Friday, February 20, 2009

பாட்டிகளிடம் பத்து கேள்விகள்!!

இப்போ 10 கேள்விகள் கேக்கறதுதானே ஃபேஷன்! யாருக்கிட்டே கேக்கலாம்னு யோசிச்சதுல சிக்கியது "அக்கா தம்பியிடம் கேக்கும் 10 கேள்விகள்", "பக்கத்து வீட்டுக்காரரிடம் 10 பத்துக் கேள்விகள்", "வேலைக்காரம்மா-விடம் 10 கேள்விகள்" அப்புறம் "பாட்டியிடம் 10 கேள்விகள்"! "பாட்டியிடம் 10 கேள்விகள்"!! சின்னதாவும் ஈசியாவும் இருக்கறதால பாட்டியிடமே 10 கேள்விகள்..பேத்தியிடமிருந்து!! :-))


1. ஒரு வேலை சொல்லிட்டீங்கன்னா அதை செஞ்சு முடிக்கற வரைக்கும் சொல்லிக்கிட்டே இருக்கீங்களே அது ஏன்?

2. கடைக்குப் போறோம்-னு தெரியும் தானே, அப்புறமும் எப்போ வருவீங்கன்னு என்னக் கேள்வி?!

3. நாங்க ஞாபகப்படுத்துங்கன்னு சொன்னதை மட்டும் கரெக்டா மறந்துடறீங்க..ஆனா எப்போவோ நாங்க எடுத்த மார்க்கெல்லாம் கரெக்டா ஞாபகமா சொல்லிக்காட்டுவீங்க! அது எப்படி?

4. நீங்க டீவி பார்க்கும்போது முக்கியமா அதுல சொல்ல வர்றதை கேக்கவிடாம கூடக்கூட நீங்களும் பேசறீங்களே..அதுல சொல்லி முடிச்சப்பறம், உங்க கருத்தை சொன்னா என்ன?

5. சீரியல் பாக்கறீங்க..ஓக்கே..ஆனா "இவன் இப்போதைக்கு முடிக்க மாட்டான், வளத்திக்கிட்டேதான் இருப்பான்" அப்படினு திட்டினாலும் அடுத்த நாளும் பார்க்கறீங்களே, அது ஏன்?!

6. கடையிலேர்ந்து பொட்டலம் சுத்தி வர்ர நூல் எல்லாத்தையும் எடுத்து அழகா சுத்தி வைக்கறீங்களே....எப்போவாவது உதவும்-னு, அந்த நூல் எல்லாம் நூத்தா ஒரு ஆடையே தைக்கலாம்-னு தோண்ற அளவுக்கு இருக்கே..எதுக்கு இவ்வளவு-ன்னு நினைக்க மாட்டிங்கறீங்களே ஏன்?

7. எல்லா பாலித்தின் கவரையெல்லாம் நீவி மடிச்சி அலமாரி பேப்பர் கீழே வச்சி வச்சி அது ஒரு சோபா அளவுக்கு ஆகிப்போச்சே..சிலதுல்லாம் ஒரு தடவைதான் உபயோகிக்கணும்னு சொன்னாலும், அதையும் எப்படிடா ரீ-யூஸ் செய்யலாம்னு ரூம் போட்டு யோசிக்கிறது ஏன்?

8. உங்க பொண்ணுங்கள்ளாமே பாட்டி ஆகிட்டாங்களே, இன்னமும் தினமும் போனைப் போட்டு வீட்டுக்கு வந்தாச்சா, எத்தனை மணிக்கு வந்தே-ன்னு கேட்டு டார்ச்சர் செய்றது ஏன்? கேட்டா இதெல்லாம் உனக்குப் இப்போப் புரியாது-ன்னு ஃபீலிங்க்ஸ் விடறது ஏன் ஏன்?

9. "எங்களுக்காவது பென்ஷன்னு ஏதாவது வருது, உங்களுக்கு அதுல்லாம் இல்லயே, உங்கக் காலத்தை நெனச்சா பயமா இருக்கு" என்று அவ்வப்போது எங்களுக்கு டெரர் உண்டாக்குவது ஏன்?

10. உங்க படுக்கையை நீங்களே சுத்தம் செய்றீங்க..ஆனா அதுல கீழே பாதுகாத்து வச்சிருக்கற செய்தித்தாள் கட்டிங்ஸ், எப்போவாவது உபயோகப்படும் kind of பொக்கிஷங்களை aka குப்பைகளை திரும்ப அங்கேயே வச்சிடுறீங்களே..ஏன்?

46 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா

வலை முழுக்க 10ஆ இருக்கே ...

நட்புடன் ஜமால் said...

\\நாங்க ஞாபகப்படுத்துங்கன்னு சொன்னதை மட்டும் கரெக்டா மறந்துடறீங்க..ஆனா எப்போவோ நாங்க எடுத்த மார்க்கெல்லாம் கரெக்டா ஞாபகமா சொல்லிக்காட்டுவீங்க! அது எப்படி?\\

ஹா ஹா ஹா

தமிழ் பிரியன் said...

ஜோதியில் ஐக்கியமாகியாச்சு போல... :))

கவிதா | Kavitha said...

ஏன்' னா அவங்க பாட்டி..அதுவும் முல்லையோட பாட்டி !!

(இப்ப தெரியது பப்பு ஏன்' "ஏன் ஏன்" ன்னு கேள்வி கேக்கறான்னு...)

அத்திரி said...

அய்யய்யோ நீங்களுமா......ம்ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும்

தமிழ் பிரியன் said...

கேள்விகள் எல்லாம் நியாயமாத்தானே இருக்கு! சந்தன முல்லைப் பாட்டி பதில் சொல்லலாமே?

அமிர்தவர்ஷினி அம்மா said...

"எங்களுக்காவது பென்ஷன்னு ஏதாவது வருது, உங்களுக்கு அதுல்லாம் இல்லயே, உங்கக் காலத்தை நெனச்சா பயமா இருக்கு" என்று அவ்வப்போது எங்களுக்கு டெரர் உண்டாக்குவது ஏன்?

avvvvvvvvvvvvvvv

புதுகைத் தென்றல் said...

நீங்களுமா? சரி.

கணக்குல 6.

கேள்வி சரியாத்தான் கேட்டிருக்கீங்க.

பரிசல்காரன் said...

Yappaa.. NeengalLumaa?

Kalakkunga! Differenta irukku!!!!

வெயிலான் said...

யோவ் பரிசல்,

ஆரம்பிச்சு வச்சிட்டு நீங்களுமானு என்ன ஒரு ?

நீங்களுமா? ;)

அபி அப்பா said...

அட எல்லா பாட்டியும் அப்படித்தானா:-))

அமுதா said...

:-))
நல்ல டாப் டென்...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வித்தியாசமான ஆளை தேர்ந்தெடுத்திருக்கீங்க..
அபி அப்பா கமெண்ட்டை வழிமொழிகிறேன்..:)
சூப்பர்

ரமேஷ் வைத்யா said...

நீங்களுமா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

தமிழ் ப்ரியன்

புரியற மாதிரி சொல்லுங்க

சந்தன முல்லைப் பாட்டியா,

சந்தன முல்லையோட பாட்டியா.

தமிழன்-கறுப்பி... said...

கலக்கறிங்க முல்லை...!

தமிழன்-கறுப்பி... said...

பாட்டிங்க இன்ரஸ்டிங்கான ஆளுங்கதான் இல்லையா..!

தமிழன்-கறுப்பி... said...

எல்லாரும் ஏன் கேள்வி கேட்கிறாய்ங்க...

ஆயில்யன் said...

//ஆனா எப்போவோ நாங்க எடுத்த மார்க்கெல்லாம் கரெக்டா ஞாபகமா சொல்லிக்காட்டுவீங்க! அது எப்படி?
//

அப்படி உங்க பாட்டி என்னதான் சொல்லிக்காட்டுனாங்க பாஸ் சொல்லுங்களேன் !


பப்பு பேரவை சார்பாக.....

தமிழன்-கறுப்பி... said...

கடைசி பின்னூட்டம் உங்களுக்கானதல்ல தவறுதலாக அனுப்பிவிட்டேன்...

ambi said...

ஹஹா, உங்க பாட்டியும் அப்படித் தானா? :))

ஆனா இப்படி எல்லாம் மறுபடியும் கேக்க என் பாட்டி இப்போ இல்லையேனு பீலீங்க்ஸா இருக்கு. :(

மணிகண்டன் said...

****
இப்ப தெரியது பப்பு ஏன்' "ஏன் ஏன்" ன்னு கேள்வி கேக்கறான்னு
****
கவிதா சரியான பாயிண்ட் பிடிச்சுட்டாங்க.

கானா பிரபா said...

டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லை தட்டாதே

பட்டப்படிப்பு படிச்சு வந்தாலும் பாட்டி சொல்லை தட்டாதே

இங்ஙனம்
பாட்டி பேரவை
சிட்னி

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லை தட்டாதே

பட்டப்படிப்பு படிச்சு வந்தாலும் பாட்டி சொல்லை தட்டாதே

இங்ஙனம்
பாட்டி பேரவை
சிட்னி
///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

நிஜமா நல்லவன் said...

//கானா பிரபா said...
டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லை தட்டாதே

பட்டப்படிப்பு படிச்சு வந்தாலும் பாட்டி சொல்லை தட்டாதே

இங்ஙனம்
பாட்டி பேரவை
சிட்னி
///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

.:: மை ஃபிரண்ட் ::. said...

kalakkals. :-)

Poornima Saravana kumar said...

10க்கு 10 அருமை :))

சுரேகா.. said...

நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா?
இந்த 10 கேள்வி வேள்வியை!

ஆனா...
பாட்டிக்கிட்ட
கேட்ட
எல்லா கேள்விகளும்
மிகச்சரியான
வேகத்தில்
கோணத்தில் வீசப்பட்ட
பந்துகள்!

சூப்பரு!

தாமிரா said...

இது வித்தியாசமா இருக்குது.. ஸ்ட்ராங்கும் இல்லாமல் லைட்டும் இல்லாமல் மீடியம் காஃபி.!

எம்.எம்.அப்துல்லா said...

உங்க பொண்ணுங்கள்ளாமே பாட்டி ஆகிட்டாங்களே, இன்னமும் தினமும் போனைப் போட்டு வீட்டுக்கு வந்தாச்சா, எத்தனை மணிக்கு வந்தே-ன்னு கேட்டு டார்ச்சர் செய்றது ஏன்? கேட்டா இதெல்லாம் உனக்குப் இப்போப் புரியாது-ன்னு ஃபீலிங்க்ஸ் விடறது ஏன் ஏன்?

//


:))))

இரசித்துச் சிரித்தேன்.

ராமலக்ஷ்மி said...

பாட்டிகள் பல விதம் அல்ல
ஒவ்வொருவரும் ஒரே விதம்:))!

Sasirekha Ramachandran said...

//ஒரு வேலை சொல்லிட்டீங்கன்னா அதை செஞ்சு முடிக்கற வரைக்கும் சொல்லிக்கிட்டே இருக்கீங்களே அது ஏன்?//

ஐயோ இது அநியாயத்துக்கு உண்மை அக்கா!!!!!!!!

தீஷு said...

சூப்பர் முல்லை..

Valaipookkal said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

kelvi.net said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

rapp said...

ஹா ஹா ஹா:):):) அப்போ எங்க பாட்டிதான் பயங்கர வித்தியாசமான பாட்டியா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............இல்ல, எங்கலாலெல்லாம் வம்படியா தன்னை வித்தியாசப்படுத்திக்கிட்டாங்களா????????

rapp said...

super:):):)

மங்களூர் சிவா said...

/
"எங்களுக்காவது பென்ஷன்னு ஏதாவது வருது, உங்களுக்கு அதுல்லாம் இல்லயே, உங்கக் காலத்தை நெனச்சா பயமா இருக்கு" என்று அவ்வப்போது எங்களுக்கு டெரர் உண்டாக்குவது ஏன்?
/

haa haa
:)))))))))

குடுகுடுப்பை said...

1. ஒரு வேலை சொல்லிட்டீங்கன்னா அதை செஞ்சு முடிக்கற வரைக்கும் சொல்லிக்கிட்டே இருக்கீங்களே அது ஏன்?//

பாட்டிக்கு மட்டும்தானா? இல்ல தங்கமணிகளுக்குமா?

நானானி said...

பாட்டியைப் போட்டு இந்த கும்முகும்மீட்டீங்களே? பாட்டி கும்முன்னு எழுந்திட்டா என்னாகும்?

என்னைச் சொல்லலை!ஹி..ஹி..!

பிரேம்குமார் said...

சும்மா வளச்சு வளச்சு கேள்வி கேட்டுருக்கீங்க.... :)

//உங்க பொண்ணுங்கள்ளாமே பாட்டி ஆகிட்டாங்களே, இன்னமும் தினமும் போனைப் போட்டு வீட்டுக்கு வந்தாச்சா, எத்தனை மணிக்கு வந்தே-ன்னு கேட்டு டார்ச்சர் செய்றது ஏன்? கேட்டா இதெல்லாம் உனக்குப் இப்போப் புரியாது-ன்னு ஃபீலிங்க்ஸ் விடறது ஏன் ஏன்?//

BAsically, its a mom thing :)

"எங்களுக்காவது பென்ஷன்னு ஏதாவது வருது, உங்களுக்கு அதுல்லாம் இல்லயே, உங்கக் காலத்தை நெனச்சா பயமா இருக்கு" என்று அவ்வப்போது எங்களுக்கு டெரர் உண்டாக்குவது ஏன்?//

அதானே... ஏன் பாட்டி ஏன்? ஏன் இப்படி டெரரா கேள்வி கேப்பீங்க

Divyapriya said...

super kelvigal mullai...ellaam valid questions vera...LOL :D

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

சூர்யா ஜிஜி said...

//5. சீரியல் பாக்கறீங்க..ஓக்கே..ஆனா "இவன் இப்போதைக்கு முடிக்க மாட்டான், வளத்திக்கிட்டேதான் இருப்பான்" அப்படினு திட்டினாலும் அடுத்த நாளும் பார்க்கறீங்களே, அது ஏன்?!//

வாஸ்தவம். சரியா கேட்டுட்டீங்க.

அசோசியேட் said...

10/10

கைப்புள்ள said...

சான்ஸே இல்லை. செம சூப்பரா இருக்கு. ஒவ்வொரு கேள்வியும் ரொம்ப நச்சுன்னு இருக்கு.

//1. ஒரு வேலை சொல்லிட்டீங்கன்னா அதை செஞ்சு முடிக்கற வரைக்கும் சொல்லிக்கிட்டே இருக்கீங்களே அது ஏன்?
//
ரொம்ப ரொம்ப ரொம்ப சரி.
:)))