Wednesday, December 23, 2009

சாமி

குறிப்பு : காப்பி போ(பே)ஸ்ட்தான்!
ப்லாக் காணாம போனப்போ இங்கே எழுதினது. இங்கேயும் ஒரு தடவை போஸ்டறேன்.

#######

”சுரேஷை எதுக்கு எல்லோரும் “சாமி, சாமி”ன்னு கூப்பிடறாங்க” என்று ஒரு நிமிடம் குழம்பிபோனேன்.

சட்டமிட்ட படத்துக்குள் இருக்கும் தாத்தா, மாமாதானே சாமி, சுரேஷ் ஏன் சாமி? என்று எனது எட்டு வயது மனம் புரியாமல் யோசித்துக்கொண்டிருந்தது.

”சாமிக்கு இலை போடுங்க” என்றும் ”கை கழுவுங்க சாமி” என்றும் சுரேஷுக்கு பயங்கர மரியாதை. அட, எங்களோடு ஓடி பிடித்து விளையாடியும், மாமரம் ஏறியும், நாகப்பழத்தும் சண்டைபோட்டுக்கொண்டிருந்த சுரேஷுக்கு சாமிக்கு இணையான வரவேற்பு கொடுத்தது
எனக்கு புதிதாக இருந்தது. யாரும் சுரேஷ் என்றே சொலல்வில்லை. அதுவும் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது! சுரேஷூக்கு அப்போது ஒரு பதிமூன்று அல்லது பதினைந்து வயதிருக்க வேண்டும்.

நாட்கள் செல்ல செல்ல கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.

அக்டோபர் கடைசியிலிருந்து அங்குமிங்குமாக தென்படுவார்கள். டிசம்பரில் எல்லா இடங்களிலும் அவர்களை பார்க்கலாம் - பக்கத்து வீட்டிலிருந்து ஆட்டோக்காரர் வரை.

”மாலை போட்டிருக்காங்க, சுத்தமா இருக்கணும்”

“மாலை போட்டிருக்கும்போது அவங்க சாமி மாதிரி நல்லவங்களா இருப்பாங்க, கோவப்பட மாட்டாங்க”

”மாலை போட்டிருக்கும்போது செருப்பு போடமாட்டாங்க, நான்வெஜ் சாப்பிடமாட்டாங்க”

”பொண்ணுங்கல்லாம் அங்கே போகக் கூடாது, பாட்டிங்க போகலாம், வய்சுக்கு வராத குட்டிபொண்ணுங்க போகலாம்”

”ஏன்”

”ஏன்னா, அய்யப்பனுக்கு ஆகாது!!”

இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு வேறு விளக்கம் கிடைத்தது. அந்த காலத்தில் காடு, மலையெல்லாம் கடந்து கால்நடையாக போக வேண்டும். பெண்களின் ரத்தவாசத்தினால் ஈர்க்கப்பட்ட காட்டுமிருகங்களால் ஆபத்து வருமென்றுதான் இந்த தடை என்றும் சொல்லப்பட்டது! அது உண்மைதானா என்று (இரு வருடங்களுக்கு முன்) ஜெயமாலா அய்யப்பனைத் தொட்டு கும்பிட்டதாக கூறியபோது ஏற்பட்ட பரபரப்பை பார்த்து சந்தேகம் வந்தது!

அதிலும், அவர் பத்தொன்பது வருடங்களுக்கு முன்னர் சாமியை தொட்டதாக கூறியதும் சாமிகள் கொதிப்படைந்தனர். அந்த இடைப்பட்ட காலத்தில், சாமியும் அப்போது தீட்டாகிவிட்டாரா, ஒரு பெண் தீண்டிய, தீட்டான சாமியையா நாம் இவ்வளவு காலம் கும்பிட்டோமென்று பயங்கொண்டனர். சுத்த வாழ்க்கை வாழ்ந்து தேடிய புண்ணியத்திற்கு பங்கம் வந்துவிட்டதாக ஆத்திரப்பட்ட சாமிகள்தான் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும்..தெருவில் எச்சில் துப்பவும், புகைக்கவும்!!

முக்காடு போடும் வழக்கத்தை எதிர்ப்போம் - ஏனெனில் நாங்கள் நாகரீகமானவர்கள் - பாரம்பரியம், கலாச்சாரமென்று சொல்லிவிட்டால் கேள்வியே கேட்கமாட்டோம் - ஏனெனில் நாங்கள் இந்தியர்கள்!

22 comments:

ஈரோடு கதிர் said...

சந்தனமுல்லை இப்படியெல்லாம் எழுதுவீங்களா... இப்போதான் படிக்கிறேன்...

சரியான விளாசல்தான்

அம்பிகா said...

நல்லா எழுதியிருக்கிங்க முல்லை.

நானும் உங்க கட்சிதான்.

வானமே எல்லை said...

மாற்றம் என்பதே மானிட தத்துவம் என ஒரு மானுட சிந்தைனையாளர் சொல்லி இருக்கார். அதனாலெ, நான் இன்னா சொல்லுரென்னா, நாம இந்திய கலாச்சார, பண்பாடுகளில் காலத்திற்கேற்ற மாற்றமும், முற்காலங்களில் ஏற்பட்ட காலக்கிரமங்களுக்கு நிவாரணமும் தான் இதற்கான தீர்வு. இந்த சமீபத்திய நிகழ்வே, இன்னும் ஓங்கிச்சொல்ல வேண்டிய தார்மீக தாபங்களை அதீதப்படுத்த வேண்டும் நம்மிடையே. (இன்னும் திருந்தலையா. நான் என்னையை சொன்னேன்)

பிரியமுடன்...வசந்த் said...

குட் ஷாட்...!

பா.ராஜாராம் said...

எனக்கு இது புரியவில்லை முல்லை.

எதை சாடுகிறீர்கள்?அறியாமையையா?அறிந்தே ஏமாற்றுபவர்கலையா?

இதில் யார் ஏமாற்றியது?

//ஜெயமாலா அய்யப்பனைத் தொட்டு கும்பிட்டதாக கூறியபோது//

என்பதை எவ்வளவு எளிதாக கடக்கிறீர்கள்!

குழந்தை வளர்ப்பு போலவே நாம் வளர்த்த சாமிகளும்,முல்லை.

சாமிகளின் மேல் பெரிய நம்பிக்கையும் இல்லை.நம்பிக்கை குறைவும் இல்லை.

எதை எதோடு பொருத்துகிறீர்கள் முல்லை?

// அதிலும், அவர் பத்தொன்பது வருடங்களுக்கு முன்னர் சாமியை தொட்டதாக கூறியதும் சாமிகள் கொதிப்படைந்தனர். அந்த இடைப்பட்ட காலத்தில், சாமியும் அப்போது தீட்டாகிவிட்டாரா, ஒரு பெண் தீண்டிய, தீட்டான சாமியையா நாம் இவ்வளவு காலம் கும்பிட்டோமென்று பயங்கொண்டனர். சுத்த வாழ்க்கை வாழ்ந்து தேடிய புண்ணியத்திற்கு பங்கம் வந்துவிட்டதாக ஆத்திரப்பட்ட சாமிகள்தான் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும்..தெருவில் எச்சில் துப்பவும், புகைக்கவும்!!//

இதற்கும்..

//முக்காடு போடும் வழக்கத்தை எதிர்ப்போம் - ஏனெனில் நாங்கள் நாகரீகமானவர்கள் - பாரம்பரியம், கலாச்சாரமென்று சொல்லிவிட்டால் கேள்வியே கேட்கமாட்டோம் - ஏனெனில் நாங்கள் இந்தியர்கள்!//

இதற்கும் பொருத்துகிறீர்களா?

ஆம் எனில்,ஜெயமாலா போலவே உங்களை நீங்கள் ஏமாற்றி கொள்கிறீர்கள்.பரபரப்பு விரும்புகிறீர்கள் எனவும் எடுக்கிறேன்.
இதை நான் பக்குவ குறைவாகவே உணர்கிறேன்.இதை விவாதிக்கவும் தயார்!

மிக சுவாராஸ்யம் உங்கள் எழுத்து.அதற்க்கு என் வந்தனம்!

சின்ன அம்மிணி said...

அங்க போட்ட அதே கமெண்ட். இதுவும் காப்பி பேஸ்ட்தான்.

ரொம்ப கோபமா இருக்கீங்க போல. நான் அப்பாலிக்கா வர்றேன்.

//தெருவில் எச்சில் துப்பவும், புகைக்கவும்!! //

ஒரு சில சாமிகள் ஒரு மண்டலம் விரதமெல்லாம் இருக்கறதில்லை. ஒரு நாள்தான் :(

பித்தனின் வாக்கு said...

// ”ஏன்னா, அய்யப்பனுக்கு ஆகாது!!” //
அய்யப்பனுக்கு ஒன்றும் ஆகாது, அவர் தவசீலர். இது மனிதர்கள் விதித்த கட்டுப்பாடு.பரசுராமர் விதித்த ஆகம முறை என்றும் சொல்வார்கள்.
// இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு வேறு விளக்கம் கிடைத்தது. அந்த காலத்தில் காடு, மலையெல்லாம் கடந்து கால்நடையாக போக வேண்டும். பெண்களின் ரத்தவாசத்தினால் ஈர்க்கப்பட்ட காட்டுமிருகங்களால் ஆபத்து வருமென்றுதான் இந்த தடை என்றும் சொல்லப்பட்டது!//
இந்தக் கருத்து எனக்கு புதியது. ஏன் ஆண்களின் வியர்வை வாடை ஈர்க்காத? கொடிய காட்டில் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது எனபதுதான் உண்மை. அங்கு மிருகங்கள் வந்தால் நாங்கள் ஓடுவதே பெரும் பிரச்சனை. உங்களையும் கூட்டிச் சென்றால் காப்பாற்றுவது கடினம். (ஒருமுறை மூங்கில் பள்ளம் என்ற இடத்தில் யானை துரத்திய போது விட்டு விட்டு ஓடிவிட்டனர் கூட வந்த சாமிகள் என்று ஒரு வயதான பெண்மணி குறைப்பட்டார். )
//அது உண்மைதானா என்று (இரு வருடங்களுக்கு முன்) ஜெயமாலா அய்யப்பனைத் தொட்டு கும்பிட்டதாக கூறியபோது ஏற்பட்ட பரபரப்பை பார்த்து சந்தேகம் வந்தது! //
இது அவர்கள் பரபரப்புக்காக கிளப்பி விட்டது. சாமியை ஆசாமிகள் பத்தடி தூரத்திலும், வி ஜ பிக்கள் ஜந்தடி தூரத்திலும் தான் தசிரிக்க முடியும். அப்படியிருக்க அவர் எப்படி தொட்டு இருக்க முடியும்.
// ஒரு பெண் தீண்டிய, தீட்டான சாமியையா நாம் இவ்வளவு காலம் கும்பிட்டோமென்று பயங்கொண்டனர். //
சாமி அப்பழுக்கில்லா ஜோதிமயமானவர், அவருக்கு தீட்டுக் கிடையாது, தீட்டு என்றும், அழுக்கு என்றும் அழுக்கான மனிதனின் கற்பனைதான். இதுகூட அவருக்கு இவர்கள் செய்யும் இழுக்கு. ஒருமுறை சுதாசந்திரன் பதினட்டுப் படிகளைத் தொட்டுவிட்டார் என்று தீட்டுக் கழித்தார்கள். சபரி மலையில் முக்கியமானது பதினெட்டுப் படிகள்தான். ஆண்கள் கூட தலையில் இருமுடி இல்லாமல் பதினெட்டுப் படி ஏறமுடியாது, வயதுடைய பெண்கள் இந்தப் பதினெட்டுப் படி வழியாக ஏற முடியாது. பின் வாசல் வழியாக ஜயப்பனை தரிசனம் செய்யலாம். மலை ஏற முடியா வயதுடைப் பெண்கள் ஜயப்பனை தரிசனம் செய்ய ஜயப்பன் திருமூழிக்களத்திற்க்கு(கோவில் எனக்கு சரியாக தெரியவில்லை) வந்து ஒருவாரம் தங்கி இருப்பார். அங்கு சர்வலங்காரத்துடன் அவரைத் தரிசனம் செய்யலாம்.
// ..தெருவில் எச்சில் துப்பவும், புகைக்கவும்!! //
அரைகுறையாக கேள்விப்பட்டு துப்பவே அல்லது புகைக்கவே வேண்டாம். பரபரப்பும் பின்னூட்டமும் வேண்டும் என்றால் ஜயப்பனிடம் விளையாடாதீர்கள். அவர் சர்வ சக்தி மிக்க கலியுக கடவுள். அன்புடன் எச்சரிக்கை செய்கின்றேன் அவர் விஷயத்தில் விளையாட வேண்டாம்.
எனது சபரி மலை யாத்திரையில் கடைசி அத்தியாத்தில், நான் அக்டேபர் தொடங்கி ஜனவரி வரைக்கும் உள்ள கூட்டத்தைப் பற்றி எழுதியுள்ளேன். நாங்களே நசுங்கி,பிதுங்கித்தான் போய் தரிசனம் செய்து வருகின்றேம். நீங்கள் மாட்டினால் சட்டினி தான். அங்கன வந்து பொம்பளை வர்றது கண்ணுக்குத் தெரியலையா, பார்த்துப் போவதுதான என்று டவுன் பஸ் டயலாக் எல்லாம் அங்கு அடிக்க முடியாது.
ஓவ்வெரு மாத நடைத்திறப்பின் போது பின்வாசல் வழியாக ஜயப்பனை நீங்கள் தரிசிக்கலாம். அல்லது ஜாலியாக கூட்டம் இல்லாமல் பொறுமையாக திருமூழிக்களத்தில் தரிசனம் செய்யலாம். நாங்கள் கஷ்டப் பட்டு மலை ஏறி தரிசனம் செய்யும் ஜயப்பன் உங்களுக்காக மலை இறங்கி வந்து தரிசனம் தருகின்றார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இது அவர் அம்மாவிற்க்காக கொடுத்த வரம்.
மாலை போட்டு இருக்கும் நாள்களில் சாமிகள் இருவேளை குளித்து மிகவும் சுத்தமாக இருப்பார்கள். அப்போது கிருமிகள் அவர்களை சுலபமாக தாக்கும். ஆதலால் தான் அவர்களுக்குத் தனியறையும், தனித்து மரியாதையும் தரப்படுகின்றது. நன்றி.
புதுமைப் புரட்சி, வீரசாகசம் எல்லாம் பதிவுகளில் வைத்துக் கொள்ளுங்கள், நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது.
அரைகுறை அறிவுடன் ஒரு ஆகாவளிப் பதிவு இது.

Vidhoosh said...

பித்தனையும் பா.ராஜாராமையும் ரிப்பீடிக்கிறேன் - ஆனால் மென்மையாக.

கடவுள்கள் யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. அவரே மலையிலிருந்து இறங்கி வந்து தரிசனம் கொடுக்கும் போது பாத்துக்கலாமே.

மேலும், நாற்பத்தைந்து நாள் (தொடர்ந்த) விரதமெல்லாம் 13-50 வயதுப் பெண்களுக்குச் சத்தியம் இல்லை.

-வித்யா

பித்தனின் வாக்கு said...

// அரைகுறை அறிவுடன் ஒரு ஆகாவளிப் பதிவு இது. //
மன்னிக்கவும் சிறு தவறு செய்து விட்டேன். அரைகுறைத் தகவலுடன் ஆகாவளிப் பதிவு என்று மாற்றிக் கொள்கின்றேன். நன்றி. எனது கருத்துக்கள் கடுமையாக இருந்தால் மன்னிக்கவும் சகோதரி.

kannaki said...

முல்லை உங்கள் பதிவை இப்போதுதான் படித்தேன்.நன்றாகச் சொல்லீருக்கீங்க.நானும் உங்கள் கட்சி உற்ப்பினர் ஆயிட்டேன்.

கோவி.கண்ணன் said...

//அதிலும், அவர் பத்தொன்பது வருடங்களுக்கு முன்னர் சாமியை தொட்டதாக கூறியதும் சாமிகள் கொதிப்படைந்தனர். அந்த இடைப்பட்ட காலத்தில், சாமியும் அப்போது தீட்டாகிவிட்டாரா, ஒரு பெண் தீண்டிய, தீட்டான சாமியையா நாம் இவ்வளவு காலம் கும்பிட்டோமென்று பயங்கொண்டனர். சுத்த வாழ்க்கை வாழ்ந்து தேடிய புண்ணியத்திற்கு பங்கம் வந்துவிட்டதாக ஆத்திரப்பட்ட சாமிகள்தான் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும்..தெருவில் எச்சில் துப்பவும், புகைக்கவும்!!//
:)

ஐயப்பன் கோவிலை விடுங்க அவரோட பேறே ஐயரப்பன் > ஐயப்பன் முழுக்க முழுக்க பார்பனிய சிந்தனை ஆகமத்தில் இருக்கும் கோவில். தேவஸ்தம் போர்டு தலைவர் விலைமாதர் வீட்டில் விழுந்து கிடந்து பூசைக்கு வந்தாலும் ஐயப்பர் கோவித்துக் கொள்ள மாட்டார்.

ஆனால் மேல் மருவத்தூர் போன்ற சில கோவில்களில் மாதவிலக்கு பெண்களால் பூசை நடை பெறுகிறது.

இந்துக்களில் பெண்களின் மீது கட்டுப்பாட்டு ஒரு சில குழுவினரால் அவர்களை சார்ந்துள்ள பெண்கள் மீது மட்டுமே நடை பெறுகிறதை. அதைத் தவிர்ப்பவர்கள் பாதிக்கப்படுவதும் இல்லை. இந்துக்களில் பெண்ணுகெதிரான வன்முறைகள் பொதுவான ஒன்று இல்லை. 'போங்கடா....' என்று தவிர்க்க பெண்களுக்கு உரிமை இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.

என்னைக் கேட்டால் நான் கண்டிப்பாக தாலி அணியாத திருமணமான இந்துப் பெண்கள் நற்குடியைச் சார்ந்தவர்கள் அல்ல என்று ஒருக்காலமும் சொல்ல மாட்டேன். அணிவது அணியாதது அவர்கள் அந்தப் பண்பாட்டை மதிக்கிறார்களா என்கிற சுய விருப்பைச் சார்ந்ததே. தாலி ஒட்டு மொத்த இந்துப் பெண்களுக்கு நற்குடி சான்றிதழ் வழங்கும் சின்னமும் அல்ல. பொதுப்படுத்தாத நம்பிக்கைகளை மதிக்கலாம் ஆனால் அதே நம்பிக்கைகளை மிகவும் போற்றுவதும் பொதுப் படுத்த முயற்சிப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகும்.

Jeeves said...

//முக்காடு போடும் வழக்கத்தை எதிர்ப்போம் - ஏனெனில் நாங்கள் நாகரீகமானவர்கள் - பாரம்பரியம், கலாச்சாரமென்று சொல்லிவிட்டால் கேள்வியே கேட்கமாட்டோம் - ஏனெனில் நாங்கள் இந்தியர்கள்!//

இதுக்கு முந்தைய வரி வரை உங்கள் ஆதங்கம் எல்லாமும் ஒப்புக் கொள்கிறேன். பாரம்பரியம் கலாச்சாரம் என எதையும் கேள்வி கேட்கும் உரிமை உண்டு. கேட்கவும் செய்கிறோம் இல்லையா ?

//”மாலை போட்டிருக்காங்க, சுத்தமா இருக்கணும்”

“மாலை போட்டிருக்கும்போது அவங்க சாமி மாதிரி நல்லவங்களா இருப்பாங்க, கோவப்பட மாட்டாங்க”

”மாலை போட்டிருக்கும்போது செருப்பு போடமாட்டாங்க, நான்வெஜ் சாப்பிடமாட்டாங்க”
//

இப்படித்தான் இருந்தார்கள். சிலர் இருக்கவும் செய்கிறார்கள்.

//ஜெயமாலா அய்யப்பனைத் தொட்டு கும்பிட்டதாக கூறியபோது//

இரண்டு முறை சபரி மலை சென்று வந்தவன் என்கிற முறையில்

யாராவது தூக்கி உள்ளாரப் போட்டாலுமே தொட முடியாது. வேண்டுமானால் அவரை உள்ளே அனுமதித்து தொடச் செய்திருந்தால் சாத்தியம்.மத்த படி நீங்க கோவமா இருக்கீங்க போல.. நான் அப்புறமா வாரேனுங்க ஆச்சி. பப்புவைக் கேட்டதா சொல்லுங்க.

வால்பையன் said...

//ஜயப்பனிடம் விளையாடாதீர்கள். அவர் சர்வ சக்தி மிக்க கலியுக கடவுள். அன்புடன் எச்சரிக்கை செய்கின்றேன் அவர் விஷயத்தில் விளையாட வேண்டாம்.//

ஏன் அவர் விளையாட வர மாட்டாரா!?
குத்த வச்சு உட்கார்ந்து எந்திரிக்கவே மாட்டிங்கிறாரே அவருக்கு என்ன மூலமா?

யாராவது அய்யமாரு போய் மருந்து தடவி விட்டு வரலாம்ல!

Anonymous said...

//மாலை போட்டு இருக்கும் நாள்களில் சாமிகள் இருவேளை குளித்து மிகவும் சுத்தமாக இருப்பார்கள். அப்போது கிருமிகள் அவர்களை சுலபமாக தாக்கும். ஆதலால் தான் அவர்களுக்குத் தனியறையும், தனித்து மரியாதையும் தரப்படுகின்றது//

இது என்ன புதுசா இருக்கு? சுத்தமா இருந்தா கிருமிகள் தாக்குமா?

கும்மி said...

""மாலை போட்டு இருக்கும் நாள்களில் சாமிகள் இருவேளை குளித்து மிகவும் சுத்தமாக இருப்பார்கள். அப்போது கிருமிகள் அவர்களை சுலபமாக தாக்கும்.""

சுத்தமாக இருந்தால் கிருமிகள் தாக்குமாம்! வந்துட்டாரு வெங்கி! புது கண்டுபிடிப்போட.

குடுகுடுப்பை said...

ஈரோடு கதிர் said...
சந்தனமுல்லை இப்படியெல்லாம் எழுதுவீங்களா... இப்போதான் படிக்கிறேன்...

சரியான விளாசல்தான்

//

எங்க ஊர்ல அய்யப்பனுக்கு மாலை போடுறவன் பாதி பேரு சாராயம் எரிக்கிறவன், இவனுங்க அங்கே போய் பாழாக இடம் பெண்கள் போய் அசிங்கமாவுதாம்.

இவ்வளவு பேசிறேன் என் மனைவியோட மூட நம்பிக்கையை கூட என்னால திருத்தமுடியல.

குடுகுடுப்பை said...

பித்தனின் வாக்கு said...
// ”ஏன்னா, அய்யப்பனுக்கு ஆகாது!!” //
அய்யப்பனுக்கு ஒன்றும் ஆகாது, அவர் தவசீலர். இது மனிதர்கள் விதித்த கட்டுப்பாடு.பரசுராமர் விதித்த ஆகம முறை என்றும் சொல்வார்கள்.
// இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு வேறு விளக்கம் கிடைத்தது. அந்த காலத்தில் காடு, மலையெல்லாம் கடந்து கால்நடையாக போக வேண்டும். பெண்களின் ரத்தவாசத்தினால் ஈர்க்கப்பட்ட காட்டுமிருகங்களால் ஆபத்து வருமென்றுதான் இந்த தடை என்றும் சொல்லப்பட்டது!//
இந்தக் கருத்து எனக்கு புதியது. ஏன் ஆண்களின் வியர்வை வாடை ஈர்க்காத? கொடிய காட்டில் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது எனபதுதான் உண்மை. அங்கு மிருகங்கள் வந்தால் நாங்கள் ஓடுவதே பெரும் பிரச்சனை. உங்களையும் கூட்டிச் சென்றால் காப்பாற்றுவது கடினம். (ஒருமுறை மூங்கில் பள்ளம் என்ற இடத்தில் யானை துரத்திய போது விட்டு விட்டு ஓடிவிட்டனர் கூட வந்த சாமிகள் என்று ஒரு வயதான பெண்மணி குறைப்பட்டார். )
//அது உண்மைதானா என்று (இரு வருடங்களுக்கு முன்) ஜெயமாலா அய்யப்பனைத் தொட்டு கும்பிட்டதாக கூறியபோது ஏற்பட்ட பரபரப்பை பார்த்து சந்தேகம் வந்தது! //
இது அவர்கள் பரபரப்புக்காக கிளப்பி விட்டது. சாமியை ஆசாமிகள் பத்தடி தூரத்திலும், வி ஜ பிக்கள் ஜந்தடி தூரத்திலும் தான் தசிரிக்க முடியும். அப்படியிருக்க அவர் எப்படி தொட்டு இருக்க முடியும்.
// ஒரு பெண் தீண்டிய, தீட்டான சாமியையா நாம் இவ்வளவு காலம் கும்பிட்டோமென்று பயங்கொண்டனர். //
சாமி அப்பழுக்கில்லா ஜோதிமயமானவர், அவருக்கு தீட்டுக் கிடையாது, தீட்டு என்றும், அழுக்கு என்றும் அழுக்கான மனிதனின் கற்பனைதான். இதுகூட அவருக்கு இவர்கள் செய்யும் இழுக்கு. ஒருமுறை சுதாசந்திரன் பதினட்டுப் படிகளைத் தொட்டுவிட்டார் என்று தீட்டுக் கழித்தார்கள். சபரி மலையில் முக்கியமானது பதினெட்டுப் படிகள்தான். ஆண்கள் கூட தலையில் இருமுடி இல்லாமல் பதினெட்டுப் படி ஏறமுடியாது, வயதுடைய பெண்கள் இந்தப் பதினெட்டுப் படி வழியாக ஏற முடியாது. பின் வாசல் வழியாக ஜயப்பனை தரிசனம் செய்யலாம். மலை ஏற முடியா வயதுடைப் பெண்கள் ஜயப்பனை தரிசனம் செய்ய ஜயப்பன் திருமூழிக்களத்திற்க்கு(கோவில் எனக்கு சரியாக தெரியவில்லை) வந்து ஒருவாரம் தங்கி இருப்பார். அங்கு சர்வலங்காரத்துடன் அவரைத் தரிசனம் செய்யலாம்.
// ..தெருவில் எச்சில் துப்பவும், புகைக்கவும்!! //
அரைகுறையாக கேள்விப்பட்டு துப்பவே அல்லது புகைக்கவே வேண்டாம். பரபரப்பும் பின்னூட்டமும் வேண்டும் என்றால் ஜயப்பனிடம் விளையாடாதீர்கள். அவர் சர்வ சக்தி மிக்க கலியுக கடவுள். அன்புடன் எச்சரிக்கை செய்கின்றேன் அவர் விஷயத்தில் விளையாட வேண்டாம்.
எனது சபரி மலை யாத்திரையில் கடைசி அத்தியாத்தில், நான் அக்டேபர் தொடங்கி ஜனவரி வரைக்கும் உள்ள கூட்டத்தைப் பற்றி எழுதியுள்ளேன். நாங்களே நசுங்கி,பிதுங்கித்தான் போய் தரிசனம் செய்து வருகின்றேம். நீங்கள் மாட்டினால் சட்டினி தான். அங்கன வந்து பொம்பளை வர்றது கண்ணுக்குத் தெரியலையா, பார்த்துப் போவதுதான என்று டவுன் பஸ் டயலாக் எல்லாம் அங்கு அடிக்க முடியாது.
ஓவ்வெரு மாத நடைத்திறப்பின் போது பின்வாசல் வழியாக ஜயப்பனை நீங்கள் தரிசிக்கலாம். அல்லது ஜாலியாக கூட்டம் இல்லாமல் பொறுமையாக திருமூழிக்களத்தில் தரிசனம் செய்யலாம். நாங்கள் கஷ்டப் பட்டு மலை ஏறி தரிசனம் செய்யும் ஜயப்பன் உங்களுக்காக மலை இறங்கி வந்து தரிசனம் தருகின்றார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இது அவர் அம்மாவிற்க்காக கொடுத்த வரம்.
மாலை போட்டு இருக்கும் நாள்களில் சாமிகள் இருவேளை குளித்து மிகவும் சுத்தமாக இருப்பார்கள். அப்போது கிருமிகள் அவர்களை சுலபமாக தாக்கும். ஆதலால் தான் அவர்களுக்குத் தனியறையும், தனித்து மரியாதையும் தரப்படுகின்றது. நன்றி.
புதுமைப் புரட்சி, வீரசாகசம் எல்லாம் பதிவுகளில் வைத்துக் கொள்ளுங்கள், நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது.
அரைகுறை அறிவுடன் ஒரு ஆகாவளிப் பதிவு இது.

9:18 AM
//

அய்யா பித்தனின் வாக்கு பெண்கள் கோவிலுக்கு போகும்போது விலங்கு கடிச்சி செத்தா சாகட்டும், மகாமகம் , திருவிழா நெரிசலில் சாகலை, உங்கள் வாதம் ஒரு சப்பைக்கட்டு. முதலில் அனுமதியுங்கள் அப்புறம் விலங்கு,விலாங்கெல்லாம் கடிக்குதான்னு பார்ப்போம். ஒரே ஒரு பாதிப்பு இருக்கு யாராவது காமுக சாமி கற்பழிக்க வாய்ப்பு இருக்கு.

The Analyst said...

வடிவாக எழுதியுள்ளீர்கள். இதைப்படித்த உடனேயே எனது கருத்துக்களையும் சொல்ல வேணும் என்று நினைத்து பின் வேறு வேலைகளால் மறந்து விட்டது. இப்போது வினவு இணையத்தலத்தில் இவ்விடுகை குறிப்பை பார்த்து ஞாபகம் வந்தது.

எனக்கும் இதே மாதிரி நிறையக் கேள்விகள் உண்டு. முதலில் நான் ஏன் பெண்கள் ஜயப்பன் கோவிலுக்குப் போகக்கூடாது என்ற கேட்ட கேள்விக்கு எனக்கு கிடைத்த பதில் அவர் சிவனுக்கும் விஸ்ணுவுக்கும் பிறந்தவர், ஒரு பிரமச்சாரி அதனால் பெண்கள் போகக்கூடாது என்பது.

இந்தப்பதிலால் எனக்கு மேலும் மேலும் விதண்டாவாதமகக் கேள்விகளே எழுந்தன.

எப்படி சிவனுக்கும் விஸ்ணுவுக்கும் ஒரு பிள்ளை பிறக்கும் சாத்தியம் எற்பட்டிருக்கும்?

விஸ்ணு மோகினியாக மாறியதும் தான் நடந்தது எனில், முழுமுதற் கடவுளான சிவனுக்கு புத்தி எங்கு போயிற்று?

ஜயப்பன் பிரமச்சாரியோ இல்லையோ கடவுளாகத்தானே கொண்டாடுகிறார்கள், அவரின் உணர்ச்சிகளை மனிதப் பெண்களால் தூண்ட முடியுமா? அந்தளவிற்கு கட்டுப்பாடு இல்லாதவரா? இக்கேள்வி எழுந்தவுடன் நானே என்னைக் குட்டிக் கொண்டேன். அதான் அவரின் பெற்றோருக்கே முடியவில்லை. ஒன்றுக்கு இரண்டு பெற்றோருமே அவ்வாறு இருக்கும் போது இவரின் லட்சணம் இப்படி இருப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயம் இல்லைத்தானே. :)

கெக்கே பிக்குணி said...

//இப்போது வினவு இணையத்தலத்தில் இவ்விடுகை குறிப்பை பார்த்து ஞாபகம் வந்தது// இந்த ரூட்ல தான் நானும் வந்தேன். ஹிஹி. உங்க ரீச் பாருங்க ஆச்சி!

ஓவர் டு மாட்டர். ஆண்கள் விரதம் இருந்து போவதால், அவர்களின் கவனம் குறைய பெண்கள் காரணிகள் ஆகிவிடக்கூடும்னு தான் நான் கேள்விப்பட்டிருக்கேன். 25-50 வயதுடைய பெண்கள் போனால் அவர்களால் 45 நாட்கள் விரதம் இருக்கமுடியும் என்பது மட்டுமல்ல, விரதம் இருக்கும் மற்ற ஆண்களின் சாமான்கள் தூக்கி, உணவு சமைத்து... என்று எவ்வளவு உதவியாக இருப்பார்கள் என்று இந்த விரதம் ஏற்படுத்தியவர்கள் யோசிக்காமல் இருப்பார்களா என்ன?

போகணும்னு ஆசை எனக்கும். கங்கை இறப்பின் சாட்சியாக, இந்து நம்பிக்கைகளின் சாட்சியாக ஓடுவது போல, கூட்ட பக்தியின் சாட்சியாக சபரிமலை - அதனால். பல வருடங்களாக வெளியே இருப்பதால், எத்தனை "சாமி"கள் விதிமுறை மீறுகிறார்கள் என்று தெரியாது.

மற்றபடி, உங்கள் பதிவின் முக்கிய செய்தி பற்றி: நீங்கள் சொல்வது மிகச் சரி. நம் பெரும் பாடு இது தான்: நல்லவர்களின் நம்பிக்கைகளைக் காயப்படுத்த மாட்டோம். இதை மக்கள் அவர்களுக்குத் தேவைப்பட்ட விதத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பித்தனின் வாக்கு: சார், பொம்பிளைங்க கம்பிளையின் செய்யாம வரணும்ன்றீங்க. அது ஒண்ணு தான் பாயின்டு. பாருங்க, சபரிமலையில் போலீஸ் பின்வழியாக வருவாங்க, அவங்க அனுமதித்தால் உள்ளே வரமுடியாதா? ஜீவ்ஸ் சொன்னது இது: வேண்டுமானால் அவரை உள்ளே அனுமதித்து தொடச் செய்திருந்தால் சாத்தியம்.

சந்தனமுல்லை, அப்புறம்: //முக்காடு போடும் வழக்கத்தை எதிர்ப்போம் - ஏனெனில் நாங்கள் நாகரீகமானவர்கள் - பாரம்பரியம், கலாச்சாரமென்று சொல்லிவிட்டால் கேள்வியே கேட்கமாட்டோம் - ஏனெனில் நாங்கள் இந்தியர்கள்!// இது புரியல. முக்காட்டை எதிர்ப்பது நம்பிக்கையை எதிர்ப்பது; பாரம்பரியத்தை எதிர்ப்பதும் நம்பிக்கையை எதிர்ப்பது. எங்கிட்டுருந்து எங்கிட்டு வரீங்க? நிசமாவே புரியல.

naathaari said...

உங்கள் பயணம் இப்போது தொடங்குகிறது

Thekkikattan|தெகா said...

இப்படி ஒரு பதிவு வந்திருக்கு இப்பத்தான் தெரியும். படிச்சிட்டேன். :-)

இதை வைச்சு ஒரு வெட்டுக் கொத்தே நடந்திருக்கே, என் வீட்டிலயும்.

பதி said...

நல்ல பதிவு..

நீண்ட பயணத்தில் சுற்றிக் கொண்டிருந்ததால் பெரும்பாலான பதிவுகளை கூகுள் ரீடரில் படித்ததினால், பின்னூட்டங்களை கவனிக்க இயலவில்லை !!!!

//வால்பையன் said...

ஏன் அவர் விளையாட வர மாட்டாரா!?
குத்த வச்சு உட்கார்ந்து எந்திரிக்கவே மாட்டிங்கிறாரே அவருக்கு என்ன மூலமா?

யாராவது அய்யமாரு போய் மருந்து தடவி விட்டு வரலாம்ல!//

எப்படிங்க வால், இப்படி எல்லாம்??

:))

எனக்கும் இதே சந்தேகம் வந்திருக்கு சின்ன பையன்ல.. ஆனா, ஒருத்தரும் இது வரைக்கும் பதில் சொன்னது இல்லை, ஏன் ஐயப்பன் ஒரு கச்சை கட்டிட்டு உக்காந்து இருக்காருன்னு..