Monday, February 09, 2009

Height of self-love??

மு.கு : இக்கவிதை என்பது பழைய நோட்டுப்புத்தகத்திலிருந்து அல்ல..எனது டைரியிலிருந்து! :-) எனது அறையில் ஒரு ஆளுயரக் கண்ணாடி இருந்தது. அவ்வப்போதும், அல்லது போகும் போதும் வரும்போது நின்று ஒரு பார்வைப் பார்த்துக் கொள்வது மிகப் பிடித்தமானதொன்றெனக்கு! அதன் மிகைப் படுத்தலே இக்கவிதை!!

என் கண்ணாடிக்கு..

எனக்குள், என் பூட்டிய அறைக்குள்
என் உறவுகளனைத்தும்
உன்னுடனும், புத்தகங்களுடனும்தான்!
என்னுடய உலகினில்
செய்திகள் எதுவாயினும்
நான் பகிர்ந்துக் கொள்வது
உன்னுடன்தான்....
உன்னுடன் மட்டும்தான்!
என் வாழ்வின் அர்த்தங்களையும்
வெற்றிகளையும்
முன்னேற்றங்களையும்
நான் பகிர்ந்துக் கொள்வது
உன்னுடன்தான்!
எனக்குள் நிகவும் மாற்றங்களை
எனக்கு உணர்த்தும் நண்பன்
நீதான்..
நீ மட்டும்தான்!
எனக்குள் நான் நேசிப்பதெல்லாம்
உன்னையும்
உனக்குள் தெரியும் என்னையும்தான்!

என்றும் நேசமுடன்
உன்
நிஜபிம்பம்!!




சொல்ல மறந்தது : "I am sixteen..going on seventeen" - phase டைரி!!

21 comments:

நட்புடன் ஜமால் said...

நான் படிக்கும் முதல் கவிதை

(இங்கே)

pudugaithendral said...

self-love - இது ரொம்ப முக்கியம். நமக்கு நாம் அன்பு செலுத்திக்கணும், நம்மை நன்கு கவனிச்சுக்கனும்.

கவிதைக்கு பாராட்டுக்கள்

நட்புடன் ஜமால் said...

\\எனக்குள் நான் நேசிப்பதெல்லாம்
உன்னையும்
உனக்குள் தெரியும் என்னையும்தான்!\\

மிக மிக அருமை.

Vidhya Chandrasekaran said...

தலைப்பும் பதிவும் சூப்பர்:)

Anonymous said...

:)

அபி அப்பா said...

// புதுகைத் தென்றல் said...
self-love - இது ரொம்ப முக்கியம். நமக்கு நாம் அன்பு செலுத்திக்கணும், நம்மை நன்கு கவனிச்சுக்கனும்.

கவிதைக்கு பாராட்டுக்கள்//

இதை நான் ரிப்பீட்டிக்கவா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்குள் நான் நேசிப்பதெல்லாம்
உன்னையும்
உனக்குள் தெரியும் என்னையும்தான்!

என்றும் நேசமுடன்
உன்
நிஜபிம்பம்!!

செமையா இருக்குங்க

தலைப்பை தமிழ் படுத்தியிருந்தால் இன்னும் ஜொலித்திருக்கும் இந்தக் கவிதை.

இவ்ளோ நல்லா கவிதை எழுதி இருக்குற நீங்க ஏன் இப்ப இதை தொடரக்கூடாது

இதே ஸ்டைல்ல பப்புவை பத்தி ஒரு கவிதை பதிவு போடவும்.

Unknown said...

//நான் படிக்கும் முதல் கவிதை//
ரிப்பீட்டேய்....!

எம்.எம்.அப்துல்லா said...

//அவ்வப்போதும், அல்லது போகும் போதும் வரும்போது நின்று ஒரு பார்வைப் பார்த்துக் கொள்வது மிகப் பிடித்தமானதொன்றெனக்கு//

நார்சிஸம்?????

:))))

நல்ல கவிதை சகோதரி.

ராமலக்ஷ்மி said...

நீங்கள் நோட்டுப் புத்தகம் அல்லது டைரியைத் திறந்தாலே குஷியாகி விடும் எனக்கு:)! பழைய படைப்புகளின் அருமையே தனிதான்:)!

//எனக்குள் நிகவும் மாற்றங்களை
எனக்கு உணர்த்தும் நண்பன்
நீதான்..
நீ மட்டும்தான்!
எனக்குள் நான் நேசிப்பதெல்லாம்
உன்னையும்
உனக்குள் தெரியும் என்னையும்தான்!//

மிகவும் ரசித்தேன் முல்லை!

கானா பிரபா said...

ஆகா கவிதாயினியே கவிதை கலக்கல், தலைப்பும் தான் ;)

கவிதா | Kavitha said...

எனக்குள் நான் நேசிப்பதெல்லாம்
உன்னையும்
உனக்குள் தெரியும் என்னையும்தான்!

என்றும் நேசமுடன்
உன்
நிஜபிம்பம்!! //

இந்த வரிகள் ரொம்ப நல்லா இருக்கு.!! :)

நல்லா எழுதி இருக்கிங்கீங்க முல்லை..

:)

ஆயில்யன் said...

//அபி அப்பா said...
// புதுகைத் தென்றல் said...
self-love - இது ரொம்ப முக்கியம். நமக்கு நாம் அன்பு செலுத்திக்கணும், நம்மை நன்கு கவனிச்சுக்கனும்.

கவிதைக்கு பாராட்டுக்கள்//

இதை நான் ரிப்பீட்டிக்கவா?
//

ithai naan repeatikiren :)

Thamira said...

இதை அப்புறமா முகிலுக்கு காட்டி, உங்களை நினைச்சு எழுதினதுன்னு பிட்ட போட்டுட்டீங்கதானே..

ஆதவா said...

நம்மை நாமே காதலித்தால்..... ஆஹா.. அருமையான தலைப்பு...

ரொம்ப நல்லா இருக்குங்க உங்களுடைய பால்ய கவிதைகள்...

தொடருங்கள்.

நசரேயன் said...

நீங்க அந்த காலத்திலேயே கவிதை எழுதுவீங்களா?
சரி..சரி க.மு இது கண்ணாடி
க.பி ல முகில் சரியா?

Divyapriya said...

இந்த வரிகள் அருமை

//எனக்குள் நான் நேசிப்பதெல்லாம்
உன்னையும்
உனக்குள் தெரியும் என்னையும்தான்!//

தலைப்பு செம :)

Anonymous said...

Nice. I'm regular reader of your site to know what pappu is doing. Romba nalla irukku.

- priya.

rapp said...

ஆனா, நான் மட்டும் ஏன் அந்த டைம்ல உலகத்தையே புரட்டிப்போடுற மாதிரி உன்னதக் கவிதைகள படைச்சிக்கிட்டு இருந்தேன்னு தெரியலை:):):)

தமிழன்-கறுப்பி... said...

முன்பும் ஒரு முறை சொன்ன ஞாபகம், உங்களுக்கு நல்லா எழுத வருதில்லை அப்புறம் எதுக்கு இப்பல்லாம் எழுதறதில்லை கவிதைகள்..

அன்புடன் அருணா said...

//"I am sixteen..going on seventeen"//
During this phase mirror will be the best friend .....for every one..Nice piece..
anbudan aruNaa