸ்பூன், சாக்கு ரேஸ், ரன்னிங் ரேஸ்//

அடடே ஏன் நீங்க இதுல கொஞ்சூண்டு ஆர்வம் கொண்டு படிப்படியாக டெவலப் செஞ்சு பெரிய கோல்டு மெடலிஸ்டா ஆகியிருக்ககூடாது !?

ஆயில்யன் said...

//வந்துடுச்சுன்னா படிப்புலே கவனம் போயிடும்’ (ஏற்கெனவே டன் கணக்கிலே இருக்கிறமாதிரி)//

அதானே! அப்படியே உங்களைப்பத்தி நினைச்சு நினைச்சு மனப்பெப்சி குடிச்சிருக்காங்க பாஸ்

ஆயில்யன் said...

//அப்புறமென்ன....ஆண்டுவிழாவில் பரிசு வாங்க போகும் ஆர்வக்குட்டியாகிட்டேன்.//

ஒ.கேய்ய்ய் நம்பிட்டோம் நெக்ஸ்ட்...!
[பெரிய பாண்டி ஃபாலோ தி ஸேம் வரிகள்]

ஆயில்யன் said...

//.பின்னே சும்மாவா...பரிசு வாங்கப்போற கைகளாச்சே! //
ஐய்யய்யய்யோ கொஞ்சம் ஓவராத்தான் திங்க்’ங்கியிருக்கீங்கோ!

ஆயில்யன் said...

//அப்புறம் ஏழாவதுலே கட்டுரை போட்டி. ஏதோ ஒரு சமூக தலைப்பு ஞாபகம் இல்லை//

ஞாபகம் இல்லை - இந்த வரிகளை பார்த்ததும் மனசுக்குள்ள ஜில்லுன்னுச்சு பின்னே ஞாபகம் இருந்தா அது இன்னுமொரு ரெண்டு பாராகிராப் எக்ஸ்ட்ரா கொடுத்திருக்கும்ல :))))))

ஆயில்யன் said...

//பாட்டு போட்டிக்கு பேரைக் கொடுத்துட்டு லீவு போட்டது!//

நல்லவேளை லீவு போட்டீங்க! அதனால நல்லதாப்போச்சு இதுவே அட்டெண்ட் செஞ்சு பாடியிருந்தா பாவம் பள்ளிகூடத்து நிலைமை ! #சாமி இருக்குடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஆயில்யன் said...

//இதைத் தொடர நான் அழைப்பது //

தொடர்பதிவினை தொடரன்னு போடுங்க பாஸ் பாருங்க ஆதவன் என்கிட்டயும் சிகப்பு ஷெர்வானி இருக்கு நாந்தான் சூரியன்னு சண்டைக்கு வர்றாரு! :)

ஆயில்யன் said...

// வல்லிசிம்ஹன் said...

நன்றி முல்லை. என் ஆண்டு விழாக்களா:)
ஐய்யோ பாவம் நீங்கள்ளாம்.!!!! சரி எழுதிடலாம். :)//

அட! வல்லியம்மா நீங்க எழுதுங்க நாங்க பாவம்லாம் இல்ல :))
#ஆச்சி எழுதினதையே படிச்சுட்டோம் :)

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா :)) ரைட்டு பாஸ் பதிவு போட்டுறேன் :)

//எடிசன் ஏண்டா பல்பை கண்டுபிடிச்சார்ன்னு இருந்துச்சு!
//

:))))))))))) இல்லைன்னா ”விளக்கு பந்தம்” வாங்கியிருக்கீங்கன்னு சொல்லுவோம்ல :))

Deepa said...

//மெல்லிசைன்னு பாடறவங்களை ஓட ஓட விரட்டணும்... // எதுக்கோ தெரியுமா ஏதோ வாசனை! இல்ல‌ உங்க‌ க‌ல்லூரியில‌ வாச‌னை தெரியாத‌வ‌ங்க‌ தான் மெல்லிசை பாடுவாங்க‌ளோ?!! :))))

//ஏன் சூரியனோட ஒளியை வாங்கிட்டு ஒளி தர்றது பெண்ணா இருக்கணும்னு கொஞ்சம் கொளுத்திபோட்டேன். //இந்தக் கொசுத் தொல்லை.. சரி சரி விடு! :)

தீஷு said...

முல்லை, நிஜமாவே எங்கிட்ட பகிர்ந்து கொள்வதற்கு ஆண்டுவிழா அனுபங்களே இல்லப்பா. எங்கள் பள்ளியில் நான் பள்ளி இறுதி முடிக்கும் வரை ஆண்டு விழாவே இல்லை. அதற்கு அப்புறம் தான் தொடங்கினார்கள். காலேஜில் கடைசி வருடம் மட்டும் போனேன் பரிசு வாங்க வேண்டும் என்பதற்காக. வெரி சாரி.. அடுத்தமுறை எனக்குத் தெரிந்ததில் எழுத அழையுங்கள்.