Wednesday, September 23, 2009

சென்னை டூ ஆம்பூர் டூ சென்னைபடம் : விடுமுறைக்கால நட்புகள்...

ரம்ஜானையொட்டிய விடுமுறைக்காக ஆம்பூர் சென்றிருந்தோம்.பப்புவுக்கு பல நண்பர்களைப் பெற்றுத் தந்தது இந்த விடுமுறை. கிளம்பும்போது, 'நீ போ ஆச்சி, நான் இங்கேயே இருக்கேன்” என்று சொல்லிவிட்டாள். பெரிம்மாதான் சமாளித்து அவளை வண்டியில் ஏற்றினார், “ஊஞ்சல் கடையிலே ஊஞ்சல் வாங்கிட்டு வந்துடு” என்று. ஒரு ஐந்து நிமிடத்தில் தூங்கியவள், வீடு வந்ததும் எழுந்தாள். சென்னையிலிருப்பதை உணர்ந்து, 'ஊஞ்சல் கடையிலே ஏன் எழுப்பலை, என்னை ஆம்பூருக்கு கூட்டிட்டுப் போ' என்று அழத்துவங்கினாள்!! பப்பு, நான் நீண்ட நாட்களாகத் தேடுவதும் அந்த ஊஞ்சல் கடையைத்தான்!! ;-)

27 comments:

சின்ன அம்மிணி said...

கூடை மாதிரி இருக்குமே. அந்த ஊஞ்சல் வாங்கி குடுங்க.

ஆயில்யன் said...

//ஒரு ஐந்து நிமிடத்தில் தூங்கியவள், வீடு வந்ததும் எழுந்தாள்.//

பாவம் பப்புவை தூக்கத்துலயே அழைச்சுட்டு வந்துட்டீங்களா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நான் நீண்ட நாட்களாகத் தேடுவதும் அந்த ஊஞ்சல் கடையைத்தான்!!//

நல்லா முடிக்கிறீங்க எப்போதும்.. :)

என்ன செய்ய சும்மா ஊஞ்சாலிடுட்டு இருக்கன்னு ஒரு காலம் வரும் வெயிட் செய்யுங்க.. அதுக்குத்தானே இந்த பரபரப்பு..

G3 said...

//பப்பு, நான் நீண்ட நாட்களாகத் தேடுவதும் அந்த ஊஞ்சல் கடையைத்தான்!! ;-)//

:)))))))))))))))))))))

பித்தன் said...

குழந்தைகளின் ஆசைகள் நல்ல ஒன்றுதான். என்சிறு வயதில் எங்கள் தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் நாங்கள் போய் உக்காந்து விளையாடுவேம். அவன் ஏகத்துக்கு நிபந்தனை இடுவான். பின்னாளில் நாங்கள் ஆலமர விழுது ஊஞ்சலுக்கு மாறிவிட்டேம். பப்புவுக்கு சென்னையில் தெக்கு மர ஊஞ்சல் சாத்தியமில்லை ஆதலால், சௌகார்பேட்டையில் உள்ள பர்னிச்சர் மார்ட்டில் மூங்கில் கூடை போன்ற தொங்கும் ஊஞ்சல் வாங்கித்தாருங்கள். இடம் குறைவாகவும், இடம் மாற்றவும் வசதியாக இருக்கும்.

பித்தன் said...

M.A. Jocab kadaiyil vaangalam

சென்ஷி said...

:-)

நல்லா எழுதியிருக்கீங்க!

☀நான் ஆதவன்☀ said...

\\நான் நீண்ட நாட்களாகத் தேடுவதும் அந்த ஊஞ்சல் கடையைத்தான்!!//

ஆகா! :)

கதிர் - ஈரோடு said...

குழந்தை எப்போதும் குழந்தையாகவே இருக்கிறது

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் நீண்ட நாட்களாகத் தேடுவதும் அந்த ஊஞ்சல் கடையைத்தான்!!//

அதிகபட்சமாக பால்யத்தின் நினைவுகளை நமது குழந்தைகளின் மூலமாகத்தான் தேடத்துவங்குகிறோமோ ?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நல்லா இருக்கு.

ரம்ஜானுக்கு ஆம்பூர் பிரியாணி சாப்டாச்சா!!!

கலக்குங்க.

அமுதா கிருஷ்ணா said...

நிறைய மூங்கில் ஊஞ்சல் ஹைவே பிளாட்ஃபார்ம்களில் விற்கிறாங்க. தாம்பரத்தில் MCC எதிரில் சில கடைகள் இருக்கு.

தாரணி பிரியா said...

எங்க வீட்டுக்கு பப்புவை கூட்டிட்டு வாங்க முல்லை. ஊஞ்சல் இன்னும் அவசியமான்னு திட்டு வாங்கற அளவுக்கு ஊஞ்சல் பைத்தியம் நான். ஊஞ்சல் இல்லா வீடு பாழ் இது என்னோட மொழி. சீக்கிரம் ஊஞ்சல் வாங்குங்க :)

அமுதா said...

/*பப்பு, நான் நீண்ட நாட்களாகத் தேடுவதும் அந்த ஊஞ்சல் கடையைத்தான்!! ;-)*/
:-)))

கலையரசன் said...

இனி, நானும் தேடுகிறேன்!!

:-)

நட்புடன் ஜமால் said...

ஆம்புர் பிரியாணி நல்லா வெட்டிட்டு பப்புவுக்கு ஊஞ்சல் கொடுக்கலை - சீக்கிரம் தேடுங்கோ கடையை :)

காமராஜ் said...

ப்ளூ கலர் ஃப்ராக் தான் பப்புவா ? அழகு.
பொட்டல் காடானாலும் கூட பிறந்த மண்ணை மிதிக்கிற
போது கொஞ்சம் மனதுக்குள் குறுகுறுப்பு வந்துவிடும்.
ஆம்பூர் எந்தப்பக்கம்.

கோமதி அரசு said...

//ஊஞ்சல் கடையிலே ஊஞ்சல் வாங்கிட்டு வந்துடு//

விரைவில் ஊஞ்சல் கடையை தேடி
வாங்கி கொடுத்து விடுங்கள் முல்லை.
இப்போது தான் பப்புக்கு ஊஞ்சல் ஆட
நேரமிருக்கும்.

ராமலக்ஷ்மி said...

//நான் நீண்ட நாட்களாகத் தேடுவதும் அந்த ஊஞ்சல் கடையைத்தான்!! ;-)//

And now.. போல, ஒரு தொடர்பதிவுக்கான ஆரம்பம் போல் தெரிகிறதே:)!

Deepa (#07420021555503028936) said...

// நான் நீண்ட நாட்களாகத் தேடுவதும் அந்த ஊஞ்சல் கடையைத்தான்!! ;-)//

சின்ன வயசில உங்களையும் அப்படி சொல்லித் தான் ஏமாத்தினாங்களோ?

படங்கள் அழகு!

மாதவராஜ் said...

:-))))))

ஆயில்யன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் நீண்ட நாட்களாகத் தேடுவதும் அந்த ஊஞ்சல் கடையைத்தான்!!//

அதிகபட்சமாக பால்யத்தின் நினைவுகளை நமது குழந்தைகளின் மூலமாகத்தான் தேடத்துவங்குகிறோமோ ?//

தேடுங்க தப்பே இல்ல! அதுக்காக பப்பு ஆடறதுக்குன்னு ஊஞ்சல் வாங்கிட்டு வந்துட்டு அதுல நீங்களே உக்கார்ந்தா கடுமையான விளைவுகளையும் போராட்டங்களையும், பப்பு பேரவை சார்பா முன்னெடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும்!

எச்சரிக்கையுடன்..

பப்பு பேரவை
தோஹா

ஆயில்யன் said...

// G3 said...

//பப்பு, நான் நீண்ட நாட்களாகத் தேடுவதும் அந்த ஊஞ்சல் கடையைத்தான்!! ;-)//

:)))))))))))))))))))))//

இம்புட்டு சிரிப்ப பார்த்தா எதோ பப்புக்கிட்ட இவுங்க ஊஞ்சல் வாங்கி தரேன்னு சொல்லி ஏமாத்தினமாதிரியில்ல இருக்கு....??? :)

singainathan said...

//ரம்ஜானுக்கு ஆம்பூர் பிரியாணி சாப்டாச்சா!!!//

//ஆம்புர் பிரியாணி நல்லா வெட்டிட்டு பப்புவுக்கு ஊஞ்சல் கொடுக்கலை//

அட ஏங்க என் நாக்க ஊற வெக்கிறீங்க ?

//நான் நீண்ட நாட்களாகத் தேடுவதும் அந்த ஊஞ்சல் கடையைத்தான்//

வாலாஜா மற்றும் அதன் by-pass-ல் பல கடைகள் உள்ளன.

அன்புடன்
சிங்கை நாதன்

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

/ ஆயில்யன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் நீண்ட நாட்களாகத் தேடுவதும் அந்த ஊஞ்சல் கடையைத்தான்!!//

அதிகபட்சமாக பால்யத்தின் நினைவுகளை நமது குழந்தைகளின் மூலமாகத்தான் தேடத்துவங்குகிறோமோ ?//

தேடுங்க தப்பே இல்ல! அதுக்காக பப்பு ஆடறதுக்குன்னு ஊஞ்சல் வாங்கிட்டு வந்துட்டு அதுல நீங்களே உக்கார்ந்தா கடுமையான விளைவுகளையும் போராட்டங்களையும், பப்பு பேரவை சார்பா முன்னெடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும்!

எச்சரிக்கையுடன்..

பப்பு பேரவை
தோஹா/

அதே எச்சரிக்கையுடன்..

பப்பு பேரவை
சிங்கப்பூர்.

துபாய் ராஜா said...

படங்களும் பதிவும் அருமை.