Wednesday, October 27, 2010

மார்கரெட்டுக்கு ஒரு கடிதம்

டியர் டியர் மார்கரெட் வைஸ் ப்ரவுன்,

ஐ ஜஸ்ட் ஹேட் யூ....நோ நோ...ஐ ஹேட் ரன் அவே பன்னி(bunny)!

இதை சொல்றதுக்குத்தான் இந்த லெட்டர்.

முதல் காரணம், இன்னைக்கு பப்புவை நான் அடிச்சேன். Yes, I whacked her! அதுக்கு நீங்க ஒரு முக்கியமான காரணம். ரெண்டாவது, உங்களோட Run away bunnyயை படிச்சதுக்கு அப்புறம், பப்பு பேசறது எனக்கு சுத்தமா பிடிக்கலை.

ஆமா, இப்போ கொஞ்சநாளா (15 நாளா?!) Run away bunny யைத்தான் தினமும் படிக்கறோம். திரும்ப திரும்ப. (இப்போதைக்கு) பப்புவுக்கு பிடித்தமான புத்தகங்கள் லிஸ்டில், Run away bunnyக்கு முக்கியமான இடம் இருக்கு.
சொல்லப்போனா, உங்களோட‌ 'குட் நைட் மூன்' எங்க ஆல் டைம் ஃபேவரிட். தூங்கப் போறதுக்கு முன்னாடினு இல்ல..காலையிலே எழுந்ததும் கூட குட் நைட் மூன் படிச்சிருக்கோம். கிட்டன் -‍ மிட்டன், ப்ரஷ் - மஷ், ஹவுஸ் - மவுஸ் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு...பப்புவுக்கு அலுக்கற வரைக்கும்.அதே நினைப்போடதான் இந்த கதைபுக்கையும் எடுத்தோம், மிஸ். மார்கரெட் வைஸ் ப்ரவுன்! என்ன சொல்ல... எல்லா புக்கையும் போலத்தான் ஆரம்பத்துலே ஜாலியாதான் இருந்துச்சு....நான் சொல்றதை பப்பு கேட்டுக்கற வரைக்கும்!
(bunny, அம்மாகிட்டே எங்கியாவது போறேன்னு சொல்லும் போதெல்லாம் "நானும் பறந்து போறேன்" இல்லேன்னா " கடலுக்கு அடிலே போறேன்" பப்பு சொல்லுவா. நானும், bunnyயோட அம்மா மாதிரியே " நீ பறந்து போனா மரத்துலே நான் பெரிய நெஸ்ட் கட்டி வைப்பேன்", " நீ கடலுக்கு அடிலே போனா பெரிய ஷெல்லாகி வருவேன்", "போட் எடுத்துட்டு வந்து கூப்பிடுவேன்"னு, ஒளிஞ்சு பிடிச்சு விளையாடற மாதிரி நல்லாதான் போய்க்கிட்டு இருந்துச்சு...)அதுக்கு அப்புறம்தான் ஆரம்பிச்சது வினை!(Pic courtesy : Google)

போனவாரம் வர்ஷினிக்கு பர்த்டே. "வர்ஷினி என்னை அவங்க வீட்டுக்கு வரச்சொன்னா", "பர்த்டேவுக்கு போகணும்"னு (சந்தைக்குப் போகணும், ஆத்தா வையும் மாடுலேஷன்லே கஷ்டப்பட்டு படிச்சுக்கோங்க, மிஸ் ப்ரவுன் ) ஒரு வாரமாவே இதே புராணம்தான். சாப்பிடச் சொன்னப்போ, கரெக்டா ஆரம்பிச்சாச்சு. "நான் இப்போவே வீட்டைவிட்டு போறேன், வர்ஷினி வீட்டுலேயே இருக்கப் போறேன்"னு சாவியை எடுத்துக்கிட்டு கதவை திறக்கிறா. கோவம் வந்தா, ஏதாவது பிடிக்கலேன்னா இல்ல ஏதாவது சாப்பிட சொன்னா இப்போல்லாம் உடனே அவ சொல்றது, "நான் இந்த வீட்டை விட்டு போறேன்".

நானும், " ஓக்கே, பை பப்பு, வர்ஷினி பர்த்டே அன்னைக்கு வந்து உங்க ரெண்டு பேரையும் பாக்கிறேன்"னு கண்டுக்காதமாதிரி, ஜாலியா சிரிச்சுகிட்டே சொல்லிட்டு கதவுகிட்டேயே நிக்கறேன் (எல்லாம் ஒரு ஜாக்கிரதைக்குத்தான்). பப்பு கதவை திறந்ததும், கொஞ்சம் மூளையை (ம்ம்..என்னோடதுதான்!) யூஸ் பண்ணி, "ஏதோ நரி வர மாதிரி இருக்கேன்னு" நைஸா சொன்னேன். அப்போ பார்த்து ரோடிலே போன யாரோ சத்தமா தும்மினாங்க. (பெயர் தெரியாத அந்த நல்ல மனிதருக்கு நன்றி!) நல்லவேளையா நரி மேல சந்தேகப்பட்ட பப்பு, என்னை பார்த்து கேட்டா,

"உனக்கு பாப்பா வேணுமா வேணாமா? உனக்கு பொண்ணு வேணும்தானே?" (இந்த இடத்துலே, நாம, லிட்டில் ரெட் ரைடிங் ஹீட்டுக்கு ரொம்ப ரொம்ப‌ கடமைப் பட்டுள்ளோம்! யாரது, அதிக பிரசங்கித்தனமா அது ஓநாய்ன்னு சொல்றது?)

"ஆமா, பப்பு,எனக்கு பாப்பா வேணுமே!"ன்னு சொன்னதும் "அப்போ கதவை சீக்கிரம் பூட்டு"ன்னு சொல்லிட்டு புள்ளிகளை சேர்க்க(Dot-to-Dot) ஆரம்பிச்சுட்டா. . நல்லவேளையா நரி மட்டும் வரலைன்னா என்ன ஆகியிருக்கும்?

நான், இந்த வயசுலேயும் நினைக்க முடியாததை, எங்க ஆயாகிட்டேயோ அம்மாக்கிட்டேயோ தைரியமா சொல்ல முடியாததை பப்பு இப்போவே சொல்றான்னா... அதுக்கு bunnyயும் ஒரு காரணம்தானே, சொல்லுங்க மிஸ் மார்கரெட் வைஸ் ப்ரவுன், சொல்லுங்க‌?

இதுவாவது பரவாயில்லை, காலையிலே கஷ்டப்பட்டு எழுப்பி, குளிக்க கூட்டிட்டு போனா, முரண்டு பிடிச்சதும் இல்லாம " வீட்டை விட்டு போறேன்"னு சொன்னா கோவமா வருமா வராதா? அதான்...வந்துச்சு, உங்க மேலே எனக்கு அவ்ளோ கோவம்!

சோ, பேரண்ட்ஸ், மிஸ் ப்ரவுனோட சம்மதத்தோட உங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கறேன்....Run away bunnyயை கையிலே எடுக்கிறதுக்கு முன்னாடி எனக்கு வந்த இந்த விபரீத சோதனைகளை ரீவைன்ட் பண்ணி பாருங்க....ரிஸ்கை எண்ணிப் பாருங்க‌...பயனடையுங்க!

டேக் ரெஸ்ட், மிஸ் ப்ரவுன்.

குட் பை!

from
Run away Mummy!!

15 comments:

தீஷு said...

Margaret க‌ண்டிப்பா இப்ப‌டி ஒரு க‌டித‌த்தை எதிர்பார்திருக்க‌ மாட்டாங்க‌ முல்லை :-))

ஆனா நீங்க‌ பப்புவை அடித்த‌து த‌ப்பு.

Deepa said...

எல்லாம் ஓகே. இதைத் தவிர.
// இன்னைக்கு பப்புவை நான் அடிச்சேன்.//

how dare you??? stupid of the nonsense of the idiot?!

//"உனக்கு பாப்பா வேணுமா வேணாமா? // so so so cuuuuute! :)

ஆயில்யன் said...

இன்னைக்கு பப்புவை நான் அடிச்சேன். Yes, I whacked her! //

அடிச்சதே தப்பு இதுல மேஜர் சுந்தர்ராஜன் ஸ்டைல்ல பேசுனா மன்னிச்சிடுவோமா !

கண்டிக்கிறோம்!

பப்பு பேரவை
தோஹா - கத்தார்

[ஆஸி பேரவை அடுத்து வந்துகொண்டிருக்கிறது]

ஆயில்யன் said...

//தூங்கப் போறதுக்கு முன்னாடினு இல்ல..காலையிலே எழுந்ததும் ///

தூங்க போறதுக்கு முன்னாடி & ஆபிஸ்க்கு வந்த பின்னாடின்னு இருக்கணும்? #தூங்கறதுக்குத்தானே! :)))))

அன்புடன் அருணா said...

from
/Run away Mummy!!/
இது சூப்பர் டச்!!!!

நசரேயன் said...

//முதல் காரணம், இன்னைக்கு பப்புவை நான் அடிச்சேன்.//

கை இப்படி எல்லாம் அடிக்கடி நீளக்௬டாது, அப்புறம் புத்தூர் கட்டு போட வேண்டிய வரும்

அமைதிச்சாரல் said...

//Run away Mummy!!//

:-))))))))))

குடுகுடுப்பை said...

மார்கரெட்டு யாரோ பதிவரோன்னு பயந்திட்டேன்.

santhanakrishnan said...

குழந்தைகளை நாம் அடிக்க
ஆரம்பித்தால் குழந்தைகள்
வளர ஆரம்பிக்கிறார்கள்
என அர்த்தம்.

ஜெயந்தி said...

கதை புத்தகம் படிக்க வைக்கறதுல எவ்வளவு ரிஸ்க் இருக்கு.

☀நான் ஆதவன்☀ said...

//// இன்னைக்கு பப்புவை நான் அடிச்சேன்.////

ஊர்ல வந்து இருக்கு உங்களுக்கு :(

ராமலக்ஷ்மி said...

என்ன கொடுமை முல்லை இது? [பப்பு மிரட்டறதுக்கு!!]

என்ன கொடுமை பப்பு இது? [அம்மா அடிச்சதுக்கு!!]

மாதேவி said...

இப்படியாச்சா.

பப்பு எங்கள் வீட்டில் பிளம் பழம் வைத்துள்ளேன்எடுத்துக்கொள்ளுங்கள்.

இரசிகை said...

//ஆயில்யன் said...

இன்னைக்கு பப்புவை நான் அடிச்சேன். Yes, I whacked her! //

அடிச்சதே தப்பு இதுல மேஜர் சுந்தர்ராஜன் ஸ்டைல்ல பேசுனா மன்னிச்சிடுவோமா !

கண்டிக்கிறோம்!
//

:)

வல்லிசிம்ஹன் said...

இனிமே படிக்காம இருக்கறதுக்கு என்ன செய்யப் போகறீங்க முல்லை. அந்தப் புத்தகத்தை ஒளிச்சு வச்சாச்சா.எப்பவவது ஒரு சின்னத் தட்டு வைக்கிறதுல தப்பு இல்லை.தான் எங்க தப்பு செய்தோம்னு பாப்பு புரிஞ்சுக்கும்.