”ஆச்சி, திருடங்க எப்படி வர்றாங்க?” - பப்பு
”நைட்ல எல்லாரும் தூங்கினப்புறம். யாருக்கும் தெரியாம, கதவு தெறந்து வருவாங்க....” - மீதான், அசிங்கப்படப்போவது தெரியாமல்!
”அது இல்ல ஆச்சி, திருடங்களாவறதுக்கு யாரு டீச் பண்ணுவாங்க? திருடங்க எப்படி உருவாகறாங்க? சொல்லு....” - பப்பு (ஆகா...அந்த கொசக்சி பசப்புகழ் நீதானா?!பவ்வ்வ்வ்வ்வ்!!)
”ம்ம்..பப்பு, யாரும் திருடங்களாகணும்னு யோசிச்செல்லாம் திருடனாக மாட்டாங்க. திருடங்களாகணும்னு அப்படின்னு யாருக்காவது ஆசையிருக்குமா? சொல்லு..திருடறது சரியா தப்பா?” - நானேதான்.
”தப்பு....” - பப்பு
”ம்ம்...கரெக்ட். இப்போ நீ நம்ம வீட்டுக்கிட்டேயே பாரேன். சிலருக்கு வீடு இருக்கு. சிலருக்கு வீடே இல்ல. வழியிலதான் படுத்திருக்காங்க. சிலருக்கு கார் இருக்கு. சிலருக்கு சாப்பாடு வாங்கக்கூட காசு இல்ல. சிலபேரு ஸ்கூலுக்கு போய் படிக்கிறாங்க. சிலபேரு ஸ்கூல் போக முடியல.சிலபேருக்கிட்ட
நெறைய நகை இருக்கு...”
”ஓ.... அவங்களுக்கு நெகை இல்லன்னா நாமளும் நெகை போட்டுக்காம இருக்கணும். சரியா, ஆச்சி?” - பப்பு
”ம்ம்...இப்போ அவங்களுக்கு எதுவும் கிடைக்காததாலதான் திருடறாங்க. அதுக்கு நாம என்ன பண்ணனும்?” - நான்.
”அவங்களுக்கு சாப்பாடு குடுக்கணும். வீடு குடுக்கணும்.அவங்க நெகை வைச்சிருக்க அளவுக்குத்தான் நாமளும் வைச்சிருக்கணும்...கரெக்டா? சொல்லு ஆச்சி” - பப்பு (இதெயெல்லாம் நான் சொல்லித்தரலையே பப்பு!!)
”அவங்ககிட்டே நகை இல்லன்னா?” - நான்
”அவங்ககிட்டே நகை இல்லன்னா நாம நகை போட்டுக்ககூடாது.” - பப்பு
”ம்ம்..எல்லாருக்கும் ஒரே மாதிரி ஸ்கூல், ஒரே மாதிரி வீடுல்லாம் இருந்தா.....” - நான்
”நாம நெகை போட்டுக்கலாம்...” - பப்பு (அவ்வ்வ்வ்!!)
”ம்ம்..அப்போ திருடங்க உருவாக மாட்டாங்க!! எல்லாருக்கும் வேலை கிடைச்சா எல்லாரும் சம்பாரிப்பாங்க இல்ல. அது மாதிரி புது சொசைட்டியை நாம உருவாக்கணும்...” - நான்.
அமைதியாக இருந்தாள். யோசனை என்று நினைக்கிறேன். அப்புறம், ஆயாவிடம் சென்று இதே கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தாள்.
இதில் ஹைலைட் - கடைசிவரைக்கும், அவள் அணிந்திருப்பது ”நகைகள் ” கேட்டகரியை சேர்ந்ததுதான் என்ற அபார நம்பிக்கை!! அதுவும், அந்த விலைமதிக்க முடியாத”நகைகளைத்” திருடுவதற்கு, திருடன் வருவானோ எனும் கவலையில் அவற்றை கழற்றி, ஒளித்து வைத்துவிட்டுதான் படுத்தாள்.
4 comments:
நிச்சயம் விலைமதிக்க முடியாதவைதான்!
நகைகளும் கண்களும் ஜொலிக்கின்றன! அழகு:)!
ம்ம் பப்புவுக்கு ஒரு லாக்கர் வாங்கிக் கொடுங்கப்பா!!!
ரசிச்சுப் பிடிச்சேன். அதுவும் அம்மாவாக, இந்த பல்பு நிமிடங்கள் விலைமதிக்க முடியாதவை. பப்புவின் சிரிப்பைப் போல!
உங்களை நம்பாம, ஆயாட்ட கேக்கத் தெரிஞ்சிருக்கு பாருங்க, அது தெளிவு:-)))))
கெ.பி.
பொருட்கள் மீதான சாக்கிரதை உணர்வா
குட் வொர்க் பப்பு ...
:)
Post a Comment