Tuesday, November 23, 2010

குட்டீஸ் பத்திரிக்கைகள்

பப்புவுக்கு அறிமுகப்படுத்துவதற்காக குழந்தைகள் பத்திரிக்கைகளை தேடிக்கொண்டிருந்தேன். அவளது இந்த வருடத்துக்கான செக் லிஸ்ட்டில் முதலில் வைத்திருந்தது இது. வாக்கியங்களாகத் தொடர்ந்து படிக்க முடியாது. ஆனால் எளிய வார்த்தைகளை வாசிக்க முடியும்.கடைகளில் கிடைத்தவை, சந்தாமாமா, சம்பக், சுப்பாண்டி காமிக்ஸ்,ட்ங்கிள், போன்றவையே. ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கே சரியாக இருக்கும் போல தோன்றியது.

அவற்றில் தேறியவை,

1. Magic Pot
2. Kids punnagai

மேஜிக் பாட் : மாதமிருமுறை வருகிறது. விலை 15 ரூ

பெரும்பாலும் ஆக்டிவிட்டிகள்தான். ஆக்டிவிட்டிகளும் பப்புவுக்கு போரடித்துவிட்ட காலகட்டம்தான் இது.(ஜம்போ ஆக்டிவிட்டிஸ், 501 ஆக்டிவிட்டிஸ், 1000 ஆக்டிவிட்டீஸ்.....இது இல்லாம தனியா டாட் டூ டாட், கலரிங், ஸ்டிக்கர் புக்..பாதிக்கு மேல் வீணாகி கிடக்கும்..எங்கே போய் முடியுமோ!). புள்ளிகளை இணைத்தல், 5 வித்தியாசங்கள், மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடித்தல், வழி காட்டுதல்,சரியான நிழலை கண்டுபிடித்தல் என்று....போனால் போகிறதென்று இரண்டு படக்கதைகள் இருந்தன. நீதிக்கதையாக இல்லாமல் ஒரு குட்டி கதையும் இருந்தது. ‍மற்றவை அனைத்தும் நீதிக்கதைகளே.... நீதிக்கதைகளைக்....அதுவும் என் வாயால் கேட்கும் பாக்கியம் பப்புவுக்கு இன்னும் வராததால் கதைகள் தப்பித்தன!


கிட்ஸ் புன்னகை: மாதமொருமுறை வருகிறது. விலை 25 ரூ

பெயரைப் போலபே பைலிங்குவல்.இதிலும் பெரும்பாலும் ஆக்டிவிட்டிகள்தான். அதே மாதிரியானவை. கொஞ்சம் விடுதலை போராட்ட வீரர்கள் பற்றிய படக்கதைகள், தமிழில் விடுகதைகள், விலங்குகள்,இடங்கள் பற்றிய பொது அறிவு தகவல்கள்...இதில் வெரைட்டி இருந்தது போல இருந்தது. முதல் புத்தகத்திற்கு பப்புவிற்கு எனது அருகாமை தேவைப்படவில்லை. இதற்கு அப்படி இருக்கவில்லை.


இரண்டையும் தொடர்ந்து வாங்கிப்பார்க்கலாமென்று இருக்கிறேன். கலரிங் சுத்தமாக பப்புவுக்கு விருப்பம் இல்லை. அவளாக வரைந்து கலரிங் செய்யவே விருப்பம். குரங்கு கபீஷ், சுப்பாண்டி, பலமுக மன்னன் ஜோ, வேட்டைக்காரன் வேம்பு முதலிய கதாபாத்திரங்களை நம்மால் மறக்க முடியுமா?! அது போல சுவாரசியமாக இப்புத்தகங்களில் எதிர்பார்த்தேன்... சுப்பாண்டி காமிக்ஸாக, தனி புத்தகமே வருகிறது. ப்புவுக்கு காமிக்ஸ் புரிபடவில்லை. படக்கதைகள், எளிய கதைகள் இன்னும் இருந்தால் நன்றாக இருக்கும்.

ஐந்து (5-7) வயதினருக்கான குட்டீஸ் பத்திரிக்கைகள், தமிழில்/ஆங்கிலத்தில் ஏதாவது இருந்தால் பகிர்ந்துக்கொள்ளவும். தமிழில், இப்போதைக்கு சிறுவர்மணி ஓக்கே.. அதிலும், படக்கதைகள், புதிர்கள்,சில உலக நாடோடிக்கதைகள் மட்டுமே பப்புவின் விருப்பம்.

உங்க வீட்டுலே வாங்குகிற குட்டீஸ் பத்திரிக்கைகள் என்ன?

13 comments:

காமராஜ் said...

இப்படி முல்லை சொன்னால் தெரிந்து அதைத்தெரிந்துகொள்ளமட்டும் முடியும்.அனுபவிக்க பேரப்பிள்ளைகள் வரும் வரை காத்திருக்கனும்.தலைமுறை இடைவெளி.

VELU.G said...

நல்ல தகவல்

ஆயில்யன் said...

//உங்க வீட்டுலே வாங்குகிற குட்டீஸ் பத்திரிக்கைகள் என்ன?//

எங்க பாஸ் எனக்கு வாங்கி தர்றாங்க கேட்டா அடிச்சு தொரத்துறங்க! :((

ஆயில்யன் said...

//தமிழில், இப்போதைக்கு சிறுவர்மணி ஓக்கே//

சிறுவர் மலர் & கோகுலம் ஆல்சோ ஒ.கேதான்!

LK said...

நான் இதை தேடும் சமயத்தில் நீங்களும் தேடுகின்றீர்கள். உங்களுக்கு நல்ல புத்தகம் கிடைத்தால் சொல்லுங்கள். என் பின்னுக்கு கார்ட்டூன் ,காமிக்ஸ் பிடிப்பது இல்லை

பூங்குழலி said...

ஜூனியர் சந்தமாமா கூட ரொம்ப நல்லா இருக்கும் முல்லை .புன்னகை எனக்கும் பிடித்திருந்தது .ரொம்பவே நேர்த்தியாக இருந்தது . நாட் ஜியோ ஜூனியர் என்று ஒன்று இருக்கறது ,கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கு .சுட்டி விகடன் ஆரம்ப காலங்களில் ரொம்பவே நன்றாக இருந்தது .இப்போது சுமார் தான் .ஆனாலும் அதில் அந்த மாடல் செய்வது எனக்கே ரொம்ப பிடிக்கும்

நசரேயன் said...

பத்திரிக்கை எல்லாம் விட்டு பல வருசமாச்சி ... எல்லாம் இணையம் தான்

ஜெயந்தி said...

எங்களுதெல்லாம் பெரிய பிள்ளைங்க. காமராஜ் சொன்ன மாதிரி பேரப்பிள்ளைகள் வந்தாத்தான் நாங்கெல்லாம் தேடுவோம்.

மாதவராஜ் said...

முல்லை!

பகிர்வுக்கு நன்றி.

பாரதி புத்தகாலயத்தில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்று நிறைய புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். முடிந்தால் இந்தச் சுட்டியைப் பாருங்கள்.
http://maattru.blogspot.com/2010/11/blog-post_13.html
புத்தகக் கண்காட்சி முடிந்தாலும் சென்னையில் பாரதி புத்தகாலயத்தில் வாங்கலாம்.

"உழவன்" "Uzhavan" said...

இன்னும் வாங்குற காலம் வரல.. நல்ல தகவல். மகிழ்ச்சி

vinodh said...

துளிர் என்று ஒரு புத்தகம் முன்பு வந்து கொண்டிருந்தது. பிறகு மீண்டும் வருவதாகச் சொன்னார்கள். அது கிடைக்கிறதா என்று விசாரித்துப் பாருங்கள்.

//
குழந்தைகள் மத்தியில் என்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள்?

குழந்தைகள் மத்தியில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாலும் சரி, இன்றைக்கும் சரி ஆங்கிலமோகம் என்பது அதிகமாக இருக்கிறது. கல்விச் சூழல் என்பது விளையாட்டாக கலந்துரையாடலாக இல்லாமல் அச்சுறுத்துவதாக உள்ளது. வகுப்பறைகள் என்பது கேள்வி கேட்கிற இடமாக இல்லை. அறிவியல் என்பதும் செயல்முறை விளக்கமாக இல்லாமல் மனப்பாடமாகவே இருக்கிறது. தண்ணீரின் கொதிநிலை என்ன என்று தமிழகத்தில் உள்ள எல்லாப் பள்ளிகளில் கேட்டாலும் 100 டிகிரி செல்சியஸ் என்ற பதில் கிடைக்கும். இதை செய்து பார்த்தார்களா? என்றால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் குழந்தைகளுக்கு அறிவியலை சொல்லித்தர துளிர் என்ற பத்திரிகை வருகிறது. 15,000 பத்திரிகைகள் போய் கொண்டிருக்கிறது. குழந்தைகள் படிக்கிறாங்க. குழுவாக விவாதிக்கிறாங்க. கேள்விகளை எழுப்புறாங்க. இது மாதிரியான விஷயங்கள் தொடர்கிறது.//

http://64.50.168.170/index.php?option=com_content&view=article&id=811:2009-10-17-02-53-31&catid=929:09&Itemid=173

அமுதா said...

chandamama Junior கூட நன்றாக இருக்கும். எங்கள் வீட்டில் Magic pot . அப்புறம் e-balak என்று CD இதழ் மாதமொருமுறை, பல்வேறு வயதினருக்கு ஒத்த ஆக்டிவிட்டீஸுடன் வருகிறது.

அரவிந்தன் said...

என் மகள் அமுதசுரபி மூன்றாம் வகுப்பு வரை Magic pot படித்து (படம் பார்த்து)கொண்டிருந்தாள்.இப்பொழுது ஆறாம் வகுப்பில் Tinkle digest படிக்கிறாள்.

அன்புடன்
அரவிந்தன்