Wednesday, December 30, 2009

ப்ராக்ரஸ் ரிப்போர்ட் - 2009

வந்துவிட்டது புத்தாண்டு!

2010 - 365 நாட்களுடன் எழுதப்படாத பக்கங்களுடன் டைரியாக எனக்கு எதிரில் இருக்கிறது, பதிவுப்பக்கங்களாகவும்தான்! அடுத்த டிசம்பரில் மகிழ்ச்சியுடன் எடுத்து வாசிக்கத் தக்கதாக இருக்கும் என்ற நம்புகிறேன். தங்களுக்கும் இதனை வாழ்த்தாக்குகிறேன்!

2009 - ஸ்விஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...வேகமாக கடந்தது 2008-ஐ போலவே!
கொஞ்சம் மகி்ழ்ச்சி, கொஞ்சம் வெற்றி,கொஞ்சம் தோல்வி,கொஞ்சம் திருப்தி, கொஞ்சம் அதிருப்தி - என்று எல்லாமே கடந்த வருடத்தைப்போலவே, ஒன்றைத் தவிர - வாழ்ந்தநாளில் ஒரு ஆண்டு கூடியிருக்கிறது!

2009, பப்பு குழந்தையிலிருந்து (குழந்தைச்)சிறுமியாக வளர்ந்ததைக் கண்டது. ஒரு முழு கல்வியாண்டைக் கடந்து வரச் செய்தது. முழுநேர பாதுகாப்பாளரிலிருந்து பகுதிநேர பாதுகாப்பாளருக்கான அவசியத்தைத் தந்தது. பப்புவும், நானும் பதிவர் சந்திப்புகளை கண்டோம். பதிவுகளைத் தாண்டியும் நட்பு பாராட்டப் பெற்றோம். எங்களைத் தொடர்ந்தும் வாசித்தும் பின்னூட்டமிட்டும் ஊக்கப்படுத்தும் தங்கள் அனைவருக்கும் அன்பார்ந்த நன்றிகள்! எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கைநாதனை மீட்டுக்கொடுத்த தங்கள் அன்பை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

2009 - இவையெல்லாம் இருந்தாலும் ஏதோவொன்று என்னில் குறைகிறது! மனம் பின்னோக்கியே செல்கிறது. மனதில் வடுவாக பதிந்த வருடமாக போனது. ஆறாத ரணமாக, கலைந்த கனவாக, காற்றில் அழிந்த மேகமாக! எத்தனை எத்தனை பேரின் தியாகங்களையும், கனவுகளையும், ரத்தத்தையும் துடைத்தெறிந்துவிட்டு
ஒன்றுமில்லாதது போல தோற்றம் கொடுக்கிறது! உண்ணாவிரத மேடையில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உருக்கிக் உயிர்நீத்த அந்த இளைஞனின் முகம், என் ஒன்பது வயதில் வீடியோ கேசட்டில் பார்த்த அந்த முகம் இன்னமும் மனதில் தேங்கி கிடக்கிறது! அவரிலிருந்து முத்துக்குமரன் வரை...இன்னும் எண்ணற்ற பேரின் தியாகங்கள் அவர்களின் உன்னத நோக்கங்கள், நம்பிக்கைகள் எல்லாம் போய் முள்வேலியில் முடங்கிக்கிடக்கிறது!

விரைவில் அந்த சொந்தங்களுக்கும் வரட்டும் இனிய புத்தாண்டு!

24 comments:

நாணல் said...

இனிய புத்தாண்டு!

அன்புடன் அருணா said...

விரைவில் அந்த சொந்தங்களுக்கும் வரட்டும் இனிய புத்தாண்டு!

குடுகுடுப்பை said...

ஈழத்தமிழர்களுக்கு இனியாவது நல்ல காலம் பிறக்கட்டும்.

நல்ல காலம் கூட இங்கே ஒரு கமோடிடிட்டி அதை வாங்கும் வித்தையை அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்

butterfly Surya said...

புத்தாண்டு வாழ்த்துகள்..

ராமலக்ஷ்மி said...

வரவிருக்கும் புத்தாண்டில் எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் முல்லை!

நட்புடன் ஜமால் said...

pass மார்க் தான் பாஸு

Rithu`s Dad said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் முல்லை.. உங்கள் அனைவருக்கும் வரும் வருடம் அதிக மகி்ழ்ச்சி, அதிக வெற்றி,கொஞ்சமே கொஞ்சம் தோல்வி, அதிக திருப்தி, மிக கொஞ்சம் அதிருப்தி - என்று அமைய எங்கள் வாழ்த்துக்கள்.. ..

வல்லிசிம்ஹன் said...

இனிமேல் ப்ராக்ரஸ் தான் முல்லை.
பப்புவுக்கும் உங்களுக்கும் கணவருக்கும் மனமார்ந்த பொன்னான புத்தாண்டு வாழ்த்துகள். அருமையான குழந்தைக்கும் எழுத்துக்கும் சொந்தக் காரி நீங்கள்.
இதே போல பாப்பாவின் ஒவ்வொரு நாள் ஜாலங்களையும் எங்களுக்கு எழுதிக் கொடுங்கள்.

சின்ன அம்மிணி said...

முள்வேலியையும் மறந்துபோகும் பாவிகள் அல்லவா நாம்:(

புத்தாண்டு வாழ்த்துக்கள் முல்லை.

பித்தனின் வாக்கு said...

உண்மைதான் 2009 தமிழர்களுக்கு வலி தரும் ஆண்டாக முடிந்து விட்டது. உங்களைப் போலவே நானும் வரும் நாட்களில் அவர்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்புகின்றேன். நன்றி சகோதரி.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

//எத்தனை எத்தனை பேரின் தியாகங்களையும், கனவுகளையும், ரத்தத்தையும் துடைத்தெறிந்துவிட்டு
ஒன்றுமில்லாதது போல தோற்றம் கொடுக்கிறது! .

விரைவில் அந்த சொந்தங்களுக்கும் வரட்டும் இனிய புத்தாண்டு! //

என் எண்ணங்களிலும் பிரதிபலிக்கின்றது இந்த வரிகள் !

நம்பிக்கை கொள்வோம்!

தீஷு said...

புத்தாண்டு வாழ்த்துகள் முல்லை.

மாதவராஜ் said...

நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம், புத்தாண்டை...! வாழ்த்துக்கள்.

Dr.Rudhran said...

keep writing. your words touch awaiting chords

அமுதா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

/*விரைவில் அந்த சொந்தங்களுக்கும் வரட்டும் இனிய புத்தாண்டு!
*/
அதே பிரார்த்தனைகளுடன்...

நசரேயன் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Kavitha said...

Happy New year Mullai!

காமராஜ் said...

இந்த வருசக்கடைசி நாளின்
முதல் பரிச்சயம்
அன்புத் தங்கையின் பதிவு ,
எழுத்தாக இல்லாமல் ,
மானுட சமுத்திரம் நானென்று கூவுகிற பேரிரைச்சலாகக்கேட்கிறது. அதோடு சேர்ந்து இந்த உலகிற்கு கொண்டு வரும் புத்தாண்டை வரவேற்கிறேன்.

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பிரத்தியேகமாக பப்பு,முல்லை,முல்லையின் துணை,பெற்றோர்-
யாபேர்க்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

விரைவில் அந்த சொந்தங்களுக்கும் வரட்டும் இனிய புத்தாண்டு! //

ஆமாம் முல்லை.

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Padmaja said...

Wishing you and your family a prosperous New Year. Convey my Special wishes to pappu...

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))

அம்பிகா said...

உங்கள் ப்ராக்ரஸ் ரிப்போர்ட், நிறைகளையும், அனைவர் மனதிலிருந்தும் அழிக்கமுடியாத பெரும் குறையையும் சுட்டிக் காட்டியது.
இந்தப் புத்தாண்டு ஒரு நிறைவான ஆண்டாக திகழட்டும்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சிங்கக்குட்டி said...

தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "உனக்குப் பிடித்த சாக்லேட் கூட" இடுகையை பார்த்தேன்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் சந்தனமுல்லை.

பா.ராஜாராம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் முல்லை!