மோசமான நினைவுகளோடு பிணைந்திருந்ததால் அவ்வுடையை
தூக்கியெறிந்தேன். அழகிய உடைதான் அது.. அதில் நான் இன்னும் அழகுடன் மிளிர்வதாகத்தான் தோன்றியது. முதன்முதலில் அதை உடுத்திக்கொண்டபோது, வெறுக்கத்தக்கதான அனுபவங்கள் கொண்ட நாளொன்றைச் சந்திக்க நேர்ந்தது. அடுத்தமுறை உடுத்திக்கொண்டபோதோ, துயரமான முந்தைய நினைவுகளே நாள் முழுதும் என்னை ஆட்கொண்டன. கைக்கெட்டாத உயரத்தில், அலமாரியின் முடுக்கில், கண்ணுக்கெட்டாத இடத்தில் சுற்றியெறிந்தேன். என்றாலும், அது கண்ணுக்கினிய அழகிய உடைதான்.....
9 comments:
எண்டர் தட்ட மறந்துட்டீங்களா ஆச்சி.. :)
உடையென்பது உருவகமா ??????
உரைநடையில் ஓர் அழகான கவிதை முல்லை. அருமையா இருக்கு.
விபத்தில சிக்கய போது உடுத்திய உடை.....
போன நேர்முகத் தேர்விற்கு உடுத்தி தேர்ச்சி பெறாமல் போது பயணப் படுத்திய உடை,
ஒரு மழை நாளில் அவளுடன் பிரிவை சொல்லி விடை பெற்ற போது உடுத்திய உடை,
என நிறைய இருக்கிறது.......
அடுத்த முறை உடுத்தும் போது கவனமாக பார்க்கிறேன்....
அந்நாளில் முக்கியமான நிகழ்வுகளில் கலக்காமல் இருப்பதற்கு......
:( :( :(
SAME PINCH......
sweet less sweet.
இவையெல்லாம் மனசு சம்பந்தப்
பட்ட விஷயங்கள்.
sweet less sweet.
இவையல்லாம்
மனசு சம்பந்தப் பட்ட விஷயங்கள்.
இன்னமுமா உடை, பெயர், நாள், நட்சத்திரம் என்ற மூட நம்பிக்கைகள். அதுவும் உங்களிடமா
Nalla irukku aachi! I am a regular follower of your blogs. But first time posting comment. :)
தமிழ் பிரியன் கேட்டிருப்பது சரியே.
அருமையான கவிதை இது:)!
Post a Comment