Wednesday, January 19, 2011

அன்னா-‍‍வை வரவேற்போம்!

குரங்கிலிருந்து மனிதன் வந்தான்....பரிணாமம்,DNA,RNA எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா?

குரங்குலேருந்துதான் மனிதன் வந்தான்னு வகுப்புலே படிச்சப்போ, அப்படின்னா, இப்போ இருக்கிற குரங்குல்லாம் ஏன் மனுச‌னா மாற மாட்டேங்குதுன்னு சிலர் வாதம் பண்ணாங்க. ஆமாந்தானே, அப்போ பரிணாமம் உண்மைன்னா ஏன் புதுசா கண்டுபிடிக்கப்பட்ட உயிர் ஒன்னுக்கூட இல்லன்னும் கேள்விகள் வந்தது. நாலு கால் குரங்குலேருந்து இரண்டு கால் மனுச‌னா மாறுவது மாதிரி படமெல்லாம் இருக்கேன்னப்போ, படமெல்லாம் யார் வேணா வரையலாம்தானேன்னும் ஒரே சண்டை. அப்புறம், இதைப் பத்தி விரிவாக மேல்நிலை வகுப்புகளில் படிப்பீர்கள்னு இருந்தது. மேல்நிலை வகுப்புக்கு வந்தப்போ, இதைப் பற்றி கீழ்வகுப்புகளில் ஏற்கெனவே படித்திருப்பீர்கள்னும் இருந்தது.

அப்புறம் எங்க?எப்படி கட் ஆஃப் மார்க் தேத்தறதுதான் நினைவெல்லாம் நித்யா!

சமீபத்துல ஒரு இடுகையை தமிழ்மணத்தில் வாசிச்சேன். என்னோட மரமண்டைக்கும் லேசா புரியறமாதிரி.பரிணாமம் என்றால் என்ன?-ன்னு அன்னா எழுதிய இடுகை. இதை தொடரா எழுதப்போறதாவும் சொல்லியிருக்காங்க. அனலிஸ்டான அன்னா, பதிவராக தமிழ்மணத்தில் இணைந்திருப்பதற்கு வாழ்த்துகள்! :-)

அதோடு, அவரது குறிப்பில், " நான் அறிவியல் விடயங்களை பொதுமக்களுக்கு விளக்க அண்மைக் காலங்களிலேயே முயன்று வருகின்றேன். இன்னும் நிறைய அனுபவமும் பயிற்சியும் தேவை. அதனால் உங்களின் கருத்துகள் (constructive criticisms) எனக்கு மிகவும் பயனுடைய தாகவிருக்கும். நன்றி." என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அன்னா பதிவுலகுகிற்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். வினவின், மகளிர் தின இடுகைகளுக்காக y choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள்... என்ற இடுகையை எழுதியிருக்கிறார்.

நன்றி அன்னா. தமிழ்மணத்திற்கு நல்வரவாகுக!

8 comments:

கையேடு said...

அனாவின்.. பின்னூட்டங்களும் சேமித்து வைத்துக்கொள்ளப் படவேண்டியவை. மிகவும் பயனுள்ள சுட்டிகளையும் தரவுகளையும் அறியத் தருபவர்.

அவர் நிறைய எழுத வாழ்த்துவோம்.

காமராஜ் said...

பயனுள்ள பகிதல் முல்லை.
படிக்கணும்.
அன்னாவுக்கு வாழ்த்துச்சொல்லு.

Deepa said...

நன்றி முல்லை. பின்னூட்டங்கள் மூலம் இவர் அறிமுகமாகி இருக்கிறார். கருத்தாழத்துடன் எழுதுவார். முக்கியமாக, இவர் பின்னூட்டமிட்டால் உருப்படியாகத் தான் ஏதோ எழுதி இருக்கிறோம் என்று கூட நினைத்துக் கொள்வதுண்டு. :)
வரவேற்பும் வாழ்த்துக்களும்!

சி. கருணாகரசு said...

எனக்கு தெரியாதவர்... இனி தெரிந்து கொள்கிறேன்..... உங்களுக்கு நன்றி.

The Analyst said...

WOW! மிக்க நன்றி முல்லை இந்த இனிய அறிமுகத்திற்கு. எதிர்பார்க்கவேயில்லை. In fact, I am a bit nervous now. எனக்கு மொழித்திறன் எல்லாம் பெரிதாக இல்லை. I hope I can keep it up.

குடுகுடுப்பை said...

வரவேற்று என்பதிவில் லிங்க் கொடுத்தாச்சு.உருப்படியாக இதையாவது படிக்கலாமென்றிருக்கிறேன்.

நன்றி.

குடுகுடுப்பை said...

என்ன ஆச்சு அனலிஸ்ட் பிளாக்க தூக்கிட்டாங்க, பிரைவேட் பிளாக் ஆக்கிட்டாங்களா?

சந்தனமுல்லை said...

ஸ்பாம் மெசேஜை கிளிக்கியதால் ப்லாக்கை காணமுடியவில்லையென்றும், ப்லாக்கர் உதவி கேட்டு மடலனுப்பியிருப்பதாகவும் கூறியிருந்தார். பார்ப்போம், இல்லையெனில் புது பதிவு தொடங்குவதாகவும் மடலனுப்பியுள்ளார். நன்றி