Wednesday, February 25, 2009

milestone ?

காலையில் கதவை திறந்ததும் பால் பாக்கெட்டுகளையும் கீழே கிடக்கும் தினமணியையும்
எடுப்பது பப்புதான்....ஒரு பாக்கெட்டை சமையலறை மேடையிலும் இன்னொன்றை ஃப்ரிட்ஜிலும் வைத்து விடுவாள். தினமணியை டீப்பாய் மீது வைத்து விடுவாள்..அப்படி நான் எடுத்துவிட்டால் கோபம்.அழுகை..நான் திரும்ப அவற்றை வைத்துவிடவேண்டும்! மூன்று வாரங்களுக்கு முன்பு வரை!

அன்று காலையில் அவள் எடுக்காததினால், "பப்பு பால் எடுத்துக் குடு" என்றேன்.

....

பப்பு, டைம் ஆகுது..பாலை எடு!

பதிலில்லை..!

பப்பு...

நீயே எடுத்துக்கோ..நான் அழ மாட்டேன்!

-தீர்க்கமாகவும், அழுத்தமாகவும் ஒலித்தது பப்புவின் குரல்!
வழக்கம் போல அவளது சிற்றுண்டி டப்பாவில் உணவை வைத்து மூடும் சமயம், என்னருகே வந்த பப்பு, என்ன வைச்சிருக்கே என்றாள்.

சேமியா உப்புமா!

ஃப்ரிட்ஜ்-லிருந்து பிஸ்கட்களையும், உலர் பழங்களையும் கொண்டு வந்து அவளாகவே டப்பாவின் மேல்பகுதியில் போட்டுக்கொண்டு பையினுள் வைத்துக் கொண்டாள்! :-) எனக்கு இது வேண்டாமென்றோ, நான் இதை எடுத்துச் செல்கிறேனென்றோ ஒரு வார்த்தையும் இல்லை!!! நானும் ஒன்றும் கேட்கவில்லை!!


N.B : மதிய உணவாக என்ன எடுத்துச் செல்லலாமென்ற தீர்மானம் எடுக்கும் உரிமை பள்ளியிறுதி வரை எனக்கிருந்ததில்லை! ஹ்ம்ம்...

27 comments:

அத்திரி said...

தலைப்பை கேள்விக்குறியாய் போட்டிருக்கிறீர்கள்....... அதுதான் பதில்....... நான் வளர்கிறேனே மம்மி

வித்யா said...

நான் வளர்கிறேனே மம்மி:)

அமுதா said...

:-)

நட்புடன் ஜமால் said...

நான் வளர்கிறேனே மம்மி

நானும் சொல்லிக்கிறேன்

ஜீவன் said...

/// மதிய உணவாக என்ன எடுத்துச் செல்லலாமென்ற தீர்மானம் எடுக்கும் உரிமை பள்ளியிறுதி வரை எனக்கிருந்ததில்லை! ஹ்ம்ம்...///

பப்பு இப்போவே உஷாரா ஆயிட்டு!!!

;;;-)))

நிஜமா நல்லவன் said...

/நான் வளர்கிறேனே மம்மி:)/

மறுக்கா சொல்லிக்கிறேன்!

எம்.எம்.அப்துல்லா said...

//நீயே எடுத்துக்கோ..நான் அழ மாட்டேன்!

//

மம்மி நான் இப்போ ரொம்ப ஸ்டிராங்கு...

:))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

N.B : மதிய உணவாக என்ன எடுத்துச் செல்லலாமென்ற தீர்மானம் எடுக்கும் உரிமை பள்ளியிறுதி வரை எனக்கிருந்ததில்லை! ஹ்ம்ம்...

பொறாமைப்படாதீங்க ஆச்சி.

நீயே எடுத்துக்கோ..நான் அழ மாட்டேன்!

-தீர்க்கமாகவும், அழுத்தமாகவும் ஒலித்தது பப்புவின் குரல்!

நல்ல மெச்யூரிட்டி தெரியுது இல்ல பப்புகிட்ட.

இது வேண்டாமென்றோ, நான் இதை எடுத்துச் செல்கிறேனென்றோ ஒரு வார்த்தையும் இல்லை!!! நானும் ஒன்றும் கேட்கவில்லை!! //

ஒருவேளை சேமியா உப்புமாவுக்கு உலர் பழமே மேலுனு நெனச்சுகிட்டாளோ என்னவோ.
:))))))))))

(ஆச்சி அடிக்க வராதீங்க என்ன)

அபி அப்பா said...

//ஒருவேளை உங்க சேமியா உப்புமாவுக்கு உலர் பழமே மேலுனு நெனச்சுகிட்டாளோ என்னவோ.
:))))))))))//

அமித் அம்மா வித் யுவர் பர்மிஷன் ரிப்பீட்டிகிறேன்!

Sasirekha Ramachandran said...

ஹீ ஹீ ......இப்டி இருந்ததான் உங்கள சமாளிக்க முடியும்ன்னு பப்பு நெனச்சிருப்பாளோ???

Poornima Saravana kumar said...

//நீயே எடுத்துக்கோ..நான் அழ மாட்டேன்!

-தீர்க்கமாகவும், அழுத்தமாகவும் ஒலித்தது பப்புவின் குரல்!
//

நாங்கெல்லாம் வெவரமாயிட்டோம் இல்ல!!!

rapp said...

//பப்பு, டைம் ஆகுது..பாலை எடு!

பதிலில்லை..!

பப்பு...

நீயே எடுத்துக்கோ..நான் அழ மாட்டேன்!

-தீர்க்கமாகவும், அழுத்தமாகவும் ஒலித்தது பப்புவின் குரல்//இந்த உஷாராகுற ஸ்டேஜ்தான் கடுப்பு, இதுக்கபுறம் அபீஷியலா அவங்க தன் இஷ்டப்படி நடந்துக்கலாம்னு புரிஞ்சிப்பாங்க:):):) இனிமே ஆச்சி இங்க இல்லைன்னு நீங்களே பப்புகிட்ட சொன்ன காலத்தை, 'அது ஒரு அழகிய நிலாக்காலம்' அப்டின்னுதான் சொல்வீங்க:):):)

Divyapriya said...

:)))) school என்னங்க, இப்பயும் கூட lunch தீர்மானம் என் கையில இல்லை :(

Nilavum Ammavum said...

நீயே எடுத்துக்கோ..நான் அழ மாட்டேன்!

Amma..I know what I'm doing...

நசரேயன் said...

பப்பு வளர்கிறாள், நானும் மதிய சாப்பாடு எடுத்திட்டு போன சரித்திரம் கிடையாது

கைப்புள்ள said...

//ஃப்ரிட்ஜ்-லிருந்து பிஸ்கட்களையும், உலர் பழங்களையும் கொண்டு வந்து அவளாகவே டப்பாவின் மேல்பகுதியில் போட்டுக்கொண்டு பையினுள் வைத்துக் கொண்டாள்! :-) எனக்கு இது வேண்டாமென்றோ, நான் இதை எடுத்துச் செல்கிறேனென்றோ ஒரு வார்த்தையும் இல்லை!!! நானும் ஒன்றும் கேட்கவில்லை!!//

நான் வளர்கிறேனே மம்மி :)

//மதிய உணவாக என்ன எடுத்துச் செல்லலாமென்ற தீர்மானம் எடுக்கும் உரிமை பள்ளியிறுதி வரை எனக்கிருந்ததில்லை! ஹ்ம்ம்...//

காலங்கள் மாறும்...காட்சிகள் மாறும்...இது காலத்தின் கோலம்.
:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சாய்ஸ் தரக்கூடாதுன்னு தெரிஞ்சுகிட்டா பப்பு.. :)

குடுகுடுப்பை said...

ஆமா அவங்க விரும்புறத எடுத்துக்க சொல்லுங்க, ஆனா அதுல நீங்க விரும்பாதத(junk food) வெக்காதீங்க.

எங்க வீட்ல இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் பிரிஞ்சதுன்னு மேடம் கேக்கிறாங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க

நட்புடன் ஜமால் said...

தமிழ்மண வாழ்த்துக்கள்

ஜானு said...

ஹொவ் ஸ்வீட் பப்பு.. குழந்தைகள் எவ்ளோ அழகான உலகம் ... அவர்கள் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது ..சந்தனமுல்லை.. அதை நீங்க தொகுக்கிரவிதமும் தான் ..கீப் going ..!

அன்புடன்
ஜானு

KVR said...

//நீயே எடுத்துக்கோ..நான் அழ மாட்டேன்! //

குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் நீங்கள் பதிவு செய்வதைப் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. பப்புவும் பின்னொரு நாள் படித்தால் கண்டிப்பாக மகிழ்வாள்.

//சேமியா உப்புமா! //

அடுத்த முறை உப்புமாவிலேயே கொஞ்சம் ட்ரைஃப்ரூடெல்லாம் கலந்து செய்து பாருங்கள். ட்ரைஃப்ரூட் உப்புமா பப்புவுக்கு பிடிக்கிறதா என்று பார்க்கலாம். குட்டீஸ்ல்லாம் ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா.

தமிழன்-கறுப்பி... said...

இப்ப இப்படித்தாங்க இருக்கு...:)

தமிழன்-கறுப்பி... said...

நாங்க விவரமாயிட்டம்ல..:)

தமிழன்-கறுப்பி... said...

ரிப்பீட்டு!!
போட பல கமன்டுகள் இருக்கு...:)

தாமிரா said...

Tik.. (ரொம்ப போரடிக்குது.. இனி சும்மா சும்மா பாராட்டிகிட்டேயிருக்கமுடியாது.. படிச்சாச்சு.. சூப்பர்னா.. இது மாதிரி டிக் போட்டுட்டு போய்க்கிடேயிருப்பேன்)

நானானி said...

பப்பு...! யூ ஆர் ச்சோ ஸ்வீட்!!!!

மங்களூர் சிவா said...

nice

/

N.B : மதிய உணவாக என்ன எடுத்துச் செல்லலாமென்ற தீர்மானம் எடுக்கும் உரிமை பள்ளியிறுதி வரை எனக்கிருந்ததில்லை! ஹ்ம்ம்...
/

காலம் மாறிப்போச்சு :):)