Saturday, December 19, 2009

டிசைனர் வீடுகள்

apple and address

தொடர்ச்சியாக, arrow எப்படி இருக்குமென்று வரைந்தோம். டிராபிக் சிக்னலில் பார்த்தது மற்றும் சில புத்தகங்களில் பார்த்தது பப்புவிற்கு நினைவிருந்தது. அதேபோல வரையலாமென்று முயற்சி செய்தாள். ஒரு முறை வரைந்து காண்பித்ததை பார்த்து வரைந்தாள்.



முதல்முறை சரியாக வரவில்லை, அடுத்த முயற்சிகளில் பரவாயில்லையாக இருந்தது. ஒரு முக்கோண வடிவ பஸிலைக் கொண்டு மேல்வடிவத்தை டிரேஸ் செய்தாள்.(படம் கீழே)



அடுத்து வீடுகளுக்கு அட்ரஸ் எழுதும் படலம் ஆரம்பித்தது.
ஒரு நீண்ட பேப்பரை கட்டம் கட்டமாக மடித்துக்கொண்டு இரு ஓரங்களிலும் டையக்னலாக வெட்டிவிட வேண்டும். முதலில் இருக்கும் வீட்டிற்கு ஜன்னலும் கதவும் வரைந்தேன். பப்பு அதைப் பார்த்து தொடர்ந்து வரைந்தாள். நிறைய ஜன்னல்கள் வரைவது பிடித்து இருந்தது, பப்புவுக்கு. நிறைய ஜன்னல்கள் கொண்டு டிசைனர் வீடுகள் உருவாயின.



பின்னர், அதை ஜன்னல் எண்ணும் ஆக்டிவிட்டியாக மாறியது. அவள் எத்தனை என்று எண்ணி சொல்ல அதை கூரையில் மேல் எழுதினேன். வீட்டுக்கு பக்கத்தில் அட்ரசும் எழுதியிருக்கிறாள்.

7 comments:

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

அழகான வீடுகள்.. குழந்தைகள் உருவாக்கும் உலகம் என்றுமே இனிமையானதுதான். அவர்களின் பார்வையில் உலகை பாருங்கள் என்று எத்தனை ஞானிகள் சொன்னாலும் - அருகில் ஒரு குழந்தையுடனான பயணம் கொடுக்கும் புதிய பரிமாணம் எங்கும் கிட்டாதது..

☀நான் ஆதவன்☀ said...

வெரி நைஸ் :)

குழந்தையோட நீங்களும் குழந்தையா மாறிவிடுறீங்க போல :)

மாதேவி said...

அழகிய கைவண்ணத்துடன் வீடுகள்.

விளையாட்டுடன் கணிதப்பயிற்சியும் பப்புவுக்கு பாராட்டுக்கள்.

ராமலக்ஷ்மி said...

Good work Pappu.

ஜன்னல் கணக்கு.. ரசித்தேன்:)!

நட்புடன் ஜமால் said...

நல்ல கிரியேட்டிவிட்டி

நல்லதோரு ஊக்கம் பப்புவுக்கு

ஆச்சிக்கு நன்றி

பப்பு பேரவை
சிங்கை.

தீஷு said...

நல்ல முயற்சி முல்லை.

குடுகுடுப்பை said...

nalla kiriyetivity