Tuesday, February 10, 2009

ஒட்ட'கம்' இருக்கா?

படம் வரையும் நோட்டுப்புத்தகம் தீர்ந்துப் போனது. அருகிலிருக்கும் கடையில் கிடைத்ததென்னவோ சார்ட் அட்டைகள்தான். வெட்டிக் கொடுத்தபோது, பப்புவுவிற்கும் வெட்டுவதற்குதான் ஆசையேத் தவிர வரையவில்லை! என்ன செய்யலாம்...பப்புவிற்கு வரைதலும் மெழுகுக்-வண்ணக்குச்சிகளும்(crayons) ஆயாசத்தைத் தந்த ஒரு பொழுதினில் செய்தோம் இதை! முதலில் ஒரு படத்திற்கு நான் செய்தேன், அவளைப் பார்க்க வைத்து.என்னப் படம் வரையட்டும் என்றபோது அவள் சொன்னவை சூரியனும், நிலாவும். அப்புறம் நானாகக் ”ஸ்டார் வரையலாமா” எனக் கேட்டு வரைந்தது நட்சத்திரமும், மேகமும்! ஒருவேளை சூரியனும், நிலாவும் மட்டுமே வரைய முடியும் என்று நினைத்திருந்திருக்கிறாள் போல!!

மற்றப் படங்களில் glue போட அவளுக்கு உதவி தேவைப்பட்டது..சீராக இழுக்க!
வண்ணப் பொடிகள் போடுவதுதான் அவளுக்கு மிகவும் கவர்ந்த பகுதி!
இதோ வெளியே வந்து விட்டது பப்புவின் ஸ்டார், மினுமினுப்போடு!! செய்து முடித்து நிமிர்ந்தபோது எஙகளிருவர் மேலும் மிச்சமிருந்தன, நட்சத்திரத் துகள்கள்...சிரித்துக் கொண்டே உதறியபோதும்!


26 comments:

அபி அப்பா said...

சூப்பர்! ஒட்ட'கம்' வச்சு ஒட்டிட்டு நட்டுகிட்ட கொடுத்தா ந'கம்' கொண்டு பிச்சுடுவான்! அதனால பப்பு செஞ்சதை இப்போதைக்கு நட்டுக்கு தரவேண்டாம் ஓக்கே!

வித்யா said...

\\நிமிர்ந்தபோது எஙகளிருவர் மேலும் மிச்சமிருந்தன, நட்சத்திரத் துகள்கள்...சிரித்துக் கொண்டே உதறியபோதும்\\

:)

நட்புடன் ஜமால் said...

பிரிச்சி மேயிரிங்களே

நட்புடன் ஜமால் said...

நிமிர்ந்தபோது எஙகளிருவர் மேலும் மிச்சமிருந்தன, நட்சத்திரத் துகள்கள்...சிரித்துக் கொண்டே உதறியபோதும்\\

கவிதையா சொல்ல வேண்டியது ...

SK said...

so sweet :) :)

புதுகைத் தென்றல் said...

நல்ல ஐடியாக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதோ வெளியே வந்து விட்டது பப்புவின் ஸ்டார், மினுமினுப்போடு!! செய்து முடித்து நிமிர்ந்தபோது எஙகளிருவர் மேலும் மிச்சமிருந்தன, நட்சத்திரத் துகள்கள்...சிரித்துக் கொண்டே உதறியபோதும்!

அட்ரா அட்ரா
ஆச்சி

கடைசி ரெண்டு வரி கவிதையில முன்னாடி சொன்ன மேட்டர் எதுவும் எடுபடலையே.

ஒருவேளை சூரியனும், நிலாவும் மட்டுமே வரைய முடியும் என்று நினைத்திருந்திருக்கிறாள் போல!

ஆச்சி என்ன ஆச்சி
பின்றீங்க போங்க.
அடுத்த ஆஸ்கார் உங்களுக்குத்தானா?

ராமலக்ஷ்மி said...

//செய்து முடித்து நிமிர்ந்தபோது எஙகளிருவர் மேலும் மிச்சமிருந்தன, நட்சத்திரத் துகள்கள்...சிரித்துக் கொண்டே உதறியபோதும்!//

சிரிக்கையில் சிதறிய புன்னகைத் துகள்கள் மேலும் பல சித்திரங்கள் படைக்கட்டும்.

rapp said...

நான் இதே மாதிரி யூ கே ஜி படிக்கும்போது ஒரு கை'வினை' பொருட்கள் செய்யும் போட்டியில் செஞ்சு மொதோ பரிசெல்லாம் வாங்கினேன்:):):) இப்போ இருக்க குட்டி பசங்களுக்கு ஜாலி, அம்மாங்களே இந்த மாதிரி விளையாட உடறாங்க. நான் சின்னப் பொண்ணா இருந்தப்போ, என் வீடு மட்டுமில்லே, என் பிரெண்ட்ஸ் வீட்டிலும் இதெல்லாம் வெளையாடினா நல்லா வாங்கிக் கட்டிப்போம்:):):) ஆனா அதுவும் ஒரு ஜாலிதான். செத்து செத்து வேல்லாடுற மாதிரி, எரிச்சல் படுத்தி வேல்லாடுற வெள்ளாட்டு அது:):):)

புதுகைத் தென்றல் said...

யூ கே ஜி படிக்கும்போது ஒரு கை'வினை' பொருட்கள் //

உங்க வீட்டுல இருந்தவங்க மட்டும் அக்கம் பக்கத்து காரவுகள்ளாம் பாவம்.

வினை உங்களுக்காச்சா? இல்ல மத்தவங்களுக்கா?

டீடெயில் ப்ளீஸ் ராப்

ராஜ நடராஜன் said...

ஒட்ட கம் இல்லை ஒட்டகம் இருக்குது.

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்க குசும்புக்கெல்லாம் மறுபடி ஒரு கவுஜ படிச்சாத்தான் சரிவரும்:):):)
அதெல்லாம் கம்பெனி ரகசியம்:):):) அதோட அந்தத் தெருவில் இருந்த ஒரே சுட்டிக் குழந்தை, செல்லக் குழந்தை நான்தான்:):):) அதால எங்க ஏரியால நம்ம செல்வாக்கே வேற:):):)
(அஸ்கு புஸ்கு நான் எந்த ஊருன்னு சொல்லவே மாட்டேனே:):):))

தாமிரா said...

ரசித்தேன்..

புதுகைத் தென்றல் said...

அதோட அந்தத் தெருவில் இருந்த ஒரே சுட்டிக் குழந்தை, செல்லக் குழந்தை நான்தான்:):):) //

ithu veraya.

நானானி said...

அருமை...அருமை!!!
ஓர் ஓவியரை உருவாக்கும் உங்கள்
முயற்சியின் உளியின் ஓசை...ணங் என்று இங்கு வரை கேட்டது.

குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் இன்பமே...இன்பம்!!!

Poornima Saravana kumar said...

superb:)

மிஸஸ்.டவுட் said...

//நானானி said...
அருமை...அருமை!!!
ஓர் ஓவியரை உருவாக்கும் உங்கள்
முயற்சியின் உளியின் ஓசை...ணங் என்று இங்கு வரை கேட்டது.

குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் இன்பமே...இன்பம்!!!//


இதையே நானும் சொல்லிக்கிறேன் முல்லை .அனுபவங்கள் பல நேரங்களில் ஒன்று படுகின்றன குழந்தைகள் ...நம்மையும் குழந்தைகள் ஆக்க எப்போதும் மறுப்பதில்லை.ஜாலி தான் என்ஜாய்

கானா பிரபா said...

//ஆச்சி என்ன ஆச்சி
பின்றீங்க போங்க.
அடுத்த ஆஸ்கார் உங்களுக்குத்தானா?//

அடுத்த கிராமி விருதும் உங்களுக்குத் தான் ஆச்சி ;)

பப்பு கலக்கல்ஸ்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஓட்ட இருந்த கம் எல்லாம் தீர்ந்தாச்சா ? :)

அப்படியே பருப்பு அரிசியில் கூட இதே போல வரைஞ்சு கலர் செய்யலாம்..

தீஷு said...

நல்லா வந்திருக்கு முல்லை.

நசரேயன் said...

நல்லா இருக்கு, வாழ்த்துக்கள் பப்பு

Valaipookkal said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

பாண்டியன் புதல்வி said...

முல்லை,
இங்கே பாருங்க, பயன் தரும் என்று நினைக்கிறேன்..

http://www.montessorimaterials.org

(இதை வெளியிடனும் என்று இல்லை)

அன்பு said...

ஒருநாள் இந்தப்பக்கம் வரலை, அதுக்குள்ளார பல பதிவுகள்...

நல்லாவந்திருக்கு பப்பு, இன்னும் கொஞ்சம் பொறுமையா செய்யுங்க சரியா...

நேற்றுதான் சன்‍னில் ஒரு மருத்துவர் பேசிக்கொண்டிருந்தார்.
நம்மால நேற்றைய செய்தித்தாளையே இன்று படிக்கமுடியுமா?
அதுபோல்தான் குழந்தைகளுக்கும். அதனால்தான் புதிது புதிதாக பொம்மைகள், புத்தகங்கள் கேட்கின்றனர், அதை நாம் புரிந்துகொள்ளவேண்டுமென!

மெழுகுக்-வண்ணக்குச்சிகளும்(crayons) ஆயாசத்தைத் தந்த ஒரு பொழுதினில்

இதோ வெளியே வந்து விட்டது பப்புவின் ஸ்டார், மினுமினுப்போடு!! செய்து முடித்து நிமிர்ந்தபோது எஙகளிருவர் மேலும் மிச்சமிருந்தன, நட்சத்திரத் துகள்கள்...சிரித்துக் கொண்டே உதறியபோதும்!


கவிதைன்னு தனியா எழுதாட்டியும் பரவால்ல:)

அமுதா said...

சூப்பர்.

ஆகாய நதி said...

நட்சத்திரம் சூப்பர் பப்பு உன்ன மாதிரியே அழகா இருக்கு :)

உங்க ஆச்சி வண்ணத்தில் கலை வண்ணம் கண்டுவிட்டார்! :)