Tuesday, January 24, 2012

பப்பு டைம்ஸ்

”ஆச்சி, நீ எனக்கு ஸ்டெப் மதர்தான் போல இருக்கு” - பப்பு

”ஏன் பப்பு? எப்படி சொல்றே?” - அப்பாவி மீ

“ம்ம்....நீ எதையும் தொலைக்க மாட்டேங்குறே இல்ல, ஆனா எனக்கு தொலைக்கிற டிஎன்ஏ இருக்கு இல்ல...உனக்கு அது இல்லயே” (பயபுள்ள பென்சில்/ஷார்ப்பனர் தொலைக்குறதும் இல்லாம எப்படி சீன் போடுது பாருங்க!!)

யாருடைய குழந்தைங்கன்னு கண்டுபிடிக்க டிஎன்ஏ டெஸ்ட் செய்வாங்கன்னு சொல்லியிருந்தேன். பேர்ட்சுக்கு மட்டும் ஏன் இறக்கை இருக்கு, நமக்கு இல்லைன்னு கேட்டப்போ நம்ம டிஎன்ஏ அது மாதிரி இல்லன்னு சொல்லிட்டேன். அது எல்லாத்துக்கும் சேர்த்து கிடைச்ச பரிசு இது!!

*******************
”நாம பிளாக்காதானே இருக்கோம். நம்மை பிளாக் பிளாக்ன்னு கூப்பிடலாமே, ஏன் ஆரஞ்சை மட்டும் ஆரஞ்சுன்னு சொல்லணும்?” - பப்பு.

இப்போ பிளாக்க்குன்னு கூப்பிட்டா யாரை கூப்பிடறாங்கன்னு தெரியும்? அதுக்குதானே பேர் இருக்கு? - மீ தான்.

“ஓ..ஈசியா சொல்லிட்டே...ம்ம்ம்..நமக்கு ஒரு கண்ணு இருந்திருக்கலாமே, ஏன் ரெண்டு கண்ணு இருக்கு?” - அகெய்ன் பப்பு.

ஒரு கண்ணை மூடி மறுகண்ணால் பார்த்தெல்லாம் சில பரிசோதனைகள் செய்தபிறகு, “நமக்கு லெஃப்ட் ரைட் லல்லாம் தெரியணும் இல்ல...அதுக்குதான்” என்றேன்.

“அப்போ ஏன் நெத்தியில் ஒரு கண்ணு இல்ல, மேலே பாக்குறதுக்கு?” - பப்புவேதான்!

“அதுக்குதானே கழுத்து இருக்கு...மேலே கீழே எல்லா திரும்பி பாக்குறதுக்கு” என்றேன்..

”கழுத்துல இருக்கிறது போன்சாப்பா?” - பப்பு

“ஆமா, அது ஸ்பெஷல் டைப் போன்ஸ்..வளையற மாதிரி இருக்கும்”

“ஓக்கே...சரி, இதுக்கு ஆன்சர் பண்ணீட்டே...மனுசங்க எப்ப்டி வந்தாங்க சொல்லு?!! #avvvvvv_வேணா_அழுதுடுவேன்!!

***********************************

"மாடுல்லாம் ஒரே கலராதான் இருக்குமா? பிளாக், ஒயிட்டாதான்? வேற கலர்ல இருக்காதா, ஆச்சி?"

"இருக்குமே, பிரௌவுன் கலர்ல இருக்குமே, நீ பாத்ததில்லை?"

"பிங்க் கலர்ல மாடு இருக்காதா, ஆச்சி?!"

:‍-)))) பிங்க் கலர்ல ஒரு மாட்டை, அது ரோட்ல க்ராஸ் பண்ற மாதிரி என்னால கற்பனையே பண்ண முடியலை...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

6 comments:

கீதா லட்சுமி said...

evvalavu alagana karpanaigal.. innum niraya kelvigal ketka Pappuvukku en valthukkal :)

சாந்தி மாரியப்பன் said...

குழந்தைகளின் கற்பனைக்கு வானமே எல்லை..

ராமலக்ஷ்மி said...

நக்கீரன் பேசும் திருவிளையாடல் வசனத்தின் மூலமே நெற்றிக்கண்ணைப் பற்றி முதன்முதலா தெரியும். மேலே பார்க்க நெற்றிக்கண் இருந்தா நல்லாருக்கும்ங்கிற பப்புவின் ஆசை ரொம்ப நல்லாருக்கு:)!

பிங்க் பசு:)!

மதுரை சரவணன் said...

nalla sinthanai thundum uraiyaadal...pakirvukku nanri...

நட்புடன் ஜமால் said...

இரசித்து சிரித்தேன் பப்பு ...

பிங்க கலர் மாடு - ஹா ஹா ஹா

இதை நீ ஒரு நாள் நிச்சியம் படிப்பே, அப்பே பாரு ...

இராஜராஜேஸ்வரி said...

ரசிக்கவைத்த பப்புவுக்குப் பாராட்டுக்கள்..