Thursday, December 17, 2009

பப்பு டைம்ஸ்

(ஆயாவுக்கும் பப்புவுக்குமிடையே நடந்த உரையாடல்)

பப்பு, பேப்பரை மெதிக்காதே, காலை எடு!

ஏன்?

பேப்பரை மெதிக்கக்கூடாது!

ஏன்?

....


சாமி அடிக்குமா?

ஆமா!

மேலே இருந்து வந்து அடிக்குமா?

ஆமா!

நான் சாத்தி வைச்சிடுவேன்.

திறந்து வந்து அடிக்கும்.

நான் நல்லா பூட்டி வச்சிடுவேன்.

ஒடைச்சுட்டு வந்துடும்.

நான் கெட்டியா பூட்டி வைச்சிடுவேன். அப்போவும் வருமா?

வராது!


மேலே ஓட்டை வழியா வருமா?

ஆமா.

அதையும் சாத்தி வைச்சிடுவேன்.

சரி, வராது!

வந்தா நான் கராத்தே பண்ணுவேன். என்னா பண்ணும்?

அதுவும் கராத்தே பண்ணும்.

நான் நல்லா கராத்தே பண்ணி ஓட வைச்சிடுவேன்!
(அலுவலகத்திலிருந்து நான் தொலைபேசியபோது)

ஆச்சி, ஒரு கவ்வும், பஃபல்லோவும் வீட்டுக்கு வந்திருக்குது!

சரி, உட்கார வை!

கேட்-க்கு வெளிலே நின்னுக்கிட்டுருக்கு, நான் கராத்தே பண்ணிட்டேன், அதனாலே போய்டும்!
ஆச்சி, நீயும் அப்பாவும் போய்ட்டீங்கல்ல, நானும் ஆயாவும் இருந்தப்போ ஒரு ஏப்-உம் ரைனோவும் உள்ளே வரப்பாத்துச்சு!

ஓ...அப்புறம்?

நான் நல்லா கராத்தே பண்ணி துரத்திட்டேன்!

வாவ், சூப்பர், பப்பு!!
இப்படித்தான், இவர்களனைவரும் கடந்த சனிக்கிழமையன்று கராத்தே செய்தார்கள். ”நான் க்ரீன் டான்”, ”நான் ப்ரவுன் டான்” என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டார்கள்! (க்ரீன் டான்கள் 4-6 வயது, ப்ரவுன் டான்கள் - 7 வயதுக்கு மேல்)

24 comments:

ஆயில்யன் said...

//ஆச்சி, ஒரு கவ்வும், பஃபல்லோவும் வீட்டுக்கு வந்திருக்குது!

சரி, உட்கார வை! ///

அவ்வ்வ்வ்வ்வ் இதுல இருக்கிற உள்குத்து யப்பா சாமியோவ்வ்வ்வ் :)

ஆயில்யன் said...

குட்டீஸ்களின் கராத்தே பயிற்சி பழகும் போட்டோ பார்க்க அழகாய் இருக்கிறது !

பா.ராஜாராம் said...

:-)))))
டோட்டல் சிப்பானிடா பப்பு நீ!

சின்ன அம்மிணி said...

கராத்தே ரீட்டாவாக வர வாழ்த்துக்கள் பப்பு!!!!

நட்புடன் ஜமால் said...

ஆகா ஆகா

வாங்க கராத்தே பப்ஸ்

வாழ்த்துகள்

பித்தனின் வாக்கு said...

குழந்தைகளின் தன்னம்பிக்கை வளர ஒரு நல்ல வாய்ப்பு. பப்புவின் கராத்தே பயிற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

இனி ஆச்சியின் உருட்டல் மிரட்டல் எல்லாம் பப்புகிட்ட பலிக்காது. எத்தனை நாளைக்குத்தான் மாமா மாதிரி பப்புவையும் மிரட்ட முடியும். ஹா ஹா நன்றி சகோதரி.

ராமலக்ஷ்மி said...

//சரி, உட்கார வை! //

இதற்கெல்லாம் அசர மாட்டாளாக்கும் பப்பு:)!

அம்பிகா said...

அட! பப்பு கராத்தே கத்துக்கிறாளா?
குட். நீங்க எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.

வல்லிசிம்ஹன் said...

பப்பு ப்ளாக் பெல்ட் வாங்கும் நாள் அதிகத் தூரத்தில் இல்லைப்பா.... முல்லை நீங்களும் கராத்தே கத்துக்கங்க:) சூப்பர் மா.
செல்லமே செல்லமே. உம்மா....

அமிர்தவர்ஷினி அம்மா said...

போட்டோவில் கடைசியில் நிற்பது பப்புவா?

இந்த டிரஸ்ஸில் அவளைப் பார்க்கும்போது மிக அழகாகத் தெரிகிறாள்.

ஆச்சி, ஒரு கவ்வும், பஃபல்லோவும் வீட்டுக்கு வந்திருக்குது!

சரி, உட்கார வை! //

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கேட்-க்கு வெளிலே நின்னுக்கிட்டுருக்கு, நான் கராத்தே பண்ணிட்டேன், அதனாலே போய்டும்! //

கிர்ர்ர்ர்ர்ர்ரோ கிர்ர்ர்ர்ர்ர்ர்

தற்காப்புக்கலை நல்லா வேலை செய்யுது போல:) சூப்பர் பப்பு

குடுகுடுப்பை said...

நல்லது, ஆனா இனி சென்னைப்பக்கமே வரலை, அப்புறம் குடுகுடுப்பை வந்தான் நான் கராத்தே பண்ணிட்டேன்னு உங்க பொண்ணு அளும்பு தாங்காது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\சரி, உட்கார வை//

முல்லை :)சூப்பர்

\\நான் கராத்தே பண்ணிட்டேன், அதனாலே போய்டும்! //
இது ரொம்ப சூப்பர்..

கானா பிரபா said...

கராத்தே வீராங்கனை பப்புவை வாழ்த்துகிறோம் (எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தான்)

தமிழ் பிரியன் said...

\\\ ஆயில்யன் said...
//ஆச்சி, ஒரு கவ்வும், பஃபல்லோவும் வீட்டுக்கு வந்திருக்குது!

சரி, உட்கார வை! ///

அவ்வ்வ்வ்வ்வ் சிரிச்சு தாங்கல... ;-)))

பிரியமுடன்...வசந்த் said...

பப்பு குழந்தை மொழி ரொம்ப அழகா வளர்ந்துட்டே இருக்கு...

கராத்தே பப்பு ம்ம்

எதிர்கால ரோமியோக்களின் பாடு திண்டாட்டம்தான்...!

அமுதா said...

:-)

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//ஆச்சி, ஒரு கவ்வும், பஃபல்லோவும் வீட்டுக்கு வந்திருக்குது!

சரி, உட்கார வை! ///

அவ்வ்வ்வ்வ்வ் இதுல இருக்கிற உள்குத்து யப்பா சாமியோவ்வ்வ்வ் :)/


Repeattttuuuuuuuuuuuu...:)

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

ஒரு விஷயத்தை குழந்தைகள் கற்று கொள்ளும்போது அதற்க்கு கொடுக்கபடும் முக்கியத்துவம் இந்த பதிவில் தெரிகிறது - நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம்.... :-)

R.Gopi said...

குட்டீஸ் கராத்தே சூப்பர்...

அந்த கௌ அண்ட் பஃபல்லோ மேட்டர் ஹா..ஹா...ஹா... பலே...

ஆமாம், உங்களுக்கு கராத்தே தெரியுமா??

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ்வ் என்னைக்காவது வீட்டுக்கு வந்தா பப்புவை கராத்தே பண்ணி துறத்தி விட்டுறாதீங்க பாஸ் :)

mayil said...

அங்கயும் இந்த அலும்புதானா ....

SanjaiGandhi™ said...

:)

குசும்பன் said...

//நான் கெட்டியா பூட்டி வைச்சிடுவேன். அப்போவும் வருமா?

வராது//

ஏன் திடிர் பல்டி:)

பாவம் பப்பு அப்பா:) எத்தனை கராத்தேயைதான் சமாளிப்பது:)

மாதேவி said...

கராத்தே பயிற்சி பழகும் சிறுவர்கள் போட்டோ சூப்பர்.