"பப்பு, வெண்மதி பர்த்டேவுக்கு என்ன வாங்கி கொடுக்கலாம்?"
"ம்ம்..நிஜமான போட் வாங்கிக் கொடுக்கலாம்! "
.....
"அவளுக்கு போட் ரொம்ப பிடிக்கும்.நாம பீச் வாங்கிக் கொடுக்கலாம், ஆச்சி!"
....
"சொல்லு, பீச் வாங்கிக்கொடுக்கலாமா?"
கொர்ர்ர்ர்ர்ர்.....

காலை 6.30.
நான் : இன்னைக்கும் மெய்ட் வரலை. பாத்திரம் எல்லாம் ஸிங்லே இருக்கு!
முகில் : பப்புவுக்கு என்ன லஞ்ச்? சப்பாத்தியா - குட்டி தோசையா?
பப்பு : இன்னைக்கு கராத்தேவா யோகாவா?
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க, " that that man, that that worry"-ன்னு!!

இன்று காலை சாப்பிடும் நேரத்தில்,
"வெண்மதிக்கு கார்ட் கொடுக்கலாம், நீயே வரைஞ்சது...வரையலாமா?"
"வெண்மதிக்கு போன் பண்ணிக்கொடு, பேசிட்டு அவளுக்கு என்ன வரையணும்னு கேட்டுட்டு வரையறேன்."- பப்பு
"வெண்மதி தூங்கிக்கிட்டு இருப்பா..நீயே ஏதாவது அவளுக்குப் பிடிச்சது வரை. "
"ஏய், வெண்மதி சின்னது...அவ-கிட்டே கேட்டுட்டுத்தான் வரைஞ்சு கொடுக்கணும்! "
சின்னவங்கன்னா கேக்காம செஞ்சுதானே பழக்கம்!!
போனை செய்தால், வெண்மதி நிஜமாகவே தூங்கிக்கொண்டிருந்தாள்.
பப்புவே சமாதானமாகி, வெண்மதிக்கு பீச் பிடிக்குமென்று பெரிய சுறா, குட்டி மீன்கள், ஜெல்லி ஃபிஷ், ஆமை எல்லாம் வரைந்தாள். ஆனால், அவசரத்தில் வீட்டிலேயே விட்டுவிட்டு போய்விட்டாள்.
வெண்மதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :
23 comments:
பப்பு வரைஞ்சதையும் ஸ்கேன் செஞ்சி போடுங்க!
//பப்பு : இன்னைக்கு கராத்தேவா யோகாவா?//
:))
அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்கு!
வெண்மதிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெண்மதி :)
அக்கா பப்புக்கிட்ட சொல்லி எனக்கும் ஒரு பீச் பார்சல் ப்ளீஸ்
//"சொல்லு, பீச் வாங்கிக்கொடுக்கலாமா?"//
யாரது பதில் சொல்லாம குறட்டை விடறது???????
//அவசரத்தில் வீட்டிலேயே விட்டுவிட்டு போய்விட்டாள்.//
அடடா!
வெண்மதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!
//that that man, that that worry"-ன்னு!!//
இது சூப்பர்
//"சொல்லு, பீச் வாங்கிக்கொடுக்கலாமா?"//
ஆமா...ஒரு பீச்தான் வாங்கிக்கொடுங்களேன்... எதோ...பப்பு ஆசப்படுறாங்க....
//ராமலக்ஷ்மி said...
//"சொல்லு, பீச் வாங்கிக்கொடுக்கலாமா?"//
யாரது பதில் சொல்லாம குறட்டை விடறது??????? //
:-))))) அதானே?
பப்பு குட்டியின் தோழி வெண்மதிக்கு பிறநத நாள் வாழ்த்துக்கள்!!
பப்பு வரைந்த படம் எங்கே?
பப்பு,எனக்கு ஒரு சொகுசு கப்பல் , என் பையனுக்கு ஒரு போட்.. மகளுக்கு ஒரு பீச்.. கிஃப்ட் அனுப்புங்க.. எங்க பிறந்த நாளூக்கு முன்னாடியே சொல்லி விடறோம்..
( ஆனா அதெல்லாம் படமா மட்டும் வரைஞ்சு குடு பப்புன்னு சொல்ற அம்மா பேச்சை கேக்காதே )
//சொல்லு, பீச் வாங்கிக்கொடுக்கலாமா?//
ஆமாங்க.. வாங்கி கொடுத்துடுங்க
பீச் வாங்கி கொடுக்கலாம்...
நினைச்சு நினைச்சு சிரிக்கலாம்டா பப்பு..
வாழ்த்துக்கள் வெண்மதி :)
பாஸ் துபாய்ல பீச் ரொம்ப சீப்பு... சொல்லுங்க வாங்கிடலாம் :)
பப்பு கிட்டே சொல்லி எனக்கு ஒரு வானம். ப்ளீஸ்.
/that that man, that that worry//
Super!
:-))))))))
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெண்மதி
that that man that that worry,
இப்படி நிறைய்ய வந்து விழுவதும் பப்புக்களின் மாயம்.
நான் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்.
எங்காது யூஸ் பண்ணிக்கல்லாமில்ல. பப்புவுக்கு என் அன்பு.
வெண்மதிக்கு வாழ்த்துகள்.
---------
அன்று என்னதான் ஆச்சி,
கராத்தே தானா அல்லது யோகாவா
:)
//that that man, that that worry"-ன்னு!!//
நம்மோடு நாம் மட்டும் என் நேரமும் இருப்பதால், நம் கவலையும் நம்மோடு...
:-)).. பீச்சை நீங்க தானா வாங்கினது?
வெண்மதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!
//"சொல்லு, பீச் வாங்கிக்கொடுக்கலாமா?"//
எல்லோருக்கும் நிலம் வாங்கத்தான் தெரியும் பப்புவுக்கு பீச்வாங்கத் தெரியுமே.
வெண்மதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!
பப்பு ஸ்வீட் டைம்ஸ்.
//நான் : இன்னைக்கும் மெய்ட் வரலை. பாத்திரம் எல்லாம் ஸிங்லே இருக்கு!
ம்..ம்.. 33 சதவிகிதம் கிடைத்தும் பெண்களுக்கு அடுப்படியிலிருந்து ஓய்வில்லை :(
தட் தட் மான் ,தட் தட் வொர்ரி''
ரொம்ப பிடிச்ச வரி.
வெண்மதிக்கு எங்கள் வாழ்த்துகள்.
பப்புமா பாட்டிக்கும் ஒரு பீச் அனுப்புடா செல்லம்.
Post a Comment