Monday, September 07, 2009

Fish 'o ' Fish!கடையில் வண்ணமீன்கள் பார்த்ததும், வீட்டில் நாமும் மீன்களைக் கொண்டுச்செல்லலாம் என்றாள் பப்பு! நாயை பார்த்தால், 'நாயை வீட்டில் வச்சுக்கலாம்', 'பூனையை உள்ளே வரச் சொல்லு', 'சிங்கத்தை வீட்டில் வச்சுக்கலாமெ'ன்று ”எதையாவது_வளர்க்கலாம்_மேனியா” வந்துவிட்டிருக்கிறது!!நாமே வீட்டில் மீன்களைச் செய்யலாமென்றுச் அப்போதைக்கு அவளதுக் கவனத்தைத் திசை திருப்பியாயிற்று. (சொன்னதைக்கேட்டுநடக்கும்செல்லபிராணியொன்றுவளர்க்க21வயதாகவேண்டும்,பப்பு )

எப்படிச் செய்யப் போகிறோமென்றுச் சொன்னேன். நீல நிறமும், கருப்பு வர்ணமும் கொண்டு கடலை தீட்டினாள், ! மீன்களை வரைந்துத் தந்தேன். வெட்டினாள். கண்களை வரைந்தாள். பஞ்சிங் மெஷின் கொண்டு பொட்டுகளை வெட்டி செதில்களாக்குவோமென்றதும், ஏற்கெனவே வெட்டிய பொட்டுகளை ஒட்டினாள். மீன்களைக் கடலில் நீந்தத் தொடங்கின!

பப்புவிற்கு மிகவும் பிடித்த பகுதி - பஞ்சிங் மெஷினால் ஓட்டைப் போட்டு பொட்டுகள் செய்வது! கையில் பஞ்சிங் மெஷினைக் கொடுத்துவிட்டால் நாம் ஒரு அரைமணிநேரம் ஃபிரீ!! :-)


இன்னொரு படத்திலிருக்கும் பச்சை ஏரி மீன்கள், பப்புவும் அப்பாவும் செய்தது.
அடுத்த வருடத்தில், நிஜ மீன்களை வளர்க்கும் பக்குவம் வருமென்று நம்புகிறோம்! நீண்ட நாட்களுக்கு முன் செய்தது இது, டிராஃப்டிலிருப்பதை வெளியிடுகிறேன்!

22 comments:

Vidhoosh/விதூஷ் said...

அழகான மீன்கள்.

பப்புக்கு வாழ்த்துக்கள்.

-வித்யா

அமுதா said...

எதையாவது_வளர்க்கலாம்_மேனியா”
:-))
எங்கள் வீட்டிலும் இதே...

G3 said...

//சொன்னதைக்கேட்டு நடக்கும் செல்லபிராணியொன்று வளர்க்க 21 வயதாகவேண்டும், பப்பு )//

இந்த உள்/வெளி குத்து மட்டும் புரியலை ;)))

மத்தபடி பப்புவோட மீன் சூப்பரு :)

கதிர் - ஈரோடு said...

//பப்புவிற்கு மிகவும் பிடித்த பகுதி - பஞ்சிங் மெஷினால் ஓட்டைப் போட்டு பொட்டுகள் செய்வது//

அந்த பேப்பர் பொட்டு அழகோ அழகு

//இது, டிராஃப்டிலிருப்பதை வெளியிடுகிறேன்//

சரிங்க, படிச்சுட்டோம்

ஆயில்யன் said...

:))

நல்லா இருக்கு :)

ஸ்ரீமதி said...

// அமுதா said...
எதையாவது_வளர்க்கலாம்_மேனியா”
:-))
எங்கள் வீட்டிலும் இதே...//

எனக்கும் அதே... இப்போ தான் ஆரம்பிச்சிருக்கேன் பார்க்கலாம்... ;)))))))))

சின்ன அம்மிணி said...

//கையில் பஞ்சிங் மெஷினைக் கொடுத்துவிட்டால் நாம் ஒரு அரைமணிநேரம் ஃபிரீ!! :-)//

பாத்து. பப்பு கையில கத்திரிக்கோல் கிடைச்ச மாதிரி வேற ஏதாவது நடந்துறப்போகுது :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

கையில் பஞ்சிங் மெஷினைக் கொடுத்துவிட்டால் நாம் ஒரு அரைமணிநேரம் ஃபிரீ!! :-)

இத இத இதைத்தான் எதிர்பார்த்தேன் :)))))))))))

சென்ஷி said...

//(சொன்னதைக்கேட்டுநடக்கும்செல்லபிராணியொன்றுவளர்க்க21வயதாகவேண்டும்,பப்பு )//

குறைந்த பட்சம் 21 :-)

Deepa (#07420021555503028936) said...

மீன்கள் வெகு அழகு!

//'பூனையை உள்ளே வரச் சொல்லு', 'சிங்கத்தை வீட்டில் வச்சுக்கலாமெ'ன்று ”எதையாவது_வளர்க்கலாம்_மேனியா” வந்துவிட்டிருக்கிறது!!//

cho chweet! ரொம்ப அழகான எண்ணம் இது. குழந்தை பிராணிகளைப் பார்த்துப் பயப்படாமல் அருவருக்காமல் அதன் மீது அன்பு செலுத்துகிறாள் என்பது மிகவும் பாராட்டத்தக்கது.


//சொன்னதைக்கேட்டுநடக்கும்செல்லபிராணியொன்றுவளர்க்க21வயதாகவேண்டும்,பப்பு //
:-)))))))))
அடிப்பாவி!
(ஸாரி, சட்டென்று இது தான் சொல்லத் தோன்றியது!)
பாவம் முகில்!

பின்னோக்கி said...

//சொன்னதைக்கேட்டுநடக்கும்செல்லபிராணியொன்றுவளர்க்க21வயதாகவேண்டும்,பப்பு//

ஆண்டவா !! இந்த ஆண்களை நல்லவர்களாக படைத்திருக்ககூடாதா ?.

கொஞ்சம் கேப் கிடைச்சா பெண் கொடுமைப் பற்றி எழுத்து.

இந்த கொசுத்தொல்லை தாங்களப்பா !!

நிஜமா நல்லவன் said...

:))

☀நான் ஆதவன்☀ said...

//சொன்னதைக்கேட்டு நடக்கும் செல்ல பிராணியொன்றுவளர்க்க 21 வயதாக வேண்டும்,பப்பு //

அவ்வ்வ்வ் உள்குத்து பயங்கரமா இருக்கே :)))

தியாவின் பேனா said...

நல்லாயிருக்குது

கானா பிரபா said...

நல்லா இருக்கு

கோமதி அரசு said...

பப்புவின் மீன்கள் அழகு.

பப்புவின் வார்த்தைகள் அழகு,

கலையரசன் said...

அப்ப நானும் நாய் வளர்க்க முடியாதா?
எனக்கு இன்னம் 21 வயசு ஆகல.. அதான் கேட்டேன்!!

நட்புடன் ஜமால் said...

சொன்னதைக்கேட்டு நடக்கும் செல்ல பிராணியொன்றுவளர்க்க 21 வயதாக வேண்டும்,பப்பு ]]


ஹா ஹா ஹா

உங்களுக்கு ...

------------

மீன்கள் அழகு.

மாதவராஜ் said...

//சொன்னதைக்கேட்டுநடக்கும்செல்லபிராணியொன்றுவளர்க்க21வயதாகவேண்டும்,பப்பு //

வாய்விட்டு சிரித்துவிட்டு, அம்முவிடம் காண்பித்தேன். ‘இப்படித்தான் ஏமாந்து போகிறோம்’ என்றாள்.

மாதவராஜ் said...

மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கிறீர்களாக்கும்.....!

PITTHAN said...

நல்ல கற்பனை வளம், குழ்ந்தைகளை இப்படிதான் பழக்கவேண்டும். ஆமா பப்பு கால்லூரி போவத்ற்குள் ஒரு பத்தாயிரம் பதிவு வந்துரும் போல இருக்கு. இதை எல்லாம் பதிவு செய்யுங்கள், அவள் பிற்காலத்தில் படிப்பாள்.
நன்றி பப்புகூடம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த முக்கியமான பதிவை எப்படியோ கவனிக்காம விட்டிருக்கேன்.. :))