Friday, September 25, 2009

எ..க்..ஸ்..க்..யூ..ஸ் மீ

பள்ளிக்கூட வயதில், பேசும்போது 'டா' இல்லன்னா 'டீ' போட்டு பேசினா ஆயா சூடே வச்சிடுவாங்க.'என்ன கெட்ட பழக்கம்', 'எங்கேருந்து கத்துக்கிட்டு வந்தே', அது இதுனு ஏகப்பட்ட திட்டு விழும்! எனக்கு மட்டுமில்லே..பொதுவா எல்லாருடைய வீட்டிலேயும் நடக்கும் ஒரு விஷயம்தான் இது! யாரையாவது திட்டனும்னா எங்களுக்கு கிடைக்கற முதல் வார்த்தையே 'போடா' ன்னு சொல்றதுதான். அது ஒரு இழுக்கு மாதிரி! அதேமாதிரி 'டீ'ன்னு யாராவது நம்மை சொல்லிட்டா அவ்வளவுதான்!! கிடைக்கற திட்டுக்கு அடுத்த தடவை அப்படிச் சொல்றதுக்கு யோசிப்போம். என் தம்பி, 'டீ'ன்னு சொல்லிட்டான்னா போச்சு..ரொம்பநாளைக்கு இதைச் சொல்லியே அவனை ஃப்ளாக் மெயில் பண்ணுவேன், 'என்னை டீன்னு சொன்னே இல்லே அன்னைக்கு...ஆயாக்கிட்டே சொல்லட்டா'ன்னு! நான் என்னிக்காவது 'டான்னு சொல்லிட்டா, அவன் சொன்ன 'டீ' கேன்சலாகி என்னை
ப்ளாக்மெயில் செய்ய ஆரம்பிச்சிருப்பான்.

அப்புறம் ஸ்கூல்லயும் ஒரு வழக்கம் இருந்தது. பொண்ணுங்களுக்குள் 'வாடா போடா' ன்னு பேசிக்கு்வோம். அது ரொம்ப ஸ்டைலிஷாவும் இருந்துச்சு..செல்லமா, ஒரு நெருக்கமான நட்புணர்வையும் கொடுத்துச்சு. ஸ்கூல் சீனியர் அக்காங்கள்ளாம் வாப்பா போப்பா ன்னு பேசிப்பாங்க. இந்த 'டா' வும் 'ப்பா'வும் இப்போ வரைக்கும் தொடருது! அதேமாதிரி பையனுங்களுக்குள்ள பேசிக்கும்போது 'வாம்மா, போம்மா' ன்னு பேசிப்பாங்க.பொண்ணுங்களுக்குள்ளே வாடா போடான்னு பேசினாவெல்லாம் வீட்டிலே ஒன்னும் சொல்லமாட்டாங்க. ஆனா வாடி போடின்னு பேசினா போதும்..என்ன பழக்கம் இதுன்னு திட்டு விழும்..இந்த வயசிலேயும்!

பப்புவுக்கு பிடிச்ச பாட்டு வந்தா "உனக்கு பிடிக்குமா"ன்னு கேப்பா. பிடிக்கும்னு சொன்னா, 'யே, சேலஞ்ச்" என்றூ மகிழ்ச்சியாக ஆர்ப்பரிப்பாள்.எந்தப் பாட்டையும் பிடிக்காதுன்னு இது வரைக்கும் சொன்னது இல்லே..ஆனா பிடிச்ச பாட்டு இதுன்னு தெரிஞ்சுக்கலாம் அவ கேக்கறதை வச்சு!
அவளோட சந்தோச்த்துக்காகவே பிடிக்கும்னு எல்லோரும் சொல்வோம்..

'எக்ஸ்க்யூஸ் மீ' பாட்டு ஓடிக்கிட்டிருந்தது...

பப்பு என்கிட்டே 'பிடிக்குமா'ன்னு கேட்டா...நானும் பிடிக்கும்னு சொன்னேன்.

'பிடிக்குமா..அப்போ சேலஞ்ச்'ன்னு சொன்னா.

பக்கத்துலே இருந்த ஆயாக்கிட்டே 'உங்களுக்கு பிடிக்குமா'ன்னு கேட்டா..

இதெல்லாம் என்ன பாட்டுன்னு கொஞ்சநாள் முன்னாடி என்கிட்டே சொன்ன ஆயா, பப்புகிட்டே சொல்றாங்க..."உம்..பிடிக்கும்டா"ன்னு! பப்பு சின்ன பொண்ணு, இப்போ சொன்னா புரிஞ்சுக்கற பக்குவம் இருக்காதுன்னு ஆயா விட்டுபிடிக்கறாங்கன்னாலும்...

கண்லே விளக்கெண்ணெயை விட்டு நாங்க ஒழுங்கா பேசறோமா, கெட்ட வார்த்தை எதும் கத்துக்காம..நல்ல பழக்க வழங்கங்கள் கத்துக்கிறோமான்னு கண்காணிச்ச அந்த தலைமுறையினரின் அவ்வளவு உழைப்பையும் ஒண்ணுமில்லாம ஆக்கிட்டு, "வாடா போடா"ன்ன்னு பேசறது தப்பில்லேங்கற மாதிரியான அர்த்தத்தைக் கொடுக்குதே
இந்தப்பாட்டுன்னுதான் எனக்கு அப்போ தோணுச்சு!

29 comments:

கதிர் - ஈரோடு said...

ஓ... "எ..க்..ஸ்..க்..யூ..ஸ் மீ"

பாட்டு ஆயாவையே "டா" போட வச்சிருச்சா

ஆனா எனக்கு "எ..க்..ஸ்..க்..யூ..ஸ் மீ" கேக்கும்போதெல்லாம் 12பி படத்தில் வரும் மயில்சாமி தன் பையனுக்கு வைக்கும் "எ..ச்..சூ..ஸ் மீ" பெயர்தான் நினைவுக்கு வருகிறது

G3 said...

காலங்கள் மாறும்.. காட்சிகள் மாறும்.. காலத்தின் முன்னே நீங்களும் பப்புவும் வேறல்ல :P

ராமலக்ஷ்மி said...

//நல்ல பழக்க வழங்கங்கள் கத்துக்கிறோமான்னு கண்காணிச்ச அந்த தலைமுறையினரின் அவ்வளவு உழைப்பையும் ஒண்ணுமில்லாம ஆக்கிட்டு,//

வருது எத்தனையோ விஷயங்கள்:(!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

மா..ற்...ற....ங்...க....ள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

காலம் மாறிப்போச்சு ஆச்சி :)

rapp said...

முல்லை ஹி ஹி என்னைய வாயடைக்க வெச்சிடுச்சு:):):) சூப்பர்:):):)

நிஜமா நல்லவன் said...

:)

பா.ராஜாராம் said...

அது அப்படித்தான் முல்லை.பாட்டி பேத்தி,தாத்தா பேரன் ஒரு அற்புத உலகம்.அந்த உலகங்களுக்கு என மாறும் மொழிகூட மிக நெகிழ்வாய் இருக்கும்.நல்ல பகிர்வு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மியாவ் மியாவை முதல்ல கோவை எஃப் எம் ல கேட்டு என்ன கொடுமைன்னு திட்டிட்டிருந்தேன் ..பாட்டை பாத்து அத விட கொடுமையேன்னு சொல்லிட்டிருந்தேன்.. ஆனா ஒரு நாள் வாய்ல முணுமுணுத்துட்டேன் . மக கேக்கறா .. ஏன் நல்லா இல்லன்னுட்டு பாடறே..? அவ்வ். பவ்வ்.. இன்னும் என்ன போடறதுப்பா நீஙக்தான் சொல்லனும்..

பா.ராஜாராம் said...

அது அப்படித்தான் முல்லை.பாட்டி பேத்தி,தாத்தா பேரன் ஒரு அற்புத உலகம்.அந்த உலகங்களுக்கு என மாறும் மொழிகூட மிக நெகிழ்வாய் இருக்கும்.நல்ல பகிர்வு!

காமராஜ் said...

எங்கிருந்து எங்கே வந்து...அட ஆஹா. கடவுளும் கந்தசாமியும்.

ஆயில்யன் said...

//G3 said...

காலங்கள் மாறும்.. காட்சிகள் மாறும்.. காலத்தின் முன்னே நீங்களும் பப்புவும் வேறல்ல :P
///

பாஸ் கலக்கல் பின்னூட்டம் :)))

ஆயில்யன் said...

ம்ம்ம்ம்

டீ போட்டு பேசுறது ரொம்ப தப்புன்னு எங்க ஒண்ணாம்ப்பு டீச்சர் சொல்லிக்கொடுத்தது இன்னும் மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணி வைச்சிருக்கேன்!

அமுதா said...

:-)) காலம் செய்யும் கோலம்

கானா பிரபா said...

படித்தேன் ரசித்தேன்

அன்புடன் அருணா said...

pappu times:))!!!

கோமதி அரசு said...

பாட்டிமார்கள் தன் குழ்ந்தைகளிடம்
நடந்து கொண்டமாதிரி தன் பேரக்குழந்தைகளிடம் நடந்துக்
கொள்வது இல்லை.

பாட்டிகள் பேரன், பேத்திக்கு ஏற்றமாதிரி
(காலத்திற்கு ஏற்றமாதிரி)நடந்தால் தான்
பிடிக்கும்.

உ.ம் உடை விஷயம் முல்லை.

☀நான் ஆதவன்☀ said...

பதிவும் கலக்கல், ஜி3,முத்தக்கா பின்னூட்டமும் கலக்கல் :)

குடுகுடுப்பை said...

எ..க்..ஸ்..க்..யூ..ஸ் மீ. .... அந்தப்பாட்டு குழந்தைகளுக்கு ரொம்பதான் பிடிக்குது.

நிலாமதி said...

காலம் செய்யும் விளையாட்டு ....எப்படி பர்தீர்களா...பதிவுக்கு நன்றி நிலாமதி

நசரேயன் said...

//எந்தப் பாட்டையும் பிடிக்காதுன்னு இது வரைக்கும் சொன்னது இல்லே.//

நீங்க ஒரு பாட்டை பாடி காட்டினால் ஒருவேளை பப்பு மனசு மாறலாம்

மங்களூர் சிவா said...

கண்டிப்பெல்லாம் பிள்ளைங்களுக்குதான் பேரப்பிள்ளைகளுக்கு இல்லை. எங்க வீட்டுலயும் இதே கொடுமைதான்.
:))

சின்ன அம்மிணி said...

//நீங்க ஒரு பாட்டை பாடி காட்டினால் ஒருவேளை பப்பு மனசு மாறலாம்//

hahahaa

சிங்கக்குட்டி said...

பதிவும் எல்லா பின்னூட்டமும் கலக்கல் :-))

பின்னோக்கி said...

இந்த பாட்டெல்லாம் பெரிய விஷயம் இல்லைங்க...திருடா திருடி படத்துல ஒரு பாட்டு வரும் பாருங்க..கொக்கா மக்காங்கற மாதிரி பாட்டு அது... நல்ல பாட்டுங்க அது...அட..எவ்வளவு யோசிச்சும் நியாபகம் வரலைங்க...ரொம்ப நல்ல பாட்டு...யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க..தனுஷ் அப்புறம் அந்த ஹீரோயின் பொண்ணும் பஸ்ல போய்கிட்டே பாடுவாங்க...

கலையரசன் said...

எ..க்..ஸ்..க்..யூ..ஸ் மீ.


எ..க்..ஸ்..கு..லு..சீ.. வ்.

துபாய் ராஜா said...

எங்க நெல்லையில் யாரையாவது எலேய்ன்னு சொன்னா வீட்டுல திட்டுவாங்க.இப்ப அதுகூட என்னடேன்னு மாடலா மாறி விட்டது.

"எ..க்..ஸ்..க்..யூ..ஸ் மீ" - இந்த பதிவு சம்பந்தமான (??!!) எனது அனுபவ கவிதையை படிங்களேன்.
http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_18.html

குசும்பன் said...

//வீட்டிலே ஒன்னும் சொல்லமாட்டாங்க. ஆனா வாடி போடின்னு பேசினா போதும்..என்ன பழக்கம் இதுன்னு திட்டு விழும்.//

எங்க வீட்டில் வாய் தவறி பொண்டாட்டி இப்படி சொன்னா! செஞ்சா, டீ எல்லாம் வந்துட்டு செம திட்டு விழும் என்ன பழக்கம் அது! சொன்னுச்சு, செஞ்சுச்சுன்னு சொல்லுன்னு!

அதுபோல் பெண் குழந்தையாக இருந்தாலும் டீ சொல்லி கூப்பிட கூடாது!

சினேகிதி said...

ஹா ஹா எங்கட வீட்டிலயும் இதே கதைதான். அக்கான்ர 2 மகன்களுக்கும் இந்தப் பாட்டு பிடிக்கும் அவங்கள் மாறி மாறி போடா போடி என்டால் அப்பம்மா பேச்சு விழும்.