Monday, January 10, 2011

பப்பு டாக்(கீ)ஸ்

ரைனோவிடமெல்லாம் தற்போது பயம் போய்விட்டது. அது நீதான் என்று கண்டுபிடித்தபின் ‘ஆக்டோபஸ்’ தான் வந்துசெல்கிறது இப்போதெல்லாம். சகுந்தலா அம்மா, பப்புவை சாப்பிட வைக்க “சாப்பிட்டுடு பாப்பா, சாப்பிடலைன்னா வயித்துலே ஆக்டோபஸ் வந்து நெளியும், அப்புறம் வயத்துலே பூச்சி மாதிரி ஏறும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

பப்பு. “ஆமா, சாப்பிடலைன்னா ஆக்டோபஸ் வரும், சின்ன வயசிலே சகுந்தலா ஆயாவுக்கு அப்படிதான வந்துச்சு..இல்ல ஆயா” என்றதும் சகுந்தலா ஆயா, ஜெர்க்காகி ‘எனக்கு ஏன் வருது, சாப்பிடாதவங்களுக்குதான் அப்டி வரும்!”
யார் கையை கட்டினாலும் ஆயாவும், பெரிம்மாவும் சொல்வது, ‘கைய கட்டாம பேசு’ என்பதுதான்.
பள்ளிக்குச் செல்ல துவங்கிய சில நாட்களில் பப்புவும் கைகளைத் கட்டத்தொடங்கினாள். ஆயாவின் தொடர் உபதேசத்தில் மறந்தும் போனாள். தற்போது பின்னால் கையைக் கட்டிக்கொண்டு நடப்பாள், எப்போதாவது. கேட்டால்,’ பிரேயர் முடிஞ்சி அப்படிதான் நடப்போம்’ என்பாள். உடற்பயிற்சி போல இருக்கிறது என்று நானும் விட்டுவிட்டேன். பிறகு, பெரிம்மா சொன்னது இது, ’ப்ரேயர் முடிஞ்சி போகும்போது ஒன்னை ஒன்னு ஏதாவது சீண்டிக்கிட்டு...கையை இழுக்கிறது, ட்ரெஸ்சை பிடிச்சு இழுக்கிறதுன்னு அட்டகாசம் பண்ணுவாங்களாம். அதுக்காக, இந்த மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்லே இப்படி கையை பின்னாடி கட்டிக்கிட்டு க்ளாஸ் ரூம்க்கு போகச் சொல்லுவாங்களாம்’.”ஆச்சி, எனக்கு பிஸ்கெட் எடுத்துக்குடேன்.”

”பப்பு, நான் வொர்க் பண்ணிட்டு இருக்கேன் இல்ல, நீயே போய் எடுத்துக்கோ!”

”ஏய், சிங்கம் எங்கியாவது நடந்து போய் பிஸ்கட் எடுத்துக்குமா?”

அப்போதுதான் கவனித்தேன், கட்டிலின் ஓரத்தில் நாலுகாலால் நடந்துக்கொண்டிருதாள்.
போர்வையை மூடியபடி எல்லா மிருகங்களும் அதனுள் இருந்தது. ஓ...எல்லா மிருகங்களையும் வரச்சொல்லி அடித்துச் சாப்பிடும் சிங்கம், பிஸ்கட் கொண்டு வரச்சொல்கிறது!வெள்ளிக்கிழமை வீட்டுப்பாட புத்தகத்தை வேனிலேயே விட்டுவிட்டாள். ’ஏன், பப்பு, வேன்லே ஏன் நோட்டை எடுக்கறே, பையிலே வைக்க வேண்டியதுதானே’ என்றதற்கு ‘வெங்கடேஷ்தான் என் நோட்டை கேட்டான்’ என்றாள். ‘பார்த்துட்டு திரும்ப பையிலதான் வைச்சிருக்கணும், சரி, மண்டே, ஆண்ட்டிக்கிட்டே சொல்லு, வேன்லே நோட்டை விட்டுட்டேன், அதான் ஹோம் ஒர்க் எழுதலன்னு’ என்றேன்.

“ஹேய், எனக்கு ஒரு ஐடியா வந்திருக்கு...மண்டே என்னை வேற ஸ்கூல்ல சேர்த்திடுப்பா!!”


பப்பு ஆயா..:-)ஆச்சி, நான் மாடிலே ப்ளைட் பார்த்தேன்..அதுல ஆஃபிரிக்கா, ஜப்பான்னு எழுதியிருந்துச்சு...

!

யாராவது பார்த்திருக்கீங்களா?!

(அஃப்கோர்ஸ், அம்மாவுக்கு இது ஆச்சரியம் இல்லதான், ஏன்னா அம்மா, பப்பு வயசுலே இருந்தப்போ, ஏரோப்ளேன்ல போனவங்க, கயிறை மேலேருந்து தூக்கிப்போட்டு ஜன்னல் வழியா ஏறிவா, எங்க ஊருக்கு போகலாம்-னெல்லாம் கூப்பிட்டிருக்காங்களே!)

8 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பப்பு ஆயா .. க்யூட் ஹேப்பி ஆயா :)

அமைதிச்சாரல் said...

ஒரு சிங்கம்
பிஸ்கெட் சாப்பிடுகிறது..
அடடே!!!... ரசித்தேன் :-)))

ஆன்ட்டியை சமாளிக்க பப்புகிட்ட எவ்வளவு அழகான தீர்வு இருக்குது :-)))

ராமலக்ஷ்மி said...

// ஆயா, ஜெர்க்காகி //

பாவம் ஆயா:))!

//பப்பு ஆயா..//

வெரி க்யூட்:)!

Maya said...

Hello Mullai

Unga blog naan padikka arambichi, ippodhaan completea padichi
mudichen. I am a stranger, but I feel I have known you, your daughter,
your periyamma, your aaya and a few of your friends. Nalla experience,
oru jollyana mega serial paakura madhiri. Ungaloda articles pathi
neriya naan veetula poi engammakittayum, husband kittayum pesi iruken.
The one that I loved the most was your letter to your daughter about
fairness. And the other one was how you realised pappu is an
individual and doesnt really have to exhibit her talents to others to
impress them. I am a mother of my 7 month old Maya and I really have
taken this to my heart.

Enga veetula, everyone wants her to be fair(she is slightly darker
than me), a super star, competitive etc, etc ippvae. But I have always
wanted her to be a good human being, more than anything else. When I
read your articles, I was glad. Indha competitive worldla, kuzhaikku
self confidence, freedom, ellam solli kuduthu valakurathukku oru hats
off.

Naan padicha blogsla, ungalodadhum, deepavodadhum ennoda favourites,
probably because you both write a lot about your daughters and I grew
fond of them. Neriya blogs padipen(officela verae enna velai),
sometimes ezhuduven(maya-vaneetha.blogspot.com), but bloggers kitta
poi paratannumnu thonalae. Unga writing style and your point of
view(except for the parlour) one romba pidichi irundhadhu. I wanted to
let you know that I became a fan of yours. Acknowledgement and
appreciation panradhu romba nalla vishayam illaya. Oru articlea
pookarigalukku suyamariyaadhai undunnu ezhudhi irundeenga. Paarthu
romba shock aayiduchi. Namakkunu oru chinna space, namma experience
share pannannu dhaan naan ivalo naal nenachi irundhen. Idhula ivalo
politics, male chavanism, irukkumnu nenaikavae illae. Ungalukku wishes
and support sollanum romba aasai. Mail Id theriyalae. So I wanted to
post a comment, so you would know.

Naan unga oor pakathula dhaan - Tirupattur. Ippo irukuradhu
Australiavula. Enga husband coimbatore, romba perumai avanga oor pathi
avarukku. Enga oor jambam pesuradhulae, ippo I include you too:)

Have a great year ahead. Looking forward for your posts regularly

Best Regards
Vaneetha

அம்பிகா said...

\\“ஹேய், எனக்கு ஒரு ஐடியா வந்திருக்கு...மண்டே என்னை வேற ஸ்கூல்ல சேர்த்திடுப்பா!!”\\

ஹா..ஹா..ஹா...

பப்பு..!!!!

பா.ராஜாராம் said...

// “ஆமா, சாப்பிடலைன்னா ஆக்டோபஸ் வரும், சின்ன வயசிலே சகுந்தலா ஆயாவுக்கு அப்படிதான வந்துச்சு..இல்ல ஆயா” என்றதும் சகுந்தலா ஆயா, ஜெர்க்காகி ‘எனக்கு ஏன் வருது, சாப்பிடாதவங்களுக்குதான் அப்டி வரும்!”//

:-))

பப்பு, அமித்து, நேஹா, எல்லோரையும் பார்த்துவிடவேணும் என ப்ரியமாக இருந்தது இந்த பயணத்தில். நேரமின்மையில் பப்பு மட்டும் கைக்குள் சிக்காமல் போய்ட்டீங்க. அடுத்த பயணம் எனில் ரெண்டு வருஷம் வளர்ந்துருவியே.. mis u daa pappu. :-(

சரி.. இந்த பேச்சை மட்டுமாவது மிஸ் பண்ணாமல் வச்சுக்கோ பப்பு. சரியா?

அன்புடன் அருணா said...

/இந்த மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்லே இப்படி கையை பின்னாடி கட்டிக்கிட்டு க்ளாஸ் ரூம்க்கு போகச் சொல்லுவாங்களாம்’./
இங்கே CBSE பள்ளியிலும் இதேதான்!!!
"மண்டே என்னை வேற ஸ்கூல்ல சேர்த்திடுப்பா!"
அட!நல்ல ஐடியாவா இருக்கே!!!

நானானி said...

//...மண்டே என்னை வேற ஸ்கூல்ல சேர்த்திடுப்பா!!”//

அப்டீன்னா....நாங்க படிக்கும் போது எத்தனை ஸ்கூலில் சேர்ந்திருக்கணும்!!

பிள்ளைங்களுக்கு தோணுது பாருங்க...ஐடியா!!!!