Friday, February 06, 2009

பப்பு டாக் & ali haider song!!

பப்பு கத்திரிக்கோல் எங்கே?

தெரியலயே..

நேத்து கட் பண்ணிட்டு இங்கேதானே வச்சேன்? பார்த்தியா?

இல்ல நான் பாக்கல!

சிறிதுநேரத்தில் ஆயாவின் அலமாரியிலிருந்துக் கிடைக்கப் பெற்றது!!

இருக்கு பப்பு, ஆயாகிட்டே இருந்துச்சு!!

நீதான் எங்கேயாவது தொலைச்சிட்டியோன்னு நினைச்சேன்...சாரி ஆச்சி!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்!!
பப்பு சீக்கிரம் சாக்ஸ் போடு!

......


போட்டுட்டியா?!

......


ஆயா : இதோ, நான் வந்துப் போட்டுக்கறேன், என்னைக் கூப்டுக்கிட்டு போ!

பப்பு: ஆச்சி யாரோட அம்மா?

(சிலசமயங்களில், ஆச்சி உங்க அம்மாவா? என்றும் மாறும்! ஆச்சி பப்புவின் அம்மா, ஆயாவின் அம்மா இல்லை, அதனால் ஆச்சி சொல்வதெல்லாம் பப்புவிடமே..(அதை நாங்கக் கேட்கமாட்டோம் அது வேற விஷயம்!)..மேலும் ஆச்சியோடு செல்லும் உரிமை பப்புவிற்கு மட்டுமே என்பது உள்ளர்த்தம்!)90களில் உங்கள் பதின்மங்களைக் தொலைத்திருப்பீர்களேயானால், இந்தப் இந்திப் பாப்பாடலை கண்டிப்பாக ரசித்திருப்பீர்கள்! அலி ஹெய்தரின் மற்றப் பாடல்கள் பிறிதொரு பதிவில்! அதுவரை, இப்பாடலைக் கேளுங்கள்!!

20 comments:

நட்புடன் ஜமால் said...

\\நீதான் எங்கேயாவது தொலைச்சிட்டியோன்னு நினைச்சேன்...சாரி ஆச்சி!!\\

அட்றா அட்றா

பப்பு தி கிரேட்

புதுகைத் தென்றல் said...

avvvvvvv

supera iruku. enjoy

RAMYA said...

யாருப்பா இது ப்லோக் பேரே இல்லாமே???

நட்புடன் ஜமால் said...

\\அதை நாங்கக் கேட்கமாட்டோம் அது வேற விஷயம்!\\

அது ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

\\நீதான் எங்கேயாவது தொலைச்சிட்டியோன்னு நினைச்சேன்...சாரி ஆச்சி!!\\

so chweeeeeeet pappu

அந்த சாக்ஸ் மேட்டர் புரியலங்க.

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால், புதுகைத் தென்றல்!

என்ன சொல்ல வர்றீங்க ரம்யா?


நன்றி அமித்து அம்மா, அதுக்குதான் அர்த்தம்னு அடைப்புக்குறிக்குள் போட்டிருக்கேனே..அது படிச்சும் புரியலையா? ஆயா தன்னைக் கூப்பிட்டுக் கொண்டுப் போகச் சொன்னதும் பப்புவிற்கு கோபம். ஆச்சி யாரோட அம்மா? பப்புவின் அம்மாதானே...அப்போ பப்புவின் அம்மா பப்புவைத்தானே அழைத்துச் செல்ல வேண்டும். ஆயாவை அல்லவே..! இப்போப் புரியுதா லாஜிக்?? :-)

ராமலக்ஷ்மி said...

பப்பு டாக் ரசித்தேன். கூடவே பாடலையும்.

//90களில் உங்கள் பதின்மங்களைக் தொலைத்திருப்பீர்களேயானால்,//

நான் எழுபதின் இறுதியிலும் எண்பதின் தொடக்கத்திலுமாய் தொலைத்தாயிற்று ’பதின்மத்தை’:))? அதனால் என்ன அந்த வயதைப் பிரதிபலிக்கும் எந்த விஷயமும் பாடலோ, கவிதையோ:), இட்டுச் செல்லும் நம்மை அந்நாளுக்கே! இப்பாடலை இப்போதான் பார்க்கின்றேன், பகிர்தலுக்கு நன்றி:)!

வித்யா said...

முல்லை பாப் ஆல்பம் விஷயங்களில் உங்கள் ரசனையோடு ஒத்துப் போகிறது என் ரசனையும்:)

நிஜமா நல்லவன் said...

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

thanks for explanation

Divyapriya said...

:))

தாமிரா said...

ரசித்தேன்..

தீஷு said...

//நீதான் எங்கேயாவது தொலைச்சிட்டியோன்னு நினைச்சேன்...சாரி ஆச்சி!!//

:-).. யாருதான் இவங்களுக்கு இப்படி பேச சொல்லி தாரங்களோ?

நசரேயன் said...

/*நீதான் எங்கேயாவது தொலைச்சிட்டியோன்னு நினைச்சேன்...சாரி ஆச்சி!!
*/
கலக்கல்

ஆயில்யன் said...

//நீதான் எங்கேயாவது தொலைச்சிட்டியோன்னு நினைச்சேன்...சாரி ஆச்சி!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்!!
///


:))))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சடார் சடார்ன்னு வந்து விழுதே பப்பு பேச்சு..நல்லாருக்கு.. :)

rapp said...

\\நீதான் எங்கேயாவது தொலைச்சிட்டியோன்னு நினைச்சேன்...சாரி ஆச்சி!!\\

பாருங்க இந்த வயசுலயே, எவ்ளோ உயர்ந்த உள்ளம், என்னைய மாதிரியே:):):) மனசளவுல தப்பா புரிஞ்சிக்கிட்டாலும் ஒடனே அதை வெளியில சொல்லி சாரி கேக்குறாங்கன்னு:):):)

rapp said...

//ஆச்சி யாரோட அம்மா?

(சிலசமயங்களில், ஆச்சி உங்க அம்மாவா? என்றும் மாறும்! ஆச்சி பப்புவின் அம்மா, ஆயாவின் அம்மா இல்லை, அதனால் ஆச்சி சொல்வதெல்லாம் பப்புவிடமே..(அதை நாங்கக் கேட்கமாட்டோம் அது வேற விஷயம்!)..மேலும் ஆச்சியோடு செல்லும் உரிமை பப்புவிற்கு மட்டுமே என்பது உள்ளர்த்தம்!)//

இதை நான் பல சமயங்களில் பாத்திரிக்கேன்:):):) இன்னும் எங்க வீட்ல ஒரு படி மேல. நாங்கெல்லாம் யாரும் ஒரு புது நைட் டிரெஸ் கூட அவங்கம்மா புது நைட் டிரெஸ் போடாதப்போ, போடக்கூடாது. பழசுதான் போடணும்.

மேலோட்டமா பாத்தா இந்த பின்னூட்டம் சம்பந்தமில்லாம இருக்கும், ஆனா என்னைய மாதிரி ஞானக்கண் கொண்டு பார்த்தாதான் இதுக்குள்ள பொதிஞ்சிருக்க குட்டி பசங்களோட ஆட்டிட்யூட் புரியும்:):):)

தமிழன்-கறுப்பி... said...

அதென்ன அந்த "அவ்வ்வ்" இவ்வளவு சின்னதா இருக்கு :)

நீ கலக்குடா பப்பு...!

Nitin said...

Which is the best site to Download Hindi Songs? The site should be very safe