Tuesday, February 03, 2009

சுட்டிப் பையன் பபிள்ஸ்!!

பபிள்ஸ் சீரிஸ் புத்தகங்கள் பப்புவிற்கு மிகவும் பிடித்தம். பபிள்ஸ் என்ன பண்ணான், அவங்க அம்மா என்ன சொன்னாங்க என்பது ஒரு காலத்தில் எங்கள் வீட்டில் மிகப் பிரசித்தம். பபிள்சை நாங்கள் ஒரு லைப்ரரியில் தான் சந்தித்தோம். அதே போல் பெப்பர் என்றும் சீரிஸ் வருகிறது.

மூன்று விஷயங்கள் எங்களைக் கவர்ந்தவை (அ) பபிள்சை பற்றிச் சொல்ல..

1. ஆங்கில வார்த்தைகளை எளிதாக அறிமுகப் படுத்த (வார்த்தைகள் தான், வாக்கியங்கள் அல்ல!!)
2. ஒவ்வொரு கதையும் அன்றாட நிகழ்ச்சிகளில் அடிப்படையில் அமைந்திருப்பது
3. கதைக் குறித்தான நினைவுட்டல் கேள்விகள்

பப்பு, சபரிக்கு பரிசளித்ததும் இந்த சீரிஸின் ஒரு கதையே! பெரும்பாலும், மூன்று வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசளிக்கத் தான் எனக்குப் பிரியம். முத்துலெட்சுமியுடன் சபரியை பார்க்கப் போகிறோம் என்றதும் எந்த சந்தேகமுமில்லாமல் என் மனதில் தோன்றியது பபிள்ஸ்தான் சீரிஸ்தான்! Hope sabari enjoys with Bubbles!!

அம்மாக்களின் வலைப்பூவிலும் இதுக் குறித்து!

11 comments:

நட்புடன் ஜமால் said...

கதைக் குறித்தான நினைவுட்டல் கேள்விகள்


இது நல்ல விடயம்.

அமுதா said...

//பெரும்பாலும், மூன்று வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசளிக்கத் தான் எனக்குப் பிரியம்.

நல்ல பழக்கம். நல்ல புத்தகங்கள் நிச்சயம் குழந்தைகளின் உலகை அழகாக விரியச் செய்யும். அறிமுகங்களுக்கு நன்றி

PoornimaSaran said...

பரிசாக புத்தகங்களை அளிப்பது நல்லதொரு விசயமே :)

ஆகாய நதி said...

கதைக் குறித்தான நினைவுட்டல் கேள்விகள்

மிகவும் நல்ல பழக்கம் :)

இதைத் தான் நான் இப்போது பொழிலனுக்கு செய்து வருகிறேன் :)
நானே அவரிடம் கேள்வி கேட்டு நானே அவருக்கு பதிலும் சொல்லி விடுவேன்...

சில மாதங்களுக்குப் பிறகு அவரே சொல்வார்... :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நிச்சயமாக எஞ்சாய் செய்து படிக்கிறான்... வரும்போதே ட்ரெயினிலும் படித்துக்கொண்டே வந்தான்.. :)

Sasirekha Ramachandran said...

//பெரும்பாலும், மூன்று வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசளிக்கத் தான் எனக்குப் பிரியம்.//

நல்ல ஐடியா.கீப் இட் அப்.

அன்பு said...

வணக்கம். மீண்டும் பகிர்தலுக்கு நன்றி.

ஏற்கனவே இந்தப்பட்டியல் இறக்கிவைத்திருந்தேன், உங்களிடம் கொடுக்க நினைத்து விடுபட்டவைகளில் ஒன்று:)

எழில், பப்புகொடுத்த Grandpa Stories படித்தாள், Pygmalion இப்போதைக்கு அடுக்கில் இருக்கிறது. இப்பல்லாம் எத்தனை புத்தகம் கிடைத்தாலும் Rainbow Magic வரிசைக்குத்தான் மிக உணர்ச்சிவயப்படுகிறாள்:)

மீண்டும் நன்றி.

தீஷு said...

பபிள்ஸ் சீரிஸ் பார்த்தில்லை முல்லை. இந்தியா வந்தவுடன் முயற்சி செய்ய வேண்டும்.`

நசரேயன் said...

நல்ல தகவல்

Divyapriya said...

// மூன்று வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசளிக்கத் தான் எனக்குப் பிரியம்//

நல்லா சொன்னீங்க…

rapp said...

ஆஹா, நல்ல ஐடியா. ஆனா இதுல ஒரு சின்ன பிரச்சினை. இப்போல்லாம் நெறயக் குழந்தைங்க அடம் பண்ணி, இந்த புக்சஎல்லாம் வாங்கி கலெக்ட் பண்ணி வெச்சிருக்கறதால நம்மால சர்ப்ரைசா எதுவும் வாங்கிக் கொடுக்க முடியறதில்ல. அவங்க அம்மா அப்பா இப்டி யார் கிட்டயாவது கேட்டுத்தான் வாங்கணும்.

சூப்பர் பழக்கம்.