"ஏ"
"ழு"
"ம்ம்..சேர்த்து படி"
"ஏழு"
"ஏழு...அப்புறம்"
"வா"
"ல்"
"க"
"ளு"
"ட்?இல்ல..ட"
"ன்"
"வா லு/ளுடன்"
”அப்டியா எழுதியிருக்கு...சேர்த்துபடி”
”ஏ”
”ழு”
”..அதுதான் முன்னாடியே படிச்சுட்டே இல்ல, பப்பு, அடுத்த வார்த்தைய படி...”
”வா”
”ல்”
”க”
”ளு”
”ட”
”ன்”
”ம்ம்..என்னது...சொல்லு...சேர்த்து..”
”வா க....”
”ம்ஹூம்..சரி ஃப்ர்ஸ்ட்லேர்ந்து படி...”
”ஏ”
”ழு”
(அவ்வ்வ்வ்...மறுபடியும் முதல்லேர்ந்தாஆஆஆ?!!)
”ஏழு தான் அப்பவே படிச்சுட்டே இல்ல..ரெண்டுரெண்டு எழுத்தா சேர்த்து படி
இது என்ன?”
”வா”
”இது?”
”ல்”
”சேர்த்து சொல்லு”
”வால்”
”அப்புறம்..இது”
”க”
”அப்புறம்?”
”ளு”
”சேர்த்து சொல்லு...”
”களு”
(அவ்வ்வ்வ். அழுதுடுவேன்)
“முழுசா படி...வால்ல்ல்?”
”களு”
ஃப்ர்ஸ்ட்லேருந்து...
”வால்களு”
”யெஸ்...அப்புறம்...”
”ட”
”ன்”
”டன்”
”உனக்கே படிக்க தெரியுதே!இப்போ சேர்த்து சொல்லு....”
”ஏழு...”
”ம்ம் (மேலே!)..ஏழு வால்..”
”வால்களுடன்”
”சூப்பரா படிக்கற பப்பு.....முழுசா சொல்லு பாக்கலாம்...”
”ஏழு வால்களுடன்”
ஹப்பாடா!சக்ஸஸ்...
”ஒ”
”ரு”
”ஒரு ”
”முதல்லேருந்து சொல்லி சொல்லி படி”
”ஏழு வால்களுடன் ஒரு”
”எ”
”லி”
”எலி”
”ம்ம்..இப்போ ஃபுல்லா படி..”
”ஏழு வால்களுடன் ஒரு எலி”
கொஞ்ச நேரத்துக்கு ஒரே கைதட்டல்...ஹை-ஃபை...
”இப்போ, அடுத்த பக்கம்...”
”போ..அதெல்லாம் நீதான் சொல்லணும்...நீயே படிச்சு சொல்லு...”
(ஸ்ப்பா...ஒரு தலைப்பை படிக்க வைக்கறதுக்குள்ளேயே இங்க பிபி ஏறுது...பப்புவுக்கு உயிர்மெய் எழுத்துகளை கற்றுக்கொடுத்த ஆயாவுக்கு அன்பு முத்தங்கள். எப்படி அத்தனை வேரியேஷன்களை கற்றுக்கொள்வாள் என்று மலைப்பாக இருந்தது. ஆயா என் கவலையைப் போக்கினார்.)
உலகத்துலே இருக்கிற அனைத்து ஆசியர்களுக்கும்...முக்கியமா தொடக்கநிலை ஆசிரியர்களின் பொறுமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!
9 comments:
பப்பு க்யூட்
"ரொ"
"ம்"
"ப"
படி..படி
"ரெம்ப"
ரெ இல்ல ரொ. பாத்துப் படி. அடுத்த வார்த்தை?
"ந"
"ல்"
"லா"
"நல்லா"
சபாஷ், நல்லா படிக்கிறே, நெக்ஸ்ட்.
"இ"
"ரு"
"க்"
"கு"
"இருக்கு"
சூப்பரா படிக்கிற முல்லை. சேர்த்து படி.
"ரொம்ப நல்லா இருக்கு"
சகாதேவன்
அ... ரு... மை:))!
அப்புறம் ஏழு வால்களுடன் எலியா? அது என்ன புதுக்கதை? முழுசா படிச்சு நீயே சொல்லு பப்பு:)!
பப்பு எவ்வளவு அழகாக உங்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறாள்? அப்படின்னா அவளுக்கு எவ்வளவு பொறுமை இருந்திருக்கணும்.
//உலகத்துலே இருக்கிற அனைத்து ஆசியர்களுக்கும்...முக்கியமா தொடக்கநிலை ஆசிரியர்களின் பொறுமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!//
அம்மாவுக்கே பொறுமையாக சொல்லிக்கொடுத்து மேலும் படிக்கச் சொல்லும் அந்தக் குட்டி பப்புவின் அன்புக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
/*உலகத்துலே இருக்கிற அனைத்து ஆசியர்களுக்கும்...முக்கியமா தொடக்கநிலை ஆசிரியர்களின் பொறுமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!! */
அதே!!!!
//முக்கியமா தொடக்கநிலை ஆசிரியர்களின் பொறுமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!! ///
சூப்பர்
சில விசயங்களை நாம அலட்சியமா கடந்து போய்ட்டாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில முழுமையா உணரும்போது,அதை வெளிப்படுத்த முடியாம வரும் அந்த மெளனம் - இந்த வரிகளினை வாசிக்கும்போது ஏற்பட்டது! என் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை வணங்கியபடியே!
நானும் அவர்களைப் பார்த்துத்தான் மலைப்பதுண்டு!Pappu rocks!!
ஆங்கிலம் மட்டுமே சொல்லி கொடுக்கும் பெற்றோர் மத்தியில் தமிழ் வாசிக்க கற்று கொடுக்கும் உங்களுக்கும் என் மனதார வாழ்த்துகள்.
பப்புவிற்கும் என் வாழ்த்துகள்.
//...முக்கியமா தொடக்கநிலை ஆசிரியர்களின் பொறுமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்//
உண்மைதான். நானும் இப்படி ஆச்சரியப்படுவதுண்டு.
Post a Comment