Monday, September 28, 2009

இது எப்படி இருக்கு?

எதைப்பற்றியோ பேசிக்கொண்டிருந்தபோது
"நெஜம்னா என்ன ஆச்சி?" என்றாய்.
என் குழந்தாய்!
எனை நோக்கி நீ வீசிய
கேள்விக்கணைக்கு பதிலுரைத்து
புரியவைக்க வேண்டிய பெரும்கடமை
எனக்கிருப்பதை உணர்ந்தவளாய்
தலைக்குப்பின் ஒளிவட்டம் சுழல
தாமரைப்பூவிலமர்ந்து
விளக்க ஆரம்பிக்கிறேன்...
அதற்குள் "சிங்கம் வரலை...பயப்படாதே ஆச்சி,
நான் 'சும்மா' சொன்னேன்" என்கிறாய்!!

28 comments:

சென்ஷி said...

கவிதை!

*இயற்கை ராஜி* said...

:-)

Anonymous said...

Simple-a hamam-nu answer pannirukkalaam :)

ஆயில்யன் said...

simply super தமிழ்ல சொல்லணும்ன்னா சிம்ப்ளி சூப்பர்ர்ர்ர்ர் பாஸ் கலக்குங்க :))

G3 said...

//தலைக்குப்பின் ஒளிவட்டம் சுழல//

பப்பு குடுத்த பல்பு தானே ஆச்சி அது :)))

பின்னோக்கி said...

பதில் தெரிந்தும் கேட்கின்ற கேள்விகள், தனக்கு பதில் தெரியாது என நினைத்து பதில் தெரிந்தும் கேட்கும் கேள்விகள்.

சினேகிதி said...

:)

ராமலக்ஷ்மி said...

//நான் 'சும்மா' சொன்னேன்" என்கிறாய்!!//

:))!

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் எதிர் கவிஜ எழுத உள்மனசு “எடு ஆதவா கீபோர்ட”ன்னு கொக்கரிக்குது.. :)

Dhiyana said...

:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

aahaha...

Anonymous said...

//பப்பு குடுத்த பல்பு தானே ஆச்சி அது :)))//

hahahaa

பா.ராஜாராம் said...

!!!..
:))

rapp said...

அன்னிக்கொருக்கா, காதுல ஈயத்தக் காச்சி டண்டண்ணா கொட்னாப்டி இருக்கு, கண்ணவிஞ்சுப் போச்சுன்னு அந்தக் கத்து கத்துனவங்க இப்போ பப்புவோட இந்தத் துயரத்துக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க:):):)

முல்லை இப்டி கவுஜ எழுதி கலவரம் உண்டுபண்றதை நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்தறேன்:):):)

பித்தனின் வாக்கு said...

ஆகா ஒரு விஞ்னானி வளராப்புல்ல போல. கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆமா பப்பு எம் ஜியார் ரசிகையா கேள்வி எல்லாம் கேக்கராங்க(ஏன் என்று கேள்வி கேக்காமல் மனிதன் வளருவதில்லை). நான் வராமப் பார்த்துக்குங்க. அப்புறம் பப்புவிற்கு எனது வாழ்த்துக்கள்.

Vidhoosh said...

ஒரு கேள்விதான கேட்டாங்க பப்பு.. அதுக்கு இப்படியா பயமுறுத்துவது..
சும்மத்தான்னு ஓடும் அளவுக்கு.
-வித்யா

கலையரசன் said...

இப்பவேவா? என்னனனனா வில்லலத்தனம்?????????

ஈரோடு கதிர் said...

ஆஹா!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

தலைக்குப்பின் ஒளிவட்டம் சுழல
தாமரைப்பூவிலமர்ந்து
விளக்க ஆரம்பிக்கிறேன்..

ஆச்சி சரஸ்வதி பூஜை அன்னிக்கு சரியான கெட்டப்புல தான் யோசிச்சு இருக்கீங்க

வெல்டன் கவிதை!

Anonymous said...

smart baby..:)

அமுதா கிருஷ்ணா said...

இதுவும் நல்லாயிருக்கு...

சிங்கக்குட்டி said...

அருமை மற்றும் இதோ வந்து விட்டேன் :-))

நாமக்கல் சிபி said...

சூப்பர்!

அமுதா said...

:-))

Deepa said...

அருமை.
//தலைக்குப்பின் ஒளிவட்டம் சுழல
தாமரைப்பூவிலமர்ந்து
விளக்க ஆரம்பிக்கிறேன்...//
:-))))

குடுகுடுப்பை said...

ஆஹா இப்படியெல்லாம் கவுஜ எழுதமுடியுமா?

கைப்புள்ள said...

அருமை.

"எங்கிருந்தோ வந்தான் இடைசாதி நானென்றான்" - அந்த ரேஞ்சுக்கு இருக்கு. உங்க லெவல் இப்ப எங்கேயோ இருக்குங்கோ.

மாதவராஜ் said...

ரொம்ப ரசித்தேன். நல்லாயிருக்கு.
//அதற்குள் "சிங்கம் வரலை...பயப்படாதே ஆச்சி,
நான் 'சும்மா' சொன்னேன்" என்கிறாய்!//
இது எவ்வளவு நிஜம்!