Tuesday, February 17, 2009

பப்பு டைம்ஸ்!!

பள்ளிக்கு கொண்டு செல்லும் தண்ணீர் குடுவையையே (பாட்டில்) வீட்டிலும் உபயோகிக்கஅ ஆசைப்படுவாள் பப்பு சிலநேரங்களில். அந்த குடுவையோடுதான் பார்த்தேன் அவளைக் கடந்துச் சென்றபோது! ஆனால், விரலால் எதையோ எடுத்து உள்ளே போட்டுக் கொண்டிருந்தாள்!ஆமாம், எதையோ டீப்பாயிலிருந்து எடுத்து குடுவையில் போட்டாள்..

இப்பொழுதுதானே சிப்ஸ் கொடுத்தேன், அதை பிய்த்து தண்ணீரில் போடுகிறாளோ??அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்...ஆனால், பப்பு கண்டுக்கொண்டதாகத் தெரியவில்லை! திரும்ப எதையோ, விரலால் எடுத்து உள்ளே போட்டாள்! குடுவையை எடுத்து குடிக்கப் போனாள்! என்ன புதுப் பழக்கம் இது? என்ன எடுத்து போடுகிறாள்? அவளிடமிருந்து பிடுங்கினேன்!

“என்ன பப்பு, என்ன எடுத்துப் போடறே..கீழே இருக்கறதச் எடுத்து சாப்பிடக் கூடாதுன்னு தெரியுமா இல்லையா?!”

என்று கூறியவாறு, குடுவைத் தண்ணீரை கீழே ஊற்ற எத்தனிக்கும்போது,

“தண்ணி மேலே வந்திருக்கு, நான் குடிக்கப் போறேன்..குடு..குடு” - பப்பு

புரிந்துக் கொள்ள சில நிமிடங்களானது எனக்கு! அட..

எனது பார்வை அவளுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

“நான் கல்லெல்லாம் எடுத்துப் போட்டேன் இல்ல..தண்ணி மேலே வந்திருக்கு..”

ஓ...தாகமெடுத்த காகமாக மாறி, கற்பனைக் கற்களை எடுத்து போட்டு, கற்பனையிலே தண்ணீர் மேலே வரக் கண்டிருக்கிறாள்...:-)அவளின் கற்பனையை அறிந்துக் கொள்ளாமல் அதைக் கலைத்துவிட எத்தனித்திருக்கிறேனே!!

பப்புவின் இந்தச் செயலுக்குப்பின் இருப்பதன் பெயர்தான் புனைவோ!!
அதைத் தொடர்ந்து நாங்கள், காகம், நரி நாடகமும் விளையாடினோம்..சிப்ஸை வாயில் கவ்விய காகம் அவள். அவளைப் புகழும் குள்ள நரி நான்! அதுவும், “காக்கா காக்கா ஒரு பாட்டுப் பாடு” என்று மட்டும் சொல்லக் கூடாது, “ நீ ரொம்ப அழகா இருக்கே” என்றுச் சொல்லவும் வலியுறுத்தினாள்! ஆனால் காகம் சில சமயங்களில் பாதியைக் கடித்துவிட்டு மீதியை நரிக்குக் கொடுத்துவிட்டு பாடியது..சில சமயங்களில் கைகளில் வைத்துக் கொண்டும் பாடியது.. ஒருமுறை உட்கார்ந்து முழங்காலில் வைத்துவிட்டு பாடியபோது, “காக்காதான் காலில் வைத்துக் கொள்ள வேண்டும் ,கால் அழுக்குதானே” என்று சொன்னப் பிறகு, மென்று விழுங்கிவிட்டு பாடியது!! ம்ம்..நன்றாகத்தான் இருந்தது...(சிப்ஸூங்க!!), காகத்தின் குரலும், முன்னேற்பாடுகளில்லாத அந்த நாடகமும்!!

பப்புவை ஏமாத்தறது.. என்றப் பதிவில் விடுத்திருந்த எச்சரிக்கைக்கு நல்ல பலனிருந்தது! பப்பு ஏமாறுவதை விரும்பாத ஆயாஸ், தாத்தா (parents from both sides!)எல்லோரும் வாரயிறுதியில் அவளை சந்தித்தனர்! பெரிம்மா ஒரு கான்ப்ரென்ஸூக்காக வந்திருந்ததால், ஞாயிறு காலையே கிளம்பிவேண்டியிருந்தது! ஞாயிறு மாலையே MIL,FIL & BIL கிளம்பிவிட, அம்மா மட்டுமே தங்கியிருந்தார், பப்புவுக்காக திங்களன்று விடுப்பெடுத்து! அழுத பப்புவிற்கு கிடைத்தது, லாலிபாப்பும், வேஃபர்களும்!! எனது லாலிபாப்பும் வேஃபர்களும் எங்கே?!!

28 comments:

நட்புடன் ஜமால் said...

ஹையா!

வாங்க பப்பு

நீதிக்கதையா

நட்புடன் ஜமால் said...

\\பப்புவை ஏமாத்தறது.. என்றப் பதிவில் விடுத்திருந்த எச்சரிக்கைக்கு நல்ல பலனிருந்தது! பப்பு ஏமாறுவதை விரும்பாத ஆயாஸ், தாத்தா (parents from both sides!)எல்லோரும் வாரயிறுதியில் அவளை சந்தித்தனர்\\

சந்தோஷம்.

அமுதா said...

/*ஓ...தாகமெடுத்த காகமாக மாறி, கற்பனைக் கற்களை எடுத்து போட்டு, கற்பனையிலே தண்ணீர் மேலே வரக் கண்டிருக்கிறாள்...:-) */
ஆகா... குழந்தைகளின் உலகம்...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

என்னது உங்களையும் லாலிபப் , வேபர் குடுத்து சமாதனப்படுத்திடலாமா.. ஈஸியா இருக்கே.. :)

பப்பு டைம்ஸ் விறுவிறுப்பு..

எம்.எம்.அப்துல்லா said...

//ஓ...தாகமெடுத்த காகமாக மாறி, கற்பனைக் கற்களை எடுத்து போட்டு, கற்பனையிலே தண்ணீர் மேலே வரக் கண்டிருக்கிறாள்...:-)அவளின் கற்பனையை அறிந்துக் கொள்ளாமல் அதைக் கலைத்துவிட எத்தனித்திருக்கிறேனே!//

எப்பேர்ப்பட்ட எழுத்தாளரோட பிள்ளை!!! எப்படி இல்லாமல் போகும் கற்பனை :))

எம்.எம்.அப்துல்லா said...

//எனது லாலிபாப்பும் வேஃபர்களும் எங்கே?!!
//

அருமை!அருமை!

வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை. நாளுக்குநாள் உங்கள் எழுத்து மெருகேறிக் கொண்டே போகின்றது.

அபி அப்பா said...

பப்புவிடமிருந்து சிப்ஸை பிடுங்கி தின்ன குள்ள நரி கூட்டத்தை என்ன செய்வதுன்னு சூடா வாழைக்காய் பஜ்ஜியும் தொட்டுக்க கெட்டி சட்னியும் துன்னுகிட்டே யோசிக்கிறேன் இப்ப:-))

கவிதா | Kavitha said...

she is pretty intelligent kid rey!!

Valaipookkal said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

ரமேஷ் வைத்யா said...

wow!!!!!!!!

வித்யா said...

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

படிக்க படிக்க ஆச்சரியமாக இருக்கு பப்பு டைம்ஸ்

இன்னும் இது போன்ற சுவாரசியங்களை எதிர்பார்க்கிறேன்.
பப்புவிடமிருந்தும்,பப்பு ஆச்சியிடமிருந்தும்

எனது லாலிபாப்பும் வேஃபர்களும் எங்கே?!! //

அதுக்கு பதிலா உங்களுக்கு ஆம்பூர் பிரியாணியும், மக்கப் பேடாவும் வந்திருக்குமேங்க !!!!!!!!!!!!!

வெயிலான் said...

// நாளுக்குநாள் உங்கள் எழுத்து மெருகேறிக் கொண்டே போகின்றது //

உண்மை. உண்மை.

அன்பு said...

பப்பு கலக்கிட்டீங்க போங்க....
அதே
பாட்டி வடைசுட்ட கதை
காகம் தண்ணிகுடித்த‌ கதை
என நாங்கள் ஏளனம் செய்துகொண்டிருக்கும் காலத்தில்
இதுவரை நாங்கள் கேள்விப்பட்டிருக்காத ஒன்றை
நீ கற்பனை செய்திருக்கிறாய்.... பாராட்டுக்கள்.

அப்புறம் மாமா சொன்னா மாதிரியே... ஆயால்லாம் வந்தாங்க பார்த்தியா...
என்னோட பங்கு எடுத்து வச்சுருக்கதானே... ஆச்சி ஏமாத்தி எடுத்துடப் போறாங்க:)

ராமலக்ஷ்மி said...

//பப்புவின் இந்தச் செயலுக்குப்பின் இருப்பதன் பெயர்தான் புனைவோ!! //

நிச்சயமா:)!

மிஸஸ்.டவுட் said...

இது புனைவின் ஆரம்பம் சந்தனமுல்லை...இன்னும் விரியும் பாருங்கள் ...நாம் அசந்து போகும் வகையில் பலப் பல வண்ணங்களில் .அனுபவத்தில் சொல்றேன்பா .

கானா பிரபா said...

;) கலக்கல்ஸ்

நிஜமா நல்லவன் said...

பப்பு கலக்கிட்ட செல்லம்!

தீஷு said...

சூப்பர் முல்லை.

பாச மலர் said...

உங்கள் பப்பு அனுபவப்பதிவுகள் நன்றாக இருக்கின்றன..பின்னொரு நாளில் பப்பு படித்து நன்கு ரசிக்கப் போகிறாள்..

Divyapriya said...

:))))
குழந்தைகள் கதையை கிரஹிச்சிக்கற விதம், உண்மையாவே ரொம்ப ஆச்சர்யமாத் தான் இருக்கு :)

Sasirekha Ramachandran said...

நானும் இப்படி என்ன ஏதென்று தெரியாமல் பத்மாவை திட்டி மன்னிப்பு கேட்டதும் உண்டு........பிறகு சமாதானத்திற்காக இதேபோல் விளையாடவும் செய்தோம்.......என்ன ஒரு ஒற்றுமை உங்களுக்கும் எனக்கும்....

மாதேவி said...

தாகமெடுத்த காக்காவாக கற்பனையில் சஞ்சரித்த அவள் செய்கை சுவார்ஸமாக இருக்கிறது.

நசரேயன் said...

பப்பு டைம்ஸ் நல்லா இருக்கு

தாரணி பிரியா said...

பப்பு ரொம்பவே ஆச்சரியப்படுத்தறா :)

//எனது லாலிபாப்பும் வேஃபர்களும் எங்கே?!!//

அப்புறம் முல்லையை ஏமாத்தாதீங்க அப்படின்னு நாங்க ஒரு பதிவு போடறோம். கவலையை விடுங்க‌

rapp said...

சூப்பர், பப்புவப் போலவே எங்க குடும்பத்து குட்டிப்பய்னும் அழகா இப்டில்லாம் செய்கிறான். ஆனா ஒரு சிலக் கொழந்தைங்க இப்டி செஞ்சா பாராட்டற இந்த உலகம், புனைவுங்கற இந்த உலகம், ஏன் என்னை மாதிரி ஒரு குழந்தை செஞ்சா மட்டும் வேற மாதிரி அபாண்டமா பேசுது:):):)

தாமிரா said...

மூன்று பகுதிகளுமே ஒன்றுக்கொன்று சளைக்காத ர..ச..னை..!

தாமிரா said...

எம்.எம்.அப்துல்லா said...
நாளுக்குநாள் உங்கள் எழுத்து மெருகேறிக் கொண்டே போகின்றது.//

நான் த‌வ‌ற‌விட்ட நிஜமான வ‌ரிக‌ள்.. வாழ்த்துக‌ள்.!