Sunday, September 06, 2009

ஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு!

தொடரெழுத அழைத்த சிநேகிதிக்கு நன்றி! சிநேகிதியின் பதிவெழுத வந்த கதையையும் வாசித்து விடுங்கள் - மிக சுவாரசியம்!

ஏற்கெனவே ஒருசில இடுகைகளில், எப்படி பதிவுலகிற்கு வந்தேனென்று சுருக்கமாக சொல்லியிருக்கிறேன்!

”பசும் புல்வெளியில் துள்ளித் திரிய மானுக்கென்ன தயக்கமா,
நந்தவனத்தில் தேன் குடிக்க வண்டுகென்ன தயக்கமா...
உங்கள் முன் உரையாட அடியேனுக்கென்ன தயக்கமா?” - இப்படிதாங்க ஏதொவொரு பேச்சுப் போட்டில பேசி ஜெயிச்சிட்டேன், ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது!!
அப்புறமா, ”பாரதியாம் பாரதி ” - இந்த ரேஞ்சுல கவிதை வேற எழுதி இருக்கேன்.
இதுல, டீச்சருங்க கொடுத்த உற்சாகத்தில தமிழ் நம்ம நாக்குல துள்ளி விளையாடுதுன்னு மமதை வேற!! இதையெல்லாம் ஒரு பெரிய தகுதியா நினைச்சு இந்த ”சித்திரக்கூடத்தை “ தொடங்கினதுல, இப்போ நட்சத்திரமாவும் ஆகிட்டேன்.

அதனால, நீஙக இப்போ திட்டனும்னா, இல்ல ஆட்டோ அனுப்பனும்னா, அனுப்ப வேண்டிய முகவரி : இதோ!! ஏன்னா, சுட்ஜி தான், நீங்க ஏன் தமிழுக்கு தொண்டாற்றக்கூடாதுன்னு, சும்மா இருந்த சங்கை...! 2004-ல “ஹனி டியூ' ன்ற பேரில ஒரு வலைப்பூ தொடங்கிட்டு, அதை சுத்தமா மறந்திட்டேன்,ஒரே ஒரு பதிவு ஆங்கிலத்தில போட்டுட்டு. அவ்வளவு சுறுசுறுப்பு!”


சின்சியராக ஆணி பிடுங்குக் கொண்டிருந்த காலம் அது! நேரம் கிடைக்கும்போது கடமையாக RFC படிப்பதிலும், ஆன்லைன் ஃபோரங்களிலும் (வேலை தொடர்பான),Sysindia-விலும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். நிலா ரசிகன்(சரியான்னு தெரியலை) ரசிகவின் கவிதைகள்தான் ஃபார்வர்டு மெயிலாக கிடைக்கப் பெற்றேன். அதுதான் இணையத்தில், நான் முதன்முதலில் கண்ட தமிழெழுத்துகள்!அதைத்தாண்டி தமிழில் இணையத்தில் என்ன இருக்கிறதென்று ஆராய்ந்ததில்லை!

வேலை மாறியபோது, வெட்டியாக இரு மாதங்கள் செலவழிக்க நேர்ந்தது. சுதர்சனின் வலைப்பூ அப்போதுதான்(2005) அறிமுகம். அவரது வலைப்பூ வழியாக நூல் பிடித்து இளவஞ்சி, துளசி, கேவிஆர் வலைப்பூக்களை தொடர ஆரம்பித்தேன். அப்படியே, தமிழ்மணமும், தேன்கூடும் தினமும் எட்டிப்பார்க்கும் இடமாயிற்று! தினமும் சுதர்சனை 'இன்றைக்கு ஏதாவது எழுதுவதுதானே ‘ என்று கேட்டு தொணப்ப, பதிலுக்கு அவர் ‘நீங்கள் ஏன் தமிழுக்குத் தொண்டாற்றக் கூடாது' என்று கேட்டுக்கொண்டதும் (ஓக்கே..ஓக்கே..கூல்!) உருமாறியது ஹனிடியு - சித்திரக்கூடமாக!!

ஆயா, எனக்கு சின்னவயதில் ஒரு கதை சொல்வார். சித்திரக்குள்ளன் கதை. ஏழு குழந்தைகளுடன் ஒரு அம்மா- அப்பா. கடைசி பையன் குள்ளனாக இருப்பான். பஞ்சத்தில் அவனது அம்மா-அப்பா குழந்தைகளை காட்டில் விட்டு விட சித்திரக்குள்ளன் அவனது புத்திசாதுர்யத்தால் ஒவ்வொருமுறையும் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவான். ஒருமுறை ராட்சதனிடம் மாட்டிக்கொண்டச் சித்திரக்குள்ளன் எல்லோரையும் தப்புவித்து, ராட்சதனின் வீட்டில் எப்படிச் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்பது கதை! எனது ஃபேவரிட் கதை! எத்தனை முறை நான் கேட்டிருப்பேன், எத்தனை முறை ஆயாவும் சொல்லியிருப்பார்களென்றுத் தெரியாது! எனது எட்டு வயது வரை இந்தக் கதையை தினமும் கேட்டுத்தான் தூங்கியிருக்கிறேன். எனக்குள் ஆழப்பதிந்தச் சித்திரக்குள்ளனுக்காக வைத்த பெயரேச் 'சித்திரக்கூடம்'!! இந்தபெயர் சித்திரக்குள்ளனையோ கதையை மட்டுமில்லாமல், நானும் ஆயாவும் செலவழித்த பொழுதுகளை, இரவின் இருட்டில் ஆயாவின் மேல் கால் போட்டுக்கொண்டு, ராட்சதன் வரும்போதெல்லாம்(கதையிலேதாங்க!) ஆயாவை இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு, கடந்த நாட்களின் நினைவுகளுக்காக வைத்த பெயர் - ”சித்திரக்கூடம்”!

முதலில், சுரதாவில் தங்கிலிஷில் எழுதி, யுனிகோடிற்கு மாற்றிக் கொண்டிருந்தேன். கொஞ்சநாட்களிலேயே இலகலப்பை-க்கு மாறிவிட்டேன். ஆரம்பத்தில், எனது சிறுவயது நினைவுகளை எழுதத்தான் தொடங்கினேன். ஒரு சில கதைகள், ஃபார்வர்டு மெயிலை தமிழாக்கப்படுத்தி இடுவது என்று ஒரே மொக்கைகள்தான். பின்னூட்டங்களெல்லாம் இட்டது கிடையாது. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதும் இல்லை! கிடைக்கிற நேரத்தில் நாலு பதிவுகளைப் படித்துவிட்டு செல்லலாம் என்ற எண்ணமாகவும் இருக்கலாம்!( இப்பொழுது, பப்பு தனியாக விளையாட ஆரம்பித்துவிட்டதால் தொடர்ந்து பதிவுலகிற்கு வர முடிகிறது!)

பப்புவின் பேச்சுகளும், அவளிடம் நான் கண்டு வியக்கும் குறும்புகளுமே சித்திரக்கூடத்தை தூசு தட்ட வைத்தது! பதிவு என்பது கதை, கவிதை எழுத மட்டும்தான் என்பது போன்ற தோற்றத்தை (பயத்தை!) கொண்டிருந்த போது, ஆயில்யனின் “இட்லிபொடி' இடுகையை வாசிக்க நேர்ந்தது! அட, ஒரு இட்லி பொடிக்காக ஒரு இடுகையா - இப்படிக் கூட எழுதலாம் போல என்று என்னை எண்ண வைத்து - இப்போது நானும் மொக்கைகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்! :-) வாழ்த்துகள் ஆயில்ஸ்!!

என்னிடம் ஒரு பழக்கம் - எதுவுமே கொஞ்ச நாளைக்குத்தான் எனக்கு சுவாரசியமாக இருக்கும், அப்புறம் அதனை திரும்பியே பார்க்க மாட்டேன். பாட்டு கேட்க பிடிக்கும் என்றால், அதற்காக நேரம் செலவழித்து தேடித் தேடி கலெக்ட் செய்து வைப்பேன் - அதன்பின அப்படியே விட்டுவிடுவேன். ஒரு எழுத்தாளர் புத்தகம் படித்து பிடித்து விட்டால்,அவரது எல்லா நாவலையும் வாசித்து விடுவது - ஸ்டெல்லா புரூஸ், பாலகுமாரன், சுஜாதா, கல்கி, அம்பை, சிட்னி இப்படி - அப்புறம் அவர்கள் பக்கமே செல்வது இல்லை! அதே போல், உடைகளாக வாங்கித் தள்ளிக் கொண்டிருப்பேன் - அதன்பின் ஒரு வருடத்திற்கு வாங்க மாட்டேன், போரடித்துவிடும்!திரும்ப், என்றைக்காவது அதே ஆர்வம் துளிர்விடும்! இது ஏதும் மேனியாவாவென்றுத் தெரியவில்லை - But, I am like this only - weird, huh! எந்த பொழுதுப்போக்கையும் இவ்வளவு நாட்களாக தொடர்ந்ததில்லை - என்னைத், தொடர்ந்து பதிவெழுத வைப்பதே பதிவுலகின் வெற்றி! ;-)

வாசிப்பதே மிகவும் அரிதாகிப் போன எனக்கு, தமிழ்மணம் நல்ல இடுகைகளை அடையாளம் காண்பித்திருக்கிறது! பதிவுலகில், நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கிறேன்! அவர்களில் ஒரு சிலரை சந்தித்துமிருக்கிறேன்! என்னை தினம் தினம் இங்கு வர வைப்பதற்கு இவையே காரணம்! தொடர்ந்து வாசித்து, பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தும் தங்களன்பிற்கு நன்றி! :-)

ஆறு தன் வரலாறு கூறுதல்”- கண்டிப்பாகத் தமிழ் பரிட்சைக்கு வருமென்று, ஆறாவது/ஏழாவது படிக்கும்போது சீனியர்களால் பயமுறுத்தப்பட்டது. ஆனால், எந்தப் பரிட்சையிலும் வந்ததில்லை! :))


நான் அழைக்க விரும்பும் நால்வர்,

1. செல்வநாயகி
2. சென்ஷி
3. தீபா
4. சின்ன அம்மிணி

உடனே, இடுகையைத் தொடர வேண்டிய கட்டாயமில்லை. நேரம் கிடைக்கும்போது, தாங்கள் பதிவெழுத வந்தக் கதையையும் சொல்லுங்கள்....:-)


விதிமுறை:

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட :) பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

(மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.)

27 comments:

செல்வநாயகி said...

முல்லை,

சுவாரசியமான இடுகை.

///உடனே, இடுகையைத் தொடர வேண்டிய கட்டாயமில்லை.////

இப்படியெல்லாம் வசதியிருப்பது என் போன்ற சுறுசுறுப்புத் தேனிகளுக்கு நல்லதே:))

மாதவராஜ் said...

வரலாறு சுவராசியம்.

//என்னிடம் ஒரு பழக்கம் - எதுவுமே கொஞ்ச நாளைக்குத்தான் எனக்கு சுவாரசியமாக இருக்கும், அப்புறம் அதனை திரும்பியே பார்க்க மாட்டேன். //

பல விஷயங்களில் நானும் இப்படித்தான். ஆனால் வாசிப்பும், மனிதர்களையும், கதைகளையும் அறிந்து கொள்ளும் இது போன்ற வெளிகள் எப்போதுமே சுவாரசியமானவைதானே!

கதிர் - ஈரோடு said...

//”சித்திரக்கூடத்தை “ தொடங்கினதுல, இப்போ நட்சத்திரமாவும் ஆகிட்டேன்.//

வாழ்த்துகள்

வரலாற்றின் பக்கங்கள் விரியட்டும்

கோமதி அரசு said...

//ஆறு தன் வரலாறு கூறுதல்//

//கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை
எழுதப்பயன் படுத்திய கருவிகள்
தொழில்நுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.//

முல்லை,
இது பெரிய கதை ஆயிற்றே
கடல் தன் வரலாரை கூறுவதுப் போல் இருக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயாவின் நினைவுகளுக்காக சித்திரக்கூடம்... பெயர்க்காரணம் நல்லா இருக்கு..

தொடர்ந்து தமிழ்தொண்டாற்றி வரலாற்றில் நிலைத்து நிற்க வாழ்த்துக்கள் :)

மங்களூர் சிவா said...

சித்திரகுள்ளன் ரசிகையா!
நல்லா சொல்லியிருக்கீங்க.
:)))

ஆயில்யன் said...

ஆச்சி சூப்பர் :)


ஆச்சி தன் வரலாறு கூறுதல் அப்படின்னு கூட டைட்டில்ல டெரரர் காமிச்சிருக்கலாம்!

ஆயில்யன் said...

//ஒரு இடுகையா - இப்படிக் கூட எழுதலாம் போல என்று என்னை எண்ண வைத்து - இப்போது நானும் மொக்கைகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்! :-) வாழ்த்துகள் ஆயில்ஸ்!!//

ஆஹா ஆச்சி பொடி வைச்சி பேசியிருக்கீங்க :)))

சின்ன அம்மிணி said...

//உடனே, இடுகையைத் தொடர வேண்டிய கட்டாயமில்லை. நேரம் கிடைக்கும்போது, தாங்கள் பதிவெழுத வந்தக் கதையையும் சொல்லுங்கள்....:-)//

சாய்ஸுல விடலாமா :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

கடந்த நாட்களின் நினைவுகளுக்காக வைத்த பெயர் - ”சித்திரக்கூடம்”!

!!!!!!!!!!!

என்னிடம் ஒரு பழக்கம் - எதுவுமே கொஞ்ச நாளைக்குத்தான் எனக்கு சுவாரசியமாக இருக்கும், அப்புறம் அதனை திரும்பியே பார்க்க மாட்டேன்
! :) மீ ட்டூ

இப்போது நானும் மொக்கைகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்! :-) வாழ்த்துகள் ஆயில்ஸ்!!

ஆட்டோ வெயிட்டிங்க் ஃபார் ஆயில்ஸ் :))))

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

ராஜா | KVR said...

உங்களை வலைப்பதிவு எழுதத் தூண்டிய சுதர்ஸன் தான் எனக்கு உங்களது பதிவின் சுட்டி அனுப்பிப் படிக்கச் சொன்னார். 2006 - 6 தலைக்கீழாகத் திரும்பி 9ஆக மாறி இருக்கும் இன்று உங்கள் எழுத்தில் நல்ல வளர்ச்சித் தெரிகிறது. வாழ்த்துகள் முல்லை.

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

கானா பிரபா said...

ஆச்சி தன் வரலாறு கூறுதல் அப்படின்னு கூட டைட்டில்ல டெரரர் காமிச்சிருக்கலாம்!//

றிப்பீட்டேஏஏ

நல்லா தான் சொல்லியிருக்கீங்க ஆச்சி

தமிழன்-கறுப்பி... said...

ohhhh.....

:)

Deepa (#07420021555503028936) said...

சித்திரக்கூடம் - பெயர் பற்றி ரொம்ப நாளாக் கேக்கணும்னு - அழகான விளக்கம்.

//என்னைத், தொடர்ந்து பதிவெழுத வைப்பதே பதிவுலகின் வெற்றி! //
:-)

//என்னிடம் ஒரு பழக்கம் - எதுவுமே கொஞ்ச நாளைக்குத்தான் எனக்கு சுவாரசியமாக இருக்கும், அப்புறம் அதனை திரும்பியே பார்க்க மாட்டேன்.//
நானும்... :-( பதிவுலகம் ஒரு exception தான் இல்ல?

ரொம்ப சுவாரசியமான இடுகை.
ஆனா என்னை மாட்டி விட்டுட்டீங்களே!
சரி, எழுதிட்டா போச்சு!

Deepa (#07420021555503028936) said...

//உங்கள் முன் உரையாட அடியேனுக்கென்ன தயக்கமா?”//

:-)))
அப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா உங்க ரவுடித் தனத்தை!

☀நான் ஆதவன்☀ said...

ஆகா இதுவும் கொசுவத்தி பதிவா. நல்ல சுவாரஸ்யம் குறையாம இருக்கு பதிவு.

(சுதர்சன் வீட்டு அட்ரஸ் கொடுத்தா ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும்)

சிங்கக்குட்டி said...

//சின்சியராக ஆணி பிடுங்குக் கொண்டிருந்த காலம் அது//
ஹ ஹ ஹ அது தேவை இல்லாத ஆணிதான? (பிடுங்க தேவை இல்லாத ஆணி) :-))

கோபிநாத் said...

நல்ல கதை உங்க கதை ;))

\\ஆயில்யனின் “இட்லிபொடி' இடுகையை வாசிக்க நேர்ந்தது! அட, ஒரு இட்லி பொடிக்காக ஒரு இடுகையா - இப்படிக் கூட எழுதலாம் போல என்று என்னை எண்ண வைத்து - இப்போது நானும் மொக்கைகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்! :-) வாழ்த்துகள் ஆயில்ஸ்!!
\\

யக்கோவ் இது வாழ்த்துக்கள் மாதிரி தெரியலையே!!! ;))) ஏதாச்சும் உள்குத்து இருக்கா!! ;))

PITTHAN said...

ஆகா சித்திரகூடம் பெயருக்கு இதான் காரனமா, நான் எதோ இராமாயனத்தில் பஞ்சவடியில் இருந்த சித்திரகூடம் நினைத்தென்.

" உழவன் " " Uzhavan " said...

வலைக்கு வந்த வரலாறு சூப்பர் :-)
பெயர்க்காரணம் சுவராஸ்யம்.

கலையரசன் said...

அது சரி.. சித்திரக்கூடம்ன்னா படம் வரையிறதுன்னுல்ல நினைச்சிகிட்டு இருக்கேன்?

Conception of Chitrakullans folk tale?

அமுதா said...

வரலாறு சுவாரசியம்... பெயர்க்காரணமும்...

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. சித்திரக்குள்ளன் கதையை இப்போதுதான் அறிந்தேன், அப்படியே சித்திரக்கூடம் எனும் பெயர்க்காரணமும். மிகவும் அருமை.

என்ன எழுதலாம் என யோசிப்பவர்களுக்கு என்ன வேண்டுமெனினும் எழுதலாம் என பாடம் சொன்ன ஆயில்யனின் இட்லிபொடி சுவையாகவே இருக்கும்.

நல்லதொரு வரலாறு.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உங்களைப் பத்தி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி

சினேகிதி said...

\\பசும் புல்வெளியில் துள்ளித் திரிய மானுக்கென்ன தயக்கமா,
நந்தவனத்தில் தேன் குடிக்க வண்டுகென்ன தயக்கமா...\\

அப்பவே இப்பிடித்தானா :) நானெல்லாம் பெற்றேரோ பெரியோரொ ஆசானே என்டெல்லாம் ஏதோ வணக்கம் சொல்லி ஆரம்பிச்ச ஞாபகம்.

ஆமா இந்தச் சித்திரக்குள்ளன் கதையை வடிவா ஒருக்கா எழுதுங்கோ. நான் வாசிச்சதேயில்ல.

\\என்னிடம் ஒரு பழக்கம் - எதுவுமே கொஞ்ச நாளைக்குத்தான் எனக்கு சுவாரசியமாக இருக்கும், அப்புறம் அதனை திரும்பியே பார்க்க மாட்டேன். பாட்டு கேட்க பிடிக்கும் என்றால், அதற்காக நேரம் செலவழித்து தேடித் தேடி கலெக்ட் செய்து வைப்பேன் - அதன்பின அப்படியே விட்டுவிடுவேன். ஒரு எழுத்தாளர் புத்தகம் படித்து பிடித்து விட்டால்,அவரது எல்லா நாவலையும் வாசித்து விடுவது -\\

எப்பிடியிப்பிடி:))அப்பிடியே பொருந்தும் எனக்கும்.