Wednesday, September 30, 2009

ரவுண்ட் அப்!(படம்: முதல் டெர்மின் இறுதிநாள்!)


பப்புவின் பள்ளியின் முதல் டெர்ம் கடந்த பதினொன்றாம் தேதி முடிவுற்றது. விஜயதசமி வரை விடுமுறை. பள்ளி முடிந்ததைக் கொண்டாட கடற்கரைக்குச் சென்று காற்றோடு சளி மற்றும் ஜூரத்தையும் வாங்கியாயிற்று. டாக்டர் விசிட்-மருந்துகள் - ஆம்பூர் பயணம் - மருந்துகள் - இப்போது பள்ளியும் தொடங்கிவிட்டது.

ஆரம்பத்தில், வீட்டிலிருந்து செல்லும்போது ஜாலியாக சென்றாலும் பள்ளியில் வர்ஷினி அழுவதைப்பார்த்து கம்பெனிக்காக பப்புவும் அழுதாலும் ஓரிரு வாரத்தில் சரியாகிவிட்டது! எதைச் செய்தாலும் வர்ஷினியோடுதான் செய்ய வேண்டியிருக்கிறதாம் பப்புவுக்கு. வர்ஷினி செய்யும் ஆக்டிவிட்டியைத்தான் செய்கிறாள். இருவரும் அருகருகில் அமர்ந்துக்கொள்ளத்தான் விருப்பப்படுகிறார்களாம். 'சிறுபிள்ளைகள் தானே, இருக்கட்டுமென்று' விட்டு விடுவதாகச் சொன்னார் பப்புவின் வகுப்பாசிரியர். மேலும் 'பிரிப்பது சரியல்ல, இருவருமே அப்படித்தான் இருக்கிறார்கள், அதனால் பரவாயில்லை' என்றும் கூறினார்.

சிலநாட்களில் யார் யார் எங்கே அமர வேண்டுமென்று பாயைப் போட்டு வைத்தாலும் கூட, ஆன்ட்டி, வேறு ஏதாவது வேலையாக இருந்தால் எப்படியாவது ஒன்றாகி விடுகிறார்களாம். மேலும் பேசிக்கொண்டோ அல்லது ஆக்ட்விட்டி செய்யாமலோ இருப்பதில்லை, அதனால் அப்படி, மாறி அமர்ந்தாலும் நாங்களும் ஒன்றும் சொல்வதில்லை என்றார். என் சுதா கான்வெண்ட் தோழி சுதாவின் நினைவுதான் வந்தது. சுதா, கிருபா மற்றும் நான் - முதல் வகுப்பில் நெருங்கிய நண்பர்கள். கிருபா சுதாவை, “ உன் பேரு சுதா, உன் வயித்திலேருந்து தான் நாங்கள்ளாம் வந்தோம், அதனாலேதான் நாங்க சுதா கான்வென்ட்லே படிக்கிறோம்” என்றுச் சொல்லி அவளை அழ வைத்துக்கொண்டிருப்பாள். என்னையும் சுதாவையும் ஒன்றாக புகைப்படம் எடுக்க வேண்டுமென்று ஆயா சொல்லிக்கொண்டிருப்பார். சுதா வேறு பள்ளியில் சேரும் வரை ஆயா சொல்லிக்கொண்டு மட்டுமே இருந்தார், அது வேறு விஷயம்!

கடந்த சில நாட்களாக ஆங்கிலத்திலேயேத்தான் வகுப்பறையில் உரையாடுகிறார்களாம். அதாவது ஆன்ட்டியிடம் கண்டிப்பாக ஆங்கிலத்தில்தான் உரையாடியாக வேண்டிய கட்டாயமாம். இதுநாள் வரை குழந்தைகள் தமிழில் அல்லது இந்தியில் பதில் சொன்னாலும் புரிந்துக்கொண்டவர்கள், இப்போது, ஆங்கிலத்தில் உரையாடினால் மட்டுமே திரும்பப் பேசுகிறார்களாம். இதுதான் பப்புவின் ”close your வாய்”, ”no eating" , "this take" , "this my bottle" , " no close your eyes" etc விற்குக் காரணமா?!!

பப்புவிற்கு, அவளது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு ரைம்ஸ் பாடுவது அலாதி பிரியம். வாசிக்கத் தெரியாதென்றாலும் படத்தைப்பார்த்து என்ன ரைம்ஸ் என்று தெரிந்துக்கொண்டு ஆயாவிற்கும் எனக்கும் வகுப்பெடுப்பாள். இந்த டெர்மில் முதலில் கற்றுக்கொண்ட ரைம்ஸ், “காட்டுக்குள்ளே கச்சேரி”, ”thumpkin he can sing”. இந்த டெர்மில் பாதி நாட்கள் “ இன்னைக்கு அக்டோபர் 28th ஆ” என்ற கேட்டபடிதான் விடிந்தது. வாரத்தின் நாட்கள் தெரியுமெனினும், வருடத்தின் மாதங்களை விரைவில் அறிந்துக் கொண்டால் பரவாயில்லை!! :-)

இப்போதுதான் vowels சொல்லிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். i மற்றும் e போன்ற ஒரு எழுத்தை வரைந்து விட்டு அதை அளவெடுத்துக்கொண்டிருப்பதிலிருந்து அறிய முடிந்தது. பப்புவாகவே எப்போது கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பிப்பாளென்ற, எப்போதும் கேட்கின்ற அந்தக் கேள்வியை கேட்டு வைத்தேன். இப்போதைக்கு கதை சொல்வதிலிருந்து நான் தப்ப முடியாது போல!! (யாருப்பா அது, பப்பு பாவம்ன்னு சொல்றது?!!) மாலையில் பப்புவிடம், “இன்னைக்கு ஆன்ட்டி என்ன சொன்னாங்க” என்றோ, “ஸ்கூல்ல என்ன பண்ணீங்க” என்றோ கேட்பது வழக்கம். வரும் பதிலை வைத்து அன்று பள்ளியில் என்ன நடந்தது என்பதை அனுமானிக்கவே முடியாது. நானும் எப்படியெப்படியோ கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டுப்பார்த்தாலும் என்ன நடந்தது என்பதை ஒருநாளும் சொன்னதில்லை. “நாங்க வேன்லே போகும்போது புயல் மேகம் தொரத்திக்கிட்டே வந்துச்சி ஆச்சி” என்றோ அல்லது “புயல் மேகம் வேகமா வந்து எங்க மேலே மழை பெய்யலாம்னு பார்த்துச்சு ஆச்சி” என்றோ “அபிஷேக் ஜோஷ்வா வர்ஷினியை தூக்கிப் போட்டுட்டான்” என்றோதான் விடைகிடைக்கும்!! ”என் பொண்ணு ஸ்கூல்லேர்ந்து வந்ததும் அன்னைக்கு நடந்ததெல்லாம் அப்படியே ஒப்பிப்பா” என்று யாரேனும் சொல்லக் கேட்டால் என் கீழ்தாடை கீழே விழுவதில் ஆச்சர்யமென்ன?!!

26 comments:

சின்ன அம்மிணி said...

தம்ஸ் அப் - பப்புவுக்கு

சென்ஷி said...

:-)

ரசித்தேன்!

ராமலக்ஷ்மி said...

//“நாங்க வேன்லே போகும்போது புயல் மேகம் தொரத்திக்கிட்டே வந்துச்சி ஆச்சி” என்றோ அல்லது “புயல் மேகம் வேகமா வந்து எங்க மேலே மழை பெய்யலாம்னு பார்த்துச்சு ஆச்சி”//

:))!

//எப்படியெப்படியோ கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டுப்பார்த்தாலும் என்ன நடந்தது என்பதை ஒருநாளும் சொன்னதில்லை.//

சின்ன வய்தில் என் மகனும் இப்படியே. வளருகையில் சரியாகிவிடும்.

//”என் பொண்ணு ஸ்கூல்லேர்ந்து வந்ததும் அன்னைக்கு நடந்ததெல்லாம் அப்படியே ஒப்பிப்பா” என்று யாரேனும் சொல்லக் கேட்டால் என் கீழ்தாடை கீழே விழுவதில் ஆச்சர்யமென்ன?!!//

ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு மாதிரின்னு நாம பாட்டுக்கு போயிக்கிட்டே இருக்கணும்ங்க:)!

கவிதா | Kavitha said...

Mulz , I love this photo..so...saved it.. with ur permission thanks da :))))

Superb..pose..!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹாஹா

அழகா பப்புவோட ஃபோட்டோவோட ஆரம்பிச்சு அட்டகாசமா முடிச்சிருக்கீங்க....

close your வாய் //

:)))))))))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நாங்க வேன்லே போகும்போது புயல் மேகம் தொரத்திக்கிட்டே வந்துச்சி ஆச்சி” என்றோ அல்லது “புயல் மேகம் வேகமா வந்து எங்க மேலே மழை பெய்யலாம்னு பார்த்துச்சு ஆச்சி” //

:) உங்க முகபாவத்தை( பாவமான முகத்தை அல்ல) அப்ப கற்பனை செய்துபாக்கறேன்..

கதிர் - ஈரோடு said...

//close your வாய் //

இஃகிஃகி

இடுகை அழகு

ஜீவன் said...

போட்டோல கலக்குது பப்பு ..!


போஸ்ட் எழுத்துகள இன்னும் டார்க்கா ஆக்குனா நல்லா இருக்குமோ? எழுத்தெல்லாம் மங்கலா தெரியுது ..! (இல்ல எனக்குதான் கண்ணு சரியில்லையா) ;)

பித்தன் said...

நல்ல பதிவு, பப்பு மெதுவாக நான் வளருகிறேனே மம்மி என சொல்வது கேக்கின்றது. நல்ல குறும்பு பெண்ணு. நானும் எனது பள்ளியின் நண்பன் (ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி இறுதியாண்டு வரை) ஆனந்த குமார் பற்றி இருவர் ஒரு வித்தியாசமான கதை என்ற தலைப்பில் இட்டுள்ளேன். பள்ளி நாட்களில் பிரதிபலன் காணா நட்பு எப்போதும் மறக்க இயலாது.

பித்தன் said...

பப்புக்கு நீங்க கதை சொல்லறீங்களா??????????????.
இம்ம் சிறார் வதை தடுப்புச் சட்டத்தில் இதையும் சேர்க்கவேண்டும். நல்ல கதை விடுவீங்க அதுல ஸ்ந்தெகம் இல்ல, ஆனா குழந்தை சந்தெகம் கேட்ட பதில் சொல்லத் தெரியாம முழிப்பது எப்படினு கிளாஸ் எடுப்பிங்க போல இருக்கு.

☀நான் ஆதவன்☀ said...

போட்டோ சூப்பரு!

rapp said...

நான் கொயந்தயா இருக்கப்போ ஒன்னு விடாம வீட்ல வந்து ஒப்பிப்பேன். அதுக்கு சரிசரின்னுட்டு சும்மா விட்டிருவாங்க. சில சமயம் எனக்கே ரவுடியிசம்னு தெரியிற மேட்டர்களையும் கண்டுக்க மாட்டாங்களா, எனக்கு ஒரே ஆச்சர்யம். அப்புறம் இன் திஸ் செவென் டாங்கீஸ் ஏஜ்ல, இதுப்பத்தி கேட்டா, 'வேறொன்னுமில்ல, நீ நீட்டி மொழக்கி எல்லாத்தயும் சொன்னது செம பிளேடா இருக்கும், அதால பாதிலயே நாங்க கேக்குறத நிறுத்திடுவோம்'ங்கறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................அதால இப்டிப்பட்ட காரணங்களால்தான் பப்புவும் உஷாரா ஜாலி கதைகள் சொல்றாங்கன்னு தெளிவு படுத்த விரும்பறேன்:):):)

கலையரசன் said...

வெற்றிச்சிரிப்பு!!

மங்களூர் சிவா said...

/
பித்தன் said...

பப்புக்கு நீங்க கதை சொல்லறீங்களா??????????????.
இம்ம் சிறார் வதை தடுப்புச் சட்டத்தில் இதையும் சேர்க்கவேண்டும்
/

ROTFL
:)))))))))))))))

மங்களூர் சிவா said...

பதிவு நல்லா அழகா பப்பு மாதிரியே இருக்கு.

ராஜா | KVR said...

// நானும் எப்படியெப்படியோ கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டுப்பார்த்தாலும் என்ன நடந்தது என்பதை ஒருநாளும் சொன்னதில்லை. “நாங்க வேன்லே போகும்போது புயல் மேகம் தொரத்திக்கிட்டே வந்துச்சி ஆச்சி” என்றோ அல்லது “புயல் மேகம் வேகமா வந்து எங்க மேலே மழை பெய்யலாம்னு பார்த்துச்சு ஆச்சி” என்றோ “அபிஷேக் ஜோஷ்வா வர்ஷினியை தூக்கிப் போட்டுட்டான்” என்றோதான் விடைகிடைக்கும்!!//

பொண்ணு க்ரியேட்டிவ்வா இருக்கான்னு சந்தோஷப்பட்டுக்கோங்க. ஸ்கூல்லேர்ந்து வந்ததும் நடந்தது அத்தனையும் ஒப்பிப்பது போர். அந்த மாதிரி குழந்தைகள் வளர்ந்த பிறகும் கொஞ்சம் டிப்பெண்டண்ட்டாக இருக்க வாய்ப்புண்டு.

நாணல் said...

:))

நிஜமா நல்லவன் said...

:)

அமுதா said...

:-)

பின்னோக்கி said...

//சுதா, உன் வயித்திலேருந்து தான் நாங்கள்ளாம் வந்தோம்

பாவங்க அந்த சுதா !!

ஐந்திணை said...

//புயல் மேகம் தொரத்திக்கிட்டே வந்துச்சி//

DORAAAAAAAAa?

பா.ராஜாராம் said...

அப்பாவாய் பிறந்ததிற்கு பதிலாக பேசாமல் அம்மாவாய் பிறந்திருக்கலாம் போல இருக்கு-உங்களை,அமித்தம்மாவை பார்க்கும் போது!நல்லா இருக்குங்க முல்லை!சந்தோசமாய்..

மாதவராஜ் said...

பப்பு மிக நெருக்கமாகிவிட்டாள் எங்களுக்கு.
//என் கீழ்தாடை கீழே விழுவதில் ஆச்சர்யமென்ன?!//
அப்படின்னா?

ராஜாராம்!
அப்பாவை இருந்தாலும் ரசிக்கலாம்!!

நசரேயன் said...

//“இன்னைக்கு ஆன்ட்டி என்ன சொன்னாங்க” என்றோ, “ஸ்கூல்ல என்ன பண்ணீங்க” என்றோ கேட்பது வழக்கம். வரும் பதிலை வைத்து அன்று பள்ளியில் என்ன நடந்தது என்பதை அனுமானிக்கவே முடியாது. நானும் எப்படியெப்படியோ கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டுப்பார்த்தாலும் என்ன நடந்தது என்பதை ஒருநாளும் சொன்னதில்லை//

அனுபவிக்கிறேன் நானும்

தீஷு said...

//“நாங்க வேன்லே போகும்போது புயல் மேகம் தொரத்திக்கிட்டே வந்துச்சி ஆச்சி” என்றோ அல்லது “புயல் மேகம் வேகமா வந்து எங்க மேலே மழை பெய்யலாம்னு பார்த்துச்சு ஆச்சி”//

சூப்பர் முல்லை. என்ன ஒரு கற்பனா சக்தி பாருங்க..

தமிழன்-கறுப்பி... said...

:))