Tuesday, September 01, 2009

v3.0 - 3.10பப்பு,

ஞாபகமிருக்கிறதா, சென்ற வாரத்தில் ஓர் நாள்,

”என்னைத் திட்டுறீங்க இல்ல,உங்க அம்மாக்கிட்டே சொல்றேன்” - பப்பு

“நானும் உங்க அம்மாக்கிட்டே சொல்றேன்” - முகில்

“இது எங்க அம்மாவோட வீடு” - பப்பு

இந்த உரையாடல்(விவாதம்) இதோடு முற்றுப்பெறுகிறது.

'ஏன் வீட்டைக் குப்பையாக்குகிறாய்' என்று முகில் கேட்டதற்குதான் இத்தனையும்! இதுநாள் வரை, நாங்கள் இது உன்வீடு, என்வீடு என்று பேசியதில்லை. ஆம்பூர் வீடு, வடலூர் வீடு அல்லது விழுப்புரம் வீடு என்றுதான் பேசியிருக்கிறோம். அல்லது நம்ம வீடு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோம்! With that,பப்பு, நீயாகவே உரையாடலை எங்கே முடிக்கவேண்டும்ன்று அறிந்திருக்கிறாய். ;-).

நிறைய பேசுகிறாய். தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுகிறாய், நீ சொல்வது எல்லாமே ஆச்சரியமாகவும் மகி்ழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது!

நீயாகவே வரிகளமைத்துப் ஏதாவதொரு மெட்டில் பாடுகிறாய்.

இட்லி
சூடான இட்லி
அட்லி
அட்லியே!!

அர்த்தம்தான் புரியவில்லை!

திரும்ப திரும்ப கடைக்கு
இல்லன்னா கடைக்கு
பத்து வாங்க போலாம்
இந்தச் செடி நல்லாருக்காது!!

நாங்கள் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டுமென்றுச் சொல்லிக்கொண்டே இருக்கிறாய்! சில நேரங்களில், நீ தனியாக இருக்கவிரும்புகிறாய். யாராவது கூட இருந்தால், கண்காணிக்கத்தான் என்று எண்ணிக்கொள்கிறாய்!

இந்த காலகட்டத்தில்தான், நீ, மிக முக்கியமானதொரு மைல்கல்லை கற்றுக்கொண்டாய்...பழி (complaint)சொல்வதற்கும், 'நானில்லை, அதுவே உழுந்துடுச்சு, அதுவே கிழிஞ்சுக்கிச்சு' யென்று தப்பித்துக்கொள்வதற்கும்!

அலுவலகத்திலிருந்து நான் வந்ததும், ஆயாவை பற்றி கம்ப்ளெய்ன் செய்வது உனது வழக்கம். 'எனக்கு பேரிச்சம் பழம் கொடுக்கல' அல்லது 'வாழைப்பழம் கொடுக்கலை'யென்று. (இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டுவிட்டு, முடி வளர்ந்துவிட்டதாவென்று தலையை சாய்த்துப் பார்க்கிறாய்.) நான் கேட்கிறேனென்று சொன்னதும், “ஆயாவை அடி, அடி” என்றாய். ”பப்பு, யாரையும் அடிக்கக்கூடாது” என்றதற்கு, 'என்னை காலையிலே அடிச்சே, ஏன் என்னை மட்டும் அடிச்சே' என்றாய்! குற்றம் சாட்டும் நோக்கத்தை விட, ஏன் என்று மட்டும் அறிந்துக்கொள்ளும் ஆர்வமே உன் முகத்தில் இருந்தது! ஹ்ம்ம்..இப்படிதான் நாம் வாழ்கிறோம் பப்பு, செய்யக்கூடாது செய்யக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு, கடைசியில் அதைத்தான் செய்யும்படி நேர்ந்துவிடுகிறது!

உன் கேள்விகள் மகிழ்ச்சியைத்தான் தருகின்றன, 'மரம் ஏன் காத்துலே விழாம நிக்குது' என்றும், கம்மல் கழட்டிய நாளொன்றில் 'நீ boyயாயிட்டியா' என்றும் கேட்கிறாய். பால் குடித்தபின் உதட்டின்மேலிருந்த நுரையைக் காட்டி 'நான் boyயியிட்டேன்' என்கிறாய். Well, pappu, இன்னும் பல வித்தியாசங்களை வாழ்க்கை வைத்திருக்கிறது, இது மட்டுமில்லை என்பதை நீ உணரும் காலமும் வரும்!

நட்பை உலகமாகக் கொண்டிருக்கிறாய், நண்பர்களுக்காகத்தான் நீ பள்ளிக்கு போகிறாய். இப்பொதெல்லாம், குள்ளநரி தேவைப்படுவதில்லை உன்னை எழுப்ப, 'வர்ஷினி, வெண்மதி எல்லோரும் உனக்காக வேன்லே வந்துக்கிட்டுருக்காங்க' என்பதே போதுமானதாக இருக்கிறது உன்னைக் கிளப்ப! 'நான் வர்ஷினி ஃப்ரெண்ட், உன் ஃப்ரெண்ட் இல்ல' என்கிறாய்! யாருடனாவது ஃப்ரெண்டாக இருக்க வேண்டுமானால், கண்டிப்பாக யாருடனாவது கா விடத்தான் வேண்டுமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்!! ‘வர்ஷினி வீட்டுக்கு என்னை விடறியா' என்கிறாய். Don't you think its too early pappu?!!

'கா கா' என்று என்னிடம் கா விடுகிறாய். பதிலுக்கு நானும் 'கா' விட்டால் கவலை கொள்கிறாய். நான் 'கா' விடக் கூடாதென்று கத்துகிறாய். நீ கா விட்டாலும், நான் சேலஞ்ச்தான் விடனும் என்று சொல்கிறாய். Ah,பப்பு, இதுதான் முதல் படி, to take your mom for granted!! இது எங்கே முடியுமென்று நானறிந்திருக்கிறேன்...தெரிந்தும் நீ கா விடும்போதெல்லாம் உனக்கு சேலஞ்ச் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்!!

பப்பு, இரவு நேரங்களில் என்னைவிட்டு தனியே தூங்கி பழக்கமில்லை உனக்கு. ஆயா ஊரிலிருந்து வந்ததும், ஆயாவோடு படுத்துக்கொள்ளப்போவதாகச் சொன்னாய். வழக்கம்போல, சொல்லிவிட்டு தூங்கும் நேரத்தில் வந்துவிடுவாயென்றெண்ணிக் கொண்டிருந்தேன். நீ அருகிலில்லாததை தூக்கத்தில் உணர்ந்து, நடுஇரவினில் ஆயாவினருகில் உறங்கிக்கொண்டிருந்த உன்னைத் தூக்கிக் கொண்டு வந்தேன்!பப்பு, நீ வளர்ந்துவிட்டாய், தனியாக உறங்க...பார், நான் இன்னும் வளரவில்லை!! To let go - இன்னமும் கற்றுக்கொள்கிறேன்!

கோபத்தில் உன்னை அடிக்க முற்படும்போது, “நாந்தான் அம்மா” என்று சொல்லிக்கொண்டு திரும்பி அடிக்க்க வந்தாய். பப்பு, அம்மாவாக இருந்தால் மட்டுமே அடிக்க வேண்ண்டுமென்று நீ நினைப்பது எனக்கு பிடித்திருக்கிறது! :-) (இது நானும் பப்புவும் விளையாடும் விளையாட்டு, நான் பப்புவாகி விடுவேன். பப்பு அம்மாவாகி விடுவாள். ஆபீஸ் செல்வாள், நான் வீட்டிலிருப்பதற்கு அழ வேண்டும்..etc!!)

'சேம் சேம்' அல்லது 'சேம் கலர்' அல்லது 'சேம் ஸ்விட்' என்று சொல்லக் கற்றுக்கொண்டாய்! வெளியில் போனாலோ, வீட்டிலிருந்தாலோ நீயும் நானும் ஒரே வண்ணத்தில் உடுத்த விரும்புகிறாய்! அப்படி இல்லையென்றாலும், உனது உடையிலிருக்கும் வண்ணத்தை, எனது உடையில் ஏதோ ஒரு மூலையிலாவது கண்டு நீயாகவே சமாதானமாகிறாய்!

என்றேனும் நான் மாற்றும் கம்மல் உன் கண்களுக்கு மட்டுமே சட்டென தெரிகிறது. 'அழகா இருக்கே' என்றும் 'இந்த ட்ரெஸ் நல்லா இல்லே' என்றும் சொல்கிறாய், ‘குண்டுக் குட்டி' என்றுக் கொஞ்சுகிறாய்! Phase D ஐ அழகாக கடந்து வந்தோம்...ஆனாலும் நீ சமயங்களில் கோபமாகிவிட்டால் டி சொல்வதும் நீடிக்கிறது! இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்த டோரா க்ரேஸ் இப்போது இல்லை. அல்லது நான் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறேனோ!!

உனது, மூன்று வயது மூன்று மாதங்களில் ஜிக்சா புதிர்களை அடுக்கக் கற்றுக்கொண்டாய். ஏனோ உனக்கு மெழுகுவண்ணங்களை தீட்டுவதில் அவ்வளவு ஆர்வமில்லை அப்போது. சரியாக உனது மூன்று வயது ஆறு மாதங்களில் அதில் ஆர்வம் காட்டத்தொடங்கினாய். அதிலும் சிவப்பு மாடுகள், கறுப்பு மாம்பழம் என்று கற்பனை செய்துபார்க்க இயலாதவைகளை தீட்டியதை எப்படி நான் மறக்க முடியும்!! பல்டி அடிக்கக் கற்றுக்கொண்டாய். பதற்றமும், மகிழ்ச்சியும் சேர்ந்த நிலையை நான் அறிந்துக்கொண்டேன்!

சிறிது கணினியும் இயக்கக் கற்றுக்கொண்டிருக்கிறாய். கீபோர்டில் சில எழுத்துகள், வலது அம்பு சரியாக இயங்க மறுக்கின்றன!! 'சொன்னபேச்சை கேட்பது' என்பதை நீ என்றேனும் கற்றுக்கொள்வாயா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது! என் பெரிம்மாவுக்கும், ஆயாவுக்கும், ரத்த அழுத்தம் கூடியதன் காரணம் இப்போது புரிகிறதெனக்கு!

'அப்பாக்கு கா கா விட்டுடு...otherwise நோ சேலஞ்ச்'!- என்று பிலாக்மெயில் செய்கிறாய்! எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதமாகத் தான் செய்கிறாய். சரிதானென்று நாங்களும் எதிர்ப்பதமாகச் சொன்னால், அன்றுதான் கடமையாகச் சொல்பேச்சை உடனே கேட்கிறாய்!

சொல்வதற்கு இன்னும் நிறைய இருப்பதுபோல தோன்றுகிறது, பப்பு! ஃப்ரெண்ட்லியான, உற்சாகமான, பயமறியாத சின்னஞ்சிறுமியாக நீ வளர்வதைப் பார்க்க நிறைவாக இருக்கிறது!
உனது மூன்று வயதைத் தாண்டி பத்து மாதங்களைக் கடந்து வந்திருக்கிறோம் and We have grown together!

இருந்தாலும், காலத்தை இப்படியே உறையச் செய்துவிட விரும்புகிறேன்.அதே சமயம் நீ வளரவும் விரும்புகிறேனே!! oh my!


வாழ்த்துகளுடன்,
ஆச்சி!

50 comments:

ஐந்திணை said...

:-)))))

Kannan said...

when are you going to release next version?

சின்ன அம்மிணி said...

//இந்த காலகட்டத்தில்தான், நீ, மிக முக்கியமானதொரு மைல்கல்லை கற்றுக்கொண்டாய்...பழி (complaint)சொல்வதற்கும், 'நானில்லை, அதுவே உழுந்துடுச்சு, அதுவே கிழிஞ்சுக்கிச்சு' யென்று தப்பித்துக்கொள்வதற்கும்!//

இன்றைக்கும் ரங்கமணியிடம் இருந்து தப்பிக்க இதையேதான் பயன்படுத்துகிறேன் பப்பு. இது வாழ்நாள் முழுவதும் பயன்படும். :)

சின்ன அம்மிணி said...

/சேம் சேம்' அல்லது 'சேம் கலர்' அல்லது 'சேம் ஸ்விட்' என்று சொல்லக் கற்றுக்கொண்டாய்! வெளியில் போனாலோ, வீட்டிலிருந்தாலோ நீயும் நானும் ஒரே வண்ணத்தில் உடுத்த விரும்புகிறாய்//

பெண் குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை அம்மாவைத்தான் ரோல் மாடலாக நினைத்துக்கொள்வார்களாம்.

நட்புடன் ஜமால் said...

(இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டுவிட்டு, முடி வளர்ந்துவிட்டதாவென்று தலையை சாய்த்துப் பார்க்கிறாய்.) ]]


ஹா ஹா ஹா

குயூட் பப்பு ...

நட்புடன் ஜமால் said...

செய்யக்கூடாது செய்யக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு, கடைசியில் அதைத்தான் செய்யும்படி நேர்ந்துவிடுகிறது!]]

ஏன் பாஸு ஃபிலீங்க்ஸ்ஸூ

நட்புடன் ஜமால் said...

சொல்வதற்கு இன்னும் நிறைய இருப்பதுபோல தோன்றுகிறது, பப்பு! ஃப்ரெண்ட்லியான, உற்சாகமான, பயமறியாத சின்னஞ்சிறுமியாக நீ வளர்வதைப் பார்க்க நிறைவாக இருக்கிறது!]]


எங்களுக்கும்.

-------------------


இந்த வலைப்பதிவினையும், எங்களது உற்சாகத்தையும் - என்று பப்பு வந்து பார்ப்பாங்க - அப்போ எப்படி உணர்வாங்க, இதையே வெவ்வேறு காலகட்டங்களில் எப்படியெல்லம உணர்வாங்க ...

மலைப்பா இருக்கு

-------------------

நீங்கள் பதிவு செய்யும் பாங்கு மிக அழகு. நிச்சியமாய் பப்பு மிக சந்தோஷப்படுவாங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்க்கையே ஒரு நாடகம் ..என் வீட்டுலயும் உங்க வீட்டுலயும் ஒரே மாதிரி நாடகம் தான் ஓடுது..:)

\\ காலத்தை இப்படியே உறையச் செய்துவிட விரும்புகிறேன்.அதே சமயம் நீ வளரவும் விரும்புகிறேனே!! oh my! // :))

இரும்புக்குதிரை said...

ரொம்ப நல்லா இருக்கு. Relate பன்ன முடியுது. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு அம்மாவின் கலவையான உணர்வுகளை மிகவும் அழகாகவும் அழுத்தமாகவும் மொழிபெயர்த்திருக்கிறீர்கள்

எத்தனை முறை படித்தாலும் திகட்டவில்லை.

வாழ்த்துக்கள் பப்புவுக்கும் உங்களுக்கும்.

(நீங்கள் இது போன்று பப்புவுக்கு எழுதும் கடிதங்களெல்லாம் எனக்கு ஒரு நெகிழ்ச்சியைத் தருவது புதிதில்லை. இருப்பினும் சொல்கிறேன் இந்தக் கடிதமும் அதே நெகிழ்ச்சி)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு டவுட்டு

ஆயில்ஸ் பாஸ் இதுக்கும் எதிர் பதிவு எழுதுவாரா ?

:)

ஆயில்யன் said...

வர்ஷன் 3 ரொம்ப பெருசா இருக்கு பப்பு போட்டோ இருக்கறதால பொறுத்துக்கிட்டு படிக்கறேன்!

பப்பு பேரவை
தோஹா கத்தார்

ஆயில்யன் said...

//Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு டவுட்டு

ஆயில்ஸ் பாஸ் இதுக்கும் எதிர் பதிவு எழுதுவாரா ?

:)//


இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியேத்தான் ப்ளாக் ரணகளமாக்கிவைச்சிருக்கீங்களே அது போதாதா??

ஆயில்யன் said...

/இட்லி
சூடான இட்லி
அட்லி
அட்லியே!!

அர்த்தம்தான் புரியவில்லை! //

என்ன அர்த்தம் புரியல ஆச்சி??

அடிமை தேசங்களுக்கு சுதந்திரம் கொடுத்துடலாம்ன்னு சொன்ன அட்லி பிரபு பத்தி பப்புவுக்கு அல்ரெடி தெரிஞ்சுருக்கு அது உங்களுக்கு தெரியல ஆனா இட்லி மட்டும் தெரியும்!
:)))

ஆயில்யன் said...

//'என்னை காலையிலே அடிச்சே, ஏன் என்னை மட்டும் அடிச்சே'//


வாட் இஸ் திஸ் ஆச்சி!


நீங்க அடிக்க கூட செய்வீங்களா????????


:(த்துடன்
பப்பு பேரவை

ஆயில்யன் said...

//செய்யக்கூடாது செய்யக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு, கடைசியில் அதைத்தான் செய்யும்படி நேர்ந்துவிடுகிறது!//

இது என்னமோ....

பெரிம்மா கொண்டு வரும் ஆம்பூர் பிரியாணியை இனி தின்னகூடாது தின்னகூடாது என்று முன்பு பலமுறை சொன்ன வாசகத்தின் ரிப்பிட்டேய்ய் போல இருக்கு! :)))

ஆயில்யன் said...

//யாருடனாவது ஃப்ரெண்டாக இருக்க வேண்டுமானால், கண்டிப்பாக யாருடனாவது கா விடத்தான் வேண்டுமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்!!//

இது இந்த வயசுல வர்ற ஃபீலிங்க்ஸ் பாஸ் நானெல்லாம் குரூப்பு சேர்த்து அட்டாக் பண்ண எல்லாம் முயற்சி எடுத்துருக்கேனாக்கும் !: ))))

ஆயில்யன் said...

//(இது நானும் பப்புவும் விளையாடும் விளையாட்டு, நான் பப்புவாகி விடுவேன். பப்பு அம்மாவாகி விடுவாள். ஆபீஸ் செல்வாள், நான் வீட்டிலிருப்பதற்கு அழ வேண்டும்..etc!!)///

நோ கமெண்ட்ஸ் ஒன்லி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நட்புடன் ஜமால் said...

அடிமை தேசங்களுக்கு சுதந்திரம் கொடுத்துடலாம்ன்னு சொன்ன அட்லி பிரபு பத்தி பப்புவுக்கு அல்ரெடி தெரிஞ்சுருக்கு அது உங்களுக்கு தெரியல ஆனா இட்லி மட்டும் தெரியும்!]]

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

இது இந்த வயசுல வர்ற ஃபீலிங்க்ஸ் பாஸ் நானெல்லாம் குரூப்பு சேர்த்து அட்டாக் பண்ண எல்லாம் முயற்சி எடுத்துருக்கேனாக்கும் !: ))))]]

அப்ப ஆயில்ஸ் வெர்ஷன்

29.8 உண்டு ...

தீஷு said...

சூப்ப‌ர் ட‌ச்சிங் ப‌திவு. பப்புவின் வ‌ள‌ர்ச்சியை ந‌ன்கு ப‌திவு செய்துள்ளீர்க‌ள்!! வாழ்த்துக‌ள் ப‌ப்புவுக்கும் உங்க‌ளுக்கும்..

ப‌ட‌ங்க‌ள் அருமை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நட்புடன் ஜமால் said...
இது இந்த வயசுல வர்ற ஃபீலிங்க்ஸ் பாஸ் நானெல்லாம் குரூப்பு சேர்த்து அட்டாக் பண்ண எல்லாம் முயற்சி எடுத்துருக்கேனாக்கும் !: ))))]]

அப்ப ஆயில்ஸ் வெர்ஷன்

29.8 உண்டு ...


தப்பா சொல்றீங்க, ஆயில்ஸ் வெர்ஷன் 98.2 , நீங்க வேணும்னா அவரை கேளுங்க.

ஆகாய நதி said...

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க முல்லை... பப்புவும் அழகு அவள் பேச்சு மற்ரும் செய்கைகளும் அழகு அதை ஒரு அம்மாவாக இருந்து நீங்கள் உங்கள் பார்வையில் பதிவு செய்து இருப்பதும் அழகு :)

துபாய் ராஜா said...

பப்புவின் வளர்ச்சி எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் பப்பு.

ஆயில்யன் said...

/நட்புடன் ஜமால் said...

இது இந்த வயசுல வர்ற ஃபீலிங்க்ஸ் பாஸ் நானெல்லாம் குரூப்பு சேர்த்து அட்டாக் பண்ண எல்லாம் முயற்சி எடுத்துருக்கேனாக்கும் !: ))))]]

அப்ப ஆயில்ஸ் வெர்ஷன்

29.8 உண்டு ...
//

என்ன அண்ணாச்சி மிதிவண்டி இடைவெளியில ஆட்டோ ஓட்டுறீங்க என்னோட வயசை சொல்லுங்க!

இல்லாங்காட்டி நானும் ஊர்ல இருக்கிற ஆளுங்க மூலம் டீடெயில் திரட்டி கதை எழுத ஆரம்பிச்சுடுவேன்

இது ரிக்வெஸ்ட் இல்ல மிரட்டல்! :)))

Vidhoosh/விதூஷ் said...

//and We have grown together!//

ரொம்ப உண்மை... :)
வித்யா

மாதவராஜ் said...

சந்தனமுல்லை!

நுட்பமாக பார்த்திருக்கிறீர்கள்.

//இந்த காலகட்டத்தில்தான், நீ, மிக முக்கியமானதொரு மைல்கல்லை கற்றுக்கொண்டாய்...பழி (complaint)சொல்வதற்கும், 'நானில்லை, அதுவே உழுந்துடுச்சு, அதுவே கிழிஞ்சுக்கிச்சு' யென்று தப்பித்துக்கொள்வதற்கும்! //

//பப்பு, அம்மாவாக இருந்தால் மட்டுமே அடிக்க வேண்ண்டுமென்று நீ நினைப்பது எனக்கு பிடித்திருக்கிறது!//

//என்றேனும் நான் மாற்றும் கம்மல் உன் கண்களுக்கு மட்டுமே சட்டென தெரிகிறது. 'அழகா இருக்கே' என்றும் 'இந்த ட்ரெஸ் நல்லா இல்லே' என்றும் சொல்கிறாய், //

கடைசியில் கவிதையாக முடிகிறது பதிவு. மிகவும் ரசித்து வாசித்தேன்.

Deepa said...

எடுத்துக்காட்டுவதற்கு ஒரு சில பத்திகளைச் சொல்ல முடியவில்லை
:-) மொத்தப் பதிவையுமே வெகுவாக ரசித்தேன்.

நிறைய கற்றுக் கொண்டேன்.
(நேஹாவுக்கு நான் எழுதி ஒரு கடிதம் ட்ராப்ஃப்டில் இருக்கிறது. ஆனால் வெளியிடத் தயங்கிக் கொண்டிருக்கிறேன். :-)

பின்னோக்கி said...

சிறு சிறு நிகழ்வுகள்.
அழகான வர்ணனைகள்.
அருமையான எழுத்து வளம்.
நான் படித்த உங்கள் பதிவுகளில், இது முதல் இடம்.
உங்கள் குழந்தை வளர்ந்த பிறகு, இந்த பதிவுகள் பார்த்து வியந்து போவாள்.

கானா பிரபா said...

ஆயில்யன் said...

வர்ஷன் 3 ரொம்ப பெருசா இருக்கு பப்பு போட்டோ இருக்கறதால பொறுத்துக்கிட்டு படிக்கறேன்!//

றிப்பீட்டே
பாட்டி பேரவை
சிட்னி

கோமதி அரசு said...

//காலத்தை இப்படியே உறையச் செய்து
விடவிரும்புகிறேன் அதே சமயம் நீ வளரவும் விரும்புகிறேனே!! oh my!//

முல்லை, பப்புக்கு எழுதிய கடிதத்தை நாளைஅவள் படிக்கும் போது உங்கள்
மேல் உள்ள பாசமும் அன்பும் அதிகமாகும்.

வாழ்க வளமுடன்.

Jeeves said...

:) சொல்ல வருவதெல்லாம் என்னமோ அப்படியே அடி மனசுல இருந்து வெளிய வர மாட்டேங்குது.. நல்ல பதிவு

குசும்பன் said...

// கம்மல் கழட்டிய நாளொன்றில் 'நீ boyயாயிட்டியா' என்றும் கேட்கிறாய். பால் குடித்தபின் உதட்டின்மேலிருந்த நுரையைக் காட்டி 'நான் boyயியிட்டேன்'//

//நாங்களும் எதிர்ப்பதமாகச் சொன்னால், அன்றுதான் கடமையாகச் சொல்பேச்சை உடனே கேட்கிறாய்!//

:))) ஒரு சிறு புன்னகையோடு படித்து முடித்தேன்!

செல்வநாயகி said...

மிகவும் ரசித்து வாசித்தேன்.

சென்ஷி said...

:-)

ரொம்ப ரசிச்சேன்.

☀நான் ஆதவன்☀ said...

க்ரேட். நல்ல வேளை ஆபிஸ்ல படிக்கல. ரூம்ல வந்து தான் படிச்சேன். அங்க படிச்சிருந்தா இவ்ளோ லயிச்சிருக்க முடியுமான்னு தெரியல.

நிறைய சொல்லனும்னு படிக்கும் போது தோணிச்சு. ஆனா இப்ப என்ன சொல்றதுன்னு தெரியல..simply great

கோபிநாத் said...

\\சென்ஷி said...
:-)

ரொம்ப ரசிச்சேன்.
\\

ரீப்பிட்டே ;)

பிரியமுடன்...வசந்த் said...

//'அப்பாக்கு கா கா விட்டுடு...otherwise நோ சேலஞ்ச்'!- என்று பிலாக்மெயில் செய்கிறாய்! எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதமாகத் தான் செய்கிறாய். சரிதானென்று நாங்களும் எதிர்ப்பதமாகச் சொன்னால், அன்றுதான் கடமையாகச் சொல்பேச்சை உடனே கேட்கிறாய்!//

அது இயற்க்கை

முழுக்கடிதமும் மிகவும் ரசனையோடு எழுதியிருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள் பப்புக்கு......

தென்றல் said...

Neengathan ennoda first inspiration for writing blogs abt my daughter.
so I have to say thanx to you sandanamullai.

I am reading Your blogs continuosly.

தென்றல் said...

Neengathan ennoda first inspiration to write blogs abt my daughter.
I have to say thanx for you to sandanamullai.
I am reading Your blogs continuosly.
Very very intersting posts.

மணிநரேன் said...

இடுகை நன்றாக உள்ளது.மிகவும் ரசித்தேன்...:)

//and We have grown together! //
நைஸ்..மகிழ்ச்சியான விசயம்.

வாழ்த்துக்கள் ;)

குடுகுடுப்பை said...

இவ்வளவு விசயங்களையும் ஞாபகம் வைத்திருப்பதே பெரிய சிரமம் ஆச்சே.ஆனால் அதுதான் அம்மா.

நிஜமா நல்லவன் said...

:)

Eswari said...

ரொம்ப அழகா உணர்வுகளுக்கு உயிர் கொடுத்திருக்கு உங்க எழுத்து.
திகட்டாத தேன் இந்த பதிவு.

Divyapriya said...

cho chweetttt :))

அன்பு said...

mika azhakaana thoguppu...

PITTHAN said...

please change the name chitrakudam as pappukudam, ofcourse pappu unkalukku preciouse baby. pappu mattum eluthineengana romba bore adikkum.

Anonymous said...

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு

விக்னேஷ்வரி said...

நிறைய பேசுகிறாய். தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுகிறாய், நீ சொல்வது எல்லாமே ஆச்சரியமாகவும் மகி்ழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது! //

ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டுவிட்டு, முடி வளர்ந்துவிட்டதாவென்று தலையை சாய்த்துப் பார்க்கிறாய். //

So cute.

செய்யக்கூடாது செய்யக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு, கடைசியில் அதைத்தான் செய்யும்படி நேர்ந்துவிடுகிறது! //

ரொம்ப சரி.

பப்பு, நீ வளர்ந்துவிட்டாய், தனியாக உறங்க...பார், நான் இன்னும் வளரவில்லை!! //

அழகு.

‘குண்டுக் குட்டி' என்றுக் கொஞ்சுகிறாய்! //

:D

'சொன்னபேச்சை கேட்பது' என்பதை நீ என்றேனும் கற்றுக்கொள்வாயா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது! என் பெரிம்மாவுக்கும், ஆயாவுக்கும், ரத்த அழுத்தம் கூடியதன் காரணம் இப்போது புரிகிறதெனக்கு! //

:)

We have grown together! //

Excellent words.

வரிக்கு வரி ரசிச்சுப் படிக்க வெச்சுட்டீங்க. வழக்கம் போல் பப்புவும், உங்கள் எழுத்தும் டாப்.

இரசிகை said...

simply superb.............