Monday, November 15, 2010

பப்பு டைம்ஸ்

பப்பு ரொம்ப நல்ல மூடில் இருந்தால் /அவளது வேலை ஆகவேண்டும் என்றால் மட்டுமே நான் 'அம்மா'. மற்ற நேரங்களில் 'ஆச்சி'தான்.

பப்பு பேச ஆரம்பித்தபோது , என்னை, பெயர் சொல்லிழைப்பதை பார்த்த ஒரு சிலர், 'இப்படி பழக்காதீங்க, அப்புறம் அம்மா யாருன்னே குழந்தைக்கு தெரியாது.' என்றதோடு, 'எங்க அக்கா இப்படிதான் குழந்தைய பாத்துக்கிறங்ககிட்டே விட்டுவிட்டு, இப்போ அது அவங்களை தான் அம்மான்னு கூப்பிடுது, எங்க அக்காவை பேர் சொல்லி கூப்பிடுது' என்றும் கிலி உண்டாக்க பெருமுயற்சி செய்தனர்.

இதற்கெல்லாம் அசர்றவங்களா நாம? 'யாராவது ஒருத்தங்களை அம்மான்னு கூப்பிடுதா, விடுங்க'னு சொல்லிவிட்டேன்.

அம்மா/மம்மி/மா/ஆச்சி பற்றி யார்பேசினாலும் பப்புவும் அவர்களுக்கேற்றது போல பேசுவாள். அந்த பெருமுயற்சி செய்தவர்களைத்தான் இப்போதுத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஓக்கே....சொல்லவந்தது...

பப்பு தானாக ஏதோ பாடிக்கொண்டிருதாள். சொந்த லிரிக்ஸ்....நோ அர்த்தம்...

"i want mummy..."

"பப்பு, கூப்டியா?"

"no. i singed......"

#பவ்வ்வ்வ்வ்
ஆயாவுக்கு மருந்து வாங்கக் கிளம்பினேன். சற்று தூரம்தான். கூட வருவேன் என்று ஆரம்பித்தாள் பப்பு.

'சரி, ரவுண்ட் போய்ட்டு கொண்டு வந்து விட்டுடறேன்' என்றதற்கு சரியென்று வந்தாள்.

வழக்கமான ரவுண்ட் அடித்துவிட்டு வீடு நெருங்கும்போது "நான் உன் கூடத்தான் வருவேன், வண்டிலேருந்து இறங்கமாட்டேன்" என்றாள்.

வேறுவழியில்லாமல் கடைக்கு அவளோடுக் கிளம்பினேன். பாதிவழியில் மேடத்திற்கு தூக்கம்.

"ஆச்சி, எனக்குத்தூக்கமா வருது. வீட்டுலே போய் விட்டுடு"

"சீக்கிரம் போய்டலாம்.தூக்கம் வந்துச்சுன்னா ஏன் வண்டிய விட்டு இறங்கமாட்டேன்னு சொன்னே, வீட்டுலே இருந்திருக்கலாம் இல்ல"

"நான் சும்மா சொன்னேன்!"

#டபிள் பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வெளியே செல்லக் கிளம்பினோம். அவளது கண்ணாடியைக் காணோம். செல்லும் அவசரம் வேறு. தேடினால், சட்டெனக் கிடைக்குமா?

"இதுக்குத்தான் எடுத்தத எடுத்த எடத்திலே வைக்கணும், எதையும் பத்திரமா வைச்சுக்கிறது இல்லெ" என்று எனக்குள் இருக்கும் ஆயாவின் ஜீன் வேலையை காட்டத்தொடங்கியிருந்தது.

பெட்டிகளில் குடைந்து பார்த்தாள். ம்ஹூம்....

பரிதாபமாக முகத்தை வைத்துக்கொணடு கேட்டாள்,

"ஆச்சி, அந்த ஏழுநிறப்பூ யார்க்கிட்டேயாவது இருக்குமா, ஆச்சி"

ஏழுநிறப்பூ புதிகாக பப்புவுக்கு அறிமுகமாகியிருக்கும் கதை. மேலும் அறிய..

8 comments:

ரோகிணிசிவா said...

//அந்த ஏழுநிறப்பூ யார்க்கிட்டேயாவது இருக்குமா//
ம்ம்ம் , சோ ஸ்வீட்

ராமலக்ஷ்மி said...

//"i want mummy..."

"பப்பு, கூப்டியா?"

"no. i singed......"//

க்யூட்:))!
-----
Rainbow-Flower. சின்னவயதில் பலமுறை படித்து ரசித்த கதையை அதே படங்களுடன் வாசிக்கத் தந்திருப்பதற்கு நன்றி முல்லை:)!
-----

ஏழுநிற பூக்கள் கிடைத்தால் எனக்கும் ஒண்ணு எடுத்து வை பப்பு:)!

அமைதிச்சாரல் said...

ஸ்ஸ்ஸப்பா.. இந்தப்பசங்க டிசைன் டிசைனா கூப்புடுறதப்பத்தியே நாலஞ்சு பதிவு எழுதலாம் :-))))) அவ்வளவு இருக்கு இதுங்க கிட்ட :-))

அன்புடன் அருணா said...

ஏழுநிறப்பூ எனக்கொன்று பார்சல்!!!!

நசரேயன் said...

//பப்பு ரொம்ப நல்ல மூடில் இருந்தால் /அவளது வேலை ஆகவேண்டும் என்றால் மட்டுமே நான் 'அம்மா'. மற்ற நேரங்களில் 'ஆச்சி'தான்.//

எங்க ஊரு ஆச்சியா ?

//'சரி, ரவுண்ட் போய்ட்டு கொண்டு வந்து விட்டுடறேன்'//

வட்டமா போவீங்களோ ?

அம்பிகா said...

\\அமைதிச்சாரல் said...
ஸ்ஸ்ஸப்பா.. இந்தப்பசங்க டிசைன் டிசைனா கூப்புடுறதப்பத்தியே நாலஞ்சு பதிவு எழுதலாம் :-))))) அவ்வளவு இருக்கு இதுங்க கிட்ட :-))\\
அட ! ஆமாங்க.
பப்பு..ஸ்மார்ட்.

Sriakila said...

Pappu...very smart girl!

☀நான் ஆதவன்☀ said...

:)))) பவ்’வும் அவ்’வும் நீங்க பப்புகிட்ட வாங்குறதை கட்டுப்படுத்தவே முடியாது பாஸ்:))