Thursday, December 10, 2009

டோடோவை ஏன் எல்லோரும் டோடோன்னு கூப்பிடறாங்க?

டோடோ வினோதமான ஒலியைக் கேட்டாலோ அல்லது புதிதாக எதையாவது பார்த்தாலோ டொட் டொட் என்று சப்தமெழுப்பும். ஆச்சர்யமடைந்தாலும் டொட் டொட் என்று சப்தம் கொடுக்கும்.


காற்று பலமாக வீசி, வீட்டின் ஜன்னலின் தடுப்புகள் அசைந்தாலோ், கோழிக்குஞ்சுகள் கிச்கிச் என்று அங்கிமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தாலோ, பூனைகள் குழந்தை போல அழும் சத்தம் கேட்டாலோ டோடோ ஆச்சர்யமடைந்து விடும். ”டொட்டொட்..இதோ வந்துட்டேன், உன்னை நான் புடிக்கப்போறேன், உன்கூட விளையாட வர்றேன்” என்று சொல்லிக்கொண்டு தாவி ஓடும். பிடிக்க முயற்சி செய்து மண்ணில் விழுந்து புரளும்.அதிலிருந்துதான், எல்லோரும் டோடோ என்று அழைக்கத் தொடங்கினர்.டோடோ, ஒருநாள் காலையில் 'கிரிச் கிரிச் கிரிச்' என்ற கலவையான சத்தத்தை கேட்டது. ஆச்சர்யமடைந்தது டோடோ! தோட்டத்தில் குருவிகள் கூட்டமாக மண்ணில் புழுக்களை தேடுவதையும், டோடோவின் உணவுத்தட்டை கொத்தியபடி திரிந்துக்கொண்டிருப்பதையும் பார்த்தது. டோடோ மெதுவாக சப்தமெழுப்பாமல் நடந்தது.

டோடோ குருவிகளை பயமுறுத்த விரும்பவில்லை. குருவிகள் பயத்தினால் பறந்துவிடுவதை டோடோ விரும்பவில்லை. அருகில் சென்றதும் குருவிகளின் மேல் திடீரென்று பாய்ந்தது. கைகளில், குருவியை பிடித்தமாதிரி இருந்தது, ஆனால் கைகளில் எதுவும் கிடைக்கவில்லை. எல்லாக்குருவிகளும் பறந்துவிட்டிருந்தன.


டோடோவுக்கு ஏன் குருவிகளை பிடிக்கத் தெரியவில்லை, ஏனெனில் டோடோ ஒருவயதே நிரம்பிய நாய்க்குட்டி!குறிப்பு : பப்புவுக்கு இப்போதெல்லாம் கதைகளில் சஸ்பென்ஸ் வேண்டும், அட்வென்ச்சர் வேண்டும், வன்முறை வேண்டும். அதற்கேற்ப உருவான கதை. நாய்க்குட்டிக்கு பதில் புலி, சிறுத்தை என்றும் குருவிகள் மான்களாகவும் மாறும்.

13 comments:

ஆயில்யன் said...

//குறிப்பு : பப்புவுக்கு இப்போதெல்லாம் கதைகளில் சஸ்பென்ஸ் வேண்டும், அட்வென்ச்சர் வேண்டும், வன்முறை வேண்டும். அதற்கேற்ப உருவான கதை. நாய்க்குட்டிக்கு பதில் புலி, சிறுத்தை என்றும் குருவிகள் மான்களாகவும் மாறும்///

டோட்டலா சொல்லணும்ன்னா தமிழ் சினிமா பாக்குற தகுதி வந்திருச்சுன்னு அர்த்தம் :)

அமுதா said...

:-)

லெமூரியன்... said...

\\வன்முறை வேண்டும்...//

ஆத்தீ Terror பாப்பாவா மாறிக்கிட்டே வருதா பப்பு...! :-) :-)

வல்லிசிம்ஹன் said...

கதை இனிமை முல்லை.
நானும் கதை கேட்க உங்க வீட்டுக்கு வரப்போறேன்பா:)
நானும் டோடோ என்றதும் அந்தப் பறவையைப் பத்தித்தான் சொல்றீங்களோன்னு வந்தேன்.!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பப்புவுக்கு இப்போதெல்லாம் கதைகளில் சஸ்பென்ஸ் வேண்டும், அட்வென்ச்சர் வேண்டும், வன்முறை வேண்டும். //
:)

ஏ யாருப்பா Scholistic புக் காரங்களைக் கூப்பிடுப்பா..

butterfly Surya said...

டோட்டலா சொல்லணும்ன்னா தமிழ் சினிமா பாக்குற தகுதி வந்திருச்சுன்னு அர்த்தம் :)///////// exactly..

கோமதி அரசு said...

தோ,தோ நாய்குட்டி,துள்ளி வா நாய்குட்டி,பப்புவுக்கு குருவி பிடித்துக் கொடு.

rapp said...

//பப்புவுக்கு இப்போதெல்லாம் கதைகளில் சஸ்பென்ஸ் வேண்டும், அட்வென்ச்சர் வேண்டும், வன்முறை வேண்டும். அதற்கேற்ப உருவான கதை. நாய்க்குட்டிக்கு பதில் புலி, சிறுத்தை என்றும் குருவிகள் மான்களாகவும் மாறும்//

நீங்க வீரத்தாயா மாறுறதா சொல்றீங்க. ஆனா, இதெல்லாத்தையும் விட, இந்த கொரல்ல நீங்க பேசி சாதிக்கணுங்கற விஷயம்தான் ரொம்ப முக்கியம். இதை பப்பு தீவிரமா கடைபிடிக்கணும்னு எதிர்பாக்குறேன்.

நசரேயன் said...

//
டோட்டலா சொல்லணும்ன்னா தமிழ் சினிமா பாக்குற தகுதி வந்திருச்சுன்னு அர்த்தம் :)//

ஆமா.. ஆமா

சின்ன அம்மிணி said...

:)

நட்புடன் ஜமால் said...

வேட்டைக்காரன் குடும்பத்தோட பார்க்க போறியளோ ...

தியாவின் பேனா said...

mmmmmmm...........

சிங்கக்குட்டி said...

ஹ ஹ ஹ...அருமையாக இருக்கிறது.

//கதைகளில் சஸ்பென்ஸ் வேண்டும், அட்வென்ச்சர் வேண்டும், வன்முறை வேண்டும்.//
z
என் மகள் மட்டும் தான் இப்படியோ என்று நினைத்துகொண்டு இருந்தேன், எல்லா குழந்தைகளும் இதே போல் தான் :-)