Tuesday, December 22, 2009

கப்பரீசா...

பார்சல் வேகவேகமாக கைமாறிக் கொண்டிருந்தது. பாடல் எப்போது நிற்குமோ தெரியாது.எல்லோர் முகத்திலும் சிரிப்பு.

அது ஒரு பிறந்தநாள் பார்ட்டி. எனது அலுவலக நண்பரின் மகள் பெனிட்டாவின் இரண்டாவது பிறந்தநாள் பார்ட்டி. அங்குதான் குழந்தைகளுக்கான 'பாஸிங் த பார்சல்' விளையாட்டு நடந்துக்கொண்டு இருந்தது. பாட்டு நிறுத்தப்படும் போது யார் கையில் பார்சல் இருக்கிறதோ அவர் அவுட். அவருக்குத் தெரிந்த ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும். ரைம்ஸ்/ பாட்டு பாடுவதோ, டேன்ஸ் ஆடுவது முதலியன.

இந்தமுறை பாடல் நின்றபோது பார்சல் பப்புவிடம். பப்பு பாட மறுத்துவிட்டாள். நிகழ்ச்சியை நடத்தினவரிடம் பேரை மட்டும் மைக்கில் சொல்லிவிட்டு அவரையே பார்த்துக்கொண்டு நின்றாள். ”நீங்க என்ன பண்ணப் போறீங்க” என்றும் ”ரைம்ஸ் சொல்றீங்களா, எங்கே ஆண்ட்டிக்கு ஒரு ரைம்ஸ் பாடிக்காட்டுங்க” என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். பப்பு வாயை திறந்தபாடில்லை. எல்லோரும் எங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ”அவ ரொம்ப ரிசர்வ்டு, அவ ரொம்ப ஷை” என்று முத்திரை குத்தப்படுவதை நான் விரும்பவில்லை. ஏனெனில் அது உண்மையுமில்லை. என் பங்குக்கு,

”ஓல்ட் மெக்டோனால்ட்?”
.......
“சரி, வேர் ஈஸ் தம்கின் பாடு” என்று நானும் கொஞ்சம் தூண்டுகிறேன்.
அவளது ஆல் டைம் ஃபேவரைட் ரைம்ஸ், இவை.
பப்பு தலையை அசைக்கிறாள், மறுத்தபடி.

வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். “பாட்டு பாட சொன்னா பாடணும், ஏன் பாட மாட்டேங்கறே, ஐ ஆம் நாட் ஹேப்பி” என்று அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். ”வீட்டுலே பாடறே இல்லே, அதே மாதிரி இங்கேயும் பாடணும்”

இரவு ஆயா டீவி பார்க்க ஆரம்பித்திருந்தார். சாப்பிட்டு முடித்தபின் நானும் கொஞ்சம் ஆசுவாசுமாக அவருடன் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். பெரும்பாலும் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. சில அபத்தங்களை சகித்துக்கொள்ள முடிவதில்லை.
அப்படி, அமர்ந்துக் கொண்டிருக்கும்போது பப்பு என் கையை இழுத்தாள், ”என்கூட வா, என்கூட வா” என்று! ”இரு பப்பு, பார்த்துட்டு வரேன்” என்றாலும் விடவில்லை.

அறைக்குள் சென்றோம். படுக்கையில் அமர்ந்து புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டாள். அவளது பள்ளி ரைம்ஸ் புத்தகம். கிழிந்து நைந்து கிடந்தது. கடைசி பக்கத்தை விரித்து வைத்திருந்தாள்.பாடத்துவங்கினாள்.

சிட்டி சிலக்கம்மா
அம்மா கொட்டிந்தா
குட்ல பெட்டாவா
குடுக்கு மிங்லாவா!

(என்ன அர்த்தம்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்)

பப்புவுக்கு புத்தகத்தைப் பார்த்து படிக்கத் தெரியாது. ஆனால், பாடலுக்கு பக்கத்தில் ஒரு படம் இருக்கும். அதை பார்த்தால் என்ன பாட்டென்று அவளுக்குத் தெரியும். பூனை படம் இருந்தால் 'பூனையாரே பூனையாரே' என்றும், ஆடு மாடுகள் படம் இருந்தால் 'ஓல்ட் மெக்டொனால்ட்' என்றும்.தினமும் வழக்கமாக நடப்பதுதான் இது, இந்த பாட்டுக் கச்சேரி! இது வரை நான் தலையிடாத விஷயமென்றால், அது அவளது ரைம்ஸ் விஷயம் மட்டுமே! எனக்கும் பாட்டுக்கும் ரொம்ப தூரம்...எதற்கு பிரச்சினை!!

தோபி ஆயா தோபி ஆயா
கப்பரிசாத் (later, i understood it is 'kapade saath')
கப்பரிசாத்
ஏக் ரோ தீ (and, this is 'ek thoo theen') என்று அடுத்த பக்கத்திற்கு திருப்பினாள்.

ஒவ்வொரு ரைம்ஸாக எல்லா பக்கத்திலும், அவளுக்கு தெரிந்திருந்த அனைத்து ரைம்ஸையும் பாடிக்கொண்டிருந்தாள்.

கொஞ்சம் யோசித்து பார்த்ததில் சிலவிஷயங்கள் புலப்பட்டது.I just understood, pappu is not my dignity. she is an individual. like me. she has her own likes and dislikes. அவற்றை மதிக்கக் கற்றுக்கொண்டேன். Thanks to the wonderful opportunity!

இங்கு பப்பு முழு உற்சாகத்துடனும் சத்தத்துடனும் கைகளை தட்டியபடியும் ரைம்ஸுக்கான ஆக்‌ஷன்களை செய்தபடியும் பாடிக்கொண்டிருந்தாள். வேறு யாரும் இல்லை அருகில். நானும், பப்புவும் மற்றும் எங்களுக்கு மேலே நிலாவும் நட்சத்திரங்களும்.

அக்கம்பக்கத்துவீடுகளில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பாடலும், அதைத் தொடர்ந்து கைத்தட்டல் சத்தமும் ஒலித்துக்கொண்டிருந்தது!

22 comments:

சின்ன அம்மிணி said...

பெற்றோர்கள் குரங்காட்டிகள் இல்லை என்று மற்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நல்ல இடுகை முல்லை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நானும், பப்புவும் மற்றும் எங்களுக்கு மேலே நிலாவும் நட்சத்திரங்களும்.

அக்கம்பக்கத்துவீடுகளில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பாடலும், அதைத் தொடர்ந்து கைத்தட்டல் சத்தமும் ஒலித்துக்கொண்டிருந்தது\\

யப்பாடியோவ்..... :)

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான புரிதல்களுடனான மனதைத் தொடும் இடுகை. உங்களுக்கும் பப்புவுக்கும் வாழ்த்துக்கள்!

நட்புடன் ஜமால் said...

கொஞ்சம் யோசித்து பார்த்ததில் சிலவிஷயங்கள் புலப்பட்டது.I just understood, pappu is not my dignity. she is an individual. like me. she has her own likes and dislikes. அவற்றை மதிக்கக் கற்றுக்கொண்டேன். Thanks to the wonderful opportunity!]]

ஹாட்ஸ் ஆஃப்

நன்றி ஆச்சி

பப்பு பேரவை
சிங்கை

அமிர்தவர்ஷினி அம்மா said...

நெகிழச்செய்த இடுகை. பிறருக்காவும், சில சமயங்களில் நம் மகிழ்ச்சிக்காகவும் குழந்தைகளை உடன்படுத்துவது என்பது ஜீரணிக்க முடியாதது என்பதை இந்தப் பதிவு இன்னுமொருமுறை ஓங்கி உறுதிப்படுத்துகிறது.

she has her own likes and dislikes. அவற்றை மதிக்கக் கற்றுக்கொண்டேன். Thanks to the wonderful opportunity!] //

குழந்தைகள் தாம் நம்மை வளர்த்தெடுக்கிறார்கள், நாம் அவர்களை அல்ல. ஏற்கனவே படித்தது, மேற்குறிப்பிட்ட வரிகளை
பார்த்தவுடன் மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

Private show உங்களுக்கு மட்டும். lucky you.

பப்பு அழகா வளர்கிறா.

லெமூரியன்... said...

ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க'பா ......

இந்த பருவம் களிமண் மாதிரி....பிடிச்சு வெச்சா பிள்ளையாராகும்னு சொல்லியே
நெறைய பேரின் ஆசைகளிலும் விருப்பு வெருப்புகளிலும் சுயம் சார்ந்த வளர்ச்சியிலும் தலை நுழைத்து
பாழ் பண்ணி விட்டார்கள் போன தலைமுறையினர்......

அதன் பலன் வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளில் எதிரொலிக்கிறது.......
இந்த தலை முறையினருக்கு இப்படி ஒரு புரிதல் உணர்வை நாம் கொடுப்பதே

அவர்களை அவர்கள் சுயம் சார்ந்த திறன்களை அறிய ஊக்கப் படுத்தும்....

அம்பிகா said...

\\I just understood, pappu is not my dignity. she is an individual. like me. she has her own likes and dislikes. அவற்றை மதிக்கக் கற்றுக்கொண்டேன். Thanks to the wonderful opportunity! //

எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க.

காமராஜ் said...

\\நானும், பப்புவும் மற்றும் எங்களுக்கு மேலே நிலாவும் நட்சத்திரங்களும்.

அக்கம்பக்கத்துவீடுகளில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பாடலும், அதைத் தொடர்ந்து கைத்தட்டல் சத்தமும் ஒலித்துக்கொண்டிருந்தது\\ஆமாம் முல்லை, பிள்ளைகளை அவர்கள் போக்கில் விடவேண்டும்.விளையாட விடவேண்டும்.அசத்தல் பதிவு சந்தனமுல்லை.

வானமே எல்லை said...

புரிந்துணர்வும், பரிவும், பரிந்திரைத்தலும் உரிமையுடன் கூறும்போது தெரிந்து தெளிய வேண்டும் சின்னஞ்சிறிய மலர்களின் மனங்களை.

( அப்பா, எத்தனை ரி) . சாதரணமாவே எழுதுவது எப்படி பா. எனக்கு T,Rajender மாதிரிதான் வருது.

செல்வநாயகி said...

நல்ல இடுகை.

பிரசன்னா said...

//pappu is not my dignity//

பொட்டேர் என்று இருந்தது.. மிக நன்று..

shrek said...

telugu nursery rhyme:
Chitti chilakamma,
Amma kottinda?
Thotlo kellaavaa?
pandlu thechhaava?
Gootlo pettavaa, gutukkumannaavaa/ gudukni mingaeva?

sad/vexed parrot dear,
did mom hit/beat u?
did (u) go to grove?
did (u) bring fruits?
did (u) keep them in nest?
did (u) swallow them hurrily?
('guduk'-nu muzhunginiya)

thot|a| - thottam
chilaka - parrot
pandulu- fruits
gootu - koodu (tamil)
mingu - (vi)muzhungu
yellu/vellu - sel
pettu - vai/pidi
kottu - beat

*koodu(telugu) - saadham

pappu is her own person.fine for now. but our world demands more from us. may be, u should have explained it to her about the game beforehand
(don't mistake me, just saying)

தமிழ் பிரியன் said...

Poetic !

பைத்தியக்காரன் said...

உரைநடைக் கவிதை ஆச்சி :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா! பின்னூட்டம் அர்த்தம் புரிஞ்ச பிறகு //சிட்டி சிலக்கம்மா //

பாட்டு சூப்பரா இருக்கே,

பப்பு புண்ணியத்துல அமித்துவுக்கு சொல்லிக்கொடுக்க ஒரு தெலுங்கு பாட்டு தயார்.

பா.ராஜாராம் said...

கண்கள் கலங்கியது முல்லை...

குழந்தையை சார்ந்து இருக்காமல் இருப்பது ஒரு கலை.குழந்தையின் நன்மை.

ஒரே தாண்டாக தாண்டிவிட வேணும்.பல்லை கடித்து கொண்டு..

நாம்தான் காரணம் குழந்தைகளின் வெற்றி தோல்விகளுக்கு.

பட்டுக்கொண்டே இருந்தால் அவளின் தனித்துவம் கெடும் மக்கா!

shrek said...

oops, my bad..
chitti - small, tiny, little or young

(amithu amma please note)

அன்புடன் அருணா said...

எங்கே நீங்க இப்போம் அட்டும் பாடறேன்னு ஆரம்பிச்சுடுவீங்களோன்னு பயந்துட்டே படிச்சேன்!பூங்கொத்து !

தீஷு said...

நல்ல கருத்து முல்லை. தீஷு கூட பப்பு மாதிரி தான். கூட்டத்தில் சேர நேரம் எடுக்கும். ஆனால் சில குழந்தைகள் எல்லா இடத்திலேயும் நன்றாக பேசுகின்றனர். அவர்களுடன் இவர்கள் பிற்காலத்தில் போட்டி போட வேண்டும் என்றால் நாம் இவர்களை தயார்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம். வற்புறுத்தச் சொல்லவில்லை. ஆனால் செல்லும் முன் தயார்படுத்தி அழைத்துச் செல்லலாம். ஒர் இரு இடத்தில் பேச பழகிக கொண்டால் இவர்களே கூச்சத்தை விட்டு வெளியே வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

லெமூரியன்... said...

\\நல்ல கருத்து முல்லை. தீஷு கூட பப்பு மாதிரி தான். கூட்டத்தில் சேர நேரம் எடுக்கும். ஆனால் சில குழந்தைகள் எல்லா இடத்திலேயும் நன்றாக பேசுகின்றனர். அவர்களுடன் இவர்கள் பிற்காலத்தில் போட்டி போட வேண்டும் என்றால் நாம் இவர்களை தயார்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம். வற்புறுத்தச் சொல்லவில்லை. ஆனால் செல்லும் முன் தயார்படுத்தி அழைத்துச் செல்லலாம். ஒர் இரு இடத்தில் பேச பழகிக கொண்டால் இவர்களே கூச்சத்தை விட்டு வெளியே வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்....//

சிறு வயதில் மிகவும் அமைதியாக யாருடனும் சேராமல் தனித்தே இருந்தவன்தான் நான்...ஆனால் பின்பு காலமாற்றத்தில் எனது தனித்துவம் புரிந்த பொழுது...கலகல என்று பேசிய என் நண்பர்கள் கூட மேடை ஏற கூச்ச பட்டனர்.....மிக எளிதாக மேடை ஏறவும் stage fear என்பதே என்ன என்றளவிற்கு மாறிப் போனேன்...நம்முடைய பலம் தெரியவரும் பொழுது புதிய விஷயங்களை தொட்டு பார்க்கும் ஒரு confidence தன்னாலேயே ஊறி விடும் உள்ளுக்குள்.....

இயல்பாய் வளர விடுங்கள் அந்த பெண்ணை(பப்பு)....ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் சிதறடித்து மேலெழும்பி நிற்பாள்.

Prasanna said...

///சிட்டி சிலக்கம்மா
அம்மா கொட்டிந்தா
குட்ல பெட்டாவா
குடுக்கு மிங்லாவா!///

தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். இந்த பாடலின் ஒரு வரி மிஸ்ஸிங். படிக்கும்போது எதோ நினைவுகள். ஒரு தெலுங்கு பெண்ணை பார்த்து பிடித்து தட்டு தடுமாறி பேசியபோது இருபத்து மூன்று வயதில் இதை எனக்கு சொல்லிக் கொடுத்தார். இதை பைத்தியம் மாதிரி பாடி திரிந்திரிக்குறேன். எதிர்பாரதவிதமாக உங்கள் பதிவில் பார்த்த பொது எனக்கு ஏற்பட்ட உணர்சிகளை சொல்லத் தெரியவில்லை.

அவளுக்காக நான் பத்து நாளில் தெலுங்கு படித்தது வேறு விஷயம்.