Friday, September 04, 2009

Main Aisa Kyun Hoon??

”டைமாச்சு, என்னை பஸ் ஸ்டாப்லே கொண்டு வந்து விடேன், ஆச்சி”

”ம்ஹூம், என் ஸ்கூட்டியை பஞ்சராக்க வழி பண்றீங்களா, அதெல்லாம் முடியாது, ஆட்டோலே போங்க!”

அலுவலகம் செல்லும் அவசர தினமொன்றில் கைக்காட்டிய யாரோ ஒரு ஆன்ட்டியை யோசிக்காமல் ஏற்றிக் கொள்கிறேன்...

”மகராஜியா இரு” இறங்கும்போது அவர் உதிர்க்கும் வார்த்தைகள் கொடுக்கும் இதத்தைவிட,
எங்காவது, பஸ் கிடைக்காமல் வீடு திரும்ப தவிக்க நேரிடும் பெரிம்மாவுக்கோ, அம்மாவுக்கோ யாரேனும், என்றேனும் உதவக்கூடும் என்ற எண்ணம் தரும் நிம்மதிக்காக!

19 comments:

சின்ன அம்மிணி said...

Kai log aise hain? Mein be

கதிர் - ஈரோடு said...

//நிம்மதிக்காக!//

ம்ம்ம்.. இது

ஆயில்யன் said...

பாஸ் இதே ஃபீலிங்க்ஸ்தான் பாஸ் எனக்கும் ! யாரச்சும் பெரியவங்க ரோட்ல நடந்துப்போனா எந்த கூச்சமும் இல்லாம வாஙக் வண்டியிலன்னு அழைச்சி கொண்டு போய் விடுவேன் ! அதுதான் இன்னிக்கு வரைக்கும் ஊர்ல/தெருவுல ஒரு நல்ல பேரு வாங்கி கொடுத்திருக்கு! நாம ஊர்ல இல்லாட்டியும் நம்ம வீட்ல யாருக்காச்சும் இப்படி ஒரு உதவி தேவைப்பட்டா கண்டிப்பா ஊருல/தெருவுல ஒருத்தராச்சும் செய்வாங்களேன்னு நம்பிக்கை !

மாதவராஜ் said...

ஆஹா!

பிரியமுடன்...வசந்த் said...

சரியா சொல்லியிருக்கீங்க

//நிம்மதி//

அன்புடன் அருணா said...

hum bhi aisae hi hain!

Deepa said...

//”ம்ஹூம், என் ஸ்கூட்டியை பஞ்சராக்க வழி பண்றீங்களா, அதெல்லாம் முடியாது, ஆட்டோலே போங்க!” //

ஆச்சி! நீங்க ஏறியே...

சரி சரி...compromise! :-)

துபாய் ராஜா said...

மனித மனம்.
மாறும் குணம்.
உதவும் இனம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நானும் பஸ்லயோ ட்ரெயின்லியோ யாருக்காவது உட்கார இடம் கொடுக்கறப்போ எங்கம்மா வை நினைச்சுப்பேன் !

அந்த ஃபீலிங்கை தந்தது இந்தப் பதிவு.

Vidhoosh/விதூஷ் said...

:) நான் நிறைமாதமாக இருந்த போது பஸ்சில்தான் அலுவலகம் போய் கொண்டிருந்தேன். கை நிறைய வளைகாப்பு வளை வேறு- கழற்றாமலேயே வைத்திருந்தேன்.

ஒரு நாள் மாலையில் இடமே கிடைக்கவில்லை. எந்த பெண்ணும் எழுந்திருக்கல. அப்போ ஒரு சின்னப் பையன், நிச்சயம் பத்து வயது தான் இருக்கும், என் கையை பிடிச்சு கூட்டிட்டு போயி, தானும் தன் தங்கையும் அமர்ந்திருந்த சீட்டைக் கொடுத்தான். கேட்டால் அவங்கம்மாவும் delivery-க்கு ஊருக்கு போயிருக்கங்கன்னான்...

என்னால் மறக்க முடியாத மனிதர்களில், இவனும் ஒருவன்.. :)

நல்ல பகிர்வு... தொடர் பதிவாக்கிடலாமா? :))

--வித்யா

நாணல் said...

நல்ல பதிவு..இப்படி சிலர் இருக்கறதுனால தான கொஞ்சமாவது மழை வருதோ...

Deepa said...

Vidhoosh/விதூஷ் said...
//ஒரு நாள் மாலையில் இடமே கிடைக்கவில்லை. எந்த பெண்ணும் எழுந்திருக்கல. அப்போ ஒரு சின்னப் பையன், நிச்சயம் பத்து வயது தான் இருக்கும், என் கையை பிடிச்சு கூட்டிட்டு போயி, தானும் தன் தங்கையும் அமர்ந்திருந்த சீட்டைக் கொடுத்தான். கேட்டால் அவங்கம்மாவும் delivery-க்கு ஊருக்கு போயிருக்கங்கன்னான்... //

நல்ல பகிர்வு.

பின்னோக்கி said...

tharmam thalai kaakkum

கலையரசன் said...

பகவத்கீதையில் கிருஷ்ணர் சொன்னது போல..
Its all chain reaction!!

தீஷு said...

சரியாகச் சொன்னீங்க!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பின்னோக்கி சொன்னாப்ல தர்மம் தலைகாக்கும் :))

நிஜமா நல்லவன் said...

:)

☀நான் ஆதவன்☀ said...

முரண் :))

"Main Aisa Kyun Hoon??"
இஸ்லியே ஆப் ஆப்கா ஸ்கூட்டிக்கோ பஹீத் ப்யார் கர்தா ஹை :)

(அவ்வ்வ் க்ரெக்டா?)

☀நான் ஆதவன்☀ said...

ஆயில்ஸ் பாஸ் இதுக்கெல்லாம் எதிர்பதிவு உண்டா?