Friday, February 13, 2009

பப்புவை ஏமாத்தறது ரொம்ப ஈசி!!

இப்போ ஒரு வாரமா எங்க வீட்டுல ஒரு நடக்கற ஒரு சம்பவம்! என்னன்னா, பப்புவை தூக்கத்திலிருந்து எழுப்ப நான் சொல்லும் பொய்...இது எனக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்தையும் நினைவூட்டியது..

பொங்கலுக்கு அப்புறமா எங்களை யாருமே விசிட் பண்ணலை..எல்லா ஆயாக்களும், தாத்தாவும் ரொம்ப பிசி..கல்யாணத்துக்கு போறது, தைப்பூசம் அது இதுன்னு..(அதுவும் பெப்ரவரி, மார்ச் கொஞ்சம் கடினமான காலம் தான்..எந்த விடுமுறையும் கிடையாது..பள்ளி பரிட்சைகள்..அரசுதேர்வு விடைத்தாள் திருத்துதல்-ன்னு ஆயாஸ் ஒரே பிசிதான்!! )

ஓக்கே..புலம்பலை நிறுத்திக்கிட்டு மேட்டருக்கு வர்றேன்....தூக்கத்திலேர்ந்து பப்புவை எழுப்பனும்னா மகா கஷ்டம்....ஆனா இப்போல்லாம் “பப்பு, வடலூர் ஆயா வந்துட்டாங்க ”அப்படின்னு சொன்ன உடனே ஸ்பிரிங் மாதிரி எழுந்து கதவை போய் பார்ப்பா..அப்புறம் என்ன, பள்ளிக்கூடத்துக்கு ரெடி செய்ய வேண்டியதுதான்!

பப்பு ஒரு ஒன்றரை வயசு, ரெண்டு வயசா இருக்கும்போது நடக்கும் இது! அம்மா/பெரிம்மா வந்திருக்கும் போதுதான் எனக்கு ப்ரீ டைம் இருக்கும்! அப்போதான் படிக்காம விட்ட ஆவியெல்லாம் படிச்சுக்கிட்டு இருப்பேன் கதவை சாத்திக்கிட்டு..பப்பு வந்து, வந்து கதவை தள்ளுவா..என்னைக் கூப்பிட்டுக்கிட்டே!! நான் உடனே “ ஆச்சி இங்கே இல்லை” ந்னு சொன்னதும் நம்பிக்கிட்டு போய்டுவா! ஆனா திரும்ப வருவா..இதே ரெண்டு /மூனு தடவை நடக்கும்! :-)) அப்புறம் அம்மா/பெரிம்மா பப்புவை வந்து விட்டுட்டுப் போவாங்க, என்னைத் திட்டிக்கிட்டே! இப்போ ஒரே வித்தியாசம்..நான் அங்கே இல்லைன்னு சொன்னதுபோய் ஆயா இருக்காங்க-ன்னு சொல்றேன்!!

கடந்த நாடகளா பப்பு அவங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்றதைப் பார்த்தா பாவமா இருக்கு! கனவெல்லாம் கூட அவங்க வர்றதைப் பத்திதான்!(I bet you aayas..this is not going to last forever..there comes a phase soon!!) சரியா சாப்பிடறதுக் கூட இல்லை..:(
(வந்தாலும் ஒன்றரை நாள் தான் இருப்பாங்க..பப்பு அவங்க பின்னாடியே சுத்திக்கிட்டு இருப்பா..அப்புறம் என்ன டே இன்னைக்கு, என்ன டே வருவீங்க என்று அடுத்த வாரயிறுதியை நோக்கி ஓட வேண்டியதுதான்! அது தனிக்கதை!!)

A note to the elders of my family:

சோ,பப்புவை நான் ஏமாத்தக் கூடாதுன்னு நீங்க நினைச்சா சீக்கிரம் வந்து சேருங்க!!(VRS வாங்கினா கூட எனக்கு ஓக்கேதான் ;-) !!)

25 comments:

rapp said...

me the first?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆச்சி இங்க இல்ல// அழகு..

:)

அமுதா said...

பாவம் பப்பு... ஏமாத்தாதீங்க முல்லை.

rapp said...

பப்புவெல்லாம் ஒன்னுமேயில்லை. நான் கிட்டத்தட்ட அஞ்சாங்கிளாசு படிக்கிறவரைக்கும் இப்டித்தான் இருந்தேன்:):):) ஆனா பாருங்க நீங்க சொல்லிருக்க டிரிக்கெல்லாம் என்கிட்டே ஒத்துவராது. ஒரு நாள் இப்டித்தான் எங்கம்மா போராடிட்டு இருக்கும்போது, எங்கப்பா வந்து இதோ பாரு ஒரு நிமிஷத்துல எழுந்திரிக்க வெக்கிறேன்னு சொல்லிட்டு 'பிரபுவும் குஷ்புவும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம், பேப்பர்ல போட்டோவோட வந்திருக்குன்னு சொன்னாரு', அவ்ளோதான் விழுந்தடிச்சிக்கிட்டு எழுந்திட்டேன். அன்னியிலருந்து செம சீக்கிரமா எழுந்திடறது:):):) ஏன்னா வேற யாராவது அப்டி கல்யாணம் பண்ணி செய்தி வந்தா அத நாமதான் மத்தவங்களுக்கு சொல்னுமே தவிர, மத்தவங்க நமக்கு சொல்லக்கூடாதுங்கர புரட்சிகரமான கருத்துக்காத்தான்:):):)

rapp said...

//I bet you aayas..this is not going to last forever..there comes a phase soon!!//

ஆமாம், என்னை மாதிரி பசங்கக் கூடெல்லாம் அவ ஸ்கூல்ல சேரவேண்டியிருக்கும்:):):)

அமிர்தவர்ஷினி அம்மா said...

சோ,பப்புவை நான் ஏமாத்தக் கூடாதுன்னு நீங்க நினைச்சா சீக்கிரம் வந்து சேருங்க!


ஆ, இது கூட நல்லாருக்கே


கடந்த நாடகளா பப்பு அவங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்றதைப் பார்த்தா பாவமா இருக்கு!
இனி ஆயா பேரை சொல்லி ஏமாத்தாதீங்க ஆச்சி

வித்யா said...

பாவம் பப்பு:(

நட்புடன் ஜமால் said...

\"பப்புவை ஏமாத்தறது ரொம்ப ஈசி!!"\\

இதுக்கே பெரிய கண்டன ஏற்பாடு செய்யப்படும்

பப்பு பேரவை

சிங்கை.

ரங்கன் said...

ம்...
...என்ன சொல்லவரேன்னா....


நல்ல ?? பதிவு... அவ்வ் :(

நிஜமா நல்லவன் said...

பதிவின் தலைப்புக்கு என்னோட கடுமையான கண்டனங்களை தெரிவிச்சிக்கிறேன்.(ஸ்மைலி போடலை....அதனால இது உண்மையான கண்டனம் தான்..)

நிஜமா நல்லவன் said...

/ rapp said...

பப்புவெல்லாம் ஒன்னுமேயில்லை. நான் கிட்டத்தட்ட அஞ்சாங்கிளாசு படிக்கிறவரைக்கும் இப்டித்தான் இருந்தேன்:):):) ஆனா பாருங்க நீங்க சொல்லிருக்க டிரிக்கெல்லாம் என்கிட்டே ஒத்துவராது. ஒரு நாள் இப்டித்தான் எங்கம்மா போராடிட்டு இருக்கும்போது, எங்கப்பா வந்து இதோ பாரு ஒரு நிமிஷத்துல எழுந்திரிக்க வெக்கிறேன்னு சொல்லிட்டு 'பிரபுவும் குஷ்புவும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம், பேப்பர்ல போட்டோவோட வந்திருக்குன்னு சொன்னாரு', அவ்ளோதான் விழுந்தடிச்சிக்கிட்டு எழுந்திட்டேன். அன்னியிலருந்து செம சீக்கிரமா எழுந்திடறது:):):) ஏன்னா வேற யாராவது அப்டி கல்யாணம் பண்ணி செய்தி வந்தா அத நாமதான் மத்தவங்களுக்கு சொல்னுமே தவிர, மத்தவங்க நமக்கு சொல்லக்கூடாதுங்கர புரட்சிகரமான கருத்துக்காத்தான்:):):)/


தங்கச்சியக்கா....ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை...:)

அபி அப்பா said...

\\நான் கிட்டத்தட்ட அஞ்சாங்கிளாசு படிக்கிறவரைக்கும் இப்டித்தான் இருந்தேன்:):):)\\

தங்காச்சி! வெள்ளிகிழமையும் அதுவுமா பொய் சொன்னா பசிச்ச வாய்க்கு பீஸா கூட(முழுசா கூட) கிடைக்காது.

நீ என்ன சொல்ல போறேன்னு தெரியும் "அண்ணாத்த வாயிக்கு எங்கயாவது பசிக்குமா வயித்துக்கு தானே பசிக்கும்".....


பப்புவுக்கு ஒரு டிப்ஸ்:

பப்பு இனிமே 'நான் ஆச்சியில்ல'ன்னு பதில் வந்தா நீ "பரவாயில்லை நானும் பப்பு இல்லை, ரெண்டு பேரும் எங்கயோ ஷாப்பிங் போயாச்சு, அதனால நாம விளையாடுவோம் வா"ன்ன்னு சொல்லனும்!

அன்பு said...

பாவங்க பப்பு...

பப்பு....
ஆச்சிமாதிரி நான் பொய்சொல்லல,
நிஜமாக ஆயா சீக்கிரம் வருவாங்க சரியா....

அதுசரி, VRS பப்புக்காகவா அல்லது ஆவி புடிக்கவா!?

Sasirekha Ramachandran said...

பப்பு பேரச்சொல்லி அவங்க ஆயாக்கல வரவச்சி நீங்க ப்ரீ யா இருக்கப்பாக்கறீங்களா?எனக்கு உங்க பிளான் தெரிஞ்சிபோச்சு!!!!!!!

எம்.எம்.அப்துல்லா said...

//பப்பு இனிமே 'நான் ஆச்சியில்ல'ன்னு பதில் வந்தா நீ "பரவாயில்லை நானும் பப்பு இல்லை, ரெண்டு பேரும் எங்கயோ ஷாப்பிங் போயாச்சு, அதனால நாம விளையாடுவோம் வா"ன்ன்னு சொல்லனும்!
//


அண்ணா இரசித்துச் சிரித்தேன்.

ராமலக்ஷ்மி said...

//“ ஆச்சி இங்கே இல்லை” //

ம்ஹும்..சரியேயில்லை. பப்பு, அபி அப்பா கொடுத்திருக்கும் ஐடியாவை ‘கப்’னு புடிச்சுக்கோ:)!

தாமிரா said...

தலைவர் அப்துல்லா பிஸியாக இருப்பதால் என்னை கண்டனங்களை பதிவு செய்யச்சொன்னார்.

பப்பு பேரவை,
சாந்தோம், சென்னை.

தீஷு said...

பாவம் பப்பு.. ஏமாத்தாதீங்க. ஆனா இப்படி ஏமாற்றுவதும் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான்..

Namakkal Shibi said...

//சோ,பப்புவை நான் ஏமாத்தக் கூடாதுன்னு நீங்க நினைச்சா சீக்கிரம் வந்து சேருங்க!!(VRS வாங்கினா கூட எனக்கு ஓக்கேதான் ;-) !!)//

ஓ! அதனால்தான் கவிதா உங்க வீட்டுக்கு வந்தாங்களா?

தமிழன்-கறுப்பி... said...

பப்பு சார்பில் கண்டனங்கள்..:)

தமிழன்-கறுப்பி... said...

யாரது பப்புவை பார்க்க் வராமல் இருப்பது இழுத்து வாருங்கள்..
சீக்கிரம்..!

நசரேயன் said...

யோசனை நல்லா இருக்கு முயற்சி பண்ணிவிட்டு சொல்கிறேன்

நசரேயன் said...

யோசனை நல்லா இருக்கு முயற்சி பண்ணிவிட்டு சொல்கிறேன்

அபி அப்பா said...

|\\சோ,பப்புவை நான் ஏமாத்தக் கூடாதுன்னு நீங்க நினைச்சா சீக்கிரம் வந்து சேருங்க!!(\\

பப்பு சரி ஓக்கே புரியுது, "சோ"வை எதுக்க்கு ஏமாத்த கூடாது?

புரியலை தயவு செய்யாம விளக்கவும்:-))

Divyapriya said...

:)))