Monday, October 25, 2010

விலைமதிப்பற்றவை - தீபாவளி பர்சேஸில் மட்டுமா?


மந்திரப்புன்னகை, உலகையே வென்றுவிட்ட மகிழ்ச்சி, ஜொலிக்கும் ஆபரணங்கள்.... சென்னையின் எந்த பிரதான சாலைகளிலும், தி.நகர் முழுவதும் ( பத்து மீட்டர்களுக்கொரு) நகைக்கடை விளம்பர பலகைகளைக் காணலாம்.
நகைகளை அணிந்துக்கொள்வதாலேயே தன்னம்பிக்கையும், சுதந்திரமும், சகல அதிகாரங்களும் பெற்றுவிட்டதாக கருத வைக்கும் கவர்ச்சிகரமான‌ இவ் விளம்பரங்கள் ஒருவேளை பெண்சிசுக்கொலைகள், வரதட்சிணை, பெண்களின் மீதான குடும்ப வன்முறைகள் - இவற்றை பேசும் விளம்பரப்பலகைகளாக மாறினால் எப்படி இருக்கும்?


விலைமதிக்கமுடியாத‌ வாழ்க்கையும் , சுதந்திரமும் அது தரும் பாதுகாப்பையும் விடவா அழகைக் கூட்டும் நகையலங்காரங்கள் முக்கியம்?


(pic courtesy : Google)

மணமகன் வீட்டாரின் அச்சுறுத்தலால் வரதட்சிணை கொடுக்க வேண்டியிருப்பின் அது குற்றமல்ல என்று தில்லி உய‌ர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஹெல்மெட் அணியாததால் ஏற்பட்ட விபத்துகளை படமெடுத்து சிக்னல்களெங்கும் வைத்திருப்பது போல நகைகள் அணிவதால் உண்டாகும் பாதகங்களையும்/பெண்கள் மீதான வன்முறைகளையும் பேசினால் என்ன?

11 comments:

Deepa said...

ரொம்ப எதிர்பார்ப்போட வந்தேன். :(
இன்னும் எழுதி இருக்கலாம்.
அந்தத் தீர்ப்பு பற்றிய தகவலுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வரதட்சணை கொடுக்கிறதும், வாங்குறதும் குற்றம்ன்னு ஒரு சட்டம் இருக்கே,.. அதுக்கும் இந்தத்தீர்ப்புக்கும் சம்பந்தம் இருக்கிறமாதிரியே தெரியலியே...

மாதவராஜ் said...

இந்த விளம்பரங்களைப் பார்த்து ஏகத்துக்கும் எரிச்சல் பட்டிருக்கிறேன். இவர்கள் காட்டும் ஜொலிக்கும் பிம்பங்களால் நகரம் தன்னை அலங்கரித்துக் கிடக்கிறது. அதை மாற்றிப் பார்க்கவும், மறுபக்கம் பார்க்கவும் முடிந்த உங்கள் பதிவில் நெருப்பின் சுடர் தெரிகிறது.

? said...

அது உயர்நீதி மன்றம் என மாற்ற வேண்டும் என நினைக்கிறேன‌

ஹுஸைனம்மா said...

நகை விளம்பரங்கள் - (அறிவு) வளர்ந்த பெண்கள் இதன் சூட்சுமங்களைப் புரிந்து கொள்வார்கள் என்று சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், சின்னக் குழந்தைகளைக் குறிவைத்து செய்யப்படும் விளம்பரங்கள்தான் ரொம்ப ஆபத்தானவை என்று சொல்வேன்!!

துணிக்கடை விளம்பரங்கள்...?? :-((

மொத்தத்தில் விளம்பரங்களே மாயம்!!

(பின்குறிப்பு: இந்த மாதிரி ஜடைமாட்டிகள்கூட தங்கத்தில் கிடைக்கும் என்று இந்த விளம்பரம் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்!! நன்றி!!)

காலம் said...

//நகைகள் அணிவதால் உண்டாகும் பாதகங்களையும்/பெண்கள் மீதான வன்முறைகளையும் பேசினால் என்ன/

இது நல்லாருக்கு

முல்லை அந்த தீர்ப்பு தகவல் சரியா

அன்புடன் அருணா said...

ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே!பாட்டில் மயங்கிடுறாங்களே!

ராம்ஜி_யாஹூ said...

முதுகலை, பொறியியல் படித்த பல பெண்கள் கூட சனி, ஞாயிறுகளில் டி நகரில் நடை பாதை காதணி, பொட்டு கடைகளில் நேரம் செலவழிப்பதை பார்க்க எரிச்சலாகத்தான் இருக்கிறது. அதை விட கொடுமை தோளில் அணியும் கைப்பையை (hand bag)தேர்வு செய்ய செலவிட நேரம்.

எனக்கு தெரிந்து எந்த ஆண்மகனும், பதின்ம வயது பையனும் பெண்ணின் தோல் பையை சட்டையே செய்வதில்லை. இந்த பின்புலம் புரியாமல் பெண்கள் ஏன் இன்னமும் கைப்பைக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது புரிய வில்லை.

ஜெயந்தி said...

கொஞ்சம் நேரம் டிவி பாக்கலாம்னா மூணு நிமிஷம் நிகழ்ச்சி போட்டா 5,6 நிமிஷம் விளம்பரம் போடுறாங்க. டிவியே பாக்க முடியல.

கெக்கே பிக்குணி said...

முல்லை, நல்ல பதிவு. வாழ்நாள் விடுதலையில் இருக்கும் மகிழ்ச்சி, நகை தரும் நிமிட நேரத்தில் இல்லை. பாரதி சொன்னது போல், ஞான நல்லறம், வீர சுதந்திரம் பூணும் பெண்ணாய் எல்லாரும் இருப்பது எப்பவோ?

அந்த டெல்லி உயர்நீதிமன்றம் அப்படி தீர்ப்பு அளித்ததற்குக் காரணம், "மணமகன் வீட்டாரின் அச்சுறுத்தலால் வரதட்சிணை கொடுக்க வேண்டியிருப்பின் அது பெண்/பெண் வீட்டாரின் குற்றமல்ல ", மற்றும், பெண்/பெண் வீட்டார் வரதட்சிணை கொடுத்ததற்கான குற்றத்திலிருந்து விடுவிப்பதற்கான தீர்ப்பு என்று காண்கிறது.....

ராம்ஜி_யாஹூ, ஆண்கள் பார்க்கிறார்கள் என்று உடையும் நகையும் அணிவது பதின்ம வயதுகளில் முடிந்து போகிறது என்று நான் நினைக்கிறேன். (ஸாரி உங்க பபிளை உடைச்சதுக்கு!) மற்றபடி, மற்ற பெண்களோடு ஒப்பு நோக்குதல் தான் இந்த பை மோகத்தின் காரணம்....னு நான் நினைக்கிறேன்!

தீஷு said...

அந்த‌ தீர்ப்பு ப‌ற்றி நீங்க‌ள் சொன்ன‌ பின் தான் தெரியும். வாசிக்க‌வே அதிர்ச்சியா இருக்கு!!!