Tuesday, November 16, 2010

ஒரே கல்லுல...

1.பப்புவை எரிச்சலூட்டுவது எப்படி?

கடையில் ஜெல்லி பாக்கெட்டை எடுக்கும்போது, "ப்லக்...நானே உனக்கு ஜெல்லி செஞ்சு தரேன் பப்பு, செம சாஃப்ட்டா" என்று சொல்லவேண்டும். ஸ்ட்ராபெர்ரி ஃப்லேவர் ஜெல்லி பவுடரோடு வீட்டுக்கு வந்ததும், பரிசோதனையை ஆரம்பிக்க வேண்டும். 'ஜெல்லி சூப்பரா வரும்' என்று சொல்லிக்கொண்டே ஜெல்லியை தயாரிக்க வேண்டும். வேலை அதிகமில்லை, ஜென்டில்பீபிள்....சுடுதண்ணியில் பவுடரை கலக்கி ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டியதுதான். என்ன, ஸ்ட்ராபெர்ரி ஃப்லேவரென்றால் கொஞ்சம் ரத்தசிவப்பில் பார்க்க டெரராக இருக்கும்...கண்டுக்காதீங்க! செட் ஆச்சுன்னா சரி ஆகிடும் என்று சமாதானப்படுத்திக்கொள்ளுங்கள்...

ஜெல்லி பற்றிய கனவுகளுடனே மதிய உணவு, இரவு உணவு, பால்....பப்புவுக்கு!

நான்கைந்து மணிநேரங்களுக்குப் பிறகு ஜெல்லியை எடுத்துக்கொடுத்தாலே போதும்..முதல் பாயிண்டில் நீங்கள் பாஸ்!

2. எரிச்சலடைந்த‌ பப்புவை சமாதானப்படுத்துவது எப்படி?

சிம்பிள்,'ஜெல்லி வேணாம், நாம ஐஸ்க்ரீம் செய்யலாம்' என்று சொன்னால் போதும்.

உடனே செய்துவிடக்கூடாது.ஒரு சில நாட்கள் தள்ளிப்போட வேண்டும்.அப்படியே ஐஸ்க்ரீமை சாப்பிட வைக்க அடி போட வேண்டும். 'ஜெல்லி செஞ்ச‌ப்போ நீ சாப்பிடலை இல்ல' என்ற 'அம்மா' சீன் முக்கியம். எச்சரிக்கை, 'எனக்கு ஐஸ்க்ரீம் வேணாம்' என்று சொல்லிவிட வாய்ப்புகள் அதிகம். சொன்னாலும் பெரிது படுத்தக் கூடாது. 'ஐஸ்க்ரீம் சூப்பரா வரும்" என்று , எப்போடா ஐஸ்க்ரீம் செய்வாங்க என்ற எதிர்பார்ப்பையும் ஊட்ட வேண்டும்.

கடைசியாக, பரிசோதனையை ஆரம்பித்துவிடவேண்டும். இறுதி வடிவத்தை கொடுத்தாலே போதும். ஜெல்லியாவது ஒன்றிரண்டு ஸ்பூன்கள் உள்ளே சென்றிருக்கும்...ஐஸ்க்ரீம் பார்வையிலேயே ரிஜெக்டட்!

பிறகென்ன, ஏதாவது கடைக்குச் சென்று ஜெல்லி ஒரு பாக்கெட் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்த வேண்டியதுதான்.

மாங்காய் 1: 'குழந்தைக்கு நீ எதுவும் செஞ்சு தரமாட்டேங்கற' என்று யாராவது ஏதாவது இனிமேல் சொல்லுவார்கள்?

மாங்காய் 2: பப்பு உங்களை எதுவும் செய்ய சொல்லவே மாட்டாள்.

டிஸ்கி: தெனாலிராமன் பூனை வளர்த்த கதை நினைவுக்கு வந்தால்....ஜெல்லியே பொறுப்பு!

10 comments:

அமைதிச்சாரல் said...

பைனாப்பிள் ஃப்ளேவர்ல்லாம் நீங்க செஞ்சு கொடுக்கறதில்லியா..(மாரியாத்தாவுக்கு மஞ்சத்தண்ணி கலக்குனமாதிரி இருக்குமே)

எனக்கென்னவோ அந்த ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர்லதான் ஏதோ தப்பு இருக்கிறமாதிரி தோணுது..
(பப்பு ப்ளாக் படிக்கிறதா இருந்தா இன்னும் பத்தவைக்கலாம் :-))))))

ஆயில்யன் said...

//நான்கைந்து மணிநேரங்களுக்குப் பிறகு ஜெல்லியை எடுத்துக்கொடுத்தாலே போதும்..முதல் பாயிண்டில் நீங்கள் பாஸ்!/

என்னது நாலைஞ்சு மணி நேரமா பப்புவிடமிருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் பார்த்தா அந்த ஜெல்லி - நீங்க செஞ்சது - நாலைஞ்சு மாசமா யாராலும் சீண்டப்படாம பிரிஜ்க்குள்ளாறயே இருக்காம்ல! :))))

ஆயில்யன் said...

// நானே உனக்கு ஜெல்லி செஞ்சு தரேன் பப்பு, செம சாஃப்ட்டா" ///

என்ன்னா டெரரிசம்!

கானா பிரபா said...

த்சே த்சே

பப்பு! அடுத்தமுறை ஜெல்லியை வாங்கி வச்சிருக்கவும், தற்பாதுகாப்புக்கு உதவும்லே

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு வித்தை :))!

அமுதா said...

எனக்கு தலைப்பு ரொம்ப புடிச்சிருக்கு. ஜெல்லி ஜல்லி மாதிரியும் ஐஸ் க்ரீம் ஐஸ் க்யூப் மாதிரியும் வந்ததை சொல்ற மாதிரி :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

santhanakrishnan said...

நீங்கள் ஒரு டியுஷன் சென்டர்
ஆரம்பிக்கலாம்.
குழந்தைகளை எப்படி ஏமாற்றி
மாற்றலாமென.

அன்புடன் அருணா said...

ஒரே கல்லுலே ஏழெட்டு மாங்கா அடிக்கிற வித்தையெல்லாம் கைவசம் இருக்கு!!!!

ராமலக்ஷ்மி said...

அருணா:))))!