Wednesday, November 24, 2010

ஆபரேஷன் ஓப்பன் டே

முன்பொரு காலத்தில் ஒரு அம்மா இருந்தாள். அவளது குழந்தையின் எல்லா 'முதல்'களை...ஒரு சின்ன விஷயத்தைக் கூட விடாமல் எழுதி வைத்துக் கொள்வாள் ரொம்பவும் சென்டிமென்டலாக‌. இப்போது அந்த அம்மாவின் முதல்கள் மாறிவிட்டனவா தெரியவில்லை..ஆனால், சென்டிமென்டல்கள் மட்டும் மாறவில்லை.....ஓக்கே..ஓக்கே...போதும்...விஷயத்துக்கு வரேன். :-)

தினமும் காலையிலே பப்புவை எழுப்புவது ஒரு கலை. இந்த 'டயமாச்சு', 'வேன் வந்துடும்', 'தண்ணி ஆறுது' இல்லேன்னா 'எவ்ளோ நேரம் சொல்லிக்கிட்டே இருக்கேன், சீக்கிரம் எழு' இதெல்லாம் வேலைக்கே ஆகாது.

என்னைப்போல, தூக்கத்திலிருந்து கண் விழித்ததும், அந்த பக்கம் திரும்பி கொஞ்ச நேரம், இந்த பக்கம் திரும்பி கொஞ்ச நேரம், ஜன்னலைப் பார்த்துகொண்டு கொஞ்ச நேரம்....லேசாக சாய்ந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம்...இந்த மாதிரி துயில் கலையும் விஷயமெல்லாம் பப்புவிடம் அறவே கிடையாது. லிரில் புத்துணர்ச்சிதான். பெரும்பாலும் லஷ்மி கார்த்திகா, ஸ்ருதி லயா, அத்தி ஆண்ட்டி நினைப்புதான். எனவே, எனக்கும் தினமும் ஏதாவது ஒன்று கிடைத்துவிடும்.

'இன்னைக்கு யோகாவா' என்ற மொக்கையான கேள்வியிலிருந்து 'ஆம்பூர்/ வடலூர் ஆயா வர்றாங்களா இன்னைக்கு' 'இன்னைக்கு என்ன சிடி பாக்கலாம்' ..இப்படி ஏதாவது கேள்வியில் தொக்கி நிற்க வேண்டும். வெள்ளிக் கிழமைகள் போனான்ஸா. அன்றைக்கு ஆம்பூர்/வடலூர் ஆயா விசிட் இருந்தால் டபுள் போனான்ஸா. திங்கள் காலையில் எழுப்புவது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு எளிது வெள்ளிகாலை எழுப்புவது.

மிக முக்கிய காரணம், வெள்ளிக்கிழமைகளில் யோகாவும் இல்லை. கராத்தேவும் இல்லை. ப்ளே க்ரவுண்ண்ண்ண்ண்ட்.

சிறிது நாட்களாக அதுவும் மழை ஆரம்பித்த நாளிலிருந்து பப்பு ப்ளே க்ரவுன்டில் வந்த விஷபாம்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறாள்.'ப்ளே க்ரவுண்டுக்கு இப்பல்லாம் ஆன்ட்டி எங்களை அனப்ப மாட்றாங்க' என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். பள்ளியின் மைதானம் அவ்வளவு பெரிதெல்லாம் இல்லை. ஏதோ கொஞ்சம் விளையாட்டு சாதனங்கள் இருக்கும். ஆனால், காம்பவுண்டைச் சுற்றி இருக்கும் காலி இடம்...மரங்கள்... தேங்கியிருக்கும் தண்ணீர்...எல்லாம் சேர்ந்து 'க்ரவுண்டில் வந்த விஷப்பாம்பை' கொஞ்சம் படமெடுக்கத்தான் செய்தது.

ஓபன் டேவுக்குச் சென்றிருந்த போது, ஆன்ட்டி ட்ரைனாமியல், பைனாமியல், ஜ்யாமெட்ரிக் ட்ரே என்று பப்புவின் புலமையை பறைச்சாற்றிக்கொண்டிருக்க என் மனமோ விஷப்பாம்பையே சுற்றிக்கொண்டிருந்தது. எப்போடா முடிப்பாங்க என்று ஆண்ட்டி ரிப்போர்ட் கார்டை முடித்ததும் கையெழுத்திட்டுவிட்டு, 'ஆன்ட்டி (ஆமா, அங்கே பெரியவங்களை எல்லாம் பெரியவங்கஆன்ட்டின்னுதான் கூப்பிடுவாங்க..சில ஸ்கூல்லே சித்தின்னு கூப்பிடுவாங்களாம்..அதுக்கு இது எவ்வளவோ பெட்டர்தானே!) க்ரவுண்டில பாம்பு வந்துச்சு, ஓட்டையிலே கல்லு வைச்சு மூடி வைச்சிருக்காங்க ந்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. பாம்பு வந்துச்சா... க்ரவுண்டுக்கு அனுப்பினா கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க...' என்று ஆரம்பிக்க....

"மழை வந்ததுலேருந்து ப்ளே க்ரவுண்டுக்கு கொஞ்ச நாளா அனுப்புறதில்லை. பாம்பெல்லாம் வரலை. இங்கே வர்றதுக்கு சான்ஸே இல்லை. ஆனா, வெள்ளிக் கிழமையானா ப்ளே க்ரவுண்ட் ஆன்ட்டி எல்லாரும் கேப்பாங்க. நாங்கதான் நிறுத்தி வைச்சிருக்கோம். அந்த கோவத்துலே சொல்லியிருப்பாங்க, நீங்க பயப்படாதீங்க.." என்றார் சிரித்துக்கொண்டே.

பப்புவை நம்புவதா ஆன்ட்டியை நம்புவதா என்ற குழப்பத்தில் பதிலுக்கு சிரிக்க முடியவில்லை. ரொம்ப நீளமாக இருந்த அந்த விஷப்பாம்பு, பப்புவும் அவளது நண்பர்களும் கல்லெல்லாம் வைத்து சுவரின் ஓட்டையை அடைத்தாலும் தள்ளிவிட்டு வந்த அந்த பாம்பு மட்டும், வெள்ளிக்கிழமைகளில் மறக்காமல் நினைவுக்கு வந்துவிடுகிறது.


"ஆச்சி, நான் கீழே இருக்கிற வொர்க்கெல்லாம் கம்ப்ளீட் பண்ணிட்டேன்னு ஆன்ட்டி என்னை மாடிக்கு அனப்பிட்டாங்க, வர்ஷினி, பி.ஹர்ஷினி, தனுஷ், நானெல்லாம் மாடிக்குப் போயிட்டோம். மாடிக்கு அனுப்பிட்டா சீனியர் மான்ட்டிசோரி, நாங்க சீனியர் மான்ட்டிசோரிக்கு போயிட்டோம், ஆச்சி"

இது மூன்று வருட கோர்ஸ். பப்புவின் பள்ளியில் இந்த கோர்ஸின் பெயர் எம்1.இதை முடித்த பின்னர்தான் சீனியர் மான்ட்டிசோரி - ஒன்றாவது, இரண்டாவது எல்லாம்.... கீழே இருக்கும் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டார்களா, பப்புவும் கற்று முடித்துவிட்டாளா, மாடிக்கு அனுப்பிவிட்டார்களா டபுள் ப்ரமோஷனெல்லாம் ஆயா காலத்தோட சரியாச்சே...என்றெல்லாம் சந்தேகம்.ஏனெனில், மாதாந்திர சந்திப்பின்போது, 'குறிஞ்சியும் வர்ஷினியும் இங்கேயிருக்கும் மெட்டீரியல்ஸை எல்லாம் முடித்த பின்பே சாப்பிடக் கிளம்புவார்க‌ள்' என்று சொல்லியிருந்தார். ஆன்ட்டியிடம் கேட்டபோது, ' டெய்லி எங்களை மாடிக்கு அனுப்புங்க ஆன்ட்டி, நாங்க இந்த வொர்க்கெல்லாம் முடிச்சுட்டோம்.' என்று நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். அந்த பூமராங்தான் என்னிடமும் வந்திருக்கிறது.

அடுத்த வருடம்தான் மாடிக்காம். :‍-)


ஓபன் டேவுக்கு கொஞ்சம் சீக்கிரம் சென்றுவிட்டேன் போல. பிள்ளைகள் எல்லாரும் வேனுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். நானும் வராண்டா விலிருந்து அவர்களது வகுப்பறையை எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். பப்புவையும் அவளது நண்பர்களையும் பார்க்க.

பப்புவைத் தவிர மற்ற குட்டீஸெல்லாம் எட்டி எட்டி என்னைப் பார்த்து 'குறிஞ்சீஸ் மதர்' என்றும் 'ஆன்ட்டி ஹாய்' என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எனக்கோ பயம். பப்பு இதை பார்த்தால் அவ்வளவுதான்...எவ்வளவு கிள்ளுகள அடிகள் எனக்கு இருக்கிறதோ என்று எண்ணிக்கொண்டேன். ஆயாவுக்கு ஊசி போடுவதற்காக நர்ஸ் வந்திருந்தார். அவரது குழந்தையையும் அழைத்து வந்திருந்தார். அந்தக் குழந்தையைக் கொஞ்சப் போக அந்த வினையே தீர்ந்த பாடில்லை. தூங்கப்போகும் சமயம், சரியாக இது அவளது நினைவுக்கு வந்து விடும். இப்போது இவர்களுக்கு ஹாய் சொல்லி பேசிக் கொண்டிருந்தால்.... அதை பப்பு பார்த்துவிட்டால்.....நினைக்கவே பயமாக இருந்தது.

கடைசியாக பப்புவும் வந்தாள். என்னைப் பார்த்து சிரித்துவிட்டு ஓடி விட்டாள்.

வீட்டிலும் கூட இதைப் பற்றி எதுவும் பேசவில்லை.

ஆன்ட்டியை பார்த்தது பற்றி நானாக ஆரம்பித்தபோது, "ஹேய், என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் பார்த்தியா, அவங்கதான் என் ஃப்ரெண்ட்ஸூங்க..." என்று யார் வேதஸ்மிருதி, அக்ஷயா, பி.ஹர்ஹினி, மெரில் என்றெல்லாம் பெருமையாக‌ சொல்ல முற்பட்டாள். பொறாமையற்ற அந்த பப்புவை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

மற்ற ரிமார்க்ஸ் : சொற்களுக்குகிடையில் இடைவெளி விடுவதை அறிந்து எழுதுகிறாள். கதை சொல்வதில் ஆர்வம் இருக்கிறது.

ஆன்ட்டி சொல்லாமல் விட்டது : நான் கூட உட்கார்ந்து எழுத வைக்கும் நேரங்களை விட அவளாகவே ஹோம் ஒர்க் செய்தால் அழகாக எழுதுகிறாள்.

8 comments:

ராமலக்ஷ்மி said...

// மாடிக்கு அனுப்பிட்டா சீனியர் மான்ட்டிசோரி, நாங்க சீனியர் மான்ட்டிசோரிக்கு போயிட்டோம், ஆச்சி//

குழ்ந்தைகள் உலகில் அது எத்தனை பெரிய விஷயம்.

//அவளாகவே ஹோம் ஒர்க் செய்தால் அழகாக எழுதுகிறாள்.//

:)!

☀நான் ஆதவன்☀ said...

:) பப்புவின் இந்த மாற்றம் சந்தோஷமே. பொஸஸிவ்னஸ் இல்லாம வளர்வது நல்லது தான்.

கிரவுண்டில் பாம்பு என்பதெல்லாம் குழந்தைகள் உலகத்தில் கற்பனை கதாபாத்திரமாக இருக்கும். க்யூட் :)

நசரேயன் said...

//நான் கூட உட்கார்ந்து எழுத வைக்கும் நேரங்களை விட அவளாகவே ஹோம் ஒர்க் செய்தால் அழகாக எழுதுகிறாள்//

இனிமேலவாது பப்புவை தொந்தரவு பண்ணாம இருங்க

அம்பிகா said...

// மாடிக்கு அனுப்பிட்டா சீனியர் மான்ட்டிசோரி, நாங்க சீனியர் மான்ட்டிசோரிக்கு போயிட்டோம், ஆச்சி//
:-))

Sriakila said...

இதுவரை 'பப்பு' என்று தான் தெரியும். பப்பு பெயர் குறிஞ்சியா? எவ்வளவு அழகானத் தமிழ் பெயர்.

//பொறாமையற்ற அந்த பப்புவை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தேன்//

குழந்தைகளுக்குப் பொறாமை கிடையாது. பொறாமை போலத் தோன்றும் அன்பின் வெளிப்பாடுதான் அது. இது போன்ற வார்த்தைகளின் முழு அர்த்தம் எல்லாம் நம்மைப் போன்ற வளர்ந்த அறிவு ஜீவிகளுக்குத்தான் தோன்றும்.

//நான் கூட உட்கார்ந்து எழுத வைக்கும் நேரங்களை விட அவளாகவே ஹோம் ஒர்க் செய்தால் அழகாக எழுதுகிறாள்//

என் குழந்தையும் அப்படித்தான். அவர்களைத் தொந்தரவு செய்யாமல் அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தாலே போதும். அவர்கள் அழகாக எழுதுகிறார்கள்.

ஜெயந்தி said...

பாம்புக்கு பயந்து கல்லு வச்செல்லாம் அடைச்சாங்களா? பிள்ளைங்க எல்லாரோட கற்பனையும் ஒன்னு சேர்ந்திருச்சு போல.

பித்தனின் வாக்கு said...

முல்லை உங்களின் தொடர் வாசகி பத்து ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாய் ஆகி உள்ளார். பப்பு நலமா?

விஜய்கோபால்சாமி said...

1. எட்டு வருடங்கள் முன்பு 27-டி பேருந்துப் பயணத்தின் போது இறங்குகிற அவசரத்தில் ஸ்டெல்லா மேரிஸ் மாணவி ஒருவரின் ஹீல்ஸ் காலணி என் வலது கால் பெருவிரலைப் பதம் பார்த்தது. அன்று உடைந்த நகம் இப்போது வரை உடைந்தே வளருகிறது. ஒரு நாள் பேச்சுப் போக்கில் இதைப் பற்றி நண்பன் ஒருவன் கேட்ட போது விஷயத்தை அவனுடன் பகிர்ந்து கொண்டேன். மறு வினாடி அவனிடமிருந்து அந்த வசவு வார்த்தை வந்தது.

2. பிறிதொரு சந்தர்பத்தில் அலுவலக வாகனத்தில் எனக்கும் ஓட்டுனருக்கும் நிகழ்ந்த வாக்கு வாதத்தை உடனிருந்த சக பெண் ஊழியர் ஒருவர் அவரைப் பற்றிக் குறை கூறுவதாக எண்ணி (ஓட்டுனருடன் தெலுங்கில் பேசிக் கொண்டிருந்தேன். அந்தப் பெண் வட இந்தியர், தெலுங்கு தெரியாதவர்). மறுநாள் சரியான புரிதலின்றி எங்கள் அலுவலகத்தின் மனிதவளப் பிரிவுக்குப் புகார் அனுப்பிவிட்டார். இது தெரிந்ததும் சக நண்பர்களில் ஒருவன் அதே வார்த்தையைச் சொன்னான்.

3. சென்னையில் வேலைக்குச் சென்ற காலத்தில் பட்டினப்பாக்கம் டாஸ்மாக் ஒன்றிர்க்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து தான் அலுவகம் செல்ல 27-டி பேருந்துக்குக் காத்திருப்பேன். அன்று இரவுப் பணிக்குச் செல்ல பேருந்துக்குக் காத்திருந்த வேளையில் டாஸ்மாக்கிற்குப் பக்கத்துக் கடையின் முன்பு 50 வயது கடந்த மூதாட்டி ஒருவர் மது போதையில் விழுந்து கிடந்தார். ஆடை விலகிக் கிடந்தது கூடத் தெரியாமல் போதையிலிருந்த அந்த மூதாட்டியை அதே வார்த்தையைச் சொல்லிக் கடைக்காரன் திட்டினான்.

4. ஒரு ஞாயிறு மாலையில் நானும் நண்பனும் கடற்கரையிலிருந்து வீடு திரும்ப பேருந்துக்குக் காத்திருந்தோம். ராணி மேரி கல்லூரிக்கி எதிரிலுள்ள பேருந்து நிறுத்தம். நெடுநேரம் காத்திருந்த பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுனரை விளித்துக் கட்டணம் குறித்த பேரத்தில் ஈடுபட்டிருந்தார். பேரம் படியாததால் ஆட்டோக்காரன் அங்கிருந்து நகர்ந்தான். ஒரே வினாடியில் வண்டியை அறுபது கி.மி. வேகத்துக்கு நகர்த்திய அவன், வண்டி நகரும் முன்பு அவனும் அதே வார்த்தையைச் சொல்லி அந்தப் பெண்ணைத் திட்டினான்.

5. சென்னையில் வசிக்கும் இன்னொரு நண்பன் அவன். நண்பர்கள் என்றால் அவர்களைக் கெட்ட வார்த்தைகளில் தான் புகழ்வான், பாராட்டுவான். கொஞ்சுவதே கெட்ட வார்த்தைகளால் தான் எனும் போது வசை பாடுவதற்கு என்ன வார்த்தையைப் பயன்படுத்துவான் என்று நான் சொல்லித் தெரியத் தேவையில்லை. மற்றவர்களைத் திட்ட வேண்டிய தருணங்களில் மிக அதிகமாக அதே வார்த்தையைத் தான் பயன்படுத்துவான்.

6. ஆறு அல்லது ஏழு வயது இருக்கும் போது எதிர் வீட்டிலிருந்த நண்பன் கலீலின் கடப்பைக் கல் சிலேட்டைக் கைதவறிக் கீழே போட்டு விட்டேன். அவன் மனதைப் போலவே அந்த சிலேட்டும் சுக்கல் சுக்கலாக சிதறிய அடுத்த வினாடி அவனும் அதே வார்த்தையைச் சொன்னான்.

ஆறேழு வயது கலீல் தொடங்கி முந்தைய சம்பவங்களில் கூறிய 26 லிருந்து 70 வரை வயது வேறுபாடுள்ள அனைவரையும், தாங்கள் வெறுப்பவர்களின் தாய் உலகின் ஆதித் தொழிலைச் செய்தவளாகத் தான் இருக்க வேண்டும் என்று உணரப் பணித்திருக்கிறார்கள் அல்லது பழக்கியிருக்கிறார்கள். இது தாத்தன் அப்பனுக்கும் அப்பன் அவனுக்கும் கொடுத்த பரம்பரைச் சொத்து போலவே பாவிக்கப்பட்டு வருகிறது.

பதினேழு வயது வரை மற்றவர்களைப் போலவே நானும் எந்தக் குற்ற உணர்வும் இன்றி அதே சொல்லைப் பயண்படுத்தியிருக்கிறேன். பெரிய போதி மர மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. ஆனால் ஏதோ ஒரு நாளில் அது தவறு என்பது மட்டும் உரைத்தது. அன்றிலிருந்து அந்த வார்த்தையை யார் மீதும் பிரயோகிப்பதில்லை.