Thursday, February 12, 2009

கலாச்சாரம் - சில புரிதல்கள்!!

1. கலாச்சாரத்தைக் காப்பாற்ற (?) வேண்டிய, போற்றிப் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே இருக்கிறது!!

2. வெளியே எங்கும் போகலாம்..ஆனால், இரவு 7 மணிக்கு கண்டிப்பாக வீடு திரும்ப வேண்டும்! (ராம் சேனாவின் ஃபவுண்டிங் மெம்பர் சொல்லியிருக்கார். http://www.hindu.com/mag/2009/02/08/stories/2009020850030100.htm)

3. கலாச்சாரம் பெண்கள் குடிப்பதால், நடை/உடை பாவனைகளால் மட்டுமே சீரழிகிறது!

4. கலாச்சாரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் moral policing செய்யலாம்! அது வன்முறையான வழியாகக் கூட இருக்கலாம்! யாராவது தடுக்க வருவார்கள் என்று எண்ணாதீர்கள் முட்டாள் பெண்களே.. தடுப்பது நமது கலாச்சாரமல்ல!!

5. உங்கள் சுதந்திரத்தின் எல்லையை தீர்மானிப்பவர் நீங்களல்ல! அது நீங்களாக எடுத்துக் கொள்வதுமில்லை. பெருந்தன்மையுடன் வழங்கப்படுவது! அந்த எல்லையைக் குறித்தக் கேள்விகள் கேட்காமல் இந்தியப் பெண்ணாய் அமைதியாய் இரு!

இந்தப் பட்டியலின் எண்ணிக்கையை நீங்கள் இன்னும் கூட்டிக் கொண்டே செல்லலாம்! கலாச்சாரத்தை புரிய வைத்த ராம் சேனா-விற்கு நன்றியும் அன்பும்..அதோடு இதுவும்!
நான் பப்-க்கு செல்வதை ஆதரிக்கிறேனோ இல்லையோ, காதலர் தினத்தை கொண்டாடுகிறேனோ இல்லையோ..what the heck! Its all about making a point! Saying no to "Moral policing"!!I am joining my hands!!

38 comments:

நட்புடன் ஜமால் said...

நீங்களுமா ...

ராமலக்ஷ்மி said...

மங்களூர் பப்பில் அவர்கள் பெண்களை அடித்த அடி. திருப்பி அடிக்க ஒரு கவிதை கூட எழுதிட்டேன். அப்புறம் ராம் சேனா வீடு தேடி வந்து அடிப்பாங்கன்னு பயந்து போடாம விட்டுட்டேன்:))!

rapp said...

கலக்கல் கலக்கல் கலக்கல்:):):)

rapp said...

//இரவு 7 மணிக்கு//

ஆஹா எப்போலேருந்து இந்த பெரிய மனசு அவங்களுக்கு வந்துச்சி, ரெண்டு வருஷம் முன்னவரைக்கும் ஆறு மணியாயிருந்துச்சே? :):):)

rapp said...

இதோட முக்கியமான இன்னொரு முக்கிய சமூக அவலத்தை விட்டுட்டீங்களேப்பா:):):) பெண்கள் காதலிக்கக் கூடாது, காதலித்தாலும் காதலனை பாக்கக் கூடாது. அப்டி இந்த ரெண்டு பயங்கரங்களும் நடந்திடுச்சின்னா, அடுத்து விசாரனயில்லாத ஆயுள் தண்டனைதான்(அதாவது கல்யாணம்). அப்போ அவங்க படிச்சிக்கிட்டு இருக்கலாம், செட்டில் ஆகாம இருக்கலாம். அதெல்லாம் பிரச்சினையே இல்லை.

ஆண்ட்ரு சுபாசு said...

அட ...நல்ல யோசிச்சு இருகீங்களே..அப்படியே என் வலைப்பக்கமும் வந்துவிட்டு போங்க ..

அபி அப்பா said...

//நான் பப்-க்கு செல்வதை ஆதரிக்கிறேனோ இல்லையோ,//

தம்பி ஆயில்ஸ்! பப்பு பேரவைன்னு ஏதும் போட்டிராதப்பா!

இது வேற விஷயம்:-))

இதிலே ராப் அக்காவேற வந்து கும்ம ஆரம்பிச்சுட்டுடா தம்பி, வா ஓடிடுவோம்:-))

narsim said...

கலக்கல்..

ராப்.. கஜினி படம் பார்த்தீங்களே.. மறந்துட்டீஙகளே..

களப்பிரர் said...

//இரவு 7 மணிக்கு கண்டிப்பாக வீடு திரும்ப வேண்டும்//


அவரு எதுக்கு தேவை இல்லாம சொல்லுறாரு ? மெகா சீரியல் பாக்கனும்னு எல்லா பொண்ணுங்களும் டான்னு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்திடுறாங்களே !!

PS: ஆண் பெண் ஹார்மோன் எல்லாம் ஏழு மணிக்கு மேல தான் வேல செய்யுமோ !!?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அட ஆமாம்ல . .. அப்பல்லாம் 6 மணிக்குள்ள வீட்டுக்குவந்துடனும்னு கண்டிஷன் இருக்கும்.. இப்ப ஏழா.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

இன்னோரு கையும் சேத்துக்குங்க முல்லை..

வித்யா said...

முல்லை நல்ல பதிவு. இவையெல்லாம் தனி மனித ஒழுக்கத்தை சேருபவை. We gotto live for us. Not for others:)

rapp said...

//

ராப்.. கஜினி படம் பார்த்தீங்களே.. மறந்துட்டீஙகளே//

???????????
பு த செ வி

கானா பிரபா said...

;)புரியுது புரியுது

எம்.எம்.அப்துல்லா said...

// We gotto live for us. Not for others:)
//

:)

கவிதா | Kavitha said...

எனக்கு ஒரு டவுட்டு, பெண்கள் பப்' க்கு வரலைன்னா.. இவங்க மட்டும் அங்க என்ன செய்வாங்கப்பா???

கவிதா | Kavitha said...

கலாச்சாரத்தைக் காப்பாற்ற (?) வேண்டிய, போற்றிப் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே இருக்கிறது!!
//

முல்லை கண்டிப்பாக பெண்களுக்கு இருக்கு -

நல்ல குழந்தை வளர்வதும், வளர்க்கபடுவதும் ஒரு தாய் தானே.

கவிதா | Kavitha said...

3. கலாச்சாரம் பெண்கள் குடிப்பதால், நடை/உடை பாவனைகளால் மட்டுமே சீரழிகிறது! //

:) என்ன சொல்றது இதற்கு.. ஆமாம் என்றும் சொல்லலாம், இல்லை என்றும் சொல்லலாம்..

எல்லாமே அளவுடன் இருந்தால் அனைவருக்குமே நலம் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி..

கவிதா | Kavitha said...

உங்கள் சுதந்திரத்தின் எல்லையை தீர்மானிப்பவர் நீங்களல்ல! அது நீங்களாக எடுத்துக் கொள்வதுமில்லை. பெருந்தன்மையுடன் வழங்கப்படுவது! அந்த எல்லையைக் குறித்தக் கேள்விகள் கேட்காமல் இந்தியப் பெண்ணாய் அமைதியாய் இரு! //

ம்ம்.. என்னுடைய (நம்முடைய) சுதந்திரத்தை நான்(நாம்) சரியான வழியில் பயன்படுத்துகிறோம் அதை தீர்மானிப்பதும் நானே (நாமே!)

அது சரியாக இல்லை என்கிற போது ?!!

சரி தவறை யார் நிர்ணயிப்பது என்று கேட்காதீர்கள், அது தனிப்பட்ட விருப்பம், தனிப்பட்ட குடும்பத்தின் விருப்பம்.. இது அனைவருக்கும் ஒன்றாக இருக்க வாய்பில்லை..

தாமிரா said...

மிகப்பெரிய ஒரு சமூக அவலத்தின் குறியீடுகள் இந்த சேனாக்கள்.. என்று மாற்றம் காணப்போகிறோம்.? வேலையே செய்யாமல் வாய்ஜாலத்தையும், மக்களின் அறிவீனத்தையும் பயன்படுத்தி அரசியல்/அராஜம் செய்து சம்பாதிக்கும் வழிசெய்துகொள்ளும் இதுபோன்ற கும்பல்களை என்ன செய்தால் தகும்.?

சுரேகா.. said...

நான் பப்க்கு ஆதரவு தெரிவிக்கிறேனோ இல்லையோ...
பப்புவுக்கு எப்பவுமே என் ஆதரவு உண்டு!

சுரேகா.. said...

இது பற்றி ஒரு அழகான விவாதம் CNN IBN ல் நடந்தது..!

அமுதா said...

/*கலாச்சாரத்தைக் காப்பாற்ற (?) வேண்டிய, போற்றிப் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே இருக்கிறது!!*/

பாவம்பா... அவங்களால் காப்பாத்த முடியலைனு பொறுப்பை நமக்கு கொடுக்கிறாங்க :-)

பெண் இப்படிதான் இருக்கணும்னு ஆண்கள் தான் எப்பவும் சொல்றாங்க. இந்த சம்பவத்தைக் கேட்ட பொழுது எனக்கு மிக கோபம். கலாச்சாரம், மதம் எல்லம் நம்மைப் பண்படுத்த உருவானவை... ஆனால் நம் மக்கள் அதையே தங்கள் வசதிக்கு வளைக்கிறார்கள். சரி/தவறு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது என்ற எண்ணம் உருவாக இன்னும் எத்தனை காலம் தேவையோ?

வல்லிசிம்ஹன் said...

ஓ. ஏழு மணி வரை வெளில இருக்கலாமா:)
எங்களுக்கெல்லாம் 5 மணிலேருந்து
வெளியே போகத் தடா.

காத்ஹலர்களைக் கல்யாணம் செய்யப் போறாங்க்கப்பா. அதனால உண்மைக் காதலர்கள் மாலையோட காத்திருக்கலாமே.:)

மிஸஸ்.டவுட் said...

ராம் சேனாவோ இல்ல பிங்க் ஜட்டி போராட்டமோ எதுவும் முறையான எதிர்ப்பு முறைகளே இல்லை என்பது தான் என்னோட கருத்து .வெறும் ஜீன்சும் டாப்சும் எப்படி கலாசார சீரழிவாக முடியும்? பப் ...வீக் எண்டு கொண்டாட்டம் ,velantines day ,எல்லாமே அது தோன்றிய போது அதற்கிருந்த ஒரு நிறத்தையும் அடையாளத்தையும் இழந்து அல்லது கலைக்கப் பட்டு இப்போ அஷிங்கமான ஒரு புது நிறம் பூசப்பட்டு அதற்கான மரியாதையை இழந்துட்டு நிக்குது .அதன் மூலமா வர்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் மகிசாசுரன் மாதிரி ஆயுள் கம்மி .ஆனால் ஒவ்வொரு முறை ரத்தம் மண்ணில் விழும் போதும் பிரச்சினையின் உருவம் மாறி புது புது பிரச்சினையா வந்துட்டே தான் இருக்கும் அதோட கடைசி சொட்டு உரியப் பட்டு அழிக்கப் படும் வரை.அது முடியுமா ? அதான் இப்போ டவுட்?கலாச்சாரம்னா என்ன? கலாசார சீரழிவுனா என்ன? ரெண்டையும் நாம புரிஞ்சிகிட்ட லட்சணம் தான் இப்போ சிரிப்பா சிரிச்சிட்டு இருக்கு .வேடிக்கை பார்க்கறதை தவிர வேற வழி

தீஷு said...

//கலாச்சாரத்தைக் காப்பாற்ற (?) வேண்டிய, போற்றிப் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே இருக்கிறது!!
//

இதற்கு காரணம் கலாச்சாரம் என்றால் என்ன புரிதல் இல்லாதது தான்.

நசரேயன் said...

வேலை வெட்டி இல்லாத ஆளுங்க, பொழுது விடிஞ்சி பொழுது போன போராட்டம்,ஆர்ப்பாட்டம் பண்ணி பொழைப்பை நடத்துற ஆசாமிகள்

Sathananthan said...

Well said. Joining my hands too.

Divyapriya said...

//நான் பப்-க்கு செல்வதை ஆதரிக்கிறேனோ இல்லையோ, காதலர் தினத்தை கொண்டாடுகிறேனோ இல்லையோ..what the heck! Its all about making a point! Saying no to "Moral policing"!!I am joining my hands!!//

ரொம்ப சரியா சொன்னீங்க...இந்த மாரல் போலீஸெல்லாம் மர கழன்ட கேஸா இருப்பாங்கன்னு தான் தோனுது!

Poornima Saravana kumar said...

நல்ல பதிவுங்க முல்லை !!

ஆகாய நதி said...

//
கலாச்சாரத்தைக் காப்பாற்ற (?) வேண்டிய, போற்றிப் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே இருக்கிறது!!

//

இது உண்மைதான் ஆனால் சரியான புரிதல் இல்லாத ஆண் என்னும் போர்வையில் பதுங்குபவரின் வாயில் இருந்து வந்திருக்க வேண்டாம்

ஆகாய நதி said...

//
2. வெளியே எங்கும் போகலாம்..ஆனால், இரவு 7 மணிக்கு கண்டிப்பாக வீடு திரும்ப வேண்டும்!
//

அவர் போன்றும் பல ஆண்கள் இருப்பதால் அவர்களிடம் இருந்து பெண்களைக் காப்பாற்ற எண்ணுகிறார் போலும்...lol:)

ஆகாய நதி said...

//
கலாச்சாரம் பெண்கள் குடிப்பதால், நடை/உடை பாவனைகளால் மட்டுமே சீரழிகிறது
//

அப்படியாஆஆஆஆஆ!!!

இது மட்டும் தானா காரணம்??

ஆகாய நதி said...

//
உங்கள் சுதந்திரத்தின் எல்லையை தீர்மானிப்பவர் நீங்களல்ல! அது நீங்களாக எடுத்துக் கொள்வதுமில்லை. பெருந்தன்மையுடன் வழங்கப்படுவது! அந்த எல்லையைக் குறித்தக் கேள்விகள் கேட்காமல் இந்தியப் பெண்ணாய் அமைதியாய் இரு!
//

இவன தூக்கிப் போட்டு மிதிச்சா யாருக்கு யாரு சுதந்திரம் தரானு தெரியும்.... ஏதேதோ வருது வாயில...

ஆகாய நதி said...

நானும் கை கோர்க்கிறேன் உங்களோடு...

அன்பு said...

நான் பப்-க்கு செல்வதை ஆதரிக்கிறேனோ இல்லையோ, காதலர் தினத்தை கொண்டாடுகிறேனோ இல்லையோ..what the heck! Its all about making a point! Saying no to "Moral policing"!!I am joining my hands!!

KVR said...

கலாசாரம் பற்றிய எனது புரிதல் - கலாசாரத்துக்கு "ச்" வராது. நமது தமிழ் கலாசாரம் இச்லெஸ் கலாசாரம் :-)

jokes apart, ஒவ்வொருவருக்கும் ஒரு சுயகட்டுப்பாடு அவசியம். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. ஆனால் அந்தக் கட்டுப்பாட்டைத் திணிப்பேன், கட்டுப்படாதவர்களை உதைப்பேன் என்று சொல்பவர்களை மிருகத்தனமானவர்கள் என்று சொன்னால் மிருகங்கள் தங்களை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொள்ளக்கூடும்.

என் பக்கம் said...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html