Saturday, September 05, 2009

சுதா கான்வெண்ட்-லிருந்து ஒரு சிறுமி!

பொதுவா, நம்ம ஊர்லே ஒன்பதாவது முடிச்சுட்டீங்கன்னா, 'நீங்க உங்களுக்குச் சொந்தம் இல்ல'ன்னு தீர்மானமே பண்ணிக்கலாம்! ஏன்னா அடுத்தது பப்ளிக் எக்சாம் ஆச்சே! காலையிலே ட்யூஷன், சாயங்காலம் ட்யூஷன், சனி, ஞாயிறு ஸ்பெஷல் கிளாஸ்! முழுபரிட்சை லீவும் கிடையாது...அடுத்த வருஷத்துக்கானதை ஆரம்பிச்சுடுவாங்களே! வீட்டிலே, ஸ்கூல்ல கொடுக்கற டென்ஷனில் பாதியாவது கொடுப்பாங்களே!!

நாம கொஞ்சூண்டு எதிர்ப்புக் குரல் கொடுத்தாப் போதும், “உன் நல்லதுக்குத்தான் சொல்றோம், இப்போ தெரியாது இதோட அருமை...இந்த வருஷம் கஷ்டப்படப் போறே..அடுத்த வருஷம் காலேஜ்லே போய், என்ன படிக்கவா போறே...எப்படியும் கிடையாது...அதை நினைச்சுக்கிட்டாவது இப்போ ஒழுங்கா படி”!! ன்னு ஒரு குரல் வரும்..அப்புறம் என்ன கப்சிப் தான்!!

நாமளும் இதை நம்பி, ‘சரி, காலேஜ்னா ரொம்ப ஜாலியாயிருக்கும் போல, படிக்க வேண்டாம், அங்கெல்லாமா, இப்படி மன்த்லி் டெஸ்ட், டெர்ம் டெஸ்ட்-னெல்லாம் வைப்பாங்க? அதெல்லாம் இருக்காது - அப்படி, இப்படின்னு ஏகப்பட்ட கனவுகளோட காலேஜில் அடியெடுத்து வைச்சா...தான் தெரியும்..அங்கே மன்த்லி டெஸ்ட் கிடையாது...விக்லி டெஸ்ட் - அப்புறம் யூனிட் டெஸ்ட் - அதைத்தாண்டி சர்ப்ரைஸ் டெஸ்ட் -ல்லாம் இருக்கும்னு!! ஸ்கூலைவிட அதிகமாக டெஸ்ட் எழுதின இடம் கல்லூரியாகத்தான் இருந்தது! கனவுகளில் கூட நிரம்பி வழிந்தன சிண்டாக்ஸும் செமான்டிக்ஸூம்!!தூக்கத்தில் கேட்டாலும் சொல்லக் கூடிய அளவுக்கு மனனமாகியிருந்தன - அல்காரிதங்கள்!

இதுக்கெல்லாம் காரணம் Ms.A - நாங்க மட்டுமில்லை, பிஜி மாணவர்களும் நடுநடுங்கும் ஒரு மேம்! டெரர் மேம்! இவங்களை மாதிரி நடிச்சு காட்டறதுதான் ஹாஸ்டல்லே பொழுதுபோக்கா இருந்துச்சு! எப்படியெல்லாம் கேள்வி கேட்கலாம்னு ரிசர்ச் பண்ணிட்டு வருவாங்களோன்னு நாங்க நினைக்கற அளவுக்கு மடக்கி மடக்கி கேட்பாங்க!! , TNPCEE எக்சாம்லே, ஒரு எறும்பைப் பிடிச்சு, அது எங்கே போய் நிக்குதோ, அதுதான் ஆப்ஷன்னு பென்சிலால தீட்டின எங்களை இப்படியெல்லாம் அடிச்சா தாங்குவோமா?!!

படிக்காத பசங்களுக்கெல்லாம் நான்தான் கேங் லீடர்ன்னு என்னைப் பத்தி ஒரு நினைப்பு வேற இவங்க மனசுலே இருந்துச்சு!! (ஏன்னா, இன்னைக்கு டெஸ்ட் எழுதலை, இன்னொரு நாள் வைச்சிக்கலாம்ன்னு சொல்றதுக்கு நாட்டாமையா நானும், தமிழ்செல்வியும்தான் போவோம்!) அதனாலே, எனக்கு மட்டும் எப்போவும் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் இருக்கும்...படத்துலேல்லாம் தாதாங்க சொல்வாங்க இல்லையா..'கட்டம் கட்டிட்டேன்'/ஸ்கெட்ச் போட்டுட்டேன்னு..கிட்டதட்ட அது மாதிரிதான்!!

ஒரு செமஸ்டர்லே எங்களுக்கு ஆரக்கிள் 8i & VB (இப்போவும் இந்த VB இருக்கா?!! என்ன ஒரு க்ரேஸ் இருந்துச்சு...இந்த VB-க்கு!!). நாங்க எல்லாம் VBயோட அழகிலே மயங்கி ஆரக்கிளை விட்டுட்டோம். ரெக்கார்ட் நோட் ரெடியாகலை. அப்போதான், சுபத்திராவுக்கு ஐடியா வந்துச்சு..நாம லேப்லே 'நைட் ஸ்டே' செஞ்சு ஓவர் நைட்லே எல்லா பிரிண்ட் அவுட் எடுத்தா என்ன?!! உடனே நாங்க ஐவர் அணி ரெடி ஆனோம்...'ஹாஸ்டல் மாணவர்கள் கொஞ்சம் அதிக நேரம் லேப்லே ஸ்டே பண்ணலாம்'னு ஒரு எழுதப்படாத சட்டம் இருந்துச்சு!

எட்டு மணிக்குள்ள ப்ரோக்ராமெல்லாம் அடிச்சு முடிச்சாச்சு - லதாவும், மசூதாவும் போய் பரோட்டா வாங்கிட்டு வந்தாங்க - சாப்பிட்டுட்டு, கடகடன்னு சுடச்சுட பிரிண்ட் அவுட்! எங்க டே ஸ்காலர் ப்ரெண்ட்ஸ்க்கும் சேர்த்து எடுத்தோம். அலைன்மெண்ட் - ஃபார்மேட்- பிரச்சினைகளைத் தாண்டி எல்லோருடையதும் தனித்துவமா இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டோம்!! யாருக்கிட்டேயும் பர்மிஷன் கேக்கலையே-ன்னு நாங்க யாருமே யோசிக்கலை! எல்லோருக்கும், நாளைக்கு ரிப்போர்ட்டை ஃபைல் பண்ணிடலாங்கற எண்ணமும், 'நம்ம கடமையை மேம் மெச்சுவாங்க'ன்ற எண்ணமும்தான் மேலோங்கி இருந்தது!!

விடியற்காலையிலே, விடுதிக்குப் போய் சாப்பிட்டுட்டு, களைப்புத் தீர உறங்கிட்டு மதியமா டிபார்ட்மெண்ட்டுக்குப் போனோம்! லேபை தாண்டித்தான் கிளாஸ் ரூம்! நடுநாயகமா உட்கார்ந்திருந்தாங்க Ms.A. பக்கத்துலே லேப் கோ-ஆர்டினேட்டர்! வணக்கம் வைச்சிட்டு கிளாஸ் ரூம்க்கு போய்ட்டோம்! ஜூனியர்ங்கள்ளாம் மும்முரமா ரெக்கார்ட் வேலை செஞ்சுக்கிட்டிருந்தாங்க! கொஞ்ச நேரத்திலே எங்களை கூப்பிட்டனுப்பிச்சாங்க!

அவங்க கேட்டதுலே, இதுதான் இப்போ வரைக்கும் ஞாபகத்துலே இருக்கு, “ஏம்மா, உங்களுக்கெல்லாம் மட்டும் வால் முளைச்சிருக்கா?!!”. லேப் முழுக்க ஜூனியர்ஸ்! அவங்க எங்களை அப்படி கேட்ட வருத்தத்தைவிட இந்த ஜூனியர்ங்க முன்னாடிபோய் இப்படி சொல்லிட்டாங்களேன்னுதான் ரொம்ப வருத்தமா இருந்துச்சு!!

இதுதான் Ms.A. ஒரு ஒற்றைச் சொல் - ஈகோலே அடிக்கற மாதிரி - முகத்திலடிச்ச மாதிரி!

ஆனா, அதுக்குப் பின்னாடி என்ன இருந்துச்சுன்னா, நாங்க கணினிலே கரைகாணனும்கிற எண்ணம் இருந்துச்சு - எங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையணும்கிற எண்ணம் இருந்துச்சு - நாளுக்குநாள் மாறிக்கிட்டே இருக்கிற தொழில்நுட்பங்களின் மத்தியில் நாங்களும் competentஆ இருக்கணுமேங்கிற அக்கறை இருந்துச்சு!

Thank you,Ms.A! என்னாலே முடியுங்கறதை எனக்குக் காட்டினதுக்கு! உங்களாலேதான் நான் AIலேயும், C++ லேயும் முதன்மையா வர முடிஞ்சுது!! நீங்க, அதீத கண்டிப்பா என்கிட்டே இல்லைன்னா, உங்கிட்டே நல்ல பேரெடுக்கணுங்கிற தீவிரத்தோட நான் படிச்சு இருக்க மாட்டேன்! ஃபுல் மார்க் வாங்கணும்கிற வெறியோட, நானே அசைன்மெண்ட் எழுதியிருக்க மாட்டேன்!

மேலும், சுதா கான்வெண்ட் மித்ரா மிஸ், வனஜா டீச்சர், மற்றும் வாழ்க்கையெனும் பாடத்தைப் பற்றி அறிவு புகட்டிக் கொண்டிருக்கும் எல்லோருக்கும்,

இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!

38 comments:

ஆயில்யன் said...

//(ஏன்னா, இன்னைக்கு டெஸ்ட் எழுதலை, இன்னொரு நாள் வைச்சிக்கலாம்ன்னு சொல்றதுக்கு நாட்டாமையா நானும், தமிழ்செல்வியும்தான் போவோம்!)//

அடடே! ஆச்சி இதெல்லாம் வேற நடந்திருக்கா !!

ஆயில்யன் said...

//லதாவும், மசூதாவும் போய் பரோட்டா வாங்கிட்டு வந்தாங்க - சாப்பிட்டுட்டு, கடகடன்னு சுடச்சுட பிரிண்ட் அவுட்!///

ஆச்சி உங்ககிட்ட இந்த நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு!

எவ்ளோ கேட்டாலும் வெறு புரோட்டா மட்டுமே சொல்லுறீங்க பாருங்க அது! (தொட்டுக்க 1ம்மே இல்லாமலே சாப்பிட்ட மாதிரி நல்லாவே சொல்ல தெரியுது உங்களுக்கு!)

ஆயில்யன் said...

//ஆனா, அதுக்குப் பின்னாடி என்ன இருந்துச்சுன்னா, நாங்க கணினிலே கரைகாணனும்கிற எண்ணம் இருந்துச்சு - எங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையணும்கிற எண்ணம் இருந்துச்சு - நாளுக்குநாள் மாறிக்கிட்டே இருக்கிற தொழில்நுட்பங்களின் மத்தியில் நாங்களும் competentஆ இருக்கணுமேங்கிற அக்கறை இருந்துச்சு!//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனக்கு ஒரே அழுவ அழுவயா வருதே!!!!!!

ஆயில்யன் said...

//வாழ்க்கையெனும் பாடத்தைப் பற்றி அறிவு புகட்டிக் கொண்டிருக்கும் எல்லோருக்கும்,

இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!//


அருமை !

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !:))

வானம்பாடிகள் said...

ஆசிரியர் தினத்துக்கு அழகான நினைவுப் பூச்செண்டு. பாராட்டுக்கள்

நிஜமா நல்லவன் said...

//TNPCEE எக்சாம்லே, ஒரு எறும்பைப் பிடிச்சு, அது எங்கே போய் நிக்குதோ, அதுதான் ஆப்ஷன்னு பென்சிலால தீட்டின எங்களை இப்படியெல்லாம் அடிச்சா தாங்குவோமா?!!//

:)))

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//(ஏன்னா, இன்னைக்கு டெஸ்ட் எழுதலை, இன்னொரு நாள் வைச்சிக்கலாம்ன்னு சொல்றதுக்கு நாட்டாமையா நானும், தமிழ்செல்வியும்தான் போவோம்!)//

அடடே! ஆச்சி இதெல்லாம் வேற நடந்திருக்கா !//

ஆயில் இதெல்லாம் நடந்திருக்கலைன்னா தான் ஆச்சரியப்படணும்:))

நிஜமா நல்லவன் said...

இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!

நிஜமா நல்லவன் said...

/அவங்க கேட்டதுலே, இதுதான் இப்போ வரைக்கும் ஞாபகத்துலே இருக்கு, “ஏம்மா, உங்களுக்கெல்லாம் மட்டும் வால் முளைச்சிருக்கா?!!”/

ஆனா பாருங்க ஆச்சி...நீங்க உங்க மனசுக்குள்ள ஏன் எங்களுக்கு மட்டும்னு சொல்லுறீங்க....உங்களுக்கு கூட தான்னு நினைச்சதை சொல்லாம விட்ட இடத்தில் நீங்க நின்னுட்டீங்க:)))

☀நான் ஆதவன்☀ said...

// “ஏம்மா, உங்களுக்கெல்லாம் மட்டும் வால் முளைச்சிருக்கா?!!”.//

தீர்க்கதரிசிங்க அந்த ஆசிரியர் :)

☀நான் ஆதவன்☀ said...

//இதுதான் Ms.A. ஒரு ஒற்றைச் சொல் - ஈகோலே அடிக்கற மாதிரி - முகத்திலடிச்ச மாதிரி!
//

உடனே அஞ்சு நிமிச பாட்டுல பில்கேட்ஸ் மாதிரி மைக்ரோசாப்ட் மாதிரி வேற எதுனா ரெடி பண்ணிட்டீங்களா?

சீக்கிரம் சொல்லுங்க பாஸ் டைம் ஆகுது.

கதிர் - ஈரோடு said...

//வாழ்க்கையெனும் பாடத்தைப் பற்றி அறிவு புகட்டிக் கொண்டிருக்கும் எல்லோருக்கும்//

நானும் சொல்லிக்கிறேன்

ஆசிரியர் தின வாழ்த்துகள்

☀நான் ஆதவன்☀ said...

//Thank you,Ms.A! என்னாலே முடியுங்கறதை எனக்குக் காட்டினதுக்கு! உங்களாலேதான் நான் AIலேயும், C++ லேயும் முதன்மையா வர முடிஞ்சுது!!//

ஓ.....Ms.A எல்லாத்துக்கும் நீங்க தான் காரணமா? இருக்கட்டும் இருக்கட்டும்....

☀நான் ஆதவன்☀ said...

//இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!//

ஓக்கே உங்களுக்கும் :)

Deepa (#07420021555503028936) said...

ஆசிரியர் தினத்தை மதிக்கும் வகையில் நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள்.

உங்கள் ஆசிரியைக்கு விளையும் பயிர் முளையிலேயே தெரிந்திருக்கிறது.
//“ஏம்மா, உங்களுக்கெல்லாம் மட்டும் வால் முளைச்சிருக்கா?!!”.//

பயங்கர ரவுடியா இருந்திருக்கீங்க போல காலெஜ்ல..ம்ம்!

எனக்கு என் பள்ளி ஆசிரியைகளைப் பற்றிப் பகிர ஆவல். இந்தப் பதிவைத் தொடராலாமா?

கோமதி அரசு said...

//வாழ்க்கையெனும் பாடத்தைப்பற்றி
அறிவு புகட்டிக் கொண்டிருக்கும்
எல்லோருக்கும்//

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!.

சிங்கக்குட்டி said...

//இப்போ தெரியாது இதோட அருமை...//
நீங்களும் நம்ம குரூப்தானா?

ராம்ஜி.யாஹூ said...

hi can u pls darken the fonts, its very difficult and irritating to read with that light background color.

பின்னோக்கி said...

9த் முடிச்ச உடனே காலேஜ் ?? கன்பியூசன்

பின்னோக்கி said...

//TNPCEE எக்சாம்லே, ஒரு எறும்பைப் பிடிச்சு, அது எங்கே போய் நிக்குதோ, அதுதான் ஆப்ஷன்னு பென்சிலால தீட்டின எங்களை இப்படியெல்லாம் அடிச்சா தாங்குவோமா?!//

ஹீ..ஹீ...நான் மட்டும் தான் அப்படின்னு நினைச்சேன்..நீங்களும் அப்படித்தான் எழுதினீங்களா ? ஒ.கே...ஒ.கே.

பின்னோக்கி said...

//உங்களாலேதான் நான் AIலேயும், C++ லேயும் முதன்மையா வர முடிஞ்சுது!! //

சைக்கிள் கேப்ல பிட்ட போட்டுட்டீங்க. இந்த பதிவ படிக்க ஆரம்பிச்ச உடனே இந்த பிட்ட எதிர்பார்த்தேன் :-)

பின்னோக்கி said...

உங்க பிளாக் font கொஞசம் டார்க் பன்னுனா உங்களுக்கு புண்ணியமா போகும்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

//TNPCEE எக்சாம்லே, ஒரு எறும்பைப் பிடிச்சு, அது எங்கே போய் நிக்குதோ, அதுதான் ஆப்ஷன்னு பென்சிலால தீட்டின எங்களை இப்படியெல்லாம் அடிச்சா தாங்குவோமா?!!//

:)))

முல்லை ஒவ்வொரு பதிவிலும் யாராச்சும் இதை தொடரலாமான்னு கேக்கும்படி நீங்க பதிவாசிரியரா இருக்கீங்க கவனிங்க :P

டம்பி மேவீ said...

:))

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

மங்களூர் சிவா said...

/
படிக்காத பசங்களுக்கெல்லாம் நான்தான் கேங் லீடர்ன்னு என்னைப் பத்தி ஒரு நினைப்பு வேற இவங்க மனசுலே இருந்துச்சு!!
/

அடடா உண்மை தெரிஞ்சிபோச்சா???
:)))ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

கலையரசன் said...

உங்களுக்கும், எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!

அன்புடன் அருணா said...

வாழ்ததுக்களை வாங்கிக்கிட்டேன் முலலை!

SUMAZLA/சுமஜ்லா said...

ஆசிரியை தினத்துக்கு ஸ்பெஷன் பதிவு!

அட, எனக்கு இந்த ஐடியா இல்லாம போச்சே!

அது ஒரு கனா காலம்!

நட்புடன் ஜமால் said...

எறும்பை இப்படியெல்லாம் கொடுமை படுத்தி இருக்கீங்களா

-------------


ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்

சின்ன அம்மிணி said...

//நாமளும் இதை நம்பி, ‘சரி, காலேஜ்னா ரொம்ப ஜாலியாயிருக்கும் போல, படிக்க வேண்டாம், அங்கெல்லாமா,//

நாமளும் இதயெல்லாம் நம்பினோம் பாருங்க. காலத்தின் கொடுமை. :)

காமராஜ் said...

படிக்கிற யரையும் தங்கள் பள்ளிக்கூட வளாகத்துக்கு
திருப்பி அனுப்பும் பதிவு. ஆசிரியர்களில் யாராவது
ஓரிருவர் தான் ஆழப்பதிந்து போகிறார்கள்.அவர்களும்
ஸ்நேகத்தோடு கதை சொல்லுகிறவர்களாகவே இருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள் சந்தணமுல்லை.

தியாவின் பேனா said...

நல்லாயிருக்கிறது ரசித்துப் படித்தேன் வாழ்த்துகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆச்சி சூப்பர் ஸைன் ஆஃப்

TNPCEE எக்சாம்லே, ஒரு எறும்பைப் பிடிச்சு, அது எங்கே போய் நிக்குதோ, அதுதான் ஆப்ஷன்னு பென்சிலால தீட்டின எங்களை இப்படியெல்லாம் அடிச்சா தாங்குவோமா?!!
:))))))))))))))))))))))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

லதாவும், மசூதாவும் போய் பரோட்டா வாங்கிட்டு வந்தாங்க //

இவ்வளவு ரணகளத்துலயும் பரோட்டா கேட்குது, ம்

:)))))))))))))))

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான நினைவுகள். உங்களுக்கு ஒரு தூண்டுகோலாக இருந்த அந்த ஆசிரியைக்கு வாழ்த்துகள்.

சினேகிதி said...

i miss my teachers...ஞாபகப்படுத்திட்டிங்க்.

எல்லா இடத்திலயும் ஹிட்ல் போல ஒரு ரீச்சர் இருந்திருப்பாங்க போல.

M.S.E.R.K. said...

நானும் எழுபதுகளில் (71,72) சுதா ப்ரிபரேட்டரி காண்வென்டின் மாணவன்! ஆம்பூரின் முதல் கான்வென்ட். அப்போது அது ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தில், மாவட்ட நூலகத்தின் அருகே இருந்தது. அழுதுக்கொண்டே வரும் எனக்கு, மித்ரா மிஸ் தந்த, பச்சை கலர் பேப்பரில் சுற்றி இருக்கும் அஜந்தா (Parry) சாக்லேட்டை நினைத்தால், இன்றும் இனிக்கிறது! இப்போது அழுது புரண்டாலும் திரும்பவும் வராது, அந்த இனிய நாட்கள்! ஆம்பூரின் அனைத்து ஆசிரியர்களுக்கும், என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.