Friday, November 12, 2010

வேளச்சேரி டைம்ஸ் : ஜெனியின் யாத்திராகமம்

10,+2 படித்திருந்தாலும் ஜெனி இந்தியாவின் மிக நவநாகரிக‌மான பணியில் இருக்கிறாள். அல்லது அவ்வாறு நம்புகிறாள். அவளிடம் இரண்டு வகையான யூனிபார்ம்கள் உண்டு. வாரநாட்களில் ஒரு வண்ணமாகவும், வாரயிறுதிகளில் வேறொரு வண்ணமாகவும் அது மாறும். அன்றைய நாளுக்குரியதை எடுத்துக்கொண்டு சென்னையின் பஸ்களில் பயணித்து அவளது பெருமைக்குரிய பணியிட‌த்திற்கு வருகிறாள். பணியிடம், பார்ப்பதற்கு பகட்டானது என்றாலும் அவளது பணி அவ்வளவு மெச்சத்தக்கதாக‌ இல்லை. ஜெனி, வேளச்சேரியில்
இருக்கும் ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்கிறாள். ‍ வாக்ஸிங், பெடிக்யூர், ஹேர் கலரிங், ஆயில் மசாஜ் - அவளது அன்றாட வேலைகளில் சில.


'ஜென்ட்ஸோட உடலையா தொடுகிறோம், லேடீஸூக்குத்தானே' என்பதால் ஜெனிக்கு பிறரது உடல் பாகங்களை தொடுவது வித்தியாசமாக தோன்ற வில்லை. அதைக் குறித்து எந்த வெட்கமும் இல்லை. கடந்த மூன்று மாதங்களாகத்தான் இவ்வேலையைச் செய்தாலும், ஜெனி, இதற்கு முன் இரண்டு வருடங்களாக வேலை செய்தது ஒரு ஷோ ரூமில். ஜெனியின் ஊர்க்காரரான ரோமாவும் இங்கேதான் வேலை செய்கிறார்.அவரின் ரெக்கமண்டேஷனால் இந்த வேலைக்கு வந்துவிட்டாள்.

ஜெனி, ஆதம்பாக்கத்தில் அவளது அண்ணன்களுடன் தங்கி இருக்கிறாள். பஸ் பாஸ் வாங்கிக் கொண்டு சென்னையில் பஸ்களில் பயணிக்கிறாள். அலுவலகத்திற்கு வந்து யூனிஃபார்முக்குள் புகுந்து விட்டால், அவள் மணிப்பூரைச் சேர்ந்த கிராமத்துப் பெண் இல்லை. ஸ்ட்ரெய்ட்டனிங் செய்யப்பட்ட முடியுடன், திருத்தப்பட்ட புருவங்களுடன், கருப்பு ஷூவுடன், கண்ணாடி பளபளக்கும் அறைகளுடனான அச்சூழலில், தனது வேலையை நேர்த்தியாக, முழுமையாக செய்யும் ஒரு ஃப்ரொபஷனலாக‌ பொருந்திவிடுகிறாள்.


ஒருநாளைக்கு எட்டு முதல் ஒன்பது வருகையாளர்களை ஜெனி அட்டென்ட் செய்ய வேண்டும். ஜெனியின் வேலைநேரம் பத்து மணி முதல் இரவு எட்டு மணி வரை. என்றாலும், சரியாக எட்டு மணிக்கு முடிந்துவிடாது. வாரநாட்களில் ஒன்பது மணிக்கு மேலாகிவிடுவதுண்டு. சில வாரயிறுதிகள் காற்றாடுவதும் உண்டு. எப்படியானாலும், ஜெனிக்கு வாரயிறுதிகளில் கண்டிப்பாக‌ விடுமுறை கிடையாது.


மணிப்பூரில் காலநிலை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். மணிப்பூரை பற்றிய நினைப்பே ஜெனியை உற்சாகம் கொள்ள வைக்கிறது. சென்னை மிகவும் வெப்பமாக இருக்கிறது. இருந்தாலும் ஜெனி சென்னையிலேயே தொடர்ந்து வாழ விரும்புகிறாள். இங்கே, அனைவரும் ஃப்ரெண்ட்லியாக இருக்கிறார்கள், மொழி ஒன்றுதான் அவளுக்கு பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. ஜெனி, ஊருக்குச் செல்ல வேண்டுமானால் அவளது பாஷையிலேயே சொல்ல வேண்டுமானால், "இரவு பகலாக‌ ரயிலிலேயே உட்கார்ந்துக் கொண்டே பயணம் செய்ய வேண்டும் ‍கௌஹாத்தி வரை. அங்கிருந்து அடுத்த ரயில் மணிப்பூருக்கு. பயணக்காலம் மட்டுமே ஒரு வாரம் ஆகிவிடும்". ஜெனி சென்னைக்கு வந்த இந்த இரண்டரை வருடங்களில் ஒருமுறைதான் வீட்டிற்குச் சென்றிருக்கிறாள். அம்மா, அப்பாவெல்லாம் அங்குதான் வசிக்கிறார்கள். அவளது ஊரில், நிறைய கிராமங்கள் இப்படித்தான் சிறுகுழந்தைகள் மற்றும் முதியவர்கள் மட்டும் தங்குமிடமாக மாறிவிட்டன.(pic courtesy : flickr)

ஜெனிக்கு சென்னையில் வீட்டு ஓனர்கள் வாங்கும் அட்வான்ஸ்தான் மிகுந்த வருத்தத்தையும் கஷ்டத்தையும் தருகிறது. ஐம்பதாயிரம் ரூபாய் அட்வான்ஸ் என்பது அதிகமான தொகை.அவளால் நினைத்துப் பார்க்க முடியாதத் தொகை. அதோடு, வசதியற்ற வீடு. நிறைய பேருடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய சூழல். வாங்கும் சம்பளத்தில் பாதி வாடகை கொடுக்கவே சரியாக இருக்கிறது. அப்புறம் அலைபேசி. அதனால்தான் நண்பர்களுடன் பேசும் மகிழ்ச்சியாவது அவளுக்குக் கிடைக்கிறது. அவளுக்கு பிடித்த பொருட்களை வாங்க முடியவில்லை.கையில் எடுக்குமுன் விலையை பார்த்துவிட்டு அப்படியே வைத்துவிட்டு நகர்ந்துவிட நேர்கிறது. இதில் மிச்சம் பிடித்து ஊருக்கு அனுப்ப வேண்டும்.ஜெனிக்கு தீபாவளி இல்லை என்பதால் அன்றும் அவள் வேலைக்கு வந்தாள்.


ஜெனிக்கு வயது 21. ஜெனிக்கு, அவளது எதிர்காலம் பற்றியெல்லாம் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. கிடைக்கும் வேலையைச் செய்து சம்பாரிக்க வேண்டும். செலவுகளை சந்திக்க வேண்டும். மணிப்பூரில் அதற்கெல்லாம் வாய்ப்பு கிடையாது. ஓரளவு வருமானம் வரக்கூடிய வேலை வேண்டுமானால் எல்லையைத் தாண்டிதான் வந்தாக வேண்டும்.இதைத்தாண்டி வேறு எதுவும் ஜெனிக்கு யோசனை இல்லை. திருமணம் குறித்தெல்லாம் யோசிக்கவே இல்லை. திருமணம் செய்துக் கொண்டாலும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்றே ஜெனி விரும்புகிறாள்.

மணிப்பூரிலும் பியூட்டி பார்லர்கள் உண்டென்றாலும் அங்கு இதுபோல கிடையாது. மிகவும் சிறியவை. இங்கு பியூட்டி பார்லர்கள் பெரிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. ஆனால், சம்பளம்தான் போதவில்லை. மாதம்
ரூ5000 என்பது வாடகைக்கும், மற்ற செலவுகளுக்குமே சரியாக இருக்கிறது. சமயங்களில், பஸ் கிடைக்காத நாட்களில் ஆட்டோ பிடித்து வர நேர்ந்தால் ஒரு ட்ரிப்புக்கு ரூ 50 கொடுக்க நேர்கிறது. மழைநாட்களில்தான் திண்டாட்டம்.

வேறு நல்ல வேலை,இதைவிட அதிகமாக வருமானம் தரக்கூடிய‌ வேலை ஏதாவது இருந்தால் ஜெனிக்குச் சொல்வீர்களா?

அப்படியே, ஜெனிக்குள் எழும் சில கேள்விகளுக்கு விடைகளைத் தருவீர்களா?

ஜெனியும், அவளது அண்ணன்களும் பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்வி கற்க முடியாதது ஏன்? கோடிகள் புரளும் ஐபிஎல், பல்லாயிரம் கோடிகளில் விலைபோகும் அணிகள் இருக்கும் நாட்டில் , ஜெனிக்களும் ரோமாக்களும் வெறும் ஐந்தாயிரம் ரூபாய்க்காக ஏன் இரவும் பகலும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது?

காமன்வெல்த் போட்டிகளை அடுத்து, ஒலிம்பிக் நடத்தும் தகுதி பெற்றுவிட்ட இந்தியாவில், வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே உழைத்து தேய வேண்டிய அவலம் ஏன்? சொந்த ஊரை விட்டு வந்து ஓயாமல் உழைத்தும் கைகளில் மிஞ்சுவது என்ன?

ரெஸ்டாரண்ட்கள் மற்றும் ஃபாஸ்ட் புட் கடைகளின் எடுபிடி வேலைக‌ள், பியூட்டி பார்லர்கள் எல்லாம் ஜெனி மற்றும் ரோமாக்களாலும், அவர்களது அண்ணன்களாலும் குறைவான சம்பளத்திற்கு இட்டு நிரப்பப்படுகிறதே, எதனால்?
எட்டு மணிநேர வேலை என்பதே இல்லாமல் போய் நின்றுக்கொண்டே பத்துமணி நேரத்துக்கும் மேல் வேலை செய்ய நேரிடுவது எதனால்? புதிய வேலை வாய்ப்பு என்பது இதுதானா?

நாற்கர சாலைகளாலும் மெட்ரோக்களாலும் சாலைவசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ள இந்தியாவில் ரோமா தனது ஊருக்குச் செல்வதற்கு மட்டும் ஒரு வார காலமாவது ஏன்?

(பி.கு : ஜெனியை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வேளச்சேரியின் ஒரு பியூட்டி பார்லரில் கடந்த வாரத்தில் சந்தித்தேன். அவரிடம் உரையாடியதிலிருந்து...)

29 comments:

பயணமும் எண்ணங்களும் said...

கேள்வி நல்லாருக்கு விடைதான்...?????????

ராம்ஜி_யாஹூ said...

ஜெனி ஒரு மருத்துவராகவோ அல்லது ஆரக்கிள் நிறுவனத்தில் ஆறு இலக்க சம்பளம் வாங்கும் பதவியில் இல்லாமல் இருக்க ஒரே காரணம், பள்ளியில் அதிக மதிப்பெண் வாங்கததே. இவர் நன்றாக படிக்காமல் இருந்ததற்கும் இந்தியாவின் பொருளாதார வளர்சிக்கும் என்ன சம்பந்தம் புரிய வில்லை.

ராம்ஜி_யாஹூ said...

ஜெனி ஒரு மருத்துவராகவோ அல்லது ஆரக்கிள் நிறுவனத்தில் ஆறு இலக்க சம்பளம் வாங்கும் பதவியில் இல்லாமல் இருக்க ஒரே காரணம், பள்ளியில் அதிக மதிப்பெண் வாங்கததே. இவர் நன்றாக படிக்காமல் இருந்ததற்கும் இந்தியாவின் பொருளாதார வளர்சிக்கும் என்ன சம்பந்தம் புரிய வில்லை.

அமுதா கிருஷ்ணா said...

அந்த 5000 ரூபாய் அங்கு கிடைக்காததால் தான் இங்கு வருகிறார்.பி.ஈ படிச்சுட்டு கூட இந்த சம்பளத்தில் தமிழ்நாட்டில் வேலையில் இருக்கிறார்கள் நிறைய பேர்.அந்த குறைந்த சம்பள வேலையும் எல்லோருக்கும் கிடைப்பதும் இல்லை.நிறைய தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த சம்பளம் தான் வழங்க படுகிறது.பெரிய பார்லகளில் இவர்களுக்கு டிப்ஸ் கிடைக்கும்.தமிழ்நாடு வரும் எந்த வட இந்தியரும் அவர்கள் மாநிலத்திற்கு திரும்ப போக விரும்புவதேயில்லை. இங்கு எல்லோருக்கும் கிடைக்கும் வசதிகள் அப்படி. இந்த சம்பளத்தினை விட்டு அவர்கள் அவ்வளவு எளிதில் போக மாட்டார்கள் என்பதால் பெரும்பான்மையான ஹோட்டல்கள், பார்லர்கள் வேலைக்கு அமர்த்துகின்றன.லோக்கல் ஆட்களை அமர்த்தினால் மாதத்திற்கு ஒரு முறை ஆட்களை தேர்வு செய்யும் நிலை உள்ளது. எப்பவும் கூலி குறைவாக வேலை செய்யும் நிலை எங்கும் உள்ளது.யாரை குற்ற்ம் சொல்வது இதில்.

ராமலக்ஷ்மி said...

சுடும் கேள்விகள்.

// பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்வி கற்க முடியாதது ஏன்?//

அந்த வாய்ப்பு இவர் போல பலருக்கும் கிடைக்காமலேதான் போகின்றன. கல்வியற்ற நிலையிலும் உடல் வருத்தி உழைப்பவருக்கு உரிய அங்கீகாரம் நம் நாட்டில் இல்லை என்பதே வேதனை தரும் உண்மை.

வினவு said...

நம்மைச் சுற்றியிருக்கும் மக்களை தெரிந்து கொள்ள உதவும் பதிவு. நன்றி

அண்ணன் ராம்ஜி யாஹூ கருத்துப்படி இந்தியா ஏழை நாடா இருப்பதற்கு காரணம் நம்ம மக்கள் பள்ளியில் குறைவான மதிப்பெண் வாங்கி, கோட்டை விட்டதுதானாம். கஷ்டகாலம்!! இந்தியா ஏழை நாடா இருப்பதை விட நம்ம அறிவாளிகளின் தத்துவ முத்துக்கள் வறட்சியாக இருப்பதுதான் மிகுந்த அயர்ச்சியை கொடுக்கிறது.

சரி போகட்டும். அண்ணன் ராம்ஜி யாஹூவை மணிப்பூருக்கு அனுப்பி பள்ளியில் நல்ல மதிப்பெண் வாங்கினால் பணக்கார்ராக ஆகலாம் என்ற மாபெரும் கண்டுபிடிப்பை பிரச்சாரம் செய்வதற்கு முயல்வோம். அண்ணன் ஒத்துக் கொண்டால் உடனே செய்யலாம்.

ரோகிணிசிவா said...

Good analysis and social awarness trial Ms.Mullai ,
may i know what did you do from your side to solve her grievances than making her a subject/object of your article stating your love for the society and its wellness?
at least generous tips ?
some registration in correspondence course?
a week end to celebrate with you with dinner and good movie ?
lending your mobile to make a call to reach her parents ?
this is not to offend you but to know what and individual can do when we witness such a situation.
just out of curiosity , :)

LK said...

தமிழகத்தில் இருந்து மணிப்பூர் மிகத் தொலைவுதான். அங்கிருந்து அவர்கள் இடத்திற்கு செல்ல இன்னும் நேரம் ஆகும்தான். அதற்கு தொலைவுதான் காரணம் ஒழிய இந்தியப் பொருளாதாரம் அல்ல. அங்கிருந்து வந்து இங்கு வேலை செய்பவர்கள் ஏராளம். என் டீமில் இருவர் உள்ளனர். அவர்களும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறைதான் செல்வார்கள்.

மற்றப் படி ரோகினி சிவா சொன்னதை வழிமொழிகிறேன்

LK said...

@அமுதா
அந்தப் பணிகளுக்கு மட்டும் அல்ல. நிறுவனங்களில் கூட (ஆபிஸ் பாய் வேலை அல்ல ) துவக்க சம்பளம் கம்மியாக உள்ள இடங்கள் உள்ளன. ஐடி துறை மற்றும் மின்னணுவியல் துறையில் துவக்க சம்பளம் அதிகம் . மேலும் கால் சென்டர்களில் கூட டொமெஸ்டிக் கால் சென்டர்களில் துவக்க நிலை சம்பளம் மிகக் குறைவே

LK said...

மேலும், வார இறுதி ஞாயிறு மட்டுமே விடுமுறை உள்ள நிறுவனங்களும் உள்ளன. விழா காலங்களில் தேசிய விடுமுறை தினங்களில் வேலை செய்தாக வேண்டிய கட்டாயமும் உண்டு

ரோகிணிசிவா said...

//'ஜென்ட்ஸோட உடலையா தொடுகிறோம், லேடீஸூக்குத்தானே' என்பதால் ஜெனிக்கு பிறரது உடல் பாகங்களை தொடுவது வித்தியாசமாக தோன்ற வில்லை. அதைக் குறித்து எந்த வெட்கமும் இல்லை//

I don't understand , what are you trying to tell through these words,
working on another gender is a shame ?
what will you tell the health workers who work on both genders, tailors and few other professions which demands physical contact with both genders and people of other sex too.
when you take up a job /profession you very well know whats your job nature and what and whom are you going to serve and in what form .
Den I should ask will you be ashamed if you are working for your senior or boss if they belong to some other gender ?
Are not serving them with your brain and knowledge?
Why are you expecting her to feel bad about it ?
I just cant get the strategy behind it ,could you let me know what have you tried to tell ,in case my understanding was wrong and revealing my stupidity ,excuse the same .

ரோகிணிசிவா said...

What would happen to Henry's vanity if he didn't have us to throw alms to? What would become of his strength if he didn't have weaker people to dominate? What would he do with himself if he didn't keep us around as dependents? It's quite all right, really, I'm not criticizing him, it's just a law of human nature."

Your love towards Jenny reminds the above
told by Lillian @ Hank ,Atlas shrugged ,Aynrand

பிரேமாவின் செல்வி said...

மணிப்பூர், திரிபுரா மாநிலங்களில் இருந்து பெரும்பான்மையினர் சென்னையில் வந்து வேலை பார்ப்பதுடன், தமிழ் இளைஞர்கள் வெளி மாநிலங்களில் சென்று வேலை பார்ப்பதுடன் ஒப்பிட்டாலே அந்த மாநிலங்களின் பின் தங்கிய நிலை புரியும். சரியாகப் படிப்பு வராத மாணவர்களுக்கும் நல்ல பிழைப்புக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதே நாடு சரியாக இருப்பதற்கு அடையாளம். மற்றபடி அவர்கள் படிக்க என்ன தடை அங்கு இருக்கிறது என்று முல்லை குறிப்பிடவில்லை.

பிற்பட்ட மாநிலங்களுக்கான பயணம் பற்றிப் பேசுகின்றீர்கள். தென் மாவட்டங்களின் கிராமங்களில் வந்து பாருங்கள். சாதரணமாக 20 நிமிடங்களே ஆகக் கூடிய தினசரி பயணங்களை மோசமான சாலைகளினால் மக்கள் 1 மணி நேரத்திற்கும் அதிகமாக பயணிப்பதை.

மற்றபடி இது போன்ற விஷயங்களை விவாதிப்பது என்பது ஆரோக்கியமானதே. எந்த ஒரு மோசமான நிகழ்விற்குப் பின்னும், அடுத்த பரபரப்பான செய்திக்கு எதிர்பார்க்க ஆரம்பித்து விடும் மக்களைப் போல் அடுத்த பதிவிற்கான சுவாரசியமான தலைப்பு கிடைத்ததற்கு பிறகு இதிலிருந்து அனைவரும் தவ்வி விடாமல் இருக்கும் வரை.

பின்னூட்டம் said...

கொஞ்ச நாளைக்கு முன்ன பியூட்டி பார்லருக்கு போரத பத்தி அழகுபடுத்திகிறது ரொம்ப முட்டாள்தனங்கிற மாதிரி ஏதோ எழுதி இருந்தீங்க இல்லையா? அப்ப வேளச்சேரி பியூட்டி பார்லருக்கு எதுக்கு போனீங்க போட்டி எடுக்கவா?

ராம்ஜி அண்ணே நான் உங்க ரசிகன்னே புதுசா கமெண்டு போடுரேன் ஆதரவு கொடுங்கன்னே நாம ரெண்டு பேரும் சேர்ந்து தமிழ் ப்லாக்க ஒரு கலக்கு கலக்குவோம்னே.

ஜோதிஜி said...

சந்தண முல்லை இப்போது திருப்பூருக்குள் அதிகமாக வந்து இறங்கிக்கொண்டுருப்பவர்கள் பீகார், உபி தொடங்கி நேபாளம் வரைக்கும் உள்ள இளையர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். பெரும்பான்மையான இளையர் கூட்டம் தங்கள் குடும்ப வறுமைக்காக தான் இங்கே வருகிறார்கள். பீகார் என்றார் உள்ளடங்கிய பகுதிகளில் நாம் வாழும் வாழ்க்கையில் உள்ள பாதி அளவு கூட வசதி வாயப்புகள் இல்லை. படிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று தான் கேட்கிறார்கள். மற்றொருஆச்சரியம் இன்னும் கூட சில இடங்களில் பால்ய விவாக திருமணம் இருக்கிறது. பையன் 17 வயது. இரண்டு குழந்தைகள் இருக்கிறது. சொல்லிக் கொண்டே போகலாம். தனியாகவே எழுத வேண்டும் என்ற மனதில்வைத்திருந்த விசயங்கள் இது.

பயணமும் எண்ணங்களும் said...

this is not to offend you but to know what and individual can do when we witness such a situation.//

உங்க ஆதங்கம் புரியும் அதே நேரத்தில் நிதர்சனத்தில் நம்மால் நாம் பார்க்கும் அனைவருக்கும் உதவிட முடியாதுதான்..

ஆனால் இதே போல் கேள்விகள் எழுப்புவதும் , ஒரு தீர்வை முன்வைப்பதும் அதை நோக்கிய பயணத்தை பொதுஜனம் மத்தியில் ஏற்படுத்துவதுமே மிகப்பெரிய சவாலென்பேன்..

நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களை சலனமின்றி நம் சொந்தங்களுக்கோ வேண்டியவர்களுக்கோ செய்துகொண்டு தானிருப்போம் நிச்சயம்..

ஆனால் மணிபால் பெண் போல் எத்தனை பேருக்கு செய்ய முடியும்.. அரசின் கடமையை , நாட்டின் கடமையை சொல்லி விழிப்பு நிலைக்கு வருவது இப்படியான கட்டுரை/செய்திகள் மூலம் தான்..

நினைத்து பாருங்கள் , இந்திய மக்கள் அனைவருக்கும் மனதில் இத்தகைய கேள்வி எழுந்தால்?...

ரோகிணிசிவா said...

//நினைத்து பாருங்கள் , இந்திய மக்கள் அனைவருக்கும் மனதில் இத்தகைய கேள்வி எழுந்தால்?.//

எழுந்தா, ஆளுக்கொரு போஸ்ட் போட்டு போஸ்ட் எண்ணிக்கைய ஏத்தலாம்.
அப்புறம் பஸ்லயும் போடலாம், மனிதநேய பதிவர், பஸ்ஸர் பட்டம் வாங்கலாம்.
என் ஃப்ரண்ட் வந்து எனக்கு சப்போர்ட் பண்ணி அவங்களும் அன்னை தெரஸா பட்டம் வாங்கலாம்.

பயமா இருக்கு அப்படி ஒரே மனித நேய மனிதர்களா பார்க்க,அப்படி ஒரு நிலைமை வேண்டாம்

ரோகிணிசிவா said...

//ரோகினி சிவா சொன்னதை வழிமொழிகிறேன்//

தேங்க்ஸ் LK உங்கள் புரிதலுக்கு

//கொஞ்ச நாளைக்கு முன்ன பியூட்டி பார்லருக்கு போரத பத்தி அழகுபடுத்திகிறது ரொம்ப முட்டாள்தனங்கிற மாதிரி ஏதோ எழுதி இருந்தீங்க இல்லையா? அப்ப வேளச்சேரி பியூட்டி பார்லருக்கு எதுக்கு போனீங்க போட்டி எடுக்கவா? //

பின்னூட்டம் அவர்களே ,
இதே கேள்வி எனக்கும் தோணுச்சு,பட் அழகுநிலையம் போனத விட அங்க இருக்கிற தொழிலாளி ஏதோ சபிக்கப்பட்ட நபர் போன்ற தோற்றம் தருவதும்,{ஜெனி இந்தியாவின் மிக நவநாகரிக‌மான பணியில் இருக்கிறாள். அல்லது அவ்வாறு நம்புகிறாள்} {பணியிடம், பார்ப்பதற்கு பகட்டானது என்றாலும் அவளது பணி அவ்வளவு மெச்சத்தக்கதாக‌ இல்லை} இவர்களுடைய சமுதாய அக்கறை பிரகடனம் செய்ய அவரை பயன்படுத்திய நோக்கம் மிகவும் வலித்தது.

பயணமும் எண்ணங்களும் said...

Blogger ரோகிணிசிவா said...

//நினைத்து பாருங்கள் , இந்திய மக்கள் அனைவருக்கும் மனதில் இத்தகைய கேள்வி எழுந்தால்?.//

எழுந்தா, ஆளுக்கொரு போஸ்ட் போட்டு போஸ்ட் எண்ணிக்கைய ஏத்தலாம்.
அப்புறம் பஸ்லயும் போடலாம், மனிதநேய பதிவர், பஸ்ஸர் பட்டம் வாங்கலாம்.
என் ஃப்ரண்ட் வந்து எனக்கு சப்போர்ட் பண்ணி அவங்களும் அன்னை தெரஸா பட்டம் வாங்கலாம்.

பயமா இருக்கு அப்படி ஒரே மனித நேய மனிதர்களா பார்க்க,அப்படி ஒரு நிலைமை வேண்டாம்//

அன்பின் ரோகினி , போஸ்ட் , பஸ் தவிர வேறொன்றும் உங்க நினைவுக்கு வராமல் இருப்ப்து குறித்து வருந்தவா சிரிக்கவா?..

இணையம் , கணினி தாண்டிய உலகம் உள்ளது. செய்தித்தாள் வாசிப்பது , கேட்பது எதற்காக ?..மக்கள் சிந்திப்பதேயில்லையா?

கல்வி கற்பது எதற்காக?..

ஆராய்ச்சிகள் எதற்காக..

எல்லாவற்றையுமா குறுகிய வட்டத்துக்குள் , பட்டம் , பிரபலம் என கொண்டு வருவது ?..

விதைகள் போட்டுத்தான் முளைக்க செய்யணும்..அப்புரம் அறுவடை..

விதை போடும்போதே , நொள்ளை, சொத்தை என தடை விதித்தால்?...

பயணமும் எண்ணங்களும் said...

அப்ப வேளச்சேரி பியூட்டி பார்லருக்கு எதுக்கு போனீங்க போட்டி எடுக்கவா?//

பியூட்டி பார்லருக்கு எதுக்கெல்லாம் போகலாம்?..

யாருக்கெல்லாம் போகலாம்.?..

எந்த வயதினர் எல்லாம்?..

குழந்தைக்கு முடி வெட்ட பியூட்டி பார்லர் போகலாமா கூடாதா?.. இதையும் அலசிடுங்களேன் ...:)

ரோகிணிசிவா said...

@பயணமும் எண்ணங்களும்

you are too emotionally handling the situation , kindly try to face it in a passive way.
Let me be a closed circle ,hence I m asking you people what have you done , having such a wide vision.

And its a question but to the author,why have you got to give away your voice for the Author , Let author take it a healthy discussion and answer

சந்தனமுல்லை said...

ரோகிணி,

உங்கள் எண்ணங்களை ஆர்வமாக முன்வைக்கிறீர்கள். நன்றி.

ஆரோக்கியமான விவாதத்தைக் குறித்து பேசுகிறீர்கள். நல்லது, நானும் அதையே வரவேற்கிறேன். ஆரோக்கியமான விவாதத்தில், யார் விவாதிக்கிறார்கள் என்பதைவிட சொல்லும் கருத்துக்குத்தான் முதலிடம் இருப்பதாகக் கருதுகிறேன். எனவே, இன்னார்தான் பதில‌ளிக்கவேண்டும் என்றில்லாமல் ஆரோக்கியமான கருத்துகளை யார் வேண்டுமானாலும் இங்கு பதியலாம். புரிதலுக்கு நன்றி.

பயணமும் எண்ணங்களும் said...

you are too emotionally handling the situation , kindly try to face it in a passive way.
Let me be a closed circle ,hence I m asking you people what have you done , having such a wide vision.
//

ஒரு விஷயத்தை குறித்து ஆதங்கப்பட அடிப்படியான குணங்கள், செயல்கள் என்னென்ன?..

" அய்யோ பாவம் அந்த பிச்சைக்காரர்கள்/மனநிலை சரியில்லாதவர்கள்/ஏழைகள் "என பரிதாப்பட என்னவெல்லாம் செய்திருக்கணும் ஒருவர்..?


நான் என்னென்ன செய்துள்ளேன்/செய்துகொண்டிருக்கிறேன் என கண்டிப்பாக சொல்ல போவதில்லை ஒருபோதும்.. ஏனெனில் எனக்கு எவ்வித அங்கீகாரமும் எவரிடமிருந்தும் தேவையில்லை...

ஆனால் அதற்காக கண்முன்னே நடக்கும் விஷய்ங்கள் குறித்து கவலைப்படாமல் இருக்கமாட்டேன்..

ஒடுக்கப்ப்ட்டவர்/உரிமை இழந்தவர்/தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஓங்கி குரல் கொடுப்பதே மிகப்பெரிய விஷயம் .. ஏன் தெரியுமா?.. இக்குரலுக்கு வரும் கண்டனங்களை துணிவோடு ஏற்கணும்.. அதையே நம்மில் பலர் செய்ய தய்ங்குகின்றோம்..

ஏன்.?

ஏன்னா நம் பெயர் கெட்டுவிடும்.. நம் குடும்பம் பாதிப்படையும்.. நிம்மதி போகும்...இத்யாதி..

எல்லா நல்ல விஷயங்களும் இப்படியான சின்ன புள்ளியிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

பயணமும் எண்ணங்களும் said...

இவர்களுடைய சமுதாய அக்கறை பிரகடனம் செய்ய அவரை பயன்படுத்திய நோக்கம் மிகவும் வலித்தது.//

உங்கள் வலி புரியும் அதே வேளையில் , இது ஒரு ஜெனிக்காக எழுதப்பட்டதாக நாம் நினைக்ககூடாது.. கொடி ஜெனி க்கள், அவர்களின் பிரச்னைகள் என எடுத்துக்கொள்ளணும்...

பயணமும் எண்ணங்களும் said...

you are too emotionally handling the situation , //

மன்னிக்கவும் என் பதில் நிதானமாகவே புரியும்படி எழுதுகின்றேன்.. ஆனால் அது எமோஷனலான தோற்றத்தை தந்தால் என் வருத்தங்கள்...

பயணமும் எண்ணங்களும் said...

அன்பின் ரோகிணி நீங்கள் கேள்வியாய்/விவாதமாய் எழுப்பியதால்தான் இந்த பதில்கூட..

இது உங்களுக்கு மட்டுமல்ல உங்களைப்போன்ற எண்ணம் கொண்ட அனைவருக்குமான புரிதாலாக அமையட்டும் என்பதால் மட்டுமே மெனக்கெட்டு தட்டச்சிடுகிறேன்..

மற்றபடி இது வெறும் விமர்சனம் மட்டுமே என்றால் விலகி போயிருப்பேன்..

எத்தகைய விமர்சனமும் செய்ய உங்களுக்கு உரிமை உண்டு... :)

ரோகிணிசிவா said...

அன்பின் முல்லை,

அந்த சூழலில் இருந்து ,
முற்றும் உணர்ந்த ,நீங்கள் என்ன செய்திர்கள் என்பது நீங்கள் மட்டுமே சொல்ல முடியும்
உங்களை தவிர்த்து நானோ அல்லது உங்கள் நட்பு வட்டமோ சொல்லும் பதில் , ஒரு அனுமானமாக மட்டுமே இருக்கவியலும் என்பது என் தாழ்மையான கருத்து
ஆகையால் தான் இதை கண்டவர்(நீங்கள்) சொல்லட்டும் , நாம் கேப்போம் என்று கூறினேன்
இத்தகைய சீரிய சிந்தனை உடைய உங்கள் செயல் கண்டிப்பாக செம்மையான ஒன்றாய் இருந்துதான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை,மேலும் அதை அறியும் பொழுது என்னை போன்ற மற்றவர்கள் அதை
முன்மாதிரியாக கொண்டு
செயல் பட உதவுமே என்ற எண்ணத்தில் மட்டுமே உங்களின் பதில் கேட்டேன் , விவாதம் செய்ய விழையவில்லை.

தங்களின் பதிலுக்கும் நேரத்திற்கும் நன்றி

Tarun said...

Vanakkam Mulai,
I am reading your blog for quite some days.I like your style of writing..except for a few articles.This is a nice one.I feel like you started opening your eyes wide and grooming your skills , or I should say the writer in you is started blossoming slowly.
Once we start to contribute mentally .it will slowly manifest in to physical contribution and the shift will happen.
Keep up the good work.

era.thangapandian said...

வணக்கம் சந்தன முல்லை. தங்களது பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஜெனி பற்றிய பதிவு என்னை மிகவும் பாதித்து விட்டது. கிராமங்கள் நிறைந்த இந்தியாவில் கிராமத்து படித்த இளம் வயதினரெல்லாம் நகரங்களை நோக்கியே நகருவதால் நமது சுய சார்பு கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்
தோழமையுடன்
இரா. தங்கப்பாண்டியன்
www.vaigai.wordpress.com