Monday, December 14, 2009

apple and address(Thanks - Google)

பிறந்தநாளுக்கு வாங்கியிருந்த பேப்பர் பிளேட்கள் சில மீதமிருந்தன.அதிலொன்றை எடுத்துக்கொண்டோம். அதில் a-வை நினைத்துத்தான் வரைய ஆரம்பித்தேன். ஆனால் ஆரஞ்சு போல வந்துவிட்டது. பப்பு நல்லபெண்ணாக அதை ஆப்பிள் என்று ஒப்புக்கொண்டு விட்டாள். ஆப்பிளுக்கும், இலைக்கும் வண்ணங்கள் தீட்டினாள். அவளுக்கு வெட்ட கடினமாக இருந்ததால், வெட்டிக்கொடுத்ததும் ஒட்டினாள். பிறகு நாங்கள் ஆப்பிளைப் பற்றி பேசினோம்.

ஆப்பிள் எந்த பக்கம் சிவப்பாக இருக்கும்(ஹிஹி..எல்லாப் பக்கமும்தான்!), An apple a day..., ஆப்பிளின் பாகங்கள் ( ஆப்பிள் விதை, காம்பு) முதலியன!

வேறு சில a வார்த்தைகளை,

address
arrow
anchor
axe
ant

பற்றியும் பேசினோம்.
ஞாயிறு பேப்பரோடு வந்த flyers-இல் வெட்டிய வடிவங்கள் இவை.ஏற்கெனவே ஷேப்ஸ் பஸில்சை வைத்து, இது போல வீடு செய்து பப்புவுக்கு பழக்கமாதலால் சுலபமாக ஒட்டிவிட்டாள். ஜன்னல்களையும் ஒட்டினாள். கதவு திறந்திருக்க வேண்டுமென்றதால் பாதி மடக்கிக் கொடுத்தேன். ஒட்டியபின் address பற்றி பேசினோம்.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு address இருக்கிறது என்றதும் “ஆம்பூர் ஆயாவுக்குமா, வடலூர் ஆயாவுக்குமா” என்றாள். பின்னர், அவளது வீட்டு அட்ரசை கேட்டேன். முதலில் “சென்னை” என்று சொன்னாள். முதலில் வீட்டின் எண்ணும், வீட்டின் பெயரும் வரும் என்றேன். சொல்லிவிட்டு, ”சென்னை “ என்றாள். வீடு எங்கே இருக்கிறது என்றதற்கு, தரையைக்காட்டி “இங்கே” என்றாள். :-)) முன்பே வீட்டு அட்ரஸ் தெரியுமென்றாலும் கோர்வையாக சொல்ல வராது. முதலடி எடுத்துக்கொடுக்க வேண்டும். இப்போதும் அதேதான். ஆனால், ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு அட்ரஸ் இருக்கிறது, போஸ்ட் வரும் என்று புரிந்துக்கொண்டிருக்கிறாள். மேலிருக்கும் படத்தில் வீட்டுக்கு அருகில் கிறுக்கியிருப்பது சாரி எழுதியிருப்பது வீட்டின் அட்ரஸ்!

21 comments:

ஆயில்யன் said...

//ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு அட்ரஸ் இருக்கிறது/

பப்பு டைம்ஸில “ஆச்சி மொழி” !

நட்புடன் ஜமால் said...

ஏதோ போனா போவுதுன்னு பப்பு ஒத்துகிட்டாங்க

ஆனால் உங்களுக்கு தான் நஷ்ட்டம்

ஒரு பல்பு போச்சே ...

சின்ன அம்மிணி said...

அட்ரஸ் நோட் பண்ணிக்கிட்டேன். கண்டிப்பா வந்துருவேன். :)

ராமலக்ஷ்மி said...

//தரையைக்காட்டி “இங்கே” என்றாள்.//

க்யூட்:)!

//ஆனால் ஆரஞ்சு போல வந்துவிட்டது.//
//அதை ஆப்பிள் என்று ஒப்புக்கொண்டு விட்டாள்.//

‘பல்பு’ கொடுக்க நல்ல சான்ஸ் கிடைச்சும் விட்டுட்டியே பப்பு..:)?

Mrs.Dev said...

பப்பு தி கிரேட் ...நல்லா இருக்கு பப்பு ஒன்னொன்னா கத்துக்கறது .
:)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

இதோ வந்துட்டேன்.......

அமிர்தவர்ஷினி அம்மா said...

Mrs.Dev said...
பப்பு தி கிரேட் ...நல்லா இருக்கு பப்பு ஒன்னொன்னா கத்துக்கறது .
:)

வழிமொழிகிறேன்.

☀நான் ஆதவன்☀ said...

பல்பு எதுவும் வாங்கலையா? :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

யெஸ் நானும் அட்ரஸ் நோட் செய்துகிட்டேன்.. பப்பு வீடுன்னு கேட்டா பச்சப்புள்ளகூட காமிச்சிருமில்ல .. :)

அம்பிகா said...

பப்புவோட வீடு ரொம்ப நல்லாயிருக்கு.
பொறுமையா ஒட்டியிருப்பது ஆச்சரியமா இருக்குது.

RAMYA said...

//
தரையைக்காட்டி “இங்கே” என்றாள்.
//

இதை ரசிக்க முடிந்தது. பப்பு கிட்டே சொல்லுங்க அருமைன்னு :)

RAMYA said...

//
அதை ஆப்பிள் என்று ஒப்புக்கொண்டு விட்டாள்.
//

சான்ஸ் ஜஸ்ட் மிஸ்:) ஐயோ பப்பு என்னை போல வெள்ளையா இருக்கியே :)

அட்ரஸ் கொடுத்துட்டீங்க. ஒரு நாள் நாங்க ஆஜர் :-)

சக்தி த வேல்..! said...

nice

அண்ணாமலையான் said...

சுவையான எழுத்துக்கு வாழ்த்துக்கள்.

கண்மணி said...

அட்ரெஸோட ஃபோன் [மொபைல்] நம்பரையும் படிக்கச் சொல்லுங்க.அதுதான் இப்போ முக்கியம்.
பப்பு ஸ்மார்ட் [அம்மா போல இல்லை...அஹாஹ்ஹா]முன்னமே தெரிஞ்சு வச்சிருப்பாள்.

SanjaiGandhi™ said...

//மேலிருக்கும் படத்தில் வீட்டுக்கு அருகில் கிறுக்கியிருப்பது சாரி எழுதியிருப்பது வீட்டின் அட்ரஸ்!
//

ரைட்.. ரொம்பத் தெளிவா இருக்கு.. கண்ணை மூடிட்டே வந்துடலாம் போல..
( எங்கடா அந்த ஆட்டோ.. அனுப்புங்கடா உடனே..)

கானா பிரபா said...

/மேலிருக்கும் படத்தில் வீட்டுக்கு அருகில் கிறுக்கியிருப்பது சாரி எழுதியிருப்பது வீட்டின் அட்ரஸ்!//

கையொப்பத்தை வச்சுப் பார்க்கும் போது பப்பு பெரிய டாக்டரா வரும் போல இருக்கு

ஆயில்யன் said...

// /மேலிருக்கும் படத்தில் வீட்டுக்கு அருகில் கிறுக்கியிருப்பது சாரி எழுதியிருப்பது வீட்டின் அட்ரஸ்!//

கையொப்பத்தை வச்சுப் பார்க்கும் போது பப்பு பெரிய டாக்டரா வரும் போல இருக்கு///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்! :)))

சுரேகா.. said...

:)
பப்பு அட்ரஸை சரியாத்தான் எழுதியிருக்கா!
ஆனா அந்த மொழியைப்படிக்கிற அளவுக்கு சஞ்சய்க்கு ஞானம் பத்தலை...
எனக்கும்தான்.. ஹி..ஹி..

:))

சுரேகா.. said...

முன்ன போட்ட பின்னூட்டம் வந்துச்சா..!?

பப்பு எழுதிய அட்ரஸ்தான் அழகு!
:)

நிஜமா நல்லவன் said...

/கானா பிரபா said...

/மேலிருக்கும் படத்தில் வீட்டுக்கு அருகில் கிறுக்கியிருப்பது சாரி எழுதியிருப்பது வீட்டின் அட்ரஸ்!//

கையொப்பத்தை வச்சுப் பார்க்கும் போது பப்பு பெரிய டாக்டரா வரும் போல இருக்கு/


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்......!